தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அற்புத மூலிகை வல்லாரை.
2 posters
Page 1 of 1
அற்புத மூலிகை வல்லாரை.
வல்லாரை உண்டோரிடம் மல்லா டாதே' என்பது பழமொழி. நாவன்மை நவிலும் அற்புத மூலிகை வல்லாரை. அன்னை சரஸ்வதியின் சாராம்சம் பொருந்திய மூலிகை இது. கோடிகளில் செல்வத்தைக் குவித்து வைத்திருந்தாலும், மாட மாளிகை கட்டி, பஞ்சணையில் மலர் தூவிப் படுத்து உறங்கினாலும் ஒருவனுக் குக் கல்வி அறிவு இல்லையெனில், அவன் அனுபவித்து வரும் சுகபோகங்கள் எல்லாம் அவனுடன் கடைசி வரை வரவே வராது.
கல்விக்கு நிகர் எதுவுமே இல்லை என்பதை நாம் மறுக்க இயலாது. கல்வி என்பது பல்வகை உணர்வுகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பு. மானுடப் பரிணாம வளர்ச்சியே மனிதனின் அறிதலில் இருந்துதான் தொடங்குகிறது.
நமது அறியும் திறனுக்கு அரணாய் இருந்து, நமக்கு அருள்பாலித்து, ஈடு இணையற்ற கல்விச் செல்வத்தை நமக்களித்து, காக்கும் சக்தியாய் உலவும் சரஸ்வதி தேவியின் பாதம் பணிவோம்.
அன்னை சரஸ்வதி மென்மையின் இருப்பிடம். மென்மை உள்ள இடத்தில்தான் அறிதல் இருக்கும். வன்மை உள்ள இடத்தில் ஆணவம் மட்டுமே நிலைக்கும். வன்மை உள்ள மானிடருக்கு அன்னையின் அருள் கிட்டுவதில்லை.
வன்மை கொண்ட மானுடர்கள் எல்லாம் மென்மைகொண்ட மூலிகையாம்- நடமாடும் சரஸ்வதியாம் வல்லாரையைச் சரணடைந்து வளம் பல பெறலாம்.
தேவ மருத்துவராகிய தன்வந்திரி சித்தர் தன் சீடர்களின் நினைவாற்றலும் அறிவுக்கூர்மையும் மேம்படும் பொருட்டு, அவர்களுக்கு வல்லாரை தொடர்பான மருந்துகளைக் கொடுத்து வந்ததாய் பண்டைய சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன.
நாமும் வல்லாரையை மருந்தாக்கி, அறிவைப் பெருக்கி உலகை வெல்லும் ரகசியம் அறிவோம்.
மனநோய்கள் மறைய...
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சை யாக வாயிலிட்டு மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் அருந்த வும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல பைத்திய நோய்களும் தீரும்.
இதய நோய்கள் மறைய...
வல்லாரை இலைகள் மூன்று, அக்ரோட் பருப்பு ஒன்று, பாதாம் பருப்பு ஒன்று, ஏலக்காய் ஒன்று, மிளகு மூன்று, கற்கண்டு பத்து கிராம் - ஆகியவற்றை அம்மியில் விழுதாய் அரைத்து, அதைப் பாலில் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர, அன்னையின் அருளால் இதயநோய்கள் மாயமாய் மறையும்.
படை, அரிப்பு, சிறங்கு மறைய...
கால் கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்து வடித்து, அத்துடன் ஒரு கைப்பிடி அளவு வல்லாரை இலைகளையும், ஐந்து மிளகையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தேவையான அளவில் சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்து, அந்த மாவில் ரொட்டி போல் சுட்டு சாப்பிட்டு வர, படை, நமைச்சல், தோல் நோய்கள், குஷ்டம் போன்றவை விலகும்.
நினைவாற்றல், ஞாபகசக்தி மேம்பட...
வல்லாரை இலையைக் காயவைத்து அரை கிலோ அளவில் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் 50 கிராம் சீரகம், ஐந்து கிராம் மஞ்சள் சேர்த்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும். இதில் காலை, மாலை உணவுக்கு முன்பாக இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தி வர, அறிவு மேம்படும். நினைவாற்றல் பெருகும். அன்னை அருளால் அற்புதமான மூளை பலம் உண்டாகும்.
வலிப்பு குணமாக...
அரை லிட்டர் வல்லாரை இலைச்சாற்றில் கால் கிலோ வாய்விளங்கத்தை ஊறவைத்து, அதை வெயிலில் உலர்த்தவும். இதனைத் தூள் செய்து வைத்துக்கொண்டு, காலையும் மாலையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வர, வலிப்பு குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள், கிருமிக் கோளாறுகள் மறையும்.
காமாலை குணமாக...
அதிகாலையில் வல்லாரை இலைச்சாறு 60 மி.லி. அளவில் குடித்துவர, காமாலை குணமாகும்.
கபம், இருமல் விலக...
வல்லாரை இலைச்சாற்றில் அரிசித் திப்பிலியை ஊறவைத்து உலர்த்தித் தூள்செய்து வைத்துக்கொள்ளவும். இதில் நான்கு சிட்டிகை அளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர, நாள்பட்ட கபநோய்கள், இரைப்பு, இருமல் ஆகியவை குணமாகும்.
உடல் வலிமை உண்டாக...
நிழலில் உலர்த்தித் தூள் செய்த வல்லாரைத் தூள் 100 கிராம், அமுக்கரா கிழங்குத்தூள் 100 கிராம் - இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். இதனை இரண்டு கிராம் அளவில் காலை - மாலை தேனுடன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, உடல் வலிமை, ஆரோக்கியம் உண்டாகும். இளைத்த உடல் பருக்கும்.
பித்த நோய்கள் விலக...
வல்லாரை, நெல்லிக்கனி, முசுமுசுக்கை இலைகளை உலர்த்தி, ஒவ்வொன்றையும் 100 கிராம் அளவில் எடுத்துத் தூள்செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வர, பித்தநோய்கள், பித்தக் கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவை விலகும்.
வல்லாரைக் கற்பம்...
வல்லாரை கற்ப மூலிகைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. உடலை அழியா நிலைக்கு எடுத்துச் செல்லும் சித்தர்கள் அருளிய வல்லாரையை கற்ப மருந்தாய்க் கொள்ளும் முறையை அறிவோம்.
வல்லாரைக் கற்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, பேதி மற்றும் வாந்தி செய்விக்கும் மருந்துகளால் உடல் சுத்தி செய்துகொள்ள வேண்டும். வேது பிடித்தல் போன்ற ஆவிக் குளியல் முறைகளால் உடலில் வியர்வையை உண்டாக்கி கழிவுகளை நீக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஐந்து வல்லாரை இலைகளை எடுத்து அரைத்துப் பிழிந்து சாறெடுத்து உட்கொள்ள வேண்டும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, அதன்பின் உப்பில்லாக் கஞ்சியைத் தேவையான அளவில் பருக வேண்டும்.
நாள்தோறும் ஒவ்வொரு இலை அதிகம் சேர்த்து 21 நாட்கள் சாப்பிட்டு, உப்பில்லாக் கஞ்சியைப் பருகி வர, மூளை பலப்படும். அறிவுக் கூர்மை, அற்புத நினைவாற்றல், சுறுசுறுப்பு போன்றவை உண்டாகும்.
சாப்பிட ஆரம்பித்த இரண்டு வாரங்களி லேயே நூல்களைப் படைக்கும் சக்தி உண்டாகும். நுண்ணிய செய்திகளை ஏற்கும் தன்மை உண்டாகும். மூன்று வாரங்களில் நூறு பாடங்களை வாய்ப்பாடமாய் சொல்லும் அளவுக்கு மனசக்தி உண்டாகும். தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் உடல் இறுகும். உடலில் காந்த சக்தி, அழகு உண்டாகும். ஆயுள் விருத்தியாகும்.
மேற்படி வல்லாரைக் கற்பத்தைச் சாப்பிடு பவர்கள், அமைதியான சூழலில் வசிப்பிடத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். அன்னை சரஸ்வதியை இடைவிடாது பூஜிக்க வேண்டும். பிராணாயாமம் பழக வேண்டும். இவற்றை இடைவிடாது பழகி, வல்லாரையை உண்டு வாருங்கள். வாக்கு சுத்தமாகி வளமான வாழ்க்கை வல்லாரையால் உண்டாகும். வாழ்க வளமுடன்!

rjaghamani- புதிய மொட்டு
- Posts : 40
Points : 110
Join date : 20/10/2011
Re: அற்புத மூலிகை வல்லாரை.
பயனுள்ள நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி rjaghamani
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வயிற்றுவலியைக் கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை
» அற்புத மூலிகை ஆடாதோடை
» வல்லாரை - Centella asiatica
» அற்புத மூலிகை கவிழ் தும்பை பற்றிய சில குறிப்புக்கள்..
» வல்லாரை......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum