தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வைரமுத்து திரைப்படப் பாடல்களில் பொதுவுடைமைத் தாக்கம் : கவிஞர் இரா.இரவி

2 posters

Go down

வைரமுத்து திரைப்படப் பாடல்களில் பொதுவுடைமைத் தாக்கம் : கவிஞர் இரா.இரவி Empty வைரமுத்து திரைப்படப் பாடல்களில் பொதுவுடைமைத் தாக்கம் : கவிஞர் இரா.இரவி

Post by eraeravi Tue Jun 22, 2010 11:54 am

வைரமுத்து திரைப்படப் பாடல்களில் பொதுவுடைமைத் தாக்கம் : கவிஞர் இரா.இரவி



நூல் ஆசிரியர் : முனைவர்:இதயகீதன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் கவிஞர் இதயகீதன், இந்த நூலின் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார். முன்னோட்டமாக இந்நூல் வந்துள்ளது.பட்டதாரி தமிழாசிரியராகவும்,விடுதி காப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். ஓய்வறியா உழைப்பாளி இவரது ஆய்வுக்கு நெறியாளர் தமிழ்த்தேனீ இரா.மோகன். தனது குருவின் மணிவிழாவில் இந்த நூலை வெளியிட்டு சிறப்பித்துள்ளார். நூலாசிரியர் இதயகீதன். பழகுவதற்கு இனிமையானவர். நல்லவர், வல்லவர்,புன்னகை மன்னர்.

நூலின் முகப்பு அட்டையில் கவிஞர் வைரமுத்து நூலாசிரியர் இதயகீதன் இருவரின் புகைப்படம் அலங்கரிக்கின்றது. பொதுவுடமை என்பது மனிதநேயம். மனிதநேயப் பற்றாளர்கள் அனைவரும் விரும்புவது பொதுவுடமை. பொதுவாக இன்றைக்கு திரைப்படப் பாடல்கள். தரம் தாழ்ந்து விட்டது என்பது உண்மையே. நூலாசிரியர் கவிஞர் வைரமுத்துவின் சற்று முந்தைய பாடல்களையே ஆய்வுக்கு எடுத்து உள்ளார். இன்றைய பாடல்களில் கருத்துக்கு இடம் எது? இசை இரைச்சலில் பாடல் வரிகளே எதுவும் புரியவில்லை. கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு பொதுவுடைமைக் கருத்தில் ஈடுபாடு இருந்தாலும் தற்போது திருமண மண்டபம் அதிபதி,முதல்வரின் நெருக்கமான நண்பர் என முதலாளித்துவ பாணியில் வலம் வருவது யாவரும் அறிந்ததே. இருந்தாலும், அன்று எழுதிய பாடல்களின் வரிகளில் பொதுவுடைமைத் தாக்கம் இருந்தது உண்மை.

மேடைக் கலைவாணர் நன்மாறன்,பேராசிரியர் ச.மாடசாமி, தமிழ்த்தேனீ இரா.மோகன் ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு அணி சேர்க்கின்றன. கவிஞர் வைரமுத்து டிசம்பர் 2009 வரை 7000 திரைப்படப் பாடல்கள் எழுதி உள்ளார்.நூலாசிரியர் தன் ஆய்வுக்கு 906, பாடல்களை தேர்வு செய்து ஆய்ந்துள்ளார். கவிஞர் வைரமுத்து அவர்களுக்கே அவர் எழுதிய திரைப்படப் பாடல்களில் உடன்பாடு இல்லை என்பதை அவரது மொழியிலேயே சொல்ல வேண்டுமானால்,”திரைப்படத்தைத் தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்” என்று இன்னொரு தேசிய கீதத்தில் எழுதி உள்ளார். அவர் அன்று எழுதியது இன்று பொருந்துவதாகவே உள்ளது. அவரது பாடல்களில் அத்திப் பூத்தாற் போல கதைக்காக வந்த பாடல்களில் பொதுவுடைமை சிந்தனைகளை பூதக் கண்ணாடி போட்டு ஆய்வு செய்து இந்நூல் படைத்துள்ளார். பாராட்டுக்கள்.

சங்க காலம் முதல் சித்தர்கள் காலம் வரை வர்க்கப் போராட்டம் இருந்தது என தொல்காப்பியம்,புறநானூறு பாடல்,திருக்குறள் என யாவும் மேற்கோள் காட்டி உள்ளார்.

ஈ என இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று – புறநானூற்றுப் பாடல் 204

பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – திருக்குறள் 326

தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம் -மகாகவி பாரதியார்

பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

வசதி படைத்தவன் தரமாட்டான்
வயிறு பசித்தவன் விட மாட்டான் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பொதுவுடைமை வாழும் நாட்டில்
இரண்டு வர்க்கம் என்றும் இல்லை – கவியரசு கண்ணதாசன்.
கவிஞர் வைரமுத்து பாடல்கள்

இங்கு சுதந்திரம் வந்தது யாருக்கு – அட
யாரோ பத்துப் பேருக்கு
விடுதலை வந்தும் விடியவில்லை – அட
இருளின் சுவர்கள் இடியவில்லை (இது எங்க நாடு)

(உண்மை தான்.)

கோவணம் இல்லாத தேசத்தில்
இன்றைக்கு எத்தனை கட்சிக்கொடி
கண்ணைப் பறிக்கிறதே
விண்ணை மறைக்கிறதே ( புதிய தீர்ப்பு)

( நாளும் ஒரு புதுக்கட்சி உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது)

ஓட்டுப் போடும் காலம்
ஊரில் மேளதாளம்
வெள்ளை வேட்டி கூட்டம் வந்து
வேஷம் கட்டி ஆடும்
ஓட்டுப் போட்டு ஓட்டு போட்டுத்
தாண்டவக் கோனே – பல பேர்
ஓட்டையைத் தான் போட்டாண்டா
தாண்டவக் கோனே(துளசி)

( இன்றும் அரசியல்வாதிகளின் ஏமாற்று வேலை தொடர்கின்றது)

என்ன தேசமோ – இது
என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ( உன் கண்ணில் நீர் வழிந்தால்)
இந்தத் தலைமுறையே
லஞ்சப் பரம்பரையே (புதிய தீர்ப்பு)
(பரம்பரையாகவே இலஞ்சமும் தொடர்கின்றது)

(மூட நம்பிக்கைகளையும் சாடுகின்றார்)

கை சேர்ந்த காசையெல்லாம்
நீ கற்பூரம் காட்டிப்புட்ட ( நட்பு)
வந்தது எல்லாம் விதிப்படி என்றால்
வாழ்வது எல்லாம் வீண் தானே (வில்லாதி வில்லன்)
ஜாதகத்தைப் பார்த்துப் பார்த்துச் சாய்ந்து விடாதே (வசந்தி 1988)

புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது ( காதலன்)

(பெண் விடுதலையும் பாடி உள்ளார்)

நூல் ஆசிரியர் கவிஞர் இதயகீதன்,கவிஞர் வைரமுத்து பல்வேறு நூல்களில் இருந்து குறிப்புகளில் இருந்து ஆய்வு செய்து, அதிக நாட்கள் ஓடாத,பிரபலமாகாத திரைப்படங்களில் இருந்து தேடிப் பிடித்து பொதுவுடைமைத் தாக்கம் எதில் உள்ளது என சல்லடை போட்டுத் தேடி,நூலை வடித்துள்ளார்.நூலாசிரியரின் உழைப்பு பாராட்டுக்குரியதே.

எழுத்திற்கும், செயலுக்கும் வேற்றுமை இருக்கக் கூடாது, அது தான் ஒரு கவிஞனுக்கு இலக்கணம், மகாகவி பாரதியும்,புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் எழுதியபடி வாழ்ந்தவர்கள்.ஆனால் இன்றைக்கு நாட்டு நடப்பு எப்படி உள்ளது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர். தினந்தோறும் செய்தித்தாள்களில் பட்டினிச் சாவுகளும், வறுமையின் காரணமாக தற்கொலைகளும் நடைபெற்று வருகின்றது. இதற்கு உலகமயத்தை வரவேற்ற ஆள்வோரும் காரணமாகின்றனர். ஆள்வோரிடம் பொதுவுடைமை கருத்தை வலியுறுத்த கவிஞர் வைரமுத்து முன் வர வேண்டும். அப்போது நூலாசிரியர் கவிஞர் இதயகீதன் உழைப்பிற்கு பெருமை சேர்த்ததாக அமையும். போதுவுடைமை எழுத்தில் மட்டும் இருந்தால் போதாது. செயலிலும் வர வேண்டும்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2639
Points : 6353
Join date : 18/06/2010

Back to top Go down

வைரமுத்து திரைப்படப் பாடல்களில் பொதுவுடைமைத் தாக்கம் : கவிஞர் இரா.இரவி Empty Re: வைரமுத்து திரைப்படப் பாடல்களில் பொதுவுடைமைத் தாக்கம் : கவிஞர் இரா.இரவி

Post by eeranila Sun Jul 11, 2010 6:50 pm

அரசியல்வாதிகளின் ஓட்டு வேட்டையை வேடிக்கையாய் சொல்கிறார் நல்லதொரு எடுத்தாய்வு
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

வைரமுத்து திரைப்படப் பாடல்களில் பொதுவுடைமைத் தாக்கம் : கவிஞர் இரா.இரவி Empty NANDRI

Post by eraeravi Sun Jul 11, 2010 9:43 pm

வணக்கம்
மிக்க நன்றி
இரா .இரவி
http://eraeravi.wordpress.com/ ஹாஹாஹாஹா
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2639
Points : 6353
Join date : 18/06/2010

Back to top Go down

வைரமுத்து திரைப்படப் பாடல்களில் பொதுவுடைமைத் தாக்கம் : கவிஞர் இரா.இரவி Empty Re: வைரமுத்து திரைப்படப் பாடல்களில் பொதுவுடைமைத் தாக்கம் : கவிஞர் இரா.இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தமிழராற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிப்பேரரசு வைரமுத்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கருஞ்சூரியன்! நூல் ஆசிரியர் : ‘கவிப்பேரரசு வைரமுத்து’ நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum