தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
குழந்தைகளுக்கு தர வேண்டிய மிகப் பெரிய சொத்து
3 posters
Page 1 of 1
குழந்தைகளுக்கு தர வேண்டிய மிகப் பெரிய சொத்து
வணக்கம் நண்பர்களே ! இது குழந்தைகளுக்கு நாம் சேர்க்கும் சொத்துக்கள் பற்றிய ஓர் அலசல்..முதலில் உங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள்? உங்களிடம் உள்ள எல்லா சொத்தும் உங்கள் குழந்தைகளுக்குத் தானா? ஒரே ஓர் நிமிடம் சுயபரிசோதனை செய்துகொண்டு மேலும் சுவாசிக்க ஆரம்பிக்கலாமே..
பொதுவாகவே இன்றைய சூழலில் பணக்காரர்களுடைய குழந்தை, பணக்காரனாகவே வளர்கிறது. ஏழையுடைய குழந்தை பணக்காரராக ஆசைப்பட்டாலும் ஏழையாகவே வளர்கிறது. அதே போல உங்கள் குழந்தை, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படித்தான் வளர்கிறது. உங்களிடம் உள்ளதைத்தான் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும் என்றால் உங்களிடம் அதிகம் உள்ளது நம்பிக்கையா ? பயமா ? கவனித்துப் பாருங்கள் குழந்தைகள் முதலில் கேட்கும் பெரும்பாலான வார்த்தைகள் பெற்றோர்களின் பயத்திலிருந்து உதித்த வார்த்தைகள்தான். ‘ஓடாத பாப்பா, கீழே விழுந்துடுவ” “அதெல்லாம் எடுக்காத கீழபோட்டு உடைச்சிடுவ”
நாம் நம் குழந்தைகள் தரையில் நடப்பதையே பயத்தோடு பார்க்கிறோம். ஆனால் கழைக்கூத்தாடிகள் தங்கள் குழந்தைகளை கயிற்றில் நடக்கவே பழக்கப்படுத்தி விடுகிறார்கள். நம்பிக்கை இருப்பதால் அவர்கள் கயிற்றில் நடக்கவே உற்சாகப்படுத்துகிறார்கள். பயம் இருப்பதால் நாம் தரையில் நடப்பதற்கே தடை விதிக்கிறோம்.உங்களிடம் செல்லாத அல்லது கிழிந்த ஐந்நூறு ரூபாய் இருக்கிறது என்றால் உங்கள் குழந்தைகளுக்கு அதை அப்படியே கொடுப்பீர்களா? அல்லது அதை நல்ல நோட்டாக மாற்றிக் கொடுப்பீர்களா ? பணத்தை மாற்றிக் கொடுப்பது போல உங்கள் பயத்தை, தைரியமாக மாற்றிக் கொடுங்கள்.
பணம் , தோற்றம், நிறம், உடல்நலம் மட்டுமல்ல பழக்க வழக்கங்களும் பெற்றோர்கள் தரும் சொத்துக்கள்தான். பழக்கவழக்கங்கள் பெற்றோர்களைப் பார்த்து பார்த்து குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்திக்கொள்கின்றன.”அது சரி” என்ற வார்த்தை என் நண்பர் அடிக்கடி பேச்சில் பயன்படுத்துவார். அவர் பையனும் பிறகு அப்படியே பேசுவதை பார்த்திருக்கிறேன். ஒரு நண்பர் நிதானமாக எதையும் பேசுவார். யோசித்து யோசித்துத்தான் பேசுவார். அவர் பையனும் அப்படியே.எனவே, உங்கள் மேனரிசங்கள்கூட உங்கள் சொத்துத்தான். நீங்கள் பிரித்துக் கொடுக்காமலேயே உங்கள் குழந்தைகளிடம் சேர்ந்து விடுகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அப்பாவுக்கு உள்ள நல்மதிப்பு அப்படியே குழந்தைகளுக்கும் மாறுவதை கண்கூடாகவே பார்க்கலாம்.
பணத்தை சேமித்து வைத்து செலவழிப்பது போல உங்கள் சொற்களும் சிந்தனைகளாக குழந்தைகளால் சேமிக்கப்பட்டு பிறகு செயல்களாக செலவழிக்கப்படுகிறது. தேர்வு நேரத்தில், ‘நீயெல்லாம் எங்க ?, பாஸ் ஆகிற மாதிரியே தெரியலையே’ என்றால் பதட்டத்தையும் பயத்தையும் உங்கள் சொத்தாக உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ வெற்றி பெற பிறந்திருக்கிறாய் என்ற நம்பிக்கை வார்த்தைகளை நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கொடுத்தால் அதை தன்னைப்பற்றிய உயர்வு அபிப்ராய சிந்தனைகளாக மாற்றி உங்கள் குழந்தைகள் சேமித்துக் கொள்ளும். பிறகு நம்பிக்கை யோடு செயலாற்றும். ஆக நீங்கள் தரும் பணம் மட்டு மல்ல, நீங்கள் சொல்லும் சொல்கூட சொத்துதான்.
பல பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையே குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கத்தான் என்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பொருளீட்டுகிற அவசரத்தில் குழந்தைகளின் நிகழ்காலத்தை மிதித்துக் கொண்டே ஓடிக்கொண்டிருப்பார்கள். குழந்தைகளுக்கு சொத்து சேகரிக்க செலவிட்ட நேரத்தில் பத்தில் ஒரு சதவீதத்தை குழந்தைகளுக்கு அதை பராமரிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்க செலவிட்டிருந்தால் எல்லாக்குழந்தைகளும் வெற்றி பெறும்.
நம் குழந்தைகள் வாழ்வில் முன்னேற நாம் அளிக்கும் லட்சங்கள் அல்ல,வழி காட்டும் உயர் லட்சியங்களே நாம் ஒவ்வொருவரும் தர வேண்டிய மிகப்பெரிய சொத்து.நம் அப்பா நமக்கு எவ்வளவு சொத்து தரப்போகிறார் என்று எந்த குழந்தையும் யோசிப்பதில்லை. ஆனால் நம்மோடு இன்று நேரம் செலவிடுவாரா? நம்மோடு மனம் விட்டு பேசுவாரா ? என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு பணம் சேர்க்கும் நேரத்தில் கொஞ்சத்தை அவர்கள் எதிர்பார்க்கும் நேரமாகவே கொடுங்கள்.இன்று இருபத்திநாலு மணி நேரம் என்பது உங்களிடம் இருக்கும் சொத்து. உண்மையைச் சொல்லுங்கள் உங்கள் சொத்து நீங்கள் பெற்ற மழலை செல்வங்களுக்குத்தானே நண்பர்களே !

சம்பத்குமார்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 59
Join date : 03/10/2011
Location : கோயம்புத்தூர்
Re: குழந்தைகளுக்கு தர வேண்டிய மிகப் பெரிய சொத்து
அருமையான பகிர்வு நன்பரே பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: குழந்தைகளுக்கு தர வேண்டிய மிகப் பெரிய சொத்து
நல்ல பகிர்வு
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» உலகின் மிகப் பெரிய மலர்?
» மிகப் பெரிய வாழ்க்கை தத்துவம்..!
» உலகின் மிகப் பெரிய மோட்டார் சைக்கிள்
» உலகின் மிகப் பெரிய தங்க நாணயம்
» உலகின் மிகப் பெரிய அற்புத மலர்
» மிகப் பெரிய வாழ்க்கை தத்துவம்..!
» உலகின் மிகப் பெரிய மோட்டார் சைக்கிள்
» உலகின் மிகப் பெரிய தங்க நாணயம்
» உலகின் மிகப் பெரிய அற்புத மலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum