தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Yesterday at 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Yesterday at 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Yesterday at 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Yesterday at 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
எனது "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" கவிதை தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு
2 posters
Page 1 of 1
எனது "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" கவிதை தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு
எனது "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" கவிதை தொகுப்பு மீதான இன்னுமொரு இரசனைக் குறிப்பு + விமர்சனம். இதை எழுதியிருப்பவர் (இரசித்திருப்பவர்+ விமர்சித்திருப்பவர்) இலங்கையின்
ஒரு இளம் படைப்பாளியும் வளர்ந்துவரும் கவிஞனுமாகிய பஸ்லி.
இது மிகவும்ஒரு காத்திரமான, சுவாரஷ்யமான இரசனைப் பகிர்வு. இது இவரின்
தனித்துவமான படைப்பாற்றலையும் திறனாய்வையும் கோடிடுகிறது. இந்த விமர்சனத்தை பகிர்ந்த கவித்தோழன் பஸ்லி ஹமீட் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
எழுத்துக்களால் வரையப்ட்ட சித்திரம் பி. அமல்ராஜின் 'கிறுக்கல்கள் சித்திரமாகின்றன' கவிதைத் தொகுப்பு. 76 பக்கங்களில் நீளும் 18 கவிதைகளும் புதுக் கவிதைகளாகவே உள்ளன. புத்தகத்தை திறந்ததிலிருந்து மூடும்வரை கண்களை ஒரே சீராக வைத்துக் கோண்டு வாசிக்கக் கூடிய வண்ணம் அழகிய முறையில் அச்சுக் கோர்க்கப்பட்டுள்ளது. அமல்ராஜ் ஒரு வளர்ந்துவரும் இளம் கவிஞராக இருக்கின்ற போதிலும் அவரது கவிதைகளைப் படிக்கும் போது அவை சிறு கன்றுகளாயன்றி பெரு வருட்சங்களாய் விரிந்திருப்பதை காணக்கூயதாய் உள்ளது. தனக்கென ஒரு தனித்துவமான நடையை அமைத்துக் கொண்டு இவர் கவி பாடும் விதம் பொதுவாக எல்லோரையும் கவர்ந்திலுக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கவஞராக அமல்ராஜ் திகழ்கிறார்.
ஒரு நல்ல கவிதையை வாசிப்பதில் கிடைக்கும் திருப்தி மிகவும் அலாதியானது. ஐந்து நட்சத்திர விடுதிகளில் பரிமாரப்படும் உயர்ரக உணவுகளிலும் சுவையானது. 'கவிதை' என்ற சொல்லை உச்சரிக்கும் போதே மனதில் ஒரு இனிமை படர்கிறது. எழுத்துக்களின் சுவை மிகுந்த பகுதியான கவிதைகள் பல வடிவங்களில் எழுதப்படுகின்ற போதிலும் புதுக் கவிதைகளே அவற்றுள் பிரதானமான வடிவமாக மாறியிருப்தைக் காணலாம். இன்று பெரும்பாலான கவிதைகள் புதுக் கவிதைகளாகவே வெளிவருகின்றன. வரையறையின்றி சுதந்திரமாக எழுதக் கூடிய இலகுவான தன்மையே இளையவர் முதல் முதியவர் வரை இவ்வடிவத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணமாய் இருக்கலாம். இந்த இலகவான தன்மையே சில வேலைகளில் புதுக் கவிதைகளுக்கு பாதகமாகவும் அமைகின்றன. சொற்களிலிருந்து கவித்துவ அழகு கவனிக்கப்படாது வெறும் வசனக் கோர்வைகளை உடைத்து கவிதையாக வழங்கும் போது அது புதுக் கவிதைகளின் மதிப்பினை இழக்கச் செய்கின்றது. ஆனால் அமல்ராஜின் கவிதைகளோ புதுக் கவிதைகளுக்கு அழகு சேர்க்கிறது. இவரது கவிதைகளில் மதிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறப்பம்சங்கள் பல. கவிதையை தொடங்கி முடிக்கும் வரையில் நகர்த்திச் செல்லும் விதம் அதில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. ஒரு கதையை நகர்த்துவதற்குச் சமனான மொழிநடையைக் கையாளும் இவர் ஆரம்பத்திலிருந்து இருதிவரை வரிகளை அடுக்கும்போது சுவை சரியாமல் பார்த்துக் கொள்வதுடன் ஒவ்வொரு வரிகளிலும் அடுத்தடுத்து வரும் வரிகளின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டச் செய்கிறார். இதனால் கவிதை நீளமானதாக இருந்தாலும் அலுப்புத் தட்டாமல் இரசித்து வாசிக்க முடிகிறது. தேவையான இடங்களில் நகைச்சுவை மற்றும் சிலேடைகளையும் சரியான அளவில் உபயோகிப்பது அமல்ராஜ் கவிதைகளில் கையாளும் இன்னுமொரு உத்தியாகச் சொல்லலாம். ஒரு பூரணமான புதுக் கவிதையைப் படைப்பதற்கான சரியான அளவுகோல்கள் இவரிடத்தில் இருப்பதையே இதிலிருந்து உணரக்கூடியதாய் உள்ளது.
இனி அமல்ராஜின் 'கிறுக்கல்கள் சித்திரமாகின்றன' தொகுப்பின் கவிதைகளைப் பார்ப்போமானால் காதல், சமூகப் பிரச்சினை மற்றும் யுத்தமும் அதன் பிரதிபலிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு கவிதைகள் வரையப் பட்டிருப்பதை காண முடிகின்றது. தாயைப் பாடாத கவிஞன் இல்லை என்றால் அதைப் பொய் என்று சொல்ல முடியாது. அமல்ராஜும் முதல் கவிதையில் தாயைப் பாடியுள்ளார்.
'............................
கொடுத்து வைத்தவன்
நான்.
இருபத்து நான்கு மணிநேர
தெய்வ தரிசனம்
எனது வீட்டில்.
பகலில் தெய்வம்
சமயலறையில்
இரவில் தெய்வம்
படுக்கையறையில்...............'
தாயை அதி உச்சியில் வைத்துக் கவி வடித்துள்ளார் அமல்ராஜ். தாயின் பெறுமதியை அழகாக விளக்கும் இக் கவிதைக்கு 'தியாகம் அவள் பெயர்' என்று தலைப்பிட்டுள்ளார். 'உன்னை உரசி உரசிப் பார்த்ததில்தான் எனக்கு உணர்வே வந்தது' என்று எம் உணர்வுகளையும் தொடுகிறார் அமல்ராஜ். தாய்மை என்பதை ஒவ்வொரு பெண்ணும் தனக்குக் கிடைத்த பெரும் அதிஷ்டம் என்றே கருதுகிறாள், அதே போன்றே ஒவ்வொரு பிள்ளையும் தனது தாய் தனக்கக் கிடைத்த பெரும் அதிஷ்டம் என்று கருத வேண்டும் என்பதையே இக்கவிதை எமக்குக் கற்றுத் தருகின்றது. இக் கவிதையின் ஒவ்வொரு வரிகளும் தாயை நன்றியுணர்வுடன் பார்க்கின்றன.
'.................................
தாமரை போர்த்திய
பரந்த குளம்,
நடை சொல்லித்தந்த
உயரக் குளக்கட்டு,
விரும்பிக் குளித்த
ஆலடி இறக்கம்,
விரும்பாமல் போன
வீதியோர நேசறி,
வேண்டுமென்றே கலைத்த
பனைமரத்துத் தேனி................'
என்று நீளும் 'ஊர்ப்பக்கம்' கவிதையில் மறந்துபோன ஞாபகங்களை மீட்டி கோர்வையாய்க் கோர்த்திருக்கிறார் அமல்ராஜ். நவீன புகைப்படக் கருவிகள்கூட பிடிக்காத படங்களை ஒரு கவிஞனின் கற்பனை படம்பிடித்துக் காட்டுகிறது என்பதை நிரூபித்திருக்கிறார் அமல்ராஜ். ஒரு கிராமத்து தமிழ் சினிமாவின் பாடல் காட்சி போல் இக்கவிதை எம் மனத்திரையில் காட்சிப்படுத்தப்படுகின்றது. வெறும் ஞாபகங்களை மட்டும் சுமந்து கொண்டு பிறந்து வளர்ந்த மண்ணை விட்டுப் பிரிந்து சென்ற ஒரு இளைஞனின் உணர்வுகளில் உள்ள ஏக்கம் அருமையாக இக்கவிதையில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. வரிக்கு வரி சொந்த மண்ணின் வாசனை, வளங்கள் மற்றும் சிறப்பு என்பன அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. கவிதையைப் படித்து முடித்ததும் அமல்ராஜின் கிராமத்துக்கு சென்றுவந்த அனுபவம் எம் மனதுக்குக் கிடைக்கிறது.
'............................
அவள்
கையிலிருக்கும்
கைக்குட்டையும்
இடுப்பிலிருக்கும்
காற்சட்டையும்
ஒரே நீளம்
ஒரே அகலம்............................'
இது 'புதுமைப் பெண்ணும் தோற்றுப்போன ஆணும்' என்ற கவிதையின் சில வரிகள். நாகரீகம் என்ற மாய வலைக்குள் சிக்கித் தவிக்கும் நமது பெண்களைப் பற்றி எழுதுகிறார் அமல்ராஜ். பொதுவாக தெற்காசிய நாடுகளில் வாழும் சமுதாயத்தில் குடும்பம் என்பது முக்கியத்துவம் பெறுவதனால் இங்கு ஒழுக்கம் மிகவும் உயர்வாகவே கருதப்படுகின்றது. ஒழுக்கம் என்பது நடத்தையைப் பொறுத்ததாக இருந்தாலும் ஒரு பெண்ணின் ஒழுக்கம் ஆணையும் பாதிக்கின்றது. 'உங்கள் பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள்' என்று பெண்ணியம் பேசுபவர்கள் சொன்னாலும் பூவைத் தேடி வண்டுகள் செல்வது விதி. அது போன்றுதான் ஆண்கள் பெண்களைப் பார்ப்பதென்பது விதி, அப்படி பார்க்காவிட்டால் அவனில் ஏதோ ஒரு வியாதி. எனவே ஆடை என்பது ஒழுக்கத்தில் ஒரு முக்கியமான விடயமாக இருப்பதனால் அது பற்றிய அமல்ராஜின் ஆதங்கங்கள் இக் கவிதையில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றது.
'...................................
அவளிடத்தில்
காண்பதெல்லாம்
அழுகையும் அவஸ்தையும்தான்.
கணவனின் சேட்டை
போட்டுக்கொள்கிறாள்1
மகன் படத்தை
அணைத்துக்கொள்கிறாள்!!
இவற்றை விட
என்ன இருக்கிறது
அவளிடம்...........................'
யுத்தத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுள் ஒருத்தியின் வாக்குமூலத்தினை 'முள்ளிவாய்க்கால் முடிவுரை' என்ற தலைப்பில் கவிதையாய்ப் பதிந்திருக்கிறார் அமல்ராஜ். நடந்தோய்ந்த யுத்தத்தில் எமக்குக் காணக் கிடைக்காதவைகளில் ஒரு துளியை எம் கண்முன் நிறுத்துகிறார் இவர். யுத்தத்தின் தீர்ப்பு எவ்வளவு கொடூரமானது என்பதை கண்ணீர் கசியும் வரிகளில் காட்டுகிறார் அமல்ராஜ். இந்த வரிகளினூடாக இவர் எழுப்பும் மனிதாபிமானம் பற்றிய கேள்வி எம் மனங்களிலும் எழுகிறது.
'...................................
சொத்தை இழந்தோம்
செத்துவிடவில்லை.
மண்ணை இழந்தோம்
மாண்டுவிடவில்லை.
மானமிழந்தோம்
மண்டியிடவுமில்லை.............................'
அமல்ராஜின் வீரமான வரிகள் 'பயணங்கள் முடிவதில்லை' என்ற கவிதையில் பயணிக்கின்றது. யுத்தத்தில் பெற்றக் கொண்டவற்றை விடவும் இழந்தவைகள்தான் அதிகம் என்பதனால் மனதைத் தளரவிடாது உள்ளத்துக்கு தெம்பளிக்கிறது இவரது வரிகள். யுத்தத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட சமுதாயத்தில் தானும் ஒரு அங்கத்தவன் என்ற அடிப்படையில் இவரது உள்ளக் குமுரல்கள் இக் கவிதையில் வெடித்துள்ளது.
'இரண்டு இருக்கை,
ஒற்றை யன்னல்,
ஒற்றைக்காற்றாடி,
வயதாகிப்போன மின்குமிழ்.
பயணம் ஆரம்பம்
பாதியில் என் மனம்
இம்முறையும்
மீதி இருக்கையில்
ஒரு
மூதாட்டி வேண்டாம்.......................'
தாயைப் பாடாத கவிஞன் இல்லை என்று சொன்னேன். ஆனால் காதலைப் பாடாவிட்டால் அவன் கவிஞனே இல்லை என்று சொல்லுமளவிற்கு எல்லாக் கவிஞர்களுமே காதலைப் பாடுகின்றனர். அமல்ராஜும் இத் தொகுப்பில் பல கவிதைகளில் காதலின் பல கோணங்களையும் விலாசியுள்ளார் இது 'ஒரு ரயில் பயணம்' என்ற கவிதையின் ஆரம்ப வரிகள். காதலை எல்லோருமே உணர்கிறார்கள் ஆனால் ஒரு சிலரே அதை அனுபவிக்கிறார்கள். காதலை ஒரு கவிஞன் உணர்வது அதை அனுபவிப்பதற்குச் சமனானது என்று சொல்லலாம். சமகால இளைஞர்களின் இதயத்துடிப்புகளை வரிகளாக வடித்துத் தந்திருக்கிறார் அமல்ராஜ். பூத்துக் குலுங்கும் இளமைப் பருவத்தில் இவர் இருப்பதனால் சிலவேலை இது இவரின் சொந்த அனுபவமாகவும் இருக்கலாம். இக் கவிதையை படித்த யாரும் ரயிலில் பயணிக்க நோந்தால் பக்கத்து இருக்கையில் ஒரு மங்கையோ அல்லது மூதாட்டியோ வந்தமரும் போது நிச்சயமாக அமல்ராஜை நினைக்காமலிருக்க மாட்டார்கள்.
'எனது
பழைய நாளேடுகளின்
பழைய பக்கங்கள்..........'
ஆரம்பிக்கும் 'எனது ஆட்டோகிராப்' கவிதை
'............................
என் ஆட்டோகிராப்
இன்னும் எழுதப்படுகிறது.'
என்ற வரிகளுடன் நிறைவடைகிறது. இந்தக் கவிதையிலும் பழைய ஞபகங்களை மீட்டிப் பார்த்திருக்கிறார் அமல்ராஜ். இது பதியப்பட்ட ஆட்டோகிராப் என்று இவர் சொல்வதால் மழலைப் பருவத்தினை ஆட்டோகிராபில் பதிந்து காட்டியிருப்பது எந்தளவுக்குப் பொறுத்தம் என்று சொல்லத் தெரியவில்லை. ஆட்டோகிராப் பள்ளிப் பருவத்திலிருந்து எழுதியிருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.
அமல்ராஜின் கவிதைகள் அனைத்திலுமே நடைமுறை பாவனையில் உள்ள எளிமையான சொற்களே கையாளப்பட்டிருப்பதால் அர்த்தம் தேடுவதற்காக அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. இது இவரது கவிதைகளை மிக இலகுவாக வாசகர்கள் அரவணைத்துக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. அடுத்து இவர் புதுக் கவிதைகளில் மட்டும் கவனம் செலுத்தியிருப்பதனால் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பதுடன் இக் கவிதைத் தொகுப்பும் தனித்துவமாகவும், வித்தியாசமாகவும் தெரிகிறது. இத் தொகுப்பில் உள்ள கவிதைகள் குருகிய அல்லது நீண்ட கால இடைவெளிகளில் எழுதப்பட்டதாயிருக்கக் கூடும். அலரிப் பூ, அல்லிப் பூ, விரும்பி, விரும்பாத போன்ற சில சொற்கள் அடுத்தடுத்து சில கவிதைகளிலும் காணக்கூடியதாயிருப்பதே அப்படி எண்ணத் தோன்றுகிறது. கவிதைகளைத் தொகுத்தபோது அமல்ராஜ் இதனைக் கவனத்தில் கொண்டிருக்கலாம். புத்தகக் கட்டமைப்பு திருப்திபடும்படியாகத்தான் இருக்கிறது. கவிதைகளை அழகான தெளிவான எழுத்துக்களில் அச்சிட்டிருக்கிறார்கள்.
இத் தொகுப்பிலுள்ள கவிதைகளிலும் பாரிய அளவிலான உயர்ச்சியை சமகாலத்தில் அமல்ராஜின் கவிதைகளில் காணக்கூடிதாய் இருப்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். வித்தியாசமான கருக்களை பொறுக்கியெடுத்து சிலேடை கலந்து முழுவதும் சுவையாய் புதுக் கவிதை படைப்பதில் சம காலத்தில் அமல்ராஜ்; கோடிட்டுக் காட்டப்பட வேண்டியவர். இவரது வாசகர்களுள் நானும் ஒரு நீண்டகால அங்கத்தவன்.
ஒரு நதியின் ஆரம்பம் மிகவும் அழகானதாகத்தான் இருக்கும். ஆனால் அது சமுத்திரத்தைச் சென்று சங்கமிக்கும் வரையில் ஏராளமான இடர்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அமல்ராஜ்..... உங்கள் இலக்கியப் பயணத்தின் ஆரம்பமும் ஒரு நீர்வீழ்ச்சியைப் போன்று மிகவும் அழகாக உள்ளது. இனிவரும் காலங்களில் நீங்கள் பெரும் பள்ளங்களில் விழ நேரலாம், பெரும் பாறைகளோடு மோத வேண்டிவரலாம் திடமான மனதுடன் முகம் கொடுங்கள். உங்களுக்கென ஒருதனியான பாதையை அதைத்துக் கொண்டு பெரும் சமுத்திரத்தைச் சென்றடைவீர்கள் என்பது உறுதி.
அமல்ராஜ், நீங்கள் கிறுக்கியவைகளை சித்திரமாக்கிவிட்டீர்கள். இனி செதுக்குங்கள் அவை சிற்பமாகட்டும்.
உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள் அமல்ராஜ்!
- பஸ்லி ஹமீட் -

பி.அமல்ராஜ்- மல்லிகை
- Posts : 95
Points : 135
Join date : 22/10/2011
Age : 40
Location : Colombo, Srilanka
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» எனது நாட்க் குறிப்பு!
» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
» எனது கவிதை
» அவள்தான் எனது கவிதை...
» மொட்டுகளின் வாசம் ! மாணவர்களின் கவிதை தொகுப்பு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum