தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
போதிதர்மர் என்ற ஜென் குரு – ஓஷோ
3 posters
Page 1 of 1
போதிதர்மர் என்ற ஜென் குரு – ஓஷோ
ஆதாரம் – “போதிதர்மர் – மாபெரும் ஜென் குரு“ – ஓஷோ
நன்றி - மெசேஜ் ஃப்ரம் மாஸ்டர்ஸ்
http://www.messagefrommasters.com/Life_of_Masters/Bodhidharma.htm
போதிதர்மருக்கு நான் என் இதயத்தில் ஆழமான இடத்தை கொடுத்துள்ளேன். அது அவரைப் பற்றி பேசுவதை மிக முக்கியமான தருணமாக்குகிறது. ஒருவேளை அவர் ஒருவர்தான் நான் மிகவும் ஆழமாக அன்புசெலுத்துபவராக இருக்கலாம். அவரைப் பற்றி பேசுவது நான் என்னைப் பற்றி பேசுவதைப் போன்றதாகும். இது பெரிய சிக்கலையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் இவர் தன் வாழ்நாளில் எதையுமே எழுதியது கிடையாது. ஞானிகளைப் பற்றி எப்போதுமே எழுதப்படுவதில்லை. இதற்கு போதிதர்மரும் விதிவிலக்கல்ல. ஆனால் பாரம்பரிய முறையில் நான் பேசப்போகும் மூன்று புத்தகங்கள் போதிதர்மரைப் பற்றியவை.
போதிதர்மர் பற்றி மாற்றுக் கருத்துக்கள் கூறப்படவில்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக இந்த புத்தகங்கள் போதிதர்மரைப் பற்றி பேசிவந்துள்ளன. நாம் அவற்றை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு காரணமும் சொல்ல முடியாது. நான் ஒரு அறிஞன் இல்லை. நிச்சயமாக போதிதர்மரைப் பற்றிக் கூறிய தகவல்கள் குறைபாடு உள்ளவையாக இருக்கலாம். ஏனெனில், இவை அவரால் எழுதப்பட்டவை இல்லை. அவரது சீடர்கள் குறிப்புகளை கொடுத்துள்ளனர். ஒரு சீடர் தனது குருவிடமிருந்து குறிப்புகளை எடுக்கும்போது அவர் தனது பெயரை அதில் குறிப்பிடக் கூடாது என்பது பண்டைக்கால மரபு. ஏனெனில் அதில் அவருக்கு சொந்தமானது எதுவும் கிடையாது. அது அவரது குருவிடமிருந்து வந்தது.
ஆனால் நான் புரிந்திருப்பதைப் போல போதிதர்மரை நெருக்கமாக புரிந்துகொள்வது... அவரைப் பற்றி பல தவறான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. வேறொருவர் குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்து தனது மனதை அதில் செலுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். அவர் போதிதர்மர் சொல்ல வந்ததை சொல்லி இருக்கிறார். ஆனால் அதிகம் புரிந்துகொள்ளாமல் சொல்லியிருக்கிறார்.
நாம் இந்த சூத்திரங்களுக்குள் செல்வதற்கு முன்பாக, போதிதர்மரைப் பற்றிய சில விஷயங்களை தெரிந்துகொள்வது நல்லது. அது அவரைப்பற்றி அறிந்து கொள்வதற்கு வசதியாக அமையும். மேலும் இந்த புத்தகங்களில் எது அவர் சொன்னவை மற்றும் எது அவர் சொல்லாதவையாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ளும் வழியாக இருக்கும். இது மிகவும் வினோதமான கருத்தாக இருக்கும்.
போதிதர்மர் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பாக தென்னிந்திய அரசனுக்கு மகனாக பிறந்தவர். அங்கு பல்லவர்கள் என்ற பெரும் சாம்ராஜ்யம் இருந்தது. அவர் தனது தந்தைக்கு மூன்றாவது மகன் ஆவார். அதிபுத்திசாலியாக இருந்த அவர் உலக விஷயங்களை கண்டு தனது ராஜ்யத்தை துறந்தார். அவர் உலக விஷயங்களுக்கு எதிரானவர் கிடையாது. ஆனால் அவர் முக்கியத்துவம் இல்லாத உலக விஷயங்களில் தனது நேரத்தை வீணாக்கவும் விரும்பவில்லை. அவரது முழுக் கவனமும் தன்னுடைய சுய தன்மையைப் பற்றி அறிவதாகவே இருந்தது. ஏனென்றால் அது தெரியாத நிலையில் நீங்கள் இறப்பை முடிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் ஆகும்.
உண்மையில் உண்மையைத் தேடிய அனைவருமே இறப்பை எதிர்த்துப் போராடினர். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், “இறப்பு இல்லையென்றால், மதமும் இருக்காது“ என்று அறிவித்தார். அதில் சிறிது உண்மையும் இருக்கிறது. நான் இதனை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் மதம் என்பது ஒரு பரவலான அமைப்பாகும். இது இறப்பை மட்டுமல்லாமல் பேரின்பம், உண்மை, வாழ்க்கையின் பொருள், இன்னும் பிற பொருள்களை தேடுவதாக உள்ளது. ஆனால் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் சொன்னதும் சரியே. இறப்பு இல்லையென்றால், மிகச் சிலரே, மிக அரிதாகவே மக்கள் மதத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருந்திருப்பர். மரணம் என்பது மதத்திற்கு பெரும் ஊக்கமாக அமைந்தது.
போதிதர்மர் தனது ராஜ்யத்தை துறந்தார். அதற்கு முன்னதாக தன் தந்தையிடம், “உங்களால் என்னை மரணத்திலிருந்து பாதுகாக்க முடியாது என்றால், தயவுசெய்து என்னை தடுக்காதீர்கள். மரணத்திற்கு பின்னால் என்னவென்று தேடுவதற்கு என்னை அனுமதியுங்கள்“ என்று சொன்னார். அந்தக் காலம் மிகவும் அழகிய காலமாகும். குறிப்பாக கிழக்கு நாடுகளில் அழகிய காலமாக இருந்தது. அவரது தந்தை ஒரு நிமிடம் யோசித்தார். “நான் உன்னை தடுக்க மாட்டேன். ஏனென்றால் என்னால் உனது மரணத்தை தடுக்க முடியாது. நீ எனது ஆசீர்வாதத்தோடு உனது தேடுதலை துவக்கலாம். என்னுடைய பற்று காரணமாகவே நீ எனக்குப் பின்னால் இந்த பல்லவ சாம்ராஜ்யத்தை அரசாள்பவனாக இருப்பாய் என்று நினைத்தேன். ஆனால் நீ அதற்கு மேலான ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளாய். நான் உன் தந்தை, என்னால் எப்படி உன்னை தடுக்க முடியும்?“ என்று சொன்னார்.
மேலும், “நீ நான் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிறு கேள்வியை கேட்டுவிட்டாய். ‘உங்களால் எனது மரணத்தை தடுக்க முடியும் என்றால் நான் அரண்மனையை விட்டு போகமாட்டேன். ஆனால் எனது மரணத்தை தடுக்க முடியாது என்றால், என்னை தடுக்காதீர்கள்‘ என்று சொல்லிவிட்டாய். இதன் மூலம் யாரும் போதிதர்மரின் புத்திசாலித்தனத்தை புரிந்துகொள்ளலாம்.
இரண்டாவதாக, நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் அவர் கௌதம புத்தரை பின்பற்றுபவர் ஆவார். சில விஷயங்களில் இவர் புத்தரையும் மிஞ்சிச் செல்கிறார். உதாரணமாக புத்தர் தனது சன்னியாசிகளாக பெண்களைச் சேர்த்துக்கொள்ள அஞ்சினார். ஆனால் போதிதர்மர் ஒரு ஞானம் பெற்ற பெண்ணாலேயே தூண்டப்படுபவராக இருந்தார். அவரது பெயர் பிரக்யதாரா. ஒருவேளை மக்கள் அவரது பெயரை மறந்திருக்கலாம். போதிதர்மர் காரணமாகவே மக்கள் இன்றும் அவரை நினைவில் வைத்துள்ளனர். ஆனால் பெயர் மட்டும்தான் உள்ளது. அவரைப் பற்றி வேறு எந்த விஷயமும் நமக்குத் தெரியவில்லை. அவர்தான் போதிதர்மரை சீனாவிற்கு செல்லச் சொன்னார். புத்த மதம் போதிதர்மர் செல்வதற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே அங்கு சென்றுவிட்டது. இதனை ஒரு அதிசயம் என்றே சொல்லலாம். இதுபோல முன்பு எப்போதும் நடந்ததே இல்லை. புத்தரின் போதனைகளை சீன மக்கள் அனைவருமே உடனே ஏற்றுக்கொண்டனர்.
அப்போது சீன மக்கள் கன்ஃபூசியஸின் கருத்துக்களை கொண்டிருந்தனர். அவற்றை அவர்கள் வெறுக்கும் நிலையில் இருந்தனர். ஏனெனில் கன்ஃபூஸியஸ் ஒரு நீதிமான், சுத்திகரிக்கும் கருத்துக்கொண்டவர் ஆவார். அவருக்கு வாழ்க்கையின் உட்புற ரகசியங்களைப் பற்றி எதுவும் தெரியாது. உண்மையில் உள்ளே எதுவும் இருக்கிறது என்பதையே அவர் மறுத்தார். எல்லாமே புறம்தான். அதனை சுத்திகரித்து, மெருகேற்றி, பண்படுத்தி முடிந்தவரை அதனை அழகாக்குங்கள் என்பதே அவரது போதனை.
கன்ஃபூஸியஸ் காலத்தில் லவோ த்சு, சுவாங் த்சு, லீய த்சு போன்றவர்களும் இருந்தனர். அவர்கள் அனைவருமே துறவிகளே ஒழிய குருக்கள் இல்லை. அவர்களால் கன்ஃபூஸியஸுக்கு எதிராக மக்களின் மனதில் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்க முடியவில்லை. எனவே அங்கு ஒரு வெற்றிடம் இருந்தது. ஆத்மா இல்லாமல் யாராலும் உயிர் வாழ முடியாது. நீங்கள் அவ்வாறு நினைக்க ஆரம்பித்தால் உங்களது வாழ்க்கை அனைத்து அர்த்தங்களையும் இழக்க ஆரம்பிக்கும். ஆத்மா என்பது மிகவும் ஒருங்கிணைந்த கருத்தாகும். அது இல்லையென்றால், நீங்கள் உயிர்வாழ்தல், முடிவில்லா வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்கிறீர்கள். இது ஒரு மரத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் கிளை செத்து விடுவதைப் போன்றதாகும். அது தனக்குள்ள ஊட்டச்சத்து ஆதாரத்தை இழந்து விடுகிறது. இதுபோன்றதே உங்களுக்குள்ளே ஆத்மா, மனச்சாட்சி என்ற ஒன்று இல்லை என்பது. இது உங்களை உயிர்வாழும் நிலையிலிருந்து விலக்கிவிடுகிறது. இவ்வாறு ஒருவர் தானாகவே சுருங்க ஆரம்பித்து மூச்சுத் திணறலை உணர ஆரம்பிக்கிறார்.
ஆனால் கன்ஃபூஸியஸ் மாபெரும் பகுத்தறிவாளர் ஆவார். லாவோ த்சு, சுவாங் த்சு, லிய த்சு போன்ற துறவிகள் கன்ஃபூஸியஸ் சொல்வது தவறு என்பதை அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் ஞானிகளாக இருக்கவில்லை. அவர்கள் தங்களது ஒருசில சீடர்களுடன் தங்களது மடங்களில் வசித்து வந்தனர்.
புத்தமதம் சீனாவிற்கு சென்ற உடனேயே அது நூற்றுக் கணக்கான ஆண்டுகள் தாகமாக இருந்த மக்களின் ஆத்மாவிற்குள் இறங்கியது. புத்தமதம் மழை மேகம் போல வந்தது. அது அவர்களது தாகத்தை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தணித்தது.
கிறிஸ்தவ மதம் ஏராளமானோரை மதம் மாற்றியது. ஆனால் மதமாற்றத்தை, மதத்தை ஏற்பதாக சொல்ல முடியாது. அது ஏழைகள், பசியாக இருப்பவர்கள், பிச்சைக்காரர்கள், அனாதைகளை மதமாற்றம் செய்கிறது. இதனை அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், கல்வி போன்றவற்றை கொடுத்துச் செய்கிறது. ஆன்மீக தாக்கத்தால் செய்வதில்லை. இஸ்லாம் எண்ணற்ற மக்களை மதமாற்றம் செய்தது. ஆனால் கத்தி முனையில் மாற்றியது. நீங்கள் முஸ்லீமாக இருந்தால் உயிர்வாழலாம், இல்லாவிட்டால் உயிர்வாழ முடியாது. முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்.
ஆனால் சீனாவில் ஏற்பட்ட மதமாற்றம் மனித வரலாற்றிலேயே மதத்தை ஏற்றுக் கொண்ட மதமாற்றமாகும். புத்த மதம் தன்னைப் பற்றி மட்டுமே விவரித்தது. அதனுடைய அழகிய கருத்துக்களை மக்கள் புரிந்து கொண்டனர். அவர்கள் அந்த கருத்துக்களுக்காக தாகத்துடன் காத்திருந்தனர். உலகத்திலேயே மிகப்பெரிய நாடான சீனா முழுவதுமாக புத்த மதத்திற்கு மாறியது. அறுநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் போதிதர்மர் சீனா சென்றபோது, அங்கு ஏற்கனவே முப்பதாயிரம் புத்த ஆலயங்கள், மடங்கள் இருந்தன. இருபது லட்சம் புத்த துறவிகள் இருந்தனர். இருபது லட்சம் என்பது சிறு எண்ணிக்கை கிடையாது. அது சீன மக்கள்த் தொகையில் ஐந்து சதவீதம் ஆகும்.
போதிதர்மாவின் குருவான பிரக்யதாரா, அவருக்கு முன்னர் சீனா சென்ற எல்லாரும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் ஞானம் பெற்றவர்கள் கிடையாது என்று சொன்னார். அவர்கள் மாபெரும் அறிவாளிகள், மிகவும் ஒழுக்க சீலர்கள், மிகவும் அன்பான, அமைதியான, இரக்கம் கொண்டவர்கள். ஆனால் அவர்களில் யாரும் ஞானம் பெற்றவர்கள் இல்லை. எனவே இப்போது சீனாவுக்கு இன்னொரு புத்தர் தேவைப்பட்டது. களம் தயாராக இருந்தது.
சீனாவை அடைந்த முதல் ஞானி போதிதர்மர் ஆவார். நான் இங்கு தெளிவு படுத்த விரும்பும் விஷயம் என்னவென்றால் கௌதம புத்தர் தனது சன்னியாசியாக ஒரு பெண்ணை சேர்த்துக்கொள்ள அஞ்சிய அதேவேளையில் ஒரு பெண்ணே போதிதர்மரை புத்தரின் வழியில் செல்லத் தூண்டினார் என்பதாகும். அப்போது ஞானம் பெற்ற பலர் இருந்தனர். ஆனால் அவர் ஒரு காரணத்திற்காகவே அந்த பெண்ணை தேர்ந்தெடுத்தார். அந்த காரணம் ஒரு பெண்ணும் ஞானம் பெறலாம் என்பதை காட்டுவதற்காக அவ்வாறு செய்தார். அது மட்டுமல்லாமல் அவரது சீடர்களும் ஞானம் பெறமுடியும் என்பதையும் காட்டுவதற்காக அவ்வாறு செய்தார். போதிதர்மரின் பெயர் அனைத்து ஞானம் பெற்ற புத்த துறவிகளுக்கு மத்தியில் புத்தருக்கு அடுத்த நிலையில் அறியப்படுகிறது.
அவரைப் பற்றி பல கதைகள் உள்ளன. அவை அனைத்துமே சில முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. முதல் கதை. அவர் சீனாவிற்கு செல்ல மூன்று ஆண்டுகள் ஆனது. சீனப் பேரரசர் வூ அவரை வரவேற்க வந்தார் என்பதாகும். அவரது புகழ் அவருக்கு முன்பே அங்கு சென்றுவிட்டது. பேரரசர் புத்தரின் போதனைகளுக்கு சேவை செய்ய பெரும் சேவை புரிந்திருந்தார். ஆயிரக்கணக்கான அறிஞர்கள் புத்தரின் போதனைகளை பாலி மொழியிலிருந்து சீன மொழிக்கு மொழியாக்கம் செய்து கொண்டிருந்தனர். பேரரசரே அந்த மொழியாக்கத்திற்கு நிதியுதவி செய்தார். அவர் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் மற்றும் மடங்களை நிறுவினார். ஆயிரக்கணக்கான துறவிகளுக்கு உணவளித்து வந்தார். அவர் புத்தருக்கு சேவை செய்வதற்காகவே தனது கருவூலம் முழுவதையும் செலவிட்டார். உண்மையில் போதிதர்மருக்கு முன்னர் அங்கு சென்றிருந்த புத்த துறவிகள் அவர் மாபெரும் புண்ணியம் பெற்று வருவதாக கூறிவந்தனர். அவர் சொர்க்கத்தில் கடவுளாக பிறப்பார் என்றும் கூறினர்.
அதனால் இயல்பாகவே, அவர் போதிதர்மரை பார்த்ததும் முதல் கேள்வியாக, “நான் ஏராளமான மடங்களை நிறுவியுள்ளேன், ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு உணவளித்து வருகிறேன், புத்தரைப் பற்றி படிப்பதற்காகவே ஒரு பல்கலை கழகத்தை திறந்துள்ளேன், நான் புத்தரின் போதனைகளுக்காகவே எனது ராஜ்யம் மற்றும் கருவூலம் முழுவதையும் ஈடுபடுத்தி வருகிறேன். எனக்கு மாறாக என்ன கிடைக்கும்?“ என்று கேட்டார்.
போதிதர்மர் இதனை விரும்புவாரா என்று தெரியாத காரணத்தால் அவரைப் பார்த்து சிறிது குழப்பமடைந்தார். போதிதர்மர் மிகவும் கோபமாக காணப்பட்டார். அவரது கண்கள் மிகப் பெரிய கண்களாக இருந்தன. ஆனால் அவரது இதயம் தாமரை போல மிகவும் மென்மையானது. அவரது முகம் நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் அபாயகரமானதாக இருந்தது. சன்கிளாஸ்கள் மட்டும் இல்லை. அது இருந்திருந்தால் அவர் ஒரு கடத்தல்க் காரனைப்போல இருந்திருப்பார்.
இதனால் பெரும் அச்சத்துடன், பேரரசர் வூ கேட்ட கேள்விக்கு போதிதர்மர், “ஒரு புண்ணியமும் கிடைக்காது. மாறாக, நரகத்திற்கு செல்ல தயாராக இரு“ என்றார்.
பேரரசர் விடவில்லை, “நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா? எதற்காக நரகத்திற்கு செல்ல வேண்டும்? புத்த துறவிகள் சொல்வதை எல்லாம் நான் செய்து வருகிறேன்.“ என்று சொன்னார்.
“நீ உன் குரலை கேட்க ஆரம்பிக்கவிட்டால், புத்தமதத்தவரோ அல்லது புத்தமதத்தை சேராதவரோ உனக்கு உதவ முடியாது. நீ இன்னமும் உனது உள்ளே எழும் குரலை கேட்கவில்லை. நீ கேட்டிருந்தால் இது போன்ற முட்டாள்த் தனமான கேள்வியை கேட்டிருக்க மாட்டாய்“ என்று போதிதர்மர் சொன்னார்.
“புத்தரின் வழியில் பிரதிபலன் என்பதே கிடையாது. ஏனெனில் பிரதிபலனுக்கான பேராசையே மனதால்த்தான் வருகிறது. புத்தரின் முழுப்போதனையுமே ஆசையை துறப்பதே. ஆனால் மனதில் ஆசையுடன் நீங்கள் ஆலய்ங்கள், மடங்கள் கட்டி ஆயிரக்கணக்கான துறவிகளுக்கு உணவளித்து புண்ணிய காரியங்களை அனைத்தையும் செய்து வந்தாலும் கூட நீங்கள் நரகத்திற்குச் செல்ல தயாராகிறீர்கள் என்றுதான் பொருள். நீங்கள் சந்தோஷத்தின் காரணமாக, உங்களது ராஜ்யம் முழுவதுமாக உங்களது சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள இவற்றை செய்து வந்தால், பிரதிபலனுக்கான சிறிதளவு ஆசை கூட இல்லாமல் இருந்தால், அந்த செயலே பெரும் பலன் ஆகும். இல்லையென்றால் நீங்கள் எல்லாத்தையும் இழந்துவிட்டீர்கள் என்று பொருள்.“
பேரரசர் வூ, “என் மனம் குழப்பமாக உள்ளது. என் மனதை அமைதிப்படுத்த முயற்சி செய்கிறேன். ஆனால் இந்த சிந்தனைகள் மற்றும் அவர்களது சத்தம் காரணமாக நான் அமைதி பெற முடியவில்லை. உள்ளேயுள்ள குரல் என்று எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியவில்லை“ என்று சொன்னார்.
“அப்படியானால், அதிகாலை நான்கு மணிக்கு, உங்களது பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் நான் தங்கியுள்ள, மலைமேல் உள்ள ஆலயத்திற்கு வந்துவிடுங்கள். நான் நிரந்தரமாக உங்களுக்கு மனஅமைதியை தருகிறேன்“ என்று போதிதர்மர் சொன்னார்.
இந்த மனிதர் வினோதமாகவும் பயங்கரமானவராகவும் இருக்கிறாரே என்று பேரரசர் நினைத்தார். அவர் பல துறவிகளை பார்த்திருந்தார். அவர்கள் மிகவும் பவ்யமாக இருந்தனர். ஆனால் இவர், நான் ஒரு மாபெரும் நாட்டின் பேரரசர் என்பதைக் கூட பொருட்படுத்தவில்லையே. அதிகாலை நான்கு மணிக்கு அவரிடம் தனியாகச் செல்வது என்றால்... இந்த மனிதரை பார்த்தால் பயங்கரமானவராக இருக்கிறாரே. பேரரசர் எப்போதுமே ஏராளமான வீரர்களை தன்னுடன் அழைத்துச் செல்பவராக இருந்தார்.
பேரரசரால் அன்று முழுவதும் தூங்கமுடியவில்லை. “போகவேண்டுமா? போக வேண்டாமா? ஏனெனில் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர் நம்பமுடியாதவராக இருக்கிறார்.“ அதேவேளையில் அந்த மனிதரின் நேர்மையை மனதின் ஆழத்தில் நினைத்துப் பார்த்தார். அவர் நீ ஒரு பேரரசன் என்பதைப் பற்றி சிறிது கூட பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர் ஒரு சாதாரண பிச்சைக்காரராக இருக்கிறார். ஒரு பேரரசரைப் போல நடந்துகொள்கிறார். அவருக்கு முன்னால் நீ ஒரு பிச்சைக் காரனாக இருக்கிறாய். அதுவும் அவர் சொன்ன விதம். “நான் நிரந்தரமாக உன் மனதில் அமைதி நிலவச் செய்வேன்.“
“வினோதமாக இருக்கிறது. ஏனெனில் நான் இதனை இந்தியாவிலிருந்து வந்த பல்வேறு அறிஞர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்கள் அனைவரும் எனக்கு பல முறைகளை, யுக்திகளை கற்றுக் கொடுத்தனர். நான் அவற்றை பயிற்சி செய்து வருகிறேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் இந்த மனிதர் வினோதமாக இருக்கிறார். பார்த்தால் பைத்தியம் போல அல்லது குடிபோதையில் இருப்பவர் போல இருக்கிறார். முகமே வினோதமாகத்தான் இருக்கிறது. பெரிய கண்கள் அச்சுறுத்துவதாக இருக்கிறது. ஆனால் உண்மையானவராகவும் தோன்றுகிறார். இவர் புரியாத புதிராக இருக்கிறார். இந்த விஷயத்தில் துணிந்து இறங்கலாம். அவர் என்ன செய்துவிடுவார்? அதிகபட்சம் என்னைக் கொல்ல முடியும்.“ இறுதியாக, “நான் உனக்கு நிரந்தர மன அமைதியை தருவேன்“ என்று சொன்னதால் அவரால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.
பேரரசர் வூ அதிகாலை நான்கு மணிக்கு இருட்டில் அந்த ஆலயத்திற்கு தனியாகச் சென்றார். போதிதர்மர் அங்கு கைத்தடியுடன் படிகட்டிலேயே நின்றிருந்தார். “போகலாமா வேண்டாமா என்று ராத்திரி பூராவும் தர்க்கம் செய்தாலும் நீங்கள் வருவீர்கள் என்று தெரியும். ஒரு சாதாரண துறவியைக் கண்டு அஞ்சும் நீங்கள் ஒரு பேரரசரா? இந்த கைத்தடியைத் தவிர வேறொன்றும் இல்லாத ஒரு ஏழைப் பிச்சைக்காரனான இந்த துறவியைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? இந்த கைத்தடியைக் கொண்டுதான் உங்களுக்கு மன அமைதித் தரப் போகிறேன்.“
பேரரசர், “அடக்கடவுளே, யாராவது கைத்தடியைக் கொண்டு யாருக்காவது மன அமைதியை ஏற்படுத்த முடியுமா? ஒரு ஆளைத் தீர்த்துக் கட்டலாம். மண்டையில் ஓங்கி அடித்து ஒருவரை அமைதியாக்கலாம். ஆனால் மனதை அமைதியாக்க முடியாது. ஆனால் இப்போது திரும்பிப் போகவும் முடியாதே“ என்று நினைத்தார்.
“ஆலயத்தின் மண்டபத்தில் உட்காருங்கள்“ என்று போதிதர்மர் சொன்னார். அங்கு சுற்றிலும் யாருமே இல்லை. “உங்களது கண்களை மூடுங்கள். நான் இந்த தடியோடு உங்கள் முன்பாக அமர்ந்திருப்பேன். நீங்கள் செய்ய வேண்டியது உங்களது மனதை பிடித்து நிறுத்த வேண்டியதே. உங்கள் கண்களை மூடிக்கொண்டு உள்ளே தேடிப்பாருங்கள். அது எங்கே இருக்கிறது என்று பாருங்கள். நீங்கள் பிடித்த உடனே, ‘இதோ இருக்கிறது‘ என்று என்னிடம் சொல்லுங்கள். மீதியை என் தடி பார்த்துக் கொள்ளும்.
தேடுதலை மேற்கொள்ளும் எந்த ஒரு துறவிக்கும் அவர் கண்டிராத உண்மை அல்லது அமைதி அல்லது நிர்சலனமான இது ஒரு வினோதமான அனுபவமாக இருக்கும். ஆனால் இப்போது வேறு வழியில்லை. போதிதர்மர் தான் சொல்வது எல்லாத்தையும் காரணத்தோடுதான் சொல்கிறார் என்பதை முழுமையாக அறிந்துகொண்ட பேரரசர் வூ அங்கு கண்களை மூடி அமர்ந்தார். அவர் சுற்றறுமுற்றும் தேடிப் பார்த்தார். அங்கு மனது என்ற ஒன்று இல்லை. அந்த தடி தன் வேலையை செய்துவிட்டது. முதல் முறையாக அவர் அதுபோன்ற ஒரு சூழலில் இருந்தார். கொடுக்கப்பட்ட வாய்ப்பு... நீங்கள் மனதைக் கண்டால், இவர் இந்த தடியை வைத்து என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை. அந்த அமைதியான மலைப்பிரதேசத்தில், தனக்கென ஒரு ஈர்ப்பு சக்தியைக் கொண்ட போதிதர்மரின் முன்னிலையில்.... அங்கு பல ஞானிகள் இருந்திருக்கலாம். ஆனால் போதிதர்மர் அவர்களிடமிருந்து தனித்து இமயம் போல உயர்ந்து விளங்குகிறார். அவரது ஒவ்வொரு செயலும் உண்மையானது தனித்தன்மை வாய்ந்தது. அவரது குறிப்புகள் அவரது முத்திரையை பதிப்பதாக உள்ளன. அவை கடன் வாங்கியவை அல்ல.
அவர் மனதை கண்டுபிடிக்க கடினமாக தேடிப்பார்த்தார். முதல் முறையாக அவரால் மனதை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு சிறு யுக்தி. நீங்கள் எப்போதுமே அதனை தேடிப் பார்ப்பதில்லை என்ற காரணத்தால்த்தான் மனம் என்பதே இருக்கிறது. நீங்கள் அதனை அறிந்திருப்பதில்லை என்ற காரணத்தால்த்தான் அது இருக்கிறது. நீங்கள் அதனை தேடும்போது, அதனை அறியும்போது, விழிப்புணர்வு அதனை முழுமையாகக் கொன்று விடுகிறது. பலமணிநேரம் ஆனது. அமைதியான அந்த மலைகளுக்கு இடையே குளிர்ச்சியான தென்றலுடன் சூரியன் உதித்தது. பேரரசர் வூவின் முகத்தில் அமைதி நிலவுகிறது என்பதை போதிதர்மரால் காண முடிந்தது. அந்த அமைதி, அந்த அசைவற்ற நிலை அவர் ஒரு சிலையாக இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோல இருந்தது. அவரை பிடித்து உலுக்கி, “நீண்ட நேரமாகிவிட்டது. மனதைப் பார்த்தீர்களா?“ என்று கேட்டார்.
“தடியை பயன்படுத்தாமலேயே நீங்கள் என் மனதை முழு அமைதிப் பெறச் செய்துவிட்டீர்கள். என்னிடம் மனம் இல்லை. நீங்கள் சொன்ன உள்ளே இருக்கும் குரலை நான் கேட்டேன். நீங்கள் சொன்னதெல்லாம் சரியே என்று இப்போது நான் புரிந்துகொண்டேன். நீங்கள் எதுவுமே செய்யாமல் என்னை மாற்றிவிட்டீர்கள். ஒவ்வொரு செயலுக்கும் அந்தச் செயலே பரிசு என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். இல்லாவிட்டால் அந்தச் செயலை செய்யாதீர்கள். உங்களுக்கு பரிசளிக்க யார் இருக்கிறார்கள்? இது ஒரு குழந்தைத் தனமான கருத்து. உங்களுக்கு தண்டனை அளிக்க யார் இருக்கிறார்கள்? உங்களது செயலே உங்களுக்கு தண்டனை, உங்களது செயலே உங்களுக்கு பரிசு. உங்கள் தலைவிதியை நிர்ணயிப்பது நீங்களே.“ என்று பேரரசர் வூ சொன்னார்.
“நீங்கள் அரிதான சீடர். நான் உங்களை நேசிக்கிறேன். மரியாதை செலுத்துகிறேன். ஒரு பேரரசர் என்ற காரணத்தால் அல்ல. ஒருமுறை அமர்ந்ததிலேயே மனதின் இருள் முழுவதையும் அகற்றக் கூடிய மிகப்பெரும் விழிப்புணர்வு, பிரகாசத்தை பெற்ற காரணத்திற்காக“ என்று போதிதர்மர் சொன்னார்.
அவரை அரண்மனைக்கு வருமாறு வூ வற்புறுத்தினார். “அது என்னுடைய இடம் அல்ல. நான் காட்டிற்குச் சொந்தமானவன். நான் முன்பு தெரிந்திராத எந்தச் செயலையும் சுயமாகவே செய்கிறேன். நான் ஒவ்வொரு நொடியும் தொடர்ச்சியாக வாழ்கிறேன். நான் கணித்துக் கூறப்பட முடியாதவன். நான் உங்களது அரசவை, உங்களது மக்கள், உங்களுக்குத் தேவையில்லாத தொல்லைகளை உருவாக்கலாம். நான் அரசவைக்கு உரித்தவன் இல்லை. என்னை காட்டிலேயே விட்டுவிடுங்கள்.“
அவர் டாய் என்ற பெயர் உள்ள மலையில் வாழ்ந்தார்... போதிதர்மர் பற்றி கூறப்படும் இரண்டாவது கதை, தேயிலையை உருவாக்கிய முதல் மனிதர் போதிதர்மர் என்பதாகும். ‘டீ‘ என்ற வார்த்தை டாய் என்ற பெயரிலிருந்து வந்தது. ஏனெனில் அது டாய் மலையில் உருவாக்கப்பட்டதாலாகும். எல்லா மொழிகளிலும் உள்ள டீ என்ற வார்த்தை டாய் என்ற ஆதாரச் சொல்லிருந்தே உருவாக்கப்பட்டவை. ஆங்கிலத்தில் டீ என்றும் இந்தியில் சாய் என்றும் சொல்லப்படுகிறது. டாய் என்ற சீன வார்த்தையை சா என்றும் உச்சரிக்கலாம். அதேபோல மராத்தி வார்த்தையும் சா-தான்.
போதிதர்மர் தேனீர் தயாரித்த விதம் வரலாற்று முக்கியத்தும் பெறாவிட்டாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் பெரும்பாலான நேரம் தியானம் செய்தவாறே இருந்தார். சிலசமயம் இரவுநேரத்தில் தியானம் செய்தவாறே உறங்கிப்போவார். எனவே, தூங்கக் கூடாது என்பதற்காக, அவரது கண்களுக்கு பாடம் புகட்டுவதற்காக அவர் தனது புருவ மயிர் எல்லாத்தையும் பிடுங்கி ஆலயத்தின் மைதானத்தில் எறிந்து விட்டார். அந்த புருவ மயிர்களே தேயிலைச் செடியாக வளர்ந்தது என்பது கதை. அவைதான் முதல் தேயிலைச் செடியாக இருந்தது. அதனால்த்தான் நீங்கள் தேனீர் அருந்தினால் உங்களால் தூங்க முடியாமல் போகிறது. புத்த மதத்தில் தியானம் செய்வது வழக்கமானது. இதற்கு தேனீர் மிகவும் உதவி செய்வதாக இருந்தது. எனவே தேனீர் விழிப்புணர்வுடன் வைத்திருப்பதால் புத்த துறவிகள் அனைவருமே தியானத்தின் ஒரு பகுதியாக அதனை அருந்துகின்றனர்.
சீனாவில் இருபது லட்சம் புத்த துறவிகள் இருந்த போதிலும், போதிதர்மர் தனது சீடர்களாக நான்கு பேரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது. உண்மையில் அவர் மிகவும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுப்பவராக இருந்தார். அவர் தனது முதல் சீடரான ஹூய் கோ-வை தேர்ந்தெடுக்க அவருக்கு ஒன்பது ஆண்டுகள் ஆகின.
ஒன்பது ஆண்டுகள் ஆகின என்பது வரலாற்று உண்மை. ஏனெனில் இதுபற்றி போதிதர்மரின் காலத்தைச் சேர்ந்த பல்வேறு பண்டைக் கால குறிப்புகள் உள்ளன. இந்த உண்மையை அவை அனைத்தும் சொல்கின்றன. மற்றவற்றை சொல்லாவிட்டாலும் கூட, அவர் வூவை திருப்பி அனுப்பிய பிறகு ஒன்பது ஆண்டுகள் ஆலயத்தின் சுவரை நோக்கியே அமர்ந்திருந்தார். அவர் அதனை மாபெரும் தியானமாகச் செய்து வந்தார். அவர் வெறுமனே ஆலயச் சுவரை பார்த்தவாறே அமர்ந்திருந்தார். நீண்டகாலம் சுவற்றையே பார்த்துக் கொண்டிருப்பது என்பதை உங்களால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. மெள்ள மெள்ள அவர் அந்த சுவரை விரும்ப ஆரம்பித்தால் உங்களது மனத்திரையும் வெறுமையாகிவிடும்.
அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. “எனக்கு ஏற்ற சீடர் வராவிட்டால் நான் யாரையும் பார்க்க மாட்டேன்“ என்று அறிவித்திருந்தார்.
வழக்கமாக மக்கள் வந்து அவருக்கு பின்னால் அமர்ந்துதான் அவர் சொல்வதை கேட்பர். இது வினோதமான சூழ்நிலை. யாருமே இதுபோல பேசியதே இல்லை. அவர் சுவரைப் பார்த்துதான் பேசுவார். மக்கள் பின்புறமாக அமர்ந்து அவரது சொற்பொழிவை கேட்பர். அதற்கு அவர், “பார்வையாளர்கள் என்னை மிகவும் புண்படுத்துகின்றனர். அவர்கள் சுவர் போலவே உள்ளனர். யாரும் புரிந்துகொள்வதில்லை. மனிதர்களை இதுபோன்ற ஒரு அறியாமையில் பார்க்கும்போது அது புண்படுத்துவதாக உள்ளது. ஆனால் சுவரைப் பார்த்தால் அந்த கேள்வியே எழாது. சுவர் என்பது ஒரு சுவர்தானே. அது கேட்காது, எனவே புண்படுவதற்கு அவசியமில்லை. யாராவது எனது சீடராக இருக்க தகுதி கொண்டிருக்கிறார்கள் என்று நிரூபித்தால் மட்டுமே நான் பார்வையாளர்களை பார்த்துப் பேசுவேன்“ என்று காரணம் சொன்னார்.
ஒன்பது ஆண்டுகள் கடந்தன. ஜனங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்ன செய்து அவரை திருப்திப் படுத்துவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது ஹூய் கோ என்ற இளைஞன் வந்தான். கத்தியால் ஒரு கையை வெட்டி போதிதர்மரின் முன்னால் வீசினான். மேலும் அவன், “இதுதான் ஆரம்பம். நீங்கள் திரும்பாவிட்டால், என் தலை உங்கள் முன்பாக விழும். நான் என் தலையை வெட்டப் போகிறேன்.“ என்று சொன்னான்.
போதிதர்மர் திரும்பிச் சொன்னார், “நீதான் எனக்கேற்ற சீடன். நீ உன் தலையை வெட்டத் தேவையில்லை. நாம் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.“ ஹூய் கோ என்ற இந்த இளைஞன்தான் அவரது முதல் சீடரானான்.
இறுதியில் அவர் சீனாவை விட்டு கிளம்பியபோது, அல்லது சீனாவை விட்டு புறப்பட நினைத்தபோது அவர் தனது நான்கு சீடர்களை அழைத்தார். ஹூய் கோவிற்கு பின்னர் மேலும் மூன்று சீடர்கள் சேர்ந்திருந்தனர். “எளிய வார்த்தைகளில், சிறு வாக்கியங்களில், தந்திபோல எனது போதனையைச் சொல்லுங்கள். நான் நாளை இமயமலைக்குச் செல்ல இருக்கிறேன். நான் உங்கள் நால்வரில் ஒருவரை எனது வாரிசாக தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்“ என்று சொன்னார்.
“உங்களது போதனை மனதை கடந்து முழு அமைதி பெறுவதைப் பற்றிச் சொல்கிறது. அதன் பின் எல்லாமே அதன்படி நடக்க ஆரம்பிக்கிறது“ என்று முதல் சீடர் சொன்னார்.
“நீ சொன்னதில் தவறில்லை. ஆனால் உனது பதில் எனக்கு திருப்தி தரவில்லை. எனது தோல் உனக்கு வந்துள்ளது“ என்று போதிதர்மர் சொன்னார்.
“நான் என்பது இல்லை, வெறுமனே இருப்பது மட்டுமே உள்ளது என்பதே உங்களது அடிப்படை போதனை“ என்று இரண்டாம் சீடர் சொன்னார்.
“கொஞ்சம் பரவாயில்லை, ஆனால் எனது தரத்திற்கு இல்லை. உன்னிடம் எனது எலும்பு உள்ளது. உட்கார்“ என்று போதிதர்மர் சொன்னார்.
“எதையும் சொல்ல முடியாது. எதையும் சொல்லும் திறன் எந்த வார்த்தைக்கும் இல்லை“ என்று மூன்றாவது சீடர் சொன்னார்.
“நல்லது, ஆனால் நீ ஒன்றைப் பற்றி சொல்லிவிட்டாய். நீயே உனக்கு மாறாக நடந்துகொண்டாய். உட்கார். உன்னிடம் எனது எலும்பு மஜ்ஜை உள்ளது“ என்று போதிதர்மர் சொன்னார்.
எஞ்சியுள்ளவர் அவரது முதல் சீடரான ஹூய் கோ ஆவார். அவர் ஒன்றுமே பேசாமல் போதிதர்மரின் காலில் விழுந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. “நீதான் அதைச் சொன்னாய். நீதான் என் வாரிசாக இருக்கப் போகிறாய்“ என்று போதிதர்மர் சொன்னார்.
ஆனால் அன்றிரவு தன்னைத் தேர்ந்தெடுக்க வில்லை என்பதால் பழிவாங்கும் நோக்கத்தோடு சில சீடர்கள் போதிதர்மருக்கு விஷம் கொடுத்தனர். எனவே அவர்கள் அவரை புதைத்து விட்டனர். அதைவிட வினோதமான கதை மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தனது கைத்தடியில் ஒரு செருப்பை தொங்கவிட்டபடி இமயமலையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்ததை ஒரு அரசாங்க அதிகாரி பார்த்தார் என்பதாகும். அவர் வெறும் காலில் நடந்து சென்றதாக கூறினார்.
அந்த அதிகாரி அவருக்கு பழக்கமானவராவார். பலமுறை அவரைச் சந்தித்திருக்கிறார். அதிக ஈடுபாடு இல்லாவிட்டாலும் அவர் மீது அன்பு வைத்திருந்தார். “இந்த செருப்புக்கு என்ன அர்த்தம்? ஒரு செருப்பை மட்டும் ஏன் தொங்க விட்டிருக்கிறீர்கள்? என்று அவர் கேட்டார். “சீக்கிரமே நீ தெரிந்துகொள்வாய். எனது சீடர்களை சந்தித்தால் நான் நிரந்தரமாக இமயமலையில் தங்கப் போவதாக சொல்லுங்கள்“ என்று போதிதர்மர் சொன்னார்.
அந்த அதிகாரி முடிந்த வரை விரைவாக போதிதர்மர் வாழ்ந்த மடம் உள்ள மலைக்குச் சென்றார். அவருக்கு விஷம் கொடுத்து புதைக்கப்பட்டதாக அங்கு இருந்தவர்கள் சொன்னார்கள்... அங்கு ஒரு கல்லறையும் கட்டியிருந்தார்கள். அந்த அதிகாரி எல்லையில் பணியிலிருந்ததால் அவர் அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்க வில்லை. “அடக்கடவுளே, நான் அவரைப் பார்த்தேன். நான் பார்த்தது பொய் இல்லை. நான் பலமுறை அவரை பார்த்திருப்பதால் எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அதே கோபமான கண்கள், அதே காட்டுத்தனமான தோற்றம். அதற்கும் மேலாக, அவர் தன் கைத்தடியில் ஒற்றைச் செருப்பை மாட்டியிருந்தார்“ என்று அவர் சொன்னார்.
சீடர்களால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. அவர்கள் அந்த கல்லறையை திறந்தனர். அங்கே இருந்தது ஒரேயொரு செருப்பு மட்டுமே. அப்போது அந்த அதிகாரி, “சீக்கிரமே தெரிந்துகொள்வாய்“ என்று போதிதர்மர் சொன்னதை புரிந்துகொண்டார்.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: போதிதர்மர் என்ற ஜென் குரு – ஓஷோ
பகிர்வுக்கு நன்றி ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Similar topics
» சொர்க்கம் என்ற சோற்று மூட்டை - பரமார்த்த குரு கதைகள்
» வணக்கம்! அமீர்காவி என்ற பெயரில் கவிதைகளை தொகுத்த நான் , இப்போது அமிர்தராஜ் என்ற பெயரிளில் கவிதைகளை தொகுக்க உள்ளேன்.
» ஜென் கதை
» ஜென் - ருத்ரா
» அழகு – ஜென் கதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum