தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

+5
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
அ.இராமநாதன்
thaliranna
கவியருவி ம. ரமேஷ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Oct 28, 2011 7:56 pm

நன்றி - [You must be registered and logged in to see this link.]

இந்தியாவையே கலக்கிய சூப்பர் ஹிட் படமான கஜினி டீம் உருவாக்கிய படைப்பு என்பதால் '7 ஆம் அறிவு'க்கு ஏக எதிர்ப்பார்ப்பு. இப்படியொரு எதிர்ப்பார்ப்பு கொண்ட படம் அதை நிறைவேற்றத் தவறினால் என்ன நிகழுமோ அது 7-ஆம் அறிவுக்கும் நேர்ந்திருக்கிறது!

5-ம் நூற்றாண்டு...

தற்காப்புக் கலை, மருத்துவம், கலைகள் என அனைத்திலும் நிபுணத்துவம் மிக்கவனான பல்லவ மன்னர் குல இளவரசன் போதி தர்மனை அவனது ராஜமாதா சீனாவுக்குப் போகும்படி கட்டளையிடுகிறார். மூன்றாண்டு தரைவழிப் பயணமாக இமயத்தைக் கடந்து சீன கிராமம் ஒன்றில் கால் பதிக்கும் போதி தர்மனை, சீனர்கள் ஒரு ஆபத்தின் அடையாளமாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் ஆபத்து கொள்ளை நோய் உருவில் அந்த கிராமத்தைத் தாக்க, நோய் பாதிக்கப்பட்ட முதல் குழந்தையை உயிரோடு துணியில் சுருட்டி காட்டில் தூக்கிப் போட, அந்த குழந்தையை போதி தர்மன் தன் மருத்துவத் திறமையாமல் மீண்டும் உயிர்ப்பித்துத் தருகிறார். அப்போதுதான் போதி தர்மனின் மகத்துவம் அவர்களுக்குப் புரிகிறது. அந்தக் கிராமம் முழுவதுமே அப்போது நோயில் வீழ, போதி தர்மன் அந்த மக்களை நோயிலிருந்து மீட்கிறார். சீனாவின் பிற பகுதி மக்களுக்கும் அந்த நோய் சிகிச்சை முறைகளை கற்பிக்கிறார். கொள்ளை நோயே இல்லாமல் போகிறது.

அடுத்த சில நாட்களில் ஒரு கொள்ளைக் கூட்டம் அந்த கிராமத்தைத் தாக்க, அதிலிருந்து அந்த மக்களை தனது அரிய தற்காப்புக் கலை மூலம் காப்பாற்றுகிறார் போதி தர்மன். அந்த கலையை தங்களுக்கும் கற்பித்துத் தரச் சொல்லி சீனர்கள் கேட்க, அவர்கள் அனைவருக்கும் களறிப் பயட்டு, நோக்கு வர்மம் போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுத் தருகிறார்.

சீனர்களுக்கு செய்த சேவையில் திருப்தியுற்ற போதி தர்மன் மீண்டும் காஞ்சிபுரம் திரும்ப முடிவு செய்கிறார். ஆனால் அந்த சீனர்களோ, போதி இறந்து அவரது உடல் சீனாவில் புதைக்கப்பட்டால் நாடு செழிப்பாகவும் அச்சமின்றியும் இருக்கும் என நம்புகிறார்கள். எனவே போதிக்கு விஷம் கலந்த உணவைக் கொடுக்க, அது விஷ உணவு எனத் தெரிந்தும், அவர்களுக்காக உண்டு இறந்து சீனாவுக்கு உரமாகிறார் போதி தர்மன்.

இருங்க... இருங்க... இது முதல் 20 நிமிடக் கதைதான். மீதி? 21-ம் நூற்றாண்டில் ஆரம்பமாகிறது.

சென்னையில் மரபணு ஆராய்ச்சி மூலம் மீண்டும் போதி தர்மனை உருவாக்கும் முயற்சியில் சுபா (ஸ்ருதி) என்ற பெண் இறங்க, அது சீனாவுக்கு தெரிந்து விடுகிறது. இந்தியா மீது 'பயோ வார்' எனும் விஷக் கிருமி பரப்பும் போரை சீனா தொடங்கத் திட்டமிடுகிறது. போதி தர்மனால் விரட்டியடிக்கப்பட்ட கொள்ளை நோய்க் கிருமியை இதற்காக மீண்டும் உருவாக்குகிறது சீனா. அந்த பயோ வாரின் முடிவில் இந்தியாவே நோய் கிடங்காக மாறிவிடும். அதற்கான மருந்து சீனாவில் மட்டுமே (போதி தர்மன் கண்டுபிடித்த மருந்து) கிடைக்கும். எனவே சீனாவிடம் பொருளாதார ரீதியாக இந்தியா மண்டியிட வேண்டும்.

இந்தத் திட்டத்துக்கு சுபாவின் ஆராய்ச்சி தடையாக இருக்கும் என்பதால் அவளைக் கொல்ல டாங் லீ என்ற ஜெகஜ்ஜால வில்லனை இந்தியாவுக்கு அனுப்புகிறது சீனா. இவன் போதி தர்மன் கற்பித்த தற்காப்புக் கலையில் நிபுணத்துவம் மிக்கவன். பார்வையாலே ஒருவரைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கவன்.

இங்கே, போதி தர்மனின் சந்ததியைத் தேடும் சுபா, அவர்களில் ஒருவனான சர்க்கஸ் கலைஞன் அரவிந்தை (சூர்யா) கண்டுபிடிக்கிறார். அவனைக் காதலிப்பது போல நடித்து தனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்துகிறார். போதி தர்மனின் மரபணுவில் 80 சதவீதம் அரவிந்துக்குப் பொருந்துவதை அறிகிறார்.

ஒரு கட்டத்தில் சுபா தன்னைக் காதலிக்கவில்லை, 'பரிசோதனைக் கூட குரங்காகத்தான்' பயன்படுத்துகிறார் என்பது தெரிந்து உடைந்து போகும் அரவிந்துக்கு, போதி தர்மனின் மகத்துவம், இந்தியாவுக்கு வரும் ஆபத்து பற்றி சொல்லி புரிய வைக்கிறார். அதற்குள் சுபாவை தேடி சென்னைக்கு வரும் வில்லன் டாங் லீ, அவளைக் கொல்ல துரத்துகிறார். உடனடியாக போதிதர்மனாக மாற சம்மதிக்கிறான் அரவிந்த்.

டாங் லீ முயற்சி வென்றதா? சுபாவின் ஆராய்ச்சி ஜெயித்ததா? அரவிந்த் போதி தர்மனாக மாறினானா? என்பது க்ளைமேக்ஸ்.

-கேட்பதற்கு கதை நன்றாக இருக்கிறதல்லவா... உண்மைதான். ஆனால் முதலில் நாம் குறிப்பிட்டுள்ள 5-ம் நூற்றாண்டு போதி தர்மன் கதையை மட்டும் அழகாக எடுத்த இயக்குநர் முருகதாஸ், தன்னைக் கொண்டாடிய ரசிகர்களுக்கு மீதி இரண்டரை மணி நேரமும் பெரும் சோதனையைத் தந்துவிட்டார் என்பதுதான் உண்மை.

முதல் 20 நிமிடக் காட்சிகளுக்கு மட்டும் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். அந்த அளவு உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள் முருகதாஸ், சூர்யா உள்ளிட்டோர். குறிப்பாக ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்!

பல்லவ காஞ்சியைச் சித்தரித்துள்ள விதம், சீனப் பயணத்தில் சூர்யா கடந்து போகும் இமயமலைப் பகுதிகள், இரவிலும் ஸ்படிகமாய் மின்னும் ஆறுகள், அந்த சீனக் கிராமம்... என அப்படியே நம்மை இழுத்துக் கொள்கிறது படம். நோய் பாதித்த குழந்தையை காப்பாற்றி தன் போர்வைக்குள் மறைத்து வைத்து, அந்தக் குழந்தையின் தாய் கண்ணெதிரே போதி தர்மன் காட்டும்போது, அந்த சீனப் பெண் உணர்ச்சிக் குவியலாய் கதறியபடி தரையில் விழுந்து வணங்குமிடம்... நெஞ்சைத் தொட்டுவிடுகிறது.

ஆனால் அதன் பிறகு ஒரு காட்சி கூட அந்த அளவு உணர்ச்சிமிக்கதாக, துடிப்பானதாக இல்லை என்பதே உண்மை. போதி தர்மன் கதையை மட்டும் 2.30 மணி நேரம் வர்ணித்திருந்தால் கூட ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கும், தமிழ் ரசிகர்களுக்கு.

ஒரு சர்க்கஸ் கலைஞனான சூர்யா - மரபணு ஆராய்ச்சி மாணவி ஸ்ருதி காதலில் எந்த ஈர்ப்பும் இல்லை. அப்படி ஈர்ப்பே இல்லாத காதலில் வரும் டூயட்டுகள் மட்டும் எப்படி ரசிக்கும்படி இருக்கும்?.

ஸ்ருதி ஹாஸன் சில காட்சிகளில் பரவாயில்லை. பல காட்சிகளில் ஐயகோ. அதுவும் அவரது உடைந்த தமிழ் கொடுமை. டிஎன்ஏ ஆராய்ச்சி பற்றிய செமினாரில் தமிழ் பற்றி எழும் சர்ச்சை பொருத்தமற்ற காட்சியாக, பார்ப்பவர் உணர்வைத் தூண்டும் மலிவான உத்தியாக அமைந்துள்ளது. இன்னும்கூட அதை நம்பகத் தன்மையுடன், அழுத்தமாக பொருத்தமான காரணங்களுடன் அமைத்திருக்கலாம்.

சர்வ பலம் பொருந்திய வில்லன் டாங் லீ (Johnny Tri Nguyen) நோக்கு வர்மம் என்ற பெயரில் சும்மா சும்மா 'நோக்கிக் கொண்டே' இருப்பதில் ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டுகிறது.

படத்தின் பின் பகுதியில் வரும் நிறைய காட்சிகளை தமிழ் ரசிகர்கள் ஏற்கெனவே பல ஆங்கிலப் படங்களில் பார்த்துவிட்டதால், 'யு டூ முருகதாஸ்' என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

படத்தின் நாயகன் சூர்யா, அந்த ஆரம்ப காட்சிகளுக்காகவும், க்ளைமாக்ஸ் காட்சிக்காகவும் அபாரமாக உழைத்திருப்பது தெரிகிறது. இடையில் வரும் காட்சிகளில் அவரது கெட்டப்பை இன்னும் கூட நன்றாகக் காட்டியிருக்கலாம். அதேபோல நாயகி ஸ்ருதியுடன் ஒட்டுதலின்றியே அவர் நிற்பது போலிருப்பதால், அந்த காதல் சோகப்பாட்டு பெரிய ஸ்பீட் பிரேக்கர் மாதிரியாகிவிடுகிறது.

படத்தின் இன்னொரு பெரிய மைனஸ் ஹாரிஸ் ஜெயராஜ் இசை. 'முன் அந்தி...' உள்ளிட்ட பாடல்களில் குறையில்லை.. ஆனால், பேக்கிரவுண்ட் மியூசிக்கில் சறுக்குகிறார். பின்னணி இசையில் டாங் லீ வரும் போது சீன சப்தம் ஒன்றை அலற விட்டு கடுப்பேற்றுகிறார்.

பீட்டர் ஹெயின் இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் இன்னொரு பரிமாணம் காட்டியிருக்கிறார்.

தமிழன் பெருமை என்னவென்று உலகுக்கு உரத்துச் சொல்ல வேண்டும் என்ற முருகதாஸின் ஆவலைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படம் மூலம் போதி தர்மனைத் தெரியாத தமிழனே இருக்க முடியாது என்ற நிலை இப்போது உருவாக்கியிருப்பதும் மகிழ்ச்சிதான். ஆனால் நிறைய இடங்களில் தமிழர் பெருமை பற்றி உணர்த்த அவர் வசனங்களை மட்டுமே நம்பிவிட்டதுதான், பிரச்சார நெடியைக் கிளப்பிவிட்டது. அதற்கு தோதான அழுத்தமான காட்சிகளை வைத்திருந்தால் முருகதாஸ் நோக்கம் நிறைவேறியிருக்கும்.

படத்தில் நிறைய குறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அது நமது நோக்கமல்ல. நல்ல படம் தர வேண்டும் என்பதற்காக அபார முயற்சியொன்றில் இறங்கிய ஏ ஆர் முருகதாஸ், அதில் பாதிக் கிணறு தாண்டி விழுந்ததில் நஷ்டம் அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும்தான்!.

ஒரு தமிழ்ப் படைப்பாளி என்ற முறையில் அவரை கடுமையாக விமர்சிக்கவும் முடியாத, அதே நேரம் திறமையுள்ள இந்த இளைஞரை விட்டுக் கொடுக்கவும் மனமில்லாத தர்மசங்கடத்தை முதல்முறையாக ஏ ஆர் முருகதாஸ் ஏற்படுத்திவிட்டார் என்பதே உண்மை!.

விழுவது மீண்டும் எழுவதற்கே என்ற தமிழ் மந்திரம், மீண்டும் ரமணாக்கள், கஜினிகள் படைக்கும் உத்வேகத்தை முருகதாஸுக்கு தரட்டும்!

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by thaliranna Fri Oct 28, 2011 8:04 pm

[You must be registered and logged in to see this image.]படம் பார்த்த உண்ர்வை தந்தது தங்கள் விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by அ.இராமநாதன் Fri Oct 28, 2011 8:18 pm

இன்று , இந்த படத்தை துபாயில் - தியேட்டரில்
பார்க்க இருக்கிறேன்..
டிக்கெட் விலை 35 திராம் {ஏறக்குறைய இந்திய
ரூபாய் 400 ஆகும், ஆன் லைனில் டிக்கெட் சிசர்வ்
செய்யப்பட வேண்டும்
-
பார்த்தபின்னர் கருத்தைப் பதிகிறேன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தங்கை கலை Fri Oct 28, 2011 8:23 pm

அ.இராமநாதன் wrote:இன்று , இந்த படத்தை துபாயில் - தியேட்டரில்
பார்க்க இருக்கிறேன்..
டிக்கெட் விலை 35 திராம் {ஏறக்குறைய இந்திய
ரூபாய் 400 ஆகும், ஆன் லைனில் டிக்கெட் சிசர்வ்
செய்யப்பட வேண்டும்
-
பார்த்தபின்னர் கருத்தைப் பதிகிறேன்
கலக்குங்க அய்யா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 11:40 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by கவிக்காதலன் Sat Oct 29, 2011 10:18 pm

படம் மொக்கை !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தமிழன் Sat Oct 29, 2011 10:21 pm

கவிக்காதலன் wrote:படம் மொக்கை !!

கவிக்காதலன் ஐயா, படம் பார்த்து விட்டீர்களா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Oct 29, 2011 10:24 pm

ஐயா துபாய்லா வசிக்கிறார்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 10:24 pm

ஆமாம் பார்த்துவிட்டர் டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தமிழன் Sat Oct 29, 2011 10:25 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் பார்த்துவிட்டர் டமில்

உங்களுக்கு எப்படி இது தெரியும் ஐயா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by கவிக்காதலன் Sat Oct 29, 2011 10:27 pm

கவிக்காதலன் ஐயா, படம் பார்த்து விட்டீர்களா?

பார்த்திட்டேன்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தமிழன் Sat Oct 29, 2011 10:31 pm

கவிக்காதலன் wrote:
கவிக்காதலன் ஐயா, படம் பார்த்து விட்டீர்களா?

பார்த்திட்டேன்...!!

தங்களை நெடுநாட்களாகத் தமிழ்த்தோட்டத்தில் காணவில்லையே ஐயா? நலம்தானே?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by கவிக்காதலன் Sat Oct 29, 2011 10:36 pm

தங்களை நெடுநாட்களாகத் தமிழ்த்தோட்டத்தில் காணவில்லையே ஐயா? நலம்தானே?

நலம் நீங்க?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தமிழன் Sat Oct 29, 2011 10:38 pm

கவிக்காதலன் wrote:
தங்களை நெடுநாட்களாகத் தமிழ்த்தோட்டத்தில் காணவில்லையே ஐயா? நலம்தானே?

நலம் நீங்க?

நலமே ஐயா, தங்களை மீண்டும் தமிழ்த்தோட்டத்தில் காண்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by கவிக்காதலன் Sat Oct 29, 2011 10:43 pm

நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 10:46 pm

அவர் தான் சொன்னார் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தமிழன் Sat Oct 29, 2011 10:49 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அவர் தான் சொன்னார் ஐயா

என்ன சொன்னார் ஐயா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 10:51 pm

படம் பார்த்தேன் மொக்கை என்று
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தமிழன் Sat Oct 29, 2011 10:52 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:படம் பார்த்தேன் மொக்கை என்று

நீங்களும் படம் பார்த்து விட்டீர்களா ஐயா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 10:54 pm

இல்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தமிழன் Sat Oct 29, 2011 10:56 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இல்லை

அப்போ எப்படி ஐயா தாங்கள் படம் மொக்கை என்று சொல்கிறீர்கள்?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 10:59 pm

டமில் இதற்கு முன்பு உள்ள மறுமொழிகளை படியுங்கள் புரியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தமிழன் Sat Oct 29, 2011 11:02 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:டமில் இதற்கு முன்பு உள்ள மறுமொழிகளை படியுங்கள் புரியும்

ஐயா முன்பே அனைத்துப் பின்னூட்டங்களையும் படித்து விட்டேன். சும்மா தங்களுடன் சற்று நேரம் உரையாடலாம் என்றுதான். <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> அதற்குள் தாங்கள் கோபமாகிவிட்டீர்கள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 11:05 pm

இதற்கு பெயர் தான் கோபம?
இது தான் உரையாடலா?
தெரியாமல் போச்சு டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by sakthivelu Sat Oct 29, 2011 11:13 pm

7-ஆம் அறிவு, தமிழனுக்கு புத்துணர்வு.

முருகதாஸ் முயற்ச்சிக்கு வாழ்த்துகள்!


Last edited by sakthivelu on Sat Oct 29, 2011 11:18 pm; edited 1 time in total
sakthivelu
sakthivelu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 39
Points : 51
Join date : 25/10/2011
Age : 33
Location : COIMBATORE

Back to top Go down

7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம் Empty Re: 7 ஆம் அறிவு- சிறப்பு விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum