தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பூங்காவுக்குள்ளே புயல் (சவால் சிறுகதை - 2011)
5 posters
Page 1 of 1
பூங்காவுக்குள்ளே புயல் (சவால் சிறுகதை - 2011)
[You must be registered and logged in to see this link.]
(இது சவாலுக்கான படம்)
எப்பவும்(இது சவாலுக்கான படம்)
சந்திக்கும் பூங்கா வாசலில் தனது பல்சரை நிறுத்திவிட்டு அருகிலிருந்த
கடையில் கிங்ஸ் வாங்கி பற்ற வைத்துக்கொண்டு அங்கிருந்த தினத்தந்தியை
மேய்ந்து கொண்டிருந்தான் செழியன். அவன் சிகரெட்டை முடிக்கவும் அவனது
செல்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது.
எடுத்துப் பார்த்தவன் கண்ணம்மா
என்று வந்ததும் கட் செய்துவிட்டு கண்களால் தேடினான். அவனுக்கு எதிர்ப்புறம்
தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு சிவப்பு கலந்த பச்சை சுடியில் ப்ரீ ஹேர்
விட்டு தேவதையாக சாரு நின்று கொண்டிருந்தாள்.
தன்னை நோக்கி வேகமாக வரும்
செழியனைக் கண்ட சாரு, இரு வாறேன் என்று சைகை காட்டியபடி அவனருகில் வந்தாள்.
“என்ன நான் வர கொஞ்சம் லேட்டானது ஐயா தம்மடிச்சிட்டிங்களோ?” என்று
செல்லமாக கடிந்து கொண்டாள்.
“இல்ல வாய் நமநமன்னு
இருந்துச்சு... இப்பல்லாம் ரெண்டு மூணுதான் தெரியுமா..? கொஞ்ச நாள்ல
சுத்தமா குறச்சிடுறேன் என் கண்ணம்மாவுக்காக... ஓகே”
“இப்படியே சொல்லிக்கிட்டு இன்னும்
குடிச்சிக்கிட்டுத்தான் இருக்கே... ரெண்டு, முணுன்னு சொல்லுவே...
எனக்கென்ன தெரியும்... சரி வா... ஆமா கையில என்ன பேப்பர்... லவ்
லெட்டரா...?”
“ஆமா... காதலிக்க ஆரம்பிச்சு மூணு
வருசமாச்சு... இனி லவ் லெட்டர் கொடுத்தாத்தான் வாழும்... வேணுமின்னா
காதலுக்கு டைவர்ஸ் லெட்டர் கொடுக்கலாம். " என்றான் சிரித்துக் கொண்டே.
“அப்ப நான் உனக்கு
கசந்துட்டேனா... எவளாவது ஆபிசுல புதுசா வந்திருக்காளா... ஒகே... வேணாமின்னா
விட்டுடு.... எனக்கும் நல்ல பையனா கிடைக்காமலா போயிடுவான்” படபடவென்று
பேசியபடி பட்டென்று பிடித்திருந்த அவன் கையை உதறினாள்.
“ஏய்...லூசுக்கண்ணம்மா... சும்மா
ஜாலிக்கு சொன்னா கோபம் வந்துருமே உனக்கு... அப்பா... உடனே மூக்கு
சிவந்துருமே.... சும்மா சொன்னேன். நீதான் என் வாழ்க்கை... நீதான் என்
உலகம்... நீதான் எல்லாமே... நீயில்லாத வாழ்க்கையை நினைச்சுக்கூட பாக்க
முடியலை.... இதுல டைவர்ஸ் பண்ணுறதா... வா... இது வேற உள்ள போயி
சொல்லுறேன்.”
“என்ன ஐயாவுக்கு புரமோஷன் பேப்பர் கொடுத்துட்டாங்களா?” சகஜ நிலைக்கு மாறினாள்.
“ஆமா... கொடுத்துட்டுத்தான் மறுவேலை பாப்பாங்க... அட நீ வேற வா சொல்லுறேன்...”
ஆட்கள் அதிகமில்லாத ஒரு இடமாக தேர்ந்தெடுத்து அமர்ந்தனர்.
“இங்க வந்ததுக்கு பேசாம
இன்னைக்காவது பீச்சுப் பக்கம் போயிருக்கலாம்... சும்மா வந்து உக்காந்து
பேசிட்டு போயிக்கிட்டே இருக்கதுல என்ன சுகமிருக்கு" முகத்தை அப்பாவியாக
வைத்துக் கொண்டு சொன்னான் செழியன்.
“ம்... வந்த்துல இருந்து ஒரு
மார்க்கமாத்தான் பேசுறே...? பீச்சுக்குப் போனா மட்டும் என்னவாம்... அலையை
ரசிச்சுக்கிட்டு பேசிட்டு வரப்போறோம். அம்புட்டுத்தானே...” அவனை
வேண்டுமென்றே சீண்டினாள்.
“ஆமா லவ்வர்ஸா வாறவனெல்லாம் அலையை ரசிக்கவா வாறாங்க...” இழுத்தான்.
“அப்புறம் எதுக்கு வாறாங்க..?” தெரியாதது போல கேட்டாள்.
“நீ பாத்ததே இல்லையா... சுடுமணலுல
உக்காந்து இப்படி துப்பட்டாவ எடுத்து ரெண்டு தலையவும் மறச்சிக்கிட்டு
என்னென்வோ ஆராய்ச்சி பண்ணுவாங்க... ரெண்டு நாளைக்கு முன்னாடி நானும்
பிரபாவும் போனப்போ ரெண்டு ஸ்கூல் ஸ்டூடண்ட பண்ணுன ஆராய்ச்சியப்
பாக்கணுமே... கல்யாணம் பண்ணுனவங்க தோத்தாங்க போ...”
“இது பார்க்... என்னோட துப்பட்டாவ
கொடு... எவ என்ன ஆராய்ச்சி பண்ணுறான்னு பாக்கத்தான் அவனும் நீயும்
அடிக்கடி பீச்சுக்குப் போறதா... இனி பீச்சுப்பக்கம் போனே மவனே
பிச்சுப்புடுவேன் பிச்சு... ஆமா...”
“நாம போற வழியில நடக்கிறத பாக்காம
இருக்க முடியுமா?. ஆமா நீ என்ன எங்கேயும் எப்போதும் அஞ்சலி மாதிரி
மிரட்டுறே... காதல்ல மிரட்டலெல்லாம் வச்சுக்கக்கூடாது கண்மணி...” அவளது
இதழில் விரல் வைத்து அழுத்தினான்.
“சரி... ஐயாவுக்கு ரொமான்ஸ் மூடா இருக்கு போல... கொண்டு வந்த பேப்பரை பத்தி ஒண்ணும் சொல்லலை... என்ன பேப்பர்... ம்...?”
“இந்தா நீயே பாரு” என்றபடி அவளிடம் மடித்து வைத்திருந்த பேப்பரைக் கொடுத்தான்.
பிரித்துப் பார்த்தவள் “என்னடா இது... லூசு மாதிரி இதை எதுக்கு தூக்கிக்கிட்டு திரியுறே...”
“திட்டாம அதுல என்ன இருக்கு பாரு...”
“என்ன இருக்கா ஒருத்தன் திரும்பி
உக்காந்துக்கிட்டு மொபைல நோண்டுறான். பேப்பர்ல பிரிண்டெடுத்து கட் பண்ணி
வச்சிருக்கான்... “ அவள் அடுக்கிக் கொண்டே போக அவளையே ரசித்துக்
கொண்டிருந்தான்.
“எதுக்குடா... இது...” அவளின்
கேள்வியால் தன்நிலைக்கு வந்தவன், “அந்த பேப்பர் துண்டுல எழுதியிருக்கதைப்
படி...” என்றதும் “என்ன விளையாடுறியா..? ஒரு பேப்பரக் கொண்டாந்து அதுல
இருக்கதை சொல்லு... படியின்னு சொல்றியே... எனக்கு வேற வேலையில்ல...”
“சரி நானே சொல்றேன்.... அந்த
ரெண்டு பிட் பேப்பர்லயும் என்ன எழுதியிருக்குன்னா... ஒண்ணுல ‘Sir, எஸ்.பி.
கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம் –
விஷ்ணு’ அப்படின்னும் இன்னொன்னுல ‘Mr. கோகுல், s w H2 6f – இதுதான்
குறியீடு கவனம் – விஷ்ணு’ அப்படின்னும் இருக்கா...”
“எனக்கு தமிழ்த் தெரியாதுன்னு படிச்சுக் காட்டுறியா...” கோபமாவது போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.
“இல்ல இதுதான் இப்ப பதிவுலகத்துல பரபரப்பான மெஜெஸ்...”
“என்ன பரபரப்பு... யார் அந்த விஷ்ணுவும்... கோகுலும்...”
“இது சரியா பொருந்துற மாதிரி சிறுகதை எழுதணுமாம்... போட்டி அறிவிச்சிருக்காங்க...”
கைகளை இடுப்புக்கு கொண்டு வந்து அவனை முறைத்தாள்.
[You must be registered and logged in to see this link.]
(இது கதைக்கான படம் - படம் நன்றி : மணியம் செல்வன்)
(இது கதைக்கான படம் - படம் நன்றி : மணியம் செல்வன்)
“ஏண்டா கொல்லுறே...? உனக்கெதுக்கு இது... அதெல்லாம் கதை எழுதுறவங்க மண்டய உடச்சுக்கணும்... தூக்கி வீசிட்டு வாடா.... கொல்லாம...”
“என்னயப்பாத்தா கதை எழுதுற மாதிரி
தெரியலையா... என்னோட வலைப்பூவுள்ள எழுதுனதை பாத்திருக்கேல்ல... நேத்து
பிரபாகிட்ட இதை காட்டுனப்போ வேண்டாத வேலை எதுக்கு மாப்ளேன்னு சொல்லி
சிரிக்கிறான். சரி நீயாவது நல்லது சொல்வேன்னு பாத்தா...” முகத்தை தூக்கி
வைத்துக் கொண்டு திரும்பி அமர்ந்தான்.
“இந்த கோபத்துக்கு ஒண்ணும்
குறைச்சலில்ல... ஐயா புலவரே... நீங்க நல்லா கதை எழுதுவீங்க... எழுதுங்க...
ஜெயம் கிடைக்கட்டும்...” என்று அவன் கன்னத்தில் இச் பதித்தாள்.
“அதான் சாரு இருக்கியே... அப்புறம் எதுக்கு ஜெயம்...” அவளை இழுத்தான்.
“அடப்பாவி... கோபமெல்லாம் பொய்யா... ஒரு முத்தம் வாங்கத்தானா... அதுசரி ஜெயம் கிடைப்பாளான்னு நப்பாசை எதுவும் இல்லையே...”
அவளைப் பார்த்து சிரித்துக்
கொண்டே “ம்.... சொல்லு எப்படி எழுதலாம்... க்ரைம் சப்ஜெக்ட்
எடுதுக்கலாமா... இன்ஸ்பெக்டர் கோகுல், இன்பார்மர் விஷ்ணு... இவங்களுக்குள்ள
நடக்கிற ஒரு நிகழ்வை வச்சி...”
“நிறுத்து... நீ க்ரைம் கதை
எழுதவா.. அதுக்கெல்லாம் நிறையப் பேரு இருக்காங்க... பேசாம பாக்கியம்
ராமசாமி எழுதுற அப்புச்சாமி கதை மாதிரி ஜோக்கா எழுது... நீ சிரியஸா
பேசினாலே தாங்க முடியாது. இதுல சீரியஸ் கதை வேறயா... பதிவுலகம் கொஞ்ச
நாளைக்காவது இருக்கட்டும் ராசா... பஸ்ஸ விட்டதும் எல்லாரும் அங்க போயி
கும்முனிங்க... என்னாச்சு பஸ்ஸ செட்டுல போட்டுட்டு எல்லாரையும்
வெரட்டிட்டாங்க...”
“சும்மா வெறுப்பேத்தாதே... சொல்லு எப்படி ஆரம்பிக்கலாம்...”
“எனக்கு கதையெல்லாம் எழுத
தெரியாது... படிக்கும்போது பார்முலாவ ஞாபகம் வச்சுக்கவே என்னால முடியாது...
இதுல S W H2 6F-ன்னு எல்லாம் வச்சு கதைவிடச் சொன்னா... எனக்குத்
தெரியாது... நீ யோசிச்சு எதாவது எழுது... பந்தயத்துல ஜெயிக்கலையின்னாலும்
கலந்துக்கிட்ட குதிரையின்னாலும் பெருமைதானே...”
“நல்லா ஓட்டக்கத்துக்கிட்டேடி... எப்படி ஆரம்பிக்கலாம்... அந்த பாழடைந்த ரோட்டில்....”
“ஏய்... இரு... பார்க்ல பக்கத்துல
காதலிய வச்சிக்கிட்டு கதை... அதுவும் பேய்க்கதை போல யோசிக்கிற நேரமாடா
இது... நீ ரொம்ப படுத்துறேடா... நா போறேன்... நீ உக்காந்து யோசி....”
கோபமாக எழுந்தாள்.
“சரி... சரி... நான் அப்பறமா
யோசிச்சிக்கிறேன்... உக்காரு... அங்க பாரேன்... அந்த ரெண்டு பேரையும்... “
அவன் கை காட்டிய திசையில் பார்த்தாள். அங்கே இதழாராய்ச்சியில் இருவர்
தீவிரமாக இருந்தனர்.
“கருமம்... கருமம்... பூங்காவுக்குள்ள புயல வர வச்சிடுவாங்க போல...”
“என்ன சொன்னே... என்ன சொன்னே....”
“என்ன...”
“இல்ல எதோ பூங்காக்குள்ள...”
“பூங்காக்குள்ள இல்ல... பூங்காவுக்குள்ள புயலயின்னு சொன்னேன்...”
“எஸ்... பூங்காவுக்குள்ள புயல்...
இதுதான் கதையோட தலைப்பு... தமிழகம் முழுவது குண்டு வக்கிறாங்க.... இது
மாதிரி ஒரு பூங்காவுல குண்டு வக்கிறது சம்பந்தமான குறியீடு ஒண்ணு
இன்பார்மர் விஷ்ணுவுக்கு கிடைக்குது... அதே நேரம் தீவிரவாத கும்பலுக்கு
விஷ்ணு இன்பார்மர்ன்னு தெரிய வருது... அவனோட குடும்பத்தை பணயமா வச்சி
மிரட்டுறாங்க... அப்ப அவன் இன்ஸ்பெக்டர் கோகுலுக்கு தப்பான குறியீடை
கொடுக்கிறான்... எப்படி தீவிரவாத கும்பல் மாட்டுது... இதுதான் கதை...”
படபடவென்று சொல்லிக் கொண்டே போக...
“ஐயோ... நிப்பாட்டு... நீ இப்படி
கொல்லுவேன்னு தெரிஞ்சிருந்தா இன்னைக்கு நான் வந்திருக்கவே மாட்டேன்...
இதெல்லாம் நிறைய தமிழ்ப்படத்துல பாத்தாச்சு... கொஞ்சம் வித்தியாசமா யோசி...
இப்ப என்னய ஆளைவிடு... நான் கிளம்புறேன்... எனக்கு நாளைக்கு முக்கியமான
டாஸ்க் முடிக்கணும்... கொஞ்சம் ஜாவா கோடிங்க பாக்கணும்... அப்புறம் இந்தப்
போட்டி எப்ப முடியுதுன்னு சொல்லு அதுக்கு அப்புறம் வாறேன்...” என்றாள்
சிரித்துக் கொண்டே.
“போம்மா... என்னோட
கிரியேட்டிவிட்டிய கேவலப்படுத்தாதே... எனக்குள்ள ஒரு இயக்குநர்
இருக்கான்... அவன் வெளிய வாற நாள் தூரத்தில் இல்ல...”
“ஓகே... இப்ப சொல்றேன்... க்ரைம்
அது இதுன்னு யோசிக்காம... இதை வச்சி கொஞ்சம் வித்தியாசமா யோசி... ஏன் இப்ப
நமக்குள்ள நடந்ததை கொஞ்சம் மாத்தி கதையா ரெடி பண்ணு.... வெற்றி பெற
வாழ்த்துக்கள்... காலையில போன் பண்ணும் போது நீ உன்னோட கதையை எங்கிட்ட
சொல்றே... பர்ஸ்ட் நான் கேட்டதும் நீ அனுப்பி வைக்கலாம்... ஓகே... பெஸ்ட்
ஆப் லக் மை டார்லிங்...” என்றபடி எழும்ப அவனும் அவளுடன் எழுந்து கொண்டான்.
இருவரும் இணைந்து நடக்க, இரண்டு
நண்பர்கள் தீவிர ஆலோசனையில் இருந்தார்கள். அவர்களை கடக்கும் போது
‘இன்ஸ்பெக்டர் கோகுலுக்கு தனக்குத் தெரியாம இன்பார்மர் விஷ்ணு தப்புப்
பண்றானோன்னு சந்தேகம் வந்திருது... அதனால...’ என்று ஒருவன் இன்னொருவனிடம்
சொல்லிக் கொண்டிருந்தான்.
“இவங்க ரெண்டு பேரும்
எழுத்தாளர்கள் சுபா போல பதிவுலக சுபா போல... என்னமோ பரிச்சைக்குப் படிக்கிற
மாதிரி சின்ஸியரா... உன்னய மாதிரியே நிறைய அலையுதுக போல... நல்லா போட்டி
வச்சாங்கப்பா... ஒரு படத்தைப் போட்டு பதிவுலகத்தையே பைத்தியமா க்ரைம்
கதையின்னு அலைய வச்சிட்டாங்கப்பா... " என்று செழியனின் காதில் சாரு
கிசுகிசுக்க, அவளை “சும்மா வாடி...” என்றான் சிரித்துக் கொண்டே.
kumar006- புதிய மொட்டு
- Posts : 12
Points : 35
Join date : 16/10/2011
Location : அபு Dhabi
Re: பூங்காவுக்குள்ளே புயல் (சவால் சிறுகதை - 2011)
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பூங்காவுக்குள்ளே புயல் (சவால் சிறுகதை - 2011)
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: பூங்காவுக்குள்ளே புயல் (சவால் சிறுகதை - 2011)
:héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» பொறி (சவால் சிறுகதை - 2011)
» சிந்தனை சிகிச்சை-2
» சமுகத்திற்கு சவால்...
» கணித புலிகளுக்கு ஒரு சவால்
» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
» சிந்தனை சிகிச்சை-2
» சமுகத்திற்கு சவால்...
» கணித புலிகளுக்கு ஒரு சவால்
» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum