தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இயக்குநராகும் எண்ணம் இல்லை! - 'கோலங்கள்' அபி - தேவயானி
4 posters
Page 1 of 1
இயக்குநராகும் எண்ணம் இல்லை! - 'கோலங்கள்' அபி - தேவயானி
இயக்குநராகும் எண்ணம் இல்லை!
'கோலங்கள்' அபியாகவே தாய்க்குலங்களின்
மனதில் தங்கிவிட்ட தேவயானி, இப்போது 'கொடி முல்லை'யாகப் படர
ஆரம்பித்திருக்கிறார். ஆம்! ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 'கொடிமுல்லை'
சீரியலில் இருபது வயது இளம்பெண்ணாகவும், அறுபது வயது அம்மாவாகவும்
அசத்திக் கொண்டிருக்கும் தேவயானிதான் இன்று சீரியல் பார்வையாளர்களின் ஹாட்
டாபிக்! எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்பதுபோல் அடுத்த ஷாட்டுக்குத்
தயாராகிக் கொண்டிருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
'கொடிமுல்லை' பற்றிச் சொல்லுங்கள்?
'கொடிமுல்லை'
எங்கள் சொந்த தயாரிப்பு. ஆர்.கே. விஷன் என்ற பெயரில் என் கணவர்
ராஜகுமாரன்தான் இத்தொடரை தயாரிக்கிறார். 'கோலங்கள்' தொடரில் கோ-டைரக்டராக
இருந்த செந்தில் குமார் இயக்குகிறார்.
'கொடிமுல்லை' பெயர்க்காரணம்?
கொடிமுல்லை
என்பது ஒரு வித பூச்செடி. அது கொடிமாதிரி வளரும். தொடரின் தலைப்பிலேயே
வானம் தாண்டி வளர்பவள் என்று ஒரு வாசகம் கொடுத்திருப்போம். ஒரு கொடி
படர்வதற்கு நல்ல ஆதரவு இருந்தால், அது எவ்வளவு உயரம்கூட படர
வாய்ப்பிருக்கிறது. அதுபோலத்தான் ஒரு பெண்ணும்.
குடும்பத்திலிருப்பவர்கள்
நல்ல நண்பர்கள், அவளைச்சுற்றி இருப்பவர்கள் சப்போர்ட் இருந்தால் அவளால்
வானம் வரைகூட வளர முடியும். இதுபோன்ற பாஸிடிவ்வான விஷயங்களைச் சொல்ல
வேண்டும் என்றுதான் இந்தப் பெயர் வைத்தோம்"
இரட்டை வேடத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?
இருபத்தி
நான்கு வயது கல்லூரிப் பெண் மலர்க் கொடியாகவும், அறுபது வயது அம்மா
அன்னக்கொடியாகவும் வருவேன். ஒரு ரோல் ரொம்ப மாடர்னான கார்ப்பரேட்
கம்பெனியில் வேலை பார்க்கிற பெண்.. இதை சுலபமாக நடித்துவிட்டேன். ஆனால்,
அம்மா கேரக்டர்தான் ரொம்பவும் சிரமமாக இருந்தது.
அந்த மேக்கப்
போட்டுகொள்வதற்கே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது. இருபத்தி
ஐந்து வருடமாக ஜெயிலில் இருக்கும் ஒரு பெண், யாரிடமும் பேசாத, ரொம்ப
அமைதியான ஒரு பெண் என்பதால் எனக்கு பெரிய சவாலாக இருந்தது.
அறுபது வயதுப் பெண் கேரக்டர் ரிஸ்க் என்று பயம் வரவில்லையா?
ஆரம்பத்தில்
பயமாகத்தான் இருந்தது. ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்களா, இந்த வயதிலேயே
இவ்வளவு முதிர்ச்சியான கேரக்டரில் நடிக்க வேண்டுமா என்று தயக்கமாக
இருந்தது. ஆனால், இப்போது கிட்டத்தட்ட 150 எபிசோட் கடந்துவிட்டது. நல்ல
வரவேற்பு கிடைத்திருக்கிறது.
வெளிநாட்டில் இருப்பவர்கள்கூட இப்போ
ஆன்-லைனில் தமிழ் சீரியல்களை விரும்பி பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அந்த வகையில் 'கொடி முல்லை' தொடரை கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர்
பார்த்திருக்கிறார்கள். என்னை அந்த இடத்திற்கு கொண்டு போன ஆடியன்சுக்கு என்
நன்றி.
சொந்த ஸ்டுடியோ நிர்வாகம் எப்படி இருக்கிறது?
நான்,
என் கணவர் இரண்டு பேருமே சினிமாவில் இருப்பதால் சினிமா சம்பந்தப்பட்ட
ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென்று நினைத்தோம். அப்படி வந்ததுதான் ஸ்டுடியோ
வைக்கும் ஐடியா. அதில் படங்கள், சீரியல்கள் என சின்ன சின்ன விஷயங்கள்
இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.
எங்களுடைய ஸ்டுடியோவில், எங்களோட
சொந்தத் தயாரிப்பில் தயாராகி சேனலில் வெளிவரும் தொடர்களை பார்க்கும்பொழுது
சந்தோஷமாக இருக்கிறது. என் மகள் இனியா பெயரில் 'சவுண்ட் அன்ட் எடிட்டிங்'
என்றும் நடத்தி வருகிறோம். அந்த டைட்டில் டிவியில் வரும்பொழுது ரொம்ப
சந்தோஷமாகவும், ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது. இதன் மூலமாக நிறைய
பேருக்கு வேலை கொடுக்கிறோம்ங்கிற திருப்தியும் இருக்கிறது.
இயக்குநராகும் எண்ணம் உண்டா?
அப்படி
எதுவும் இல்லை. டைரக்ட் செய்வது என்பது ரொம்ப பெரிய விஷயம். அதற்கு நிறைய
அறிவு, அனுபவம் வேண்டும். ரொம்ப பொறுமை வேண்டும். சினிமா சம்பந்தப்பட்ட
எடிட்டிங், மியூசிக், ரெக்கார்டிங், என எல்லா விஷயங்களுக்குமான அறிவு
இருந்தால்தான் இயக்கத்துக்கு வர முடியும்.
இப்போதைக்கு என்னுடைய
வேலை நடிப்பது. அதில் முழுமையான கவனம் செலுத்தி நடித்தால் போதும் என்று
நினைக்கிறேன். ஏற்கெனவே வீட்டில் ஒரு டைரக்டர் இருக்கிறார். அதுவே போதும்.
மென்மையான தேவயானியை பார்த்து விட்டோம். இனி வில்லியாகப் பார்க்கலாமா?
வில்லியாகவா,
நானா..(சிரிக்கிறார்) இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. எதிர்காலத்தில்
செய்யலாம், அது அந்தக் கதையைப் பொருத்தது. அப்படியே வில்லியாக நடித்தாலும்,
அதை ஈடுகட்டுவது போல ஒரு நல்லவளும் இருக்க வேண்டும். அந்தப் பாஸிட்டிவ்
கேரக்டர் யார் என்கிற கேள்வியும் வருகிறதே..
சினிமாவில் அதிகம் பார்க்க முடியவில்லையே ஏன்?
சமீபத்தில்
பெரிய திரையில் நான் எந்த படங்களிலும் நடிப்பதில்லை அதுதான் காரணம்.
ஆனால், தற்போது என் கணவர் இயக்கிக் கொண்டு இருக்கும் 'திருமதி தமிழ்' என்ற
படத்தில் நான் இதுவரை செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
மற்றபடி
பெரிய திரையில் நடிக்கும் ஒரு ஹீரோவுக்கு இணையாகத்தான் சின்னத்திரையில்
ஹீரோயின்கள் வருகிறார்கள். அதனால் சின்னத்திரைதான் திருப்தியாக இருக்கிறது.
குடும்பம் குறித்து?
எனக்கு
இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். பெரியவளின் பெயர் இனியா, சின்னவள் பெயர்
ப்ரியங்கா. குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய
லட்சியம். எதிர்காலத்தில் ஹீரோயினாக வர ஆசைப்பட்டாலும் எங்களுக்கு எந்த
ஆட்சேபணையும் இல்லை.
TMT

தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: இயக்குநராகும் எண்ணம் இல்லை! - 'கோலங்கள்' அபி - தேவயானி
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இயக்குநராகும் எண்ணம் இல்லை! - 'கோலங்கள்' அபி - தேவயானி
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
உங்கள் நண்பன்- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 06/10/2011
Similar topics
» அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
» விகடன்.கோலங்கள்...கோலங்கள்....
» பதினாறு வயதுப் பெண்ணாக தேவயானி
» 'சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை': ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி
» நான் ஆஸ்திகனும் இல்லை, நாஸ்திகனும் இல்லை! ஆனால் 'ஹாஸ்’திகன்! கமல் குறித்து மோகன் க்ரேஸி பேட்டி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum