தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பலரும் மறந்த தந்தை

5 posters

Go down

பலரும் மறந்த தந்தை Empty பலரும் மறந்த தந்தை

Post by ஆளுங்க Sun Nov 06, 2011 3:29 pm


பலரும் மறந்த தந்தை RitchieDennis



இந்தப் படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா???


தொடர்ந்து படியுங்கள்.....



அக்டோபர் 2011



இந்த மாதத்தை இன்றைய நவீன உலகில் பலரும் மறக்க மாட்டர்.


காரணம், இந்த மாதத்தின் 5 ஆம் நாள் அன்று தான் (5 அக்டோபர் 2011) ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்.


பலரும் மறந்த தந்தை Steve-jobs-2-440x272

அவரது மறைவிற்கு பல தொழில்நுட்ப நிபுணர்களும், ஊடகங்களும் பல்வேறு வகைகளில் இரங்கல் தெரிவித்துஅவரை வணங்கின.



பலரும் மறந்த தந்தை Steve+Jobs+RIP+crop+web




பலரும் மறந்த தந்தை RIPSteveJobs




ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்நுட்பத் துறையில் ஒரு பிதாமகர் என்பதில் எந்த இரு வேறு கருத்துக்கும் இடம் இல்லை..

அதன் பிறகு, சில நாட்களிலேயே கணிணித்துறையின் மிகப்பெரும் பிதாமகர்
ஒருவரும் இயற்கை எய்தினார். ஆனால் அவரை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவே
இல்லை. சில ஊடகங்கள் சிறு பத்தியில் அவரைப் பற்றிய செய்தியை வெளியிட்டுத்
தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைத்து விட்டன.


அவர் ...............
கணித்தல் துறையின் தந்தை தென்னிசு இரிட்சி


பலரும் மறந்த தந்தை 23BGEDGEOBIT_DENNIS_816404e


அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?

அதற்கு முன்பு C மொழியைப் பற்றிப் பார்ப்போம்!!

இன்று பல கணிணி பயன்பாடுகள் இயங்க அடித்தளமாக இருக்கும் நிரலாக்க மொழி (Programming Language) C.


பலரும் மறந்த தந்தை C+1

1969 - 1973 காலத்தில் பெல் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட மொழி தான் C.
அன்று இருந்த பொறி மொழிகளுக்கு (Assembly Language) மாற்றாக அமைப்பு
மொழியாக (System Language) C மொழி எழுதப்பட்டிருந்தது. அதுவே, அது மிகவும்
பிரபலமாக காரணமாக அமைந்தது.


அமைப்பு மென்பொருளுக்காக எழுதப்பட்டாலும், இன்று பயன்பாடு மென்பொருட்கள் எழுதவும் C மிகையாக பயன்படுத்தப்படுகிறது.

C மொழியைப் பின்பற்றி C++, C# என்று பல மொழிகள் வந்துவிட்டாலும், அன்றும் இன்றும் என்றும் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழி C தான். அந்த மொழியின் மொழிமாற்றி நிரல்களில் இல்லாத கட்டமைப்புகள் மிக சிலவே!!!

இத்துணை சிறப்பு மிக்க C மொழியை உருவாக்கிய பிதாமகர் தான் தென்னிசு இரிட்சி (Dennis Ritchie).


பலரும் மறந்த தந்தை Rip-dennis-ritchie



1941 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் நாள் நியுயார்க் நகரில் பிறந்த தென்னிசு
அவர்கள், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் பயன்பாட்டுக்
கணிதம் ஆகிய இரண்டிலும் பட்டம் பெற்றவர். 1969 ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தில்
(AT&T Bell Laboratories) பணிக்குச் சேர்ந்தார்.

அன்று பெல் ஆய்வகங்களும், MIT ( Massachusetts Institute of Technology)
பல்கலைக்கழகமும் சேர்ந்து ஒரு பல்நோக்கு இயங்கு தளத்தை உருவாக்க முயன்று
தோற்றன.

கைவிடப்பட்ட அந்த திட்டத்தைக் கையில் எடுத்தனர் தென்னிசு இரிட்ச்சியும்,
அவர் நண்பர் கென் தாம்ஸனும். அந்த திட்டம் நிச்சயம் பிற்காலத்தில்
மிகப்பெரும் திட்டமாக இருக்கும் என்பது அவர்கள் கருத்து.
அதுவே 1973 ஆம் ஆண்டு UNIX என்கிற இயங்குதளமாக வெளிவந்தது.

தென்னிசு UNIX இயங்குதளத்தின் தந்தையாகவும் போற்றப்படுகிறார்.

UNIX உருவாக்கப்பட்ட புதிதில், அது பொறிமொழிகளின் அடிப்படையிலேயே
எழுதப்பட்டு இருந்தது. ஆனால்,கணிணி மொழி அனைவராலும் எழுதப்படக் கூடியதாக
இருக்க வேண்டும் என்று தென்னிசு நினைத்தார். அதன் விளைவாக உருவானது தான் C
மொழி.

பலரும் மறந்த தந்தை Images



1973 ஆம் ஆண்டில் UNIX இயங்குதளம் C மொழியில் மீண்டும் எழுதப்பட்டது.

C மொழியின் குறைகளைக் கண்டறிந்து சில மாற்றங்கள் செய்து அதனை ஒரு மாபெரும் கணித மொழியாக மாற்றிய பெருமை அவரையே சாரும்.




மனிதன் கணிணியுடன் எளிமையாய் பேச C மொழியை உருவாக்கிய தென்னிசு அவர்கள்
2011 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள், தனது 70 ஆவது அகவையில், விண்ணுலகுடன்
பேச சென்றார்.



பலரும் மறந்த தந்தை C




ஆனால், அவர் மறைவையே பலர் அறியவில்லை. அறிந்தவர்களில் சிலரும் அதனைப்
பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை... சிலர் தன் பங்கிற்காக சிறு இரங்கல் மடல்
வாசித்து திருப்தி அடைந்து விட்டனர்.வெகு சிலரே அவருக்கு உண்மையாக அஞ்சலி
செலுத்தினர்.





தென்னிசு இட்ட அடித்தளத்தில் தான் இன்று கணிணி உலகமே காலூன்றி நிற்கிறது..
நாம் இன்று கணிணி முன் அமர்ந்து உரையாடமுக்கிய காரணக்கர்த்தாக்களில்

ஒருவர் அவர் .

அடித்தளம் இட்டவரைப் பலரும் மறந்தது மிகவும் வருத்தம் தருகிறது.


காலம் தாழ்த்தி என்றாலும் பரவாயில்லை...


இப்போதாவது அவருக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம்!!



நன்றி: விக்கிபீடியா (தென்னிசு இரிட்சி - ஆங்கிலம்)

என் வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

பலரும் மறந்த தந்தை Empty Re: பலரும் மறந்த தந்தை

Post by vinitha Sun Nov 06, 2011 3:33 pm

பகிர்வுக்கு நன்றி சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

பலரும் மறந்த தந்தை Empty Re: பலரும் மறந்த தந்தை

Post by அ.இராமநாதன் Sun Nov 06, 2011 3:41 pm

பலரும் மறந்த தந்தை 548321 பலரும் மறந்த தந்தை 548321 பலரும் மறந்த தந்தை 548321 பலரும் மறந்த தந்தை 548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பலரும் மறந்த தந்தை Empty Re: பலரும் மறந்த தந்தை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Nov 06, 2011 3:43 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பலரும் மறந்த தந்தை Empty Re: பலரும் மறந்த தந்தை

Post by thaliranna Sun Nov 06, 2011 6:50 pm

அருமையான தகவல்! பலரும் மறந்த தந்தை 446419
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

பலரும் மறந்த தந்தை Empty Re: பலரும் மறந்த தந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum