தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தொலைத்தவை எத்தனையோ - வேதா. இலங்காதிலகம்

4 posters

Go down

தொலைத்தவை எத்தனையோ - வேதா. இலங்காதிலகம் Empty தொலைத்தவை எத்தனையோ - வேதா. இலங்காதிலகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 07, 2011 1:42 pm

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]


தொலைந்தவை எத்தனையோ!

பகுதி. 3

கூப்பிடு தூரத்தில் தான் எனது தந்தையின் தாய் தந்தையர், கண்ணாடியப்பா – ஆச்சி, என் மாமிமார் சித்தப்பா பெரியப்பாவை வாழ்ந்தோம்.

மாமிமார் (கடந்த முறை பகுதி 2ல்
படங்கள் போட்டிருந்தேன்.) சங்கீதம் படித்தனர். சங்கீதப் பரீட்சையெல்லாம்
எழுதினார்கள். பரீட்சை பற்றி கிறேட் வன், ரூ (grade one two) என்று அவர்கள்
பேசியது என் காதில் விழுந்துள்ளது. நான் சிறு பிள்ளை (5, 6 வயதிருக்கும்.)
அதன் விவரங்கள் புரியவில்லை.


இவர்கள் அரசகுமாரிகள் போலத்தான் வாழ்ந்தார்கள்

சாம்பசிவம் வாத்தியார் என்பவர்
சனிக்கிழமைகளில் சைக்கிளில் வீட்டிற்கு வந்து சஙகீதம் சொல்லித் தருவார்.
என்ன வேலையிருந்தாலும், அம்மா கூப்பிட்டாலும் கேட்காமல் சனிக்கிழமையானால்
மாமி வீட்டிற்கு ஓடி விடுவேன். ஒரே வீட்டையே ஆச்சி வீடு, அப்பு வீடு, மாமி
வீடு என்று நினைத்த நேரம் நினைத்த மாதிரி பேசுவோம்,


வாத்தியார் வர மாமிமார் வெளி
விறாந்தையில் உயரமான திண்ணையில் பாய் கொண்டு வந்து விரிப்பார்கள். பாயின்
ஒரு நுனியில் வாத்தியார் இருப்பார். மறு நுனியில் இரண்டு மாமிமாரும்
சப்பாணி கொட்டி இருப்பினம். மாமியின் ஆர்மோனியப் பெட்டியுடன் தான் வகுப்பு
நடக்கும். நான் மிகச் சிறு பிள்ளை, ஒரு ஓரமாகச் சப்பாணி கொட்டி
முழுப்பாடமும் இமை வெட்டாது கேட்டு ரசிப்பேன்.


[You must be registered and logged in to see this link.](google photo)

வெள்ளிக் கிழமை இருட்டிய மாலை
நேரங்களில் ”வா! பேபி! (baby) தேவாரம் படிப்போம்!” என்று மாமி வீட்டில்
வந்து தன் வீட்டிற்குக் கூட்டிப் போவா. மாமி ஆர்மோனியம் வாசிக்க
நாமிருவரும் மாமியோடு பாடுவோம். சிலவேளைகளில் என் தம்பி, தங்கைகளும்
என்னோடு வருவார்கள். மாமி எழுந்து போக நாங்களும் ஆர்மோனியம் வாசிப்போம்.
இப்படியே என் உடம்பில் இசை ஊறியது. [You must be registered and logged in to see this link.]

நாவலர் பாடசாலையிலும் மங்களேஸ்வரி ஆசிரியர் சங்கீத ஆசிரியையாக இருந்தார். அங்கு படித்தவை மிக பயனள்ளவை மறக்க முடியாதவை.

நான் 5ம் வகுப்பில் (9 வயது)
ஸ்கொலர்சிப் சோதனையில் சித்தியடைந்த போது (தந்தையார் என்ன வேலை என்றால்
எப்போதுமே அப்பா கமக்காரன் என்றே போடுவார். (ஆட்கள் தான் வயல் செய்வது.)
எங்களையும் போடச் சொல்லுவார். அதனால் எனக்கு ஸ்கொலர்சிப் பரீட்சை எழுத
முடிந்தது. ஏனப்பா இப்படி செய்கிறீர்கள் என்று அப்பாவோடு வாதாடியது ஒரு
புறமான கதை. தான் ஒரு கமக்காரன் என்று கூறுவதை அவர் பெருமையாகக்
கருதினார்.)


10வயதில் ஸரான்லிக் கல்லுரியில் விடுதியில் இருந்து படித்தேன். எல்லாப் பாடங்களுடன்

சங்கீதம், நடனமும் பாடங்களாக இருந்தது.
நடனத்திற்கு பிரபல நடன ஆசிரியர்
கொக்குவில் சுப்பையா ஆசிரியர். சங்கீத ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை
(சுப்பிரமணியமோ..என்னமோ). நடனம் கும்பலோடு கோவிந்தாவாக பழக்குவார்.
பாடசாலையில் விழாக்களின் போது பிரபலங்களுக்கு பயிற்சிகளே பெரும்பாலும்
நடக்கும். நாங்கள் அமர்ந்து பார்த்து ரசிப்போம்.


சங்கீதமும் தவணைப் பரீட்சை நடக்கும்.

இப்படி ஒரு தடவை பரீட்சையின் போது
எல்லோரும் தனித்தனியாகப் பாடினோம். புள்ளிகள் வழங்கினார்கள். எனது முறை
வந்த போது ” எழுந்தாளே பூங்கோதை, தீயிலிருந்து எழுந்தாளே சீதை…” எனும்
கீர்த்தனம் பாடினேன். எனக்கே கூடிய புள்ளி கிடைத்தது. நான் நன்கு பாடியது,
கூடிய புள்ளி எடுத்தது சங்கீத, நடன வாத்திமாருக்கு ஒரே ஆச்சரியம்! இந்தப்
பாடலை அவர்கள் சொல்லித் தரவும் இல்லை. பின்பு கேட்டார்கள் ” எங்கு வேதா
இந்தப் பாடலைப் பழகினீர்?” என்று.

அத்தனையும் என் மாமிமார் வகுப்பில் கேட்டது என்று கூறினேன்.

[You must be registered and logged in to see this link.]இசையில் எனக்கு இவ்வளவு ஆர்வம் வந்ததற்கு இந்தச் சிறு வயது அனுபவமும் ஒரு காரணமுமாகும்.

இந்திய இசை விழாக்களிற்கு எனது
ஒரு சித்தப்பா திருமணம் புரியும் வரை வருடந் தோறும் செல்வார். வந்து கதை
கதையாகக் கூறுவார். இந்தச் சித்தப்பா நாவலர் பாடசாலையில் பயிற்றப் பட்ட
ஆசிரியராகிப் பின் பாடசாலை அதிபரும் ஆகி ஓய்வு பெற்றார். இன்று கனடாவில்
வசிக்கிறார்.


பெரிய மாமி காலமாகிவிட்டார். சின்ன மாமி சுகயீகமாகி கனடாவில் வசிக்கிறார் பேசவும் முடியாது.

நினைவில் தான் பேச முடியும்.
அந்த இனிய காலங்கள் என் வாழ்விற்கு இனிப்பூட்டிய காலம்.
என் வளர்ச்சிக்கு வேலியான காலம்.
பாசம், நேசமான இனித் திரும்பி வராத காலம்.
அப்படியே காலமும் நாமும் இருந்திருக்கக் கூடதோ என்று ஏங்கும் காலம்.
இவை தொலைத்த காலங்கள் தானே!

அது ஒரு நிலாக் காலம்!
அது ஒரு கனாக் காலம்!
புது தேன் சிந்திய காலம்!

[You must be registered and logged in to see this link.]

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தொலைத்தவை எத்தனையோ - வேதா. இலங்காதிலகம் Empty Re: தொலைத்தவை எத்தனையோ - வேதா. இலங்காதிலகம்

Post by kavithaigal Wed Dec 07, 2011 1:45 pm

அருமையான தொகுப்பு

அருமை பாராட்டுக்கள்

அன்புடன் கந்தவேல்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

தொலைத்தவை எத்தனையோ - வேதா. இலங்காதிலகம் Empty Re: தொலைத்தவை எத்தனையோ - வேதா. இலங்காதிலகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 07, 2011 1:59 pm

சிறப்பாக இருக்கிறது... பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி தமிழ்த்தோட்டம் (யூஜின்) :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தொலைத்தவை எத்தனையோ - வேதா. இலங்காதிலகம் Empty Re: தொலைத்தவை எத்தனையோ - வேதா. இலங்காதிலகம்

Post by thaliranna Wed Dec 07, 2011 9:20 pm

சிறப்பு! தொலைத்தவை எத்தனையோ - வேதா. இலங்காதிலகம் 446419 தொலைத்தவை எத்தனையோ - வேதா. இலங்காதிலகம் 548321 தொலைத்தவை எத்தனையோ - வேதா. இலங்காதிலகம் 548321 தொலைத்தவை எத்தனையோ - வேதா. இலங்காதிலகம் 548321
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தொலைத்தவை எத்தனையோ - வேதா. இலங்காதிலகம் Empty Re: தொலைத்தவை எத்தனையோ - வேதா. இலங்காதிலகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum