தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ம. ரமேஷ் சென்ரியு -393
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
6 posters
Page 1 of 1
ம. ரமேஷ் சென்ரியு -393
கல்லறை நாள்
மாலைகளின்றி இருக்கிறது
பெரியப்பா சித்தப்பா கல்லறைகள்
மாலைகளின்றி இருக்கிறது
பெரியப்பா சித்தப்பா கல்லறைகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் சென்ரியு -393
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ம. ரமேஷ் சென்ரியு -393
இது எனக்குப் புரியவில்லை ரமேஷ்...
கருவை விளக்க முடியுமா???
கருவை விளக்க முடியுமா???
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ம. ரமேஷ் சென்ரியு -393
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ம. ரமேஷ் சென்ரியு -393
சிசு wrote:இது எனக்குப் புரியவில்லை ரமேஷ்...
கருவை விளக்க முடியுமா???
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ம. ரமேஷ் சென்ரியு -393
கல்லறை நாள்
மாலைகளின்றி இருக்கிறது
பெரியப்பா சித்தப்பா கல்லறைகள்
சரி கருவை விளக்குவது அக்கவிஞனின் கடமையாகிறது.
சென்ற வாரம் கல்லறை நாள் வந்தது நினைவில் இருக்கலாம்.
நான் மாலை 6 மணிக்குப் பேருந்தில் (ஜன்னல் ஓரத்தி்ல் அமர்ந்து)பயணித்துக் கொண்டிருந்தேன்...
கல்லறைத் தோட்டத்தின் அருகிலேயே பேருந்து நிறுத்தம் என்பதால் கல்லறைகளை எட்டிப் பார்த்தேன்...
பல கல்லறைகளின் மீது மலர்வளையங்கள் மாலைகள் காணப்பட்டன...
சில கல்லறைகளின் மீது மலர்வளையங்கள் மாலைகள் எதுவுமே காணப்படவில்லை...
(கல்லறை நாள்
மாலைகளின்றி இருக்கிறது)
இரவு நேரம் நெருங்கிவிட்டதால் இனி அந்தக் கல்லறைகளுக்கு மலர்வளையங்கள் மாலைகள் எதுவுமே கிடைக்கப் போவதில்லை.
சில கல்லறைகளின் மீது மலர்வளையங்கள் மாலைகள் எதுவுமே காணப்படமைக்குப் சில காரணங்கள் இருக்கலாம்...
ஒரு கல்லறைக்குப் பக்கத்தில் மற்றொரு கல்லறை மாலையின்றி இருப்பதைக் கவனிக்கும் ஒருவர் அல்லது
பக்கத்துக் கல்லறைக்கு வரும் ஒருவர் பக்கத்துக் கல்லறை மாலையின்றி இருப்பதைக் கவனிக்கும்போது தான் கொண்டுவந்திருக்கும் இரண்டு மூன்று மாலைகளில் ஒரு மாலையை மாலையின்றி இருக்கும் பக்கத்துக் கல்லறைக்கும் சார்த்திருக்கலாம்...
ஆனால் யாரும் அவ்வாறு செய்யக்காணோம்...
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் நாம் பக்கத்து அக்கத்து நபர்களிடமே கூட உறவு முறையாக இருப்பதில்லை என்பது உண்மை.
கவிஞன் என்ற முறையில் பக்கத்து கல்லறையை உறவு முறையாகக் கொண்டதால்
பெரியப்பா சித்தப்பா கல்லறைகள்
என்ற மூன்றாம் அடியை எழுதினேன். இச்சென்ரியுவை கல்லறை நாளன்று செய்த அந்த மாலை 6 மணிப் பயணத்திலேயே எழுதி முடித்ததும் என் கல்லூரி கிறித்துவ நண்பனை (அலெக்சாண்டர்) கைபேசியில் அழைத்துச் சொன்னேன்.
கல்லறை நாள்
மாலைகளின்றி இருக்கிறது
பெரியப்பா சித்தப்பா கல்லறைகள்
எப்படிடா என்னுடைய சென்ரியு என்று... அவன் அழுதுவிட்டான்... அவன் அப்பாவிற்கு இந்தக் கல்லறை நாள் முதல் கல்லறை நாள் என்பதால் இருக்கும் என்று எண்ணினேன்.
சாரிடா மச்சான் என்றான்... எதுக்குடா என்றேன்...
எங்க பெரியப்பா கல்லறை மாலையில்லாம தான்டா இருந்துச்சி நான் மாலை போடலையே... சண்டைதான் காரணம்... அவங்க பசங்க வெளிநாட்டுல இருக்காங்க... தேங்ஸ் மச்சான்... திரும்பவும் மாலை வாங்கிக்கிட்டு பெரியப்பாவுக்குச் சார்த்தப்போறேன்...என்றான்.
இந்த சென்ரிவை எழுதியதற்காக நான் அப்போது பெருமைபட்டுக் கொண்டேன்.
கல்லறை நாள்
மாலைகளின்றி இருக்கிறது
பெரியப்பா சித்தப்பா கல்லறைகள்
மாலைகளின்றி இருக்கிறது
பெரியப்பா சித்தப்பா கல்லறைகள்
- இது சென்ரியு என்பதால் நீங்கள் முதல் முறையாகப் படிக்கும்போதே பொருள் புரிந்திருக்க வேண்டும்...சிசு wrote:இது எனக்குப் புரியவில்லை ரமேஷ்...

விளக்கதிற்கும் படைப்புக்கும் நன்றி வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ம. ரமேஷ் சென்ரியு -393
விளக்கத்திற்கு நன்றி ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ம. ரமேஷ் சென்ரியு -393
அருமையான படைப்பு கருத்து அண்ணா !
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: ம. ரமேஷ் சென்ரியு -393
மிக்க மகிழ்ச்சி அரசன் தமிழ்த்தோட்டம் (யூஜின்) அ.இராஜ்திலக்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் சென்ரியு -393
சாதித்த வரிகள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» ம. ரமேஷ் சென்ரியு -504
» ம. ரமேஷ் சென்ரியு -406
» ம. ரமேஷ் சென்ரியு -411
» ம. ரமேஷ் சென்ரியு -432
» ம. ரமேஷ் சென்ரியு -464
» ம. ரமேஷ் சென்ரியு -406
» ம. ரமேஷ் சென்ரியு -411
» ம. ரமேஷ் சென்ரியு -432
» ம. ரமேஷ் சென்ரியு -464
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum