தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!!

5 posters

Go down

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! Empty செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!!

Post by nanjilmano Thu Nov 24, 2011 1:36 pm

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! 296194_186092314792893_100001763762197_425670_2655952_nசகோதரியும், தோழியுமான ஆமீனா'வும் மற்றும் நண்பர்கள், தோழிகளின் எல்லாரின் அழைப்பை ஏற்று குழந்தைகள் பற்றி என் சொந்த அனுபவங்களை சொல்லியுள்ளேன்.

எனக்கு பொதுவாவே குழந்தைகள் ரொம்ப பிடிக்கும் சின்ன வயசில் இருந்தே, எங்க வீட்டில் முதல் குழந்தை என் மூத்த அண்ணன் மகன் ஜோஸ்வா, நான் மும்பையில் இருந்து லீவுக்கு போகும் போதெல்லாம் அவனையும் சைக்கிளில் வைத்துதான் ஊர் சுற்றுவேன் நண்பர்களுடன், அவன் கேட்பதெல்லாம் பட்டாம்பூச்சியும், பொன்வண்டும், மீன்களும்தான்...

அவைகளை அவனுக்கு பிடித்து கொடுப்பதில் நான் படும் அவஸ்தையை கண்டு எங்க அண்ணி சிரித்து, கிண்டல் பண்ணி மகிழுவார்கள். நான் பிடித்து கொடுத்ததும் அவன் அடையும் சந்தோசம் இருக்கே, அடடா நானும் குழந்தை ஆகிவிடுவேன் அவனோடு.....நான் அப்போது கள்ளத்தனமா சிகரெட் பிடிப்பதை செய்கை மூலம் வீட்டில் போட்டு குடுத்ததும் அவன்தான்....


அடுத்து பிறந்தது என் அக்காள் மகள் மெர்ஸி, இவள் ஊரில் பிறந்து மும்பை கொண்டு வரும்போது, மும்பை தாதர் ரயில்வே ஸ்டேசனில் அக்காள் குடும்பத்தை வரவேற்க போயிருந்த போது, யாரும் வா என்று கைகாட்டினால் போகவே மாட்டாளாம், நான் கை நீட்டியதும் அவள் கைநீட்டி என்னை தூக்க சொன்னாள், அக்காளுக்கும் அத்தானுக்கும் ஆச்சர்யம்....!!!

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! Photo0553

மும்பையில் எனக்கு வேலை முடிந்ததும், அவளை தூக்கி வரச்செய்து ஆவலுடன் நானும் குழந்தையாக விளையாடுவேன் அவளோடு, அடுத்து என் மகன் பிறந்தான், இன்னொரு கசின் அக்கா குழந்தைகள், ஜூலியா, ஏஞ்சல் இவர்கள் எல்லாம் பிறந்து வாய் பேசும் தருணம், விதி என்னை வெளிநாட்டுக்கு துரத்தியது....


லீவில் ஊர்வரும்போது, என் அக்காள்கள் பிள்ளைகள் மூன்று பேரையும், அந்தந்த நேரத்துக்கு ஸ்கூல் விடுவதும், அழைத்து வருவதும் நான்தான், அக்காக்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் அவர்களுக்கு அலைச்சல் மிச்சம்...


பைக் பின்னாடி, முன்னாடின்னு இவர்களை வைத்து கொண்டு போகும் போது, என்னை அணைத்து பிடித்திருக்கும் பிஞ்சு விரல்கள் என்னை சொர்க்கத்துக்கே கொண்டு செல்லும்...


அதுவுமல்லாமல், ஸ்கூல் முடியும் போது, என்னை நோக்கி ஓடி வரும் அழகு இருக்கே தேவதைகள் எல்லாம் அதற்கு முன்பு ஜுஜிபி, அதுவும் அல்லாமல், என்னை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி அவர்கள் மகிழும் அந்த தருணம் இருக்கே, தேனாக இனிக்கும் தருணம், ஹேய் ஸீ திஸ் இஸ் மை மனோ மாமா...

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! Photo0568

எல்லாருமே என்னை பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள் [[இப்போதும்]] மனோ மாமா, மனோ சித்தப்பா, வீட்டில் எல்லாருக்கும் இளையவன் என்பதாலா அல்லது பாசத்தாலா என்று இதுவரை தெரியாது, பெரியவர்களும் பிள்ளைகளை அதட்டியும் பிரயோஜனம் இல்லை, அவர்கள் பெயர் சொல்லித்தான் உறவை சொல்லுவார்கள், நல்லகாலம் என் மகன் என்னை மனோ அப்பா என்று சொல்லவில்லை ஹி ஹி..எங்கள் குடும்பத்தில் வேறு யாரையும் இவர்கள் பெயர் சொல்லி அழைப்பது இல்லை என்று சொல்லி, குடும்பத்தார் ஆச்சர்யமாக மகிழ்வதை பார்த்துருக்கேன்...


ஸ்கூல் லீவு நாட்களில் என்னோடுதான் இருப்பார்கள், பூங்கா. மும்பை ஏர்போர்ட்'ன்னு பைக்ல அள்ளிப்போட்டு கொண்டு போவேன், அவர்கள் ஆசையெல்லாம், பானி பூரி சாப்பிடுவது, இலந்தை பழம், வெட்டி உப்பு போட்டு வைத்திருக்கும் மாங்காய், கடலை, குச்சி மிட்டாய் இப்பிடி போகும் லிஸ்ட்....

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! Photo0569

அவர்களோடு நானும் திங்கவேண்டும் என்று வாயில் ஊட்டி விடும் தருணம் கவிதையோ கவிதை, அந்த ருசி ஜென்மத்தில் கிடைக்காது...!!! அவர்களுக்குள் நடக்கும் செல்லசண்டைகளை நாட்டாமை செய்யும்போது, நானும் குழந்தையாகி விடுவேன்...


நான் மறுபடியும் வெளிநாட்டுக்கு திரும்பும்போது, ஏர்போர்டில் இவர்கள் முகம் வாடி இருப்பதை பார்க்கும் போது, வாழ்க்கையை நினைத்து மனதுக்குள் ரத்தகண்ணீர் வடிப்பேன், எங்க அக்காமாரும் ஒரே புலம்பலா புலம்புவாங்க, மூணுமாசம் எங்களுக்கு ரெஸ்ட் கிடச்சுது நீ போனப்புறம் இனி நாங்கதான் ஸ்கூலுக்கு அலையனும்னு, போற வாரப்போல்லாம், மனோ மாமா அதை வாங்கி தந்தாங்க இதை வாங்கி தந்தாங்க நீங்களும் வாங்கி தாங்கன்னு கடுப்பெத்துவாங்களே என்று புலம்புவார்கள் சந்தோசமாக....

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! Photo0572

அடுத்து எனக்கு மகள் பிறந்தாள் கிறிஸ்மஸ் தினத்தில், குடும்பமே மகிழ்ச்சி கொண்டது இவள் கிறிஸ்மஸ் அன்று பிறந்ததால் [[ஹி ஹி எனக்கு ரெட்டை செலவு வச்சிட்டாள் என் செல்லம்]]


ஊர்ந்து நடக்கும்போது, பேசத்தெரியாததால் என்னை ஆத்தா ஆத்தா என்று கூப்பிடுவாள், ஒருநாள் பகலில் தூங்கி கொண்டிருக்கும் போது ஆத்தா ஆத்தா என்று அழைத்தவாறே ஊர்ந்து வரவும், பயபுள்ள நம்ம கூட படுத்துறங்க பாசமா வாராளேன்னு தூக்கி பெட்டுல வச்சி தூங்கசொன்னா, அவள் பெட்டுக்கு மேலாக இருக்கும் செல்பில் உள்ள விளையாட்டு சாமான்களை எடுத்து வச்சி விளையாடிட்டு இருக்கிறாள், அதுதான் குழந்தை உலகம்...!!!


இப்போ பிள்ளைகள் வளர்ந்து விட்டாலும், தூர இடங்களுக்கு இடம் மாறிவிட்டாலும், நான் ஊர் போனால் ஓடி வந்து வளைந்து கொள்வார்கள், இந்த முறை ஊர் போனபோது, அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, கார் பிடித்து, மும்பை, தானா'வில் உள்ளா சூரஜ் வாட்டர் கார்டன் அழைத்து சென்றேன்...

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! Photo0554

ஆஹா நானும் குழந்தையாக அவர்களோடு தண்ணீரில் விளையாடி மகிழ்ந்தேன், அங்கே மியூசிக் போட்டு செயற்கை மழை பொழிய செய்கிறார்கள், அங்கே போயி நானும் அவர்களோடு குழந்தையாக நடனம் ஆட, என் மனைவி ரசிச்சுட்டு இருந்தாங்க...!!!

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! 300898_143954282360087_100002365495078_258468_95553_n
நானும் அவர்களோடு குழந்தையாக குளித்து கொண்டிருப்பதை, என் பெரிய அண்ணி எடுத்த போட்டோ இது...

வெளிநாட்டு வாழ்க்கை, குழந்தையோ குடும்பமோ அருகில் இல்லாமல் தனிமரமாக வாழும் வாழ்க்கை இருக்கே வேதனை, சரி இந்த வருஷம் ஊரில் செட்டில் ஆகிறலாம், அதோ அந்த வருஷம் செட்டில் ஆகிரலாம்னு, நினைக்கும் நேரம், குழந்தைகளின் வளர்ச்சி, குடும்பத்தின் தேவைகளின் அத்தியாவசியங்களும், பணத்தின் செலவுகளும், நம் கணக்கை மீறி தாண்டுவதால், என்னைபோன்றவர்கள் இங்கே தவித்து கொண்டு இருக்கிறோம்....!!!



ஒ தொடர்பதிவுக்கு ஆளை கூப்பிடனுமா....? நான் போன் பேசும் போதெல்லாம் தன் மகனுடன் விளையாடி கொண்டே, இருக்கும் குழந்தை விக்கியை அழைக்கிறேன்...


சிபி'யை அழைக்கிறேன் [[வருவானா...?]]


வேடந்தாங்கலும் குழந்தையோடு இருப்பதால், கருனை'யும் அழைக்கிறேன்......!!!



எனது வலைத்தளம் http://nanjilmano.blogspot.com/2011/11/blog-post_23.html


Last edited by nanjilmano on Thu Nov 24, 2011 1:47 pm; edited 1 time in total
avatar
nanjilmano
மல்லிகை
மல்லிகை

Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்

Back to top Go down

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! Empty Re: செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 24, 2011 1:42 pm

ஒரு கனம் மனது அப்படியே குழந்தைகளுடன் பயணம் செய்துவிட்டது

நல்லா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! Empty Re: செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!!

Post by தங்கை கலை Thu Nov 24, 2011 1:42 pm

என் மகன் என்னை மனோ அப்பா என்று சொல்லவில்லை ஹி ஹி Laughing
சூப்பர் அண்ணா ,,,,
அண்ணா என் நிலைமை படு மோசம் ....
ஹையூ எனக்கும் எங்க குட்டீஸ் நியாபகம் வருது ....
என் வீட்டு குட்டீஸ் ,பக்கத்து வீட்டு கே‌டி‌டி‌எஸ் கூட பேரு வைத்து தான் கூப்பிடுவாங்க : :...: :
அக்கான்னு அந்த குட்டீஸ் சொன்னாங்க அன்னைக்கு மழை தான் செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! 608753
எவ்ளோ விளய்யட்டு ...சான்ஸே இல்லை செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! 336913
செம ஜாலி செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! 608753

தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! Empty Re: செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!!

Post by nanjilmano Thu Nov 24, 2011 4:46 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஒரு கனம் மனது அப்படியே குழந்தைகளுடன் பயணம் செய்துவிட்டது

நல்லா இருக்கு

மிக்க நன்றி யூஜின்...
avatar
nanjilmano
மல்லிகை
மல்லிகை

Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்

Back to top Go down

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! Empty Re: செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!!

Post by nanjilmano Thu Nov 24, 2011 4:47 pm

தங்கை கலை wrote:என் மகன் என்னை மனோ அப்பா என்று சொல்லவில்லை ஹி ஹி Laughing
சூப்பர் அண்ணா ,,,,
அண்ணா என் நிலைமை படு மோசம் ....
ஹையூ எனக்கும் எங்க குட்டீஸ் நியாபகம் வருது ....
என் வீட்டு குட்டீஸ் ,பக்கத்து வீட்டு கே‌டி‌டி‌எஸ் கூட பேரு வைத்து தான் கூப்பிடுவாங்க : :...: :
அக்கான்னு அந்த குட்டீஸ் சொன்னாங்க அன்னைக்கு மழை தான் செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! 608753
எவ்ளோ விளய்யட்டு ...சான்ஸே இல்லை செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! 336913
செம ஜாலி செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! 608753


குழந்தைகள் என்றாலே ஜாலிதான் போங்க....!!!
avatar
nanjilmano
மல்லிகை
மல்லிகை

Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்

Back to top Go down

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! Empty Re: செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Nov 24, 2011 7:40 pm

குழந்தைகளுக்கு அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! Empty Re: செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!!

Post by அரசன் Thu Nov 24, 2011 7:45 pm

அண்ணே வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!! Empty Re: செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum