தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது யார்?
4 posters
Page 1 of 1
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது யார்?
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது யார்?
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் கோடி மாவட்டங்கள்
தொழில் ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளன. இந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்கு
எப்போதாவது மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிக்கும் சிலர்
திட்டமிட்டு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதனால், இந்த மாவட்ட மக்கள்
தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.
இந்தியாவின் 10 பெரிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி துறைமுகத்தை
மையமாக கொண்டு, தூத்துக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய தொழில்
நிறுவனங்களைத் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து
வருகிறது. தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்த மூன்று மாவட்ட எல்லைகளை
ஒட்டியுள்ள கூடங்குளத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பிரமாண்ட
அணு மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது.எல்லா பணிகளும் முடிந்து கிட்டத்தட்ட
உற்பத்தியைத் துவக்கும் நேரத்தில் இந்த அணுமின்நிலையத்திற்கு எதிராக இந்த
பகுதியைச் சேர்ந்த சிலர் இப்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர்.சில
ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் பிரபல டாடா நிறுவனம் மிகப்பெரிய
தொழிற்சாலை ஒன்றை உருவாக்க முன் வந்தது. அந்த தொழிற்சாலையையும் வர விடாமல்
இந்த பகுதியைச் சேர்ந்த சிலர், மக்களைத் தூண்டி விட்டு போராட்டம்
நடத்தினர். தொழிற்சாலைக்கு யாரும் நிலம் தர மாட்டோம் என கூறினர். எனவே,
வேறுவழியின்றி அந்த தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தையே டாடா நிறுவனம் கை
விட்டு விட்டது.
வானம் பார்த்த பூமியாக விளங்கும் இந்த பகுதி, மிகவும் பின் தங்கிய
பகுதி. இந்த பகுதியில் வசிக்கும் மக்களும் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி
சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும்
சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் இங்கு
அதிக அளவு வசித்து வருகின்றனர். அவர்கள் பொருளாதார ரீதியில் முன்னேறி
விடக்கூடாது என்ற நோக்கத்தில் சிலர் திட்டமிட்டே இது போன்ற எதிர்ப்பு
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த பகுதியில் பெரிய தொழிற்சாலைகள்,
அரசு நிறுவனங்கள் வந்தால் இந்த பகுதியின் நில மதிப்பு அதிகமாகி விடும்.
மக்களின் அடிப்படை வசதிகளான நல்ல ரோடு, போக்குவரத்து, குடிநீர், மின்சாரம்
போன்றவை கிடைக்கும்.இதன் மூலம் அவர்கள் வாழ்க்கைத்தரம் உயரும். நகரங்களில்
பெரிய கடைகளில் கூலி வேலைக்கு வராமல், உள்ளூரிலேயே நல்ல கல்வி கற்கும்
சூழ்நிலை உருவாகும். இவ்வாறெல்லாம் யாரும் முன்னேறி விடக்கூடாது
என்பதற்காகவே, சிலர் திட்டமிட்டு இந்த பகுதிமக்களை தூண்டி, அடிக்கடி
போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றை நடத்துகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது.
உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது கூடங்குளம் அணுமின் நிலையம் என்கின்றனர்
நிபுணர்கள். அந்த அணுமின்நிலையம் செயல்படத்துவங்கினால், தமிழகத்திற்கு
கூடுதலாகஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.தென் மாவட்டங்கள் அதிக
வளர்ச்சி அடையும். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை
திருவான்மியூரில் இருந்து மகாபலிபுரம் செல்லும் பழைய மகாபலிபுரம் சாலை
மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்தது.ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்த இந்த
பகுதியில், இப்போது ஐ.டி., நிறுவனங்கள் வந்து விட்டன. ஏக்கர் சில ஆயிரம்
ரூபாய்க்கு விலை போன இந்த பகுதியில் இப்போது ஒரு கிரவுன்ட் நிலம் ஒரு கோடி
ரூபாய். அந்த அளவிற்கு கொடுத்தாலும் நிலம் கிடைப்பது மிகவும் அரிது. இந்த
அளவிற்கு நிலத்தின் மதிப்பு அங்கு கூடியதற்கு அந்த பகுதியில் வந்த
நிறுவனங்கள் தான்.
அதுமட்டுமின்றி, மகாபலிபுரம் வரை பிரமாண்ட ரோடு, மின்சாரம், குடிநீர்
வசதி, என எல்லா அடிப்படை வசதிகளும் வந்து விட்டன. இந்த பகுதியில் சிறிய
அளவு நிலம், வீடு வைத்திருந்தவர்கள் இன்று கோடீஸ்வரர்களாகி விட்டனர்.
இதே
போன்று தென் மாவட்ட மக்களும் பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும் என்றால்
இந்த பகுதியில் தொழில் வளர்ச்சி மிகவும் முக்கியம். அதற்கு
முட்டுக்கட்டடையாக இருப்பவர்கள் யார் என கண்டுபிடித்து, அவர்கள் மீது அரசு
எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்து தான் இந்த பகுதி வளர்ச்சி அடையும்.
அதற்கு இந்த பகுதி மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். முன்வருவார்களா?
சேது சமுத்திர திட்டமும் அம்போ!தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மிக
முக்கியமான இன்னொரு திட்டம் சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம்
நிறைவேறினால், தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அந்தஸ்தைப் பெறும். இதன்
மூலம் பல மாவட்டங்கள் வளம் பெறும். மதுரை - தூத்துக்குடி சாலை, நெல்லை -
தூத்துக்குடி சாலையில் மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் உருவாகும். இந்த
திட்டத்தையும் நிறைவேற்ற முடியாமல் சிலர் முட்டுக்கட்டை போட்டு
விட்டனர்.மக்களின் மத, இன, ஜாதி ரீதியிலான உணர்வுகளை சிலர் தூண்டி விட்டு,
இது போன்ற பெரிய திட்டங்கள் வர விடாமல் செய்கின்றனர். இதன் மூலம்
பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான்.
நன்றி தினமலர்
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது யார்?
இன்று ஆவதும் அழிவதும் அரசியலாலே தான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது யார்?
இன்று ஆவதும் அழிவதும் அரசியலாலே தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
» நித்யானந்தாவோடு தொடர்பு வைத்திருந்த பெண்கள் யார் யார்?: உண்மை அம்பலம்!
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை
» சின்ன ஒரு சந்திப்பு (யார் யார் என்று சொல்ல முடியுமா?)
» நித்யானந்தாவோடு தொடர்பு வைத்திருந்த பெண்கள் யார் யார்?: உண்மை அம்பலம்!
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை
» சின்ன ஒரு சந்திப்பு (யார் யார் என்று சொல்ல முடியுமா?)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum