தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...!

5 posters

Go down

பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...! Empty பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 18, 2011 10:21 am

நன்றி - [You must be registered and logged in to see this link.]
பஸ் - மின் கட்டணங்கள், பால் விலை, "விர்ர்...!'

மலைபோல் கடன்தொகை அதிகரித்து, திவாலாகும் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் மின்சார வாரியம், போக்குவரத்துத் துறை மற்றும் ஆவின் ஆகிய மூன்று துறைகளையும் காப்பாற்றும் வகையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா அதிரடி முடிவுகளை எடுத்தார். ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களாக, மக்கள் கசப்புறும் வகையில் எவ்வித முடிவுகளையும் எடுக்காமல், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஜெயலலிதா, முதல் முறையாக போக்குவரத்து கட்டணங்கள், ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகளை கணிசமாக உயர்த்தி, மக்களுக்கு கசப்பு மருந்து அளித்துள்ளார். மின் கட்டணமும் விரைவில் உயரும் என்றும், அவர் தெரிவித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களாக, மக்கள் பாதிக்கும் வகையில் எவ்வித முடிவுகளையும் எடுக்காமல், அதே நேரத்தில் இலவச ஆடு, மாடு, கிரைண்டர், மிக்சி, மாணவர்களுக்கு, "லேப்-டாப்', இலவச அரிசி என, மக்கள் மகிழ்ச்சியுறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அ.தி.மு.க., அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், மின்சார தட்டுப்பாடு பிரச்னை, அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

மின்சார தட்டுப்பாட்டால், மாநிலத்தின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார பிரச்னையை சரிசெய்ய, ஜெயலலிதா தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றபோதும், முதல்வரின் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஒத்துழைக்காததால், மின்சார வாரியத்தின் நிலைமை கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, மின்சார வாரியத்தின் கடன்தொகை 40 ஆயிரத்து 659 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டின் இறுதியில், இந்த அளவு, 53 ஆயிரம் கோடியை தாண்டிவிடும் அபாயம் உள்ளது.

அதேபோல், ஆவின் பால் கொள்முதல் மற்றும் வினியோகத்திலும் தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக விலை கொடுப்பதால், தனியார் நிறுவனங்களுக்கு மக்கள் அதிகளவில் பால் வழங்கி வருகின்றனர். இதனால், ஆவின் பால் கொள்முதல் அளவு 22 லட்சம் லிட்டரில் இருந்து, கடுமையாக குறைந்துவிட்டது. ஆவின் பால் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.

மத்தியிலும், ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு, தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி வருகிறது. ஆனால், பஸ் கட்டணங்களை தமிழக அரசு உயர்த்தவில்லை. இதனால், ஏற்கனவே பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிவரும் போக்குவரத்துக் கழகங்கள், டீசல் விலை உயர்வு காரணமாக மேலும் பல மடங்கு நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. போக்குவரத்துக் கழகம், கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 6,150 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளது.
மரணப் படுக்கையில் உள்ள இந்த மூன்று துறைகளையும் உயிர்ப்பிக்கும் வகையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா அதிரடி முடிவுகளை எடுத்தார். அதன்படி, போக்குவரத்து கட்டணங்கள், ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை ஆகியவற்றை கணிசமாக உயர்த்தி, முதல்வர் அறிவித்துள்ளார்.
பசும்பால் கொள்முதல் விலையை 2 ரூபாய் உயர்த்தி லிட்டருக்கு 20 ரூபாயாகவும், எருமைப்பால் விலை 2 ரூபாய் உயர்த்தி, லிட்டருக்கு 28 ரூபாயாகவும் வழங்கப்படும் என, அறிவித்துள்ளார். இதனால், ஆவின் பால் விற்பனை விலை, லிட்டருக்கு 17.75 ரூபாயில் இருந்து, 24 ரூபாயாக உயர்கிறது. மேலும், மின் கட்டணங்கள் விரைவில் உயரும் என்றும் கூறியுள்ளார். எனினும், விவசாயிகள்,நெசவாளர்கள், ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் வருபவர்கள் ஆகியோருக்கான இலவச மின்சாரம் தொடரும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் கூறும்போது,"வெள்ளம் வரும்முன்பே அணை போட வேண்டும். மரணப் படுக்கையில் உள்ள இந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு, தற்போது ஆக்சிஜன் வழங்கவில்லை எனில், அவை முற்றிலும் செயலற்றுவிடும். அதை தடுக்கவே இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமாக உள்ள மின்சாரம், பஸ், பால் ஆகிய மூன்றின் கட்டணங்களையும் உயர்த்தி, மக்களுக்கு கசப்பு மருந்து வழங்கியுள்ளார் ஜெயலலிதா.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...! Empty Re: பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 18, 2011 11:14 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...! Empty Re: பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...!

Post by கவிக்காதலன் Fri Nov 18, 2011 2:27 pm

அட
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...! Empty Re: பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 18, 2011 3:49 pm

வறுமைக் கோட்டுக்குக் கீழோ அல்லது நடுத்தர மக்களுக்கான அரசாக மத்திய அரசும் மாநில அரசும் இல்லை என்பது உண்மை.

கேட்டால் வல்லரசாக வேண்டாமா என்று திரும்பிக் கேட்கிறார்கள்.

(எதுல எவ்வளவு வெல ஏத்துனாலும் இந்திய புள்ளைங்க தாங்கறாங்கடா)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...! Empty Re: பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 18, 2011 4:03 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...! Empty Re: பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...!

Post by thaliranna Fri Nov 18, 2011 5:54 pm

விலைஏற்றம் தவிர்க்க முடியாதது!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...! Empty Re: பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 18, 2011 8:45 pm

பால் வேண்டுமானால் வாங்கிக் குடிக்காமல் இருந்துவிடலாம்

பயணம் செய்யாமல் இருக்க முடியாதே?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...! Empty Re: பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...!

Post by அ.இராமநாதன் Sat Nov 19, 2011 7:37 am

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...! Empty Re: பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 19, 2011 10:06 am

ஐயா ரயில் கட்டணங்களும் ஏற்றப்பட்டு விட்டன
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...! Empty Re: பஸ், மின் கட்டணங்கள், பால் விலை, விர்ர்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தங்கம் விலை விர்ர்... : ஒரு கிராம் ரூ. 2055
» பால் விலை எவ்வளவு ? பஸ் டிக்கெட் அவ்வளவு
» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
» மின் வெட்டால் இருளில் மூழ்கப்போகின்றன பல மாநிலங்கள்: அனல் மின் நிலையங்கள் தவிப்பு
» எஸ்.பி.ஐ வங்கியின் புதிய கட்டணங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum