தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விசிட்டிங் புரோபசர் பதவியிலிருந்து சுப்பிரமணிய சாமியை நீங்கியது ஹாவர்ட் பல்கலைக்கழகம்!

3 posters

Go down

விசிட்டிங் புரோபசர் பதவியிலிருந்து சுப்பிரமணிய சாமியை நீங்கியது ஹாவர்ட் பல்கலைக்கழகம்! Empty விசிட்டிங் புரோபசர் பதவியிலிருந்து சுப்பிரமணிய சாமியை நீங்கியது ஹாவர்ட் பல்கலைக்கழகம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 10, 2011 1:24 pm

இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது.

அதாவது அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் 'ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்' என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது.

கடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்தது.

சாமியை நீக்க வேண்டும் என்று கோரி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கையும் வைத்தனர்.

இந் நிலையில், பிற மதங்களை புண்படுத்தும் வகையில் எழுதியதற்காக, ஹாவர்ட் பல்கலைக்கழகம், சாமி நடத்தி வரும் பாடங்களை அதிரடியாக நீக்கியுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் கோடை விடுமுறை கால பள்ளியில், சம்மர் ஸ்கூலில் ‘Quantitative Methods in Economics and Business’ மற்றும் ‘Economic Development in India and East Asia’ ஆகிய தலைப்புகளில் பாடம் எடுப்பார் சாமி.

இந் நிலையில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்விப் பிரிவுக்கான (இதன் கீழ் தான் பொருளாதாரத்துறையும் வருகிறது) 2012ம் ஆண்டுக்கான பாடத் திட்டத்தை முடிவு செய்ய இந்த ஆசியர்களின் கூட்டம் நேற்று நடந்தது.

அப்போது, இந்தப் பிரிவில் பணியாற்றும் பல்வேறு மதங்கள், இனங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் சாமியின் இஸ்லாம் பற்றிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சாமி பாடம் நடத்தவும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

மதங்கள் ஒப்பீட்டுத் துறையின் பேராசிரியரான டயானா எக் பேசுகையில், சாமி இங்கு பாடம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்ற தனது எதிர்ப்பை முதலில் கிளப்பினார். அவர் கூறுகையில், மதங்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு சுயலாபம் தேட முயல்கிறார் சாமி.

மதக்கலரங்களை தூண்டிவிடும் ஒருவருடன், சிறுபான்மை மக்களுக்கு எதிரான மத துவேஷத்தை பரப்பித் திரியும் ஒருவருடன் ஹாவர்ட் போன்ற ஒரு சர்வதேச கல்வி மையம் எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றார்.

அதே போல தத்துவவியல் துறை பேராசியர் சீன் கெல்லி கூறுகையில், நான் கூட முதலில் சாமியை ஆதரித்தேன். ஆனால், அவர் என்ன எழுதினார் என்பதை முழுமையாக பார்த்த பிறகு அதை ஏற்க முடியவில்லை.

கருத்து சுதந்திரம் என்று கூறிக் கொண்டு இரு மதத்தினர் இடையே வன்முறையை தூண்டிவிடுவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கத்தல்ல. இது கருத்து சுதந்திரமல்ல, மதக் கலவரத்தை தூண்டிவிட தரப்படும் சுதந்திரம் என்றார்.

வரலாற்றுத்துறை பேராசிரியர் சுகதா போஸ் கூறுகையில், ஐரோப்பிய நாடுகளை வம்சாவளியாகக் கொண்ட அமெரிக்கர்கள் தான் உயர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளாத யூத இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கக் கூடாது என்பது மாதிரி இருக்கிறது சுப்பிரமணிய சாமியின் கருத்து என்றார்.

இவ்வாறு நடந்த காரசார விவாதத்துக்குப் பின் சாமிக்கு 'குட்பை' சொல்ல ஹாவர்ட் பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

இதே பல்கலைக்கழகத்தில் தான் 1965ம் ஆண்டு பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார் சாமி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விசிட்டிங் புரோபசர் பதவியிலிருந்து சுப்பிரமணிய சாமியை நீங்கியது ஹாவர்ட் பல்கலைக்கழகம்! Empty Re: விசிட்டிங் புரோபசர் பதவியிலிருந்து சுப்பிரமணிய சாமியை நீங்கியது ஹாவர்ட் பல்கலைக்கழகம்!

Post by thaliranna Sat Dec 10, 2011 5:14 pm

நல்ல காரியம் செஞ்சாங்க!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

விசிட்டிங் புரோபசர் பதவியிலிருந்து சுப்பிரமணிய சாமியை நீங்கியது ஹாவர்ட் பல்கலைக்கழகம்! Empty Re: விசிட்டிங் புரோபசர் பதவியிலிருந்து சுப்பிரமணிய சாமியை நீங்கியது ஹாவர்ட் பல்கலைக்கழகம்!

Post by kanagavasu Sat Dec 10, 2011 5:30 pm

[You must be registered and logged in to see this image.] ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
kanagavasu
kanagavasu
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 392
Points : 432
Join date : 07/12/2011
Age : 36
Location : nagai

Back to top Go down

விசிட்டிங் புரோபசர் பதவியிலிருந்து சுப்பிரமணிய சாமியை நீங்கியது ஹாவர்ட் பல்கலைக்கழகம்! Empty Re: விசிட்டிங் புரோபசர் பதவியிலிருந்து சுப்பிரமணிய சாமியை நீங்கியது ஹாவர்ட் பல்கலைக்கழகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum