தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பசுமை நிறைந்த நினைவுகள்!
2 posters
Page 1 of 1
பசுமை நிறைந்த நினைவுகள்!
பசுமை நிறைந்த நினைவுகள்!
கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் போது சுகமாக இருக்கும்! அந்த கால
நினைவலைகள் நம்மை தாலாட்ட சுகமாய் சொக்கிடுவோம்! நம் வாழ்க்கையில்
குழந்தைப்பருவம் மிகவும் இனிமையானது! கள்ளமற்ற வயதில் நாம் அடித்த
லூட்டிகள் நம் பெற்றோர் சொல்ல கேட்டிருப்போம்! சிலது நமது நினைவில்
நின்றிருக்கும். சிலது நெஞ்சில் இனிக்கும் சிலது ஆறாத வடுவாகி
போயிருக்கும். பதிவுலகில் பல பதிவர்கள் தங்கள் இளமைக் கால நினைவுகளை
நம்மொடு பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் நானும் எனது குழந்தை பருவ
நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் இந்த தொடர் மூலம்.
நண்பர்களும் பதிவுலகிலும் இணையத்திலும் உள்ள வாசிப்பாளர்களும் ரசித்து
படிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதை தொடர்கிறேன்!
நான்
பிறந்ததே ஓர் சுவையான வரலாறு! இதை என் பாட்டியும் தாத்தாவும் (அம்மாவழி)
பலமுறைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்!ரசித்திருக்கிறேன். என்னுடைய குழந்தை
பருவம் என் தாய்வழி பாட்டி வீட்டில்தான் கழிந்தது.அது ஒரு குக்கிராமம்
அன்றிலிருந்து இன்று வரை அந்த கிராமம் அப்படியேத் தான் உள்ளது அங்கே
வசித்தவர்கள் பலர் நகருக்கு சென்று விட்டனர். ஊருக்குள் மினி பஸ் வந்து
போகிறது அவ்வளவே அவ்வூரில் மாற்றங்கள்!
பழவேற்காடு
கடற்கரையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதற்கு அருகாமையில் குறைந்தது 10
கி.மீ தொலைவில் அமைந்திருந்தது அந்த அழகிய ஆசான பூதூர் கிராமம்.அங்கேதான்
எனது குழந்தைப் பொழுது கழிந்தது. என் நண்பர்கள் அன்பு, செல்லா என்ற இளங்கோ,
சங்கர், என்னுடன் படித்தவர்கள் இவர்கள். எனக்கு முன் வகுப்பில்
படித்தவர்களில் சதிஷ், மாலதி, தமிழ்செல்வி,போன்றோர்களும் இன்னும் என்
நினைவில் நின்று கொண்டிருக்கிறார்கள். பசுமரத்தாணி போல என் குழந்தைக் கால
நினைவுகளில் இவர்கள் வந்து போகிறார்கள்.
இவர்களில்
யாரிடமும் இப்போது தொடர்பில் இல்லை என்றாலும் இவர்களுடம்
விளையாடியகாலங்கள் சண்டை இட்ட காலங்கள் ,ஓடிப்பாடி மகிழ்ந்த நாட்கள்
இனிமையானவை. ஆசான பூதூரில் என்னை முதல் வகுப்பில் சேர்ப்பதற்காக என்னுடைய
மாமா பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு சிறு கட்டிடம் சீமை ஓடு
வேய்ந்து காணப்பட்டது எதிரே ஒரு பெரிய பூவரச மரம். பள்ளியின் தலைமை
ஆசிரியர் திருமதி ஜம்பகவல்லி .அவரே ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கும்
ஆசிரியர். ஓராசிரியர் பள்ளி அது.அவர் லீவு போட்டுவிட்டால் பக்கத்து ஊர்
பள்ளியில் இருந்து ஆசிரியர் வருவார்.
எல்லாரையும்
போல நான் பள்ளி செல்ல அடம் பிடிக்க வில்லை! மாமா கூட்டிச் சென்றார். அங்கே
வலது கையால் தலையை சுற்றி காதை தொடச் செய்தார்கள். பின்னர் எனது பிறந்த
தேதியினை கேட்டார்கள். அவ்வளவுதான்! பள்ளியில் சேர்த்து விட்டார்கள். மாமா
வெத்தலை பாக்கு தாம்பூலத்துடன் ஆசிரியருக்கு தட்சணை தந்தார். அனைவருக்கும்
இனிப்பு வழங்கி இனிதே பள்ளியில் சேர்ந்து விட்டேன். ஆசிரியர் ஜம்பகவல்லி
சிலேட்டில் அ எழுதி என் கையை பிடித்து அதன் மேல் எழுதி காண்பித்து அப்படியே
எழுதும் படி சொல்ல நானும் தொடர்ந்தேன். அன்றைய பொழுது இனிமையாக கழிந்தது.
அன்று
முதல் பள்ளிக்கு தினமும் செல்ல ஆரம்பித்தேன். இரண்டு தெரு தள்ளி பள்ளிக்
கூடம் அதன் எதிரே பெருமாள் கோயில் அதன் பக்கவாட்டில் தாமரைக் குளம்!. அந்த
தாமரை குளத்து நீரைத்தான் அந்த ஊரே பருகியது.அவ்வளவு இனிமையாக அந்த நீர்
இருந்தது.
இன்று
அந்த தாமரை குளத்தில் தாமரைகள் இல்லை! தண்ணீரும் சரியாக இல்லை! ஆழ்துளை
கிணறு மூலம் வரும் தண்ணீரும் கரிக்கிறது. கிராமமே கேன்களில் தண்ணீர் வாங்கி
அருந்துகிறது. எண்பதுகளில் இனிமையாக இருந்த கிராமத்து குளத்தின் நீர்
இன்று லாயக்கற்றதாகி விட்டது. ஏன்?
அன்று
அந்த நீர்தான் கிராமத்தின் குடிநீர்! எனவே குளம் பாதுகாக்கப் பட்டது. துணி
துவைத்தல் மாடு கழுவுதல் போன்ற செயல்கள் குளத்தில் செய்ய மாட்டார்கள்
குழாய் நீர் வந்ததும் குளம் பராமரிப்பற்று போக இன்று காசு கொடுத்து தண்ணீர்
வாங்க வேண்டிய நிலை!
சரி
விசயத்திற்கு வருவோம்.பள்ளிக்கு செல்ல நான் அடம் பிடிப்பது இல்லை!
காலையில் ஒரு 5மணிக்கெல்லாம் பாட்டி எழுந்து விடுவார்கள்! எழுந்தவுடன் காபி
தயாராகும் தூக்கத்திலேயே எழுப்பி பேராண்டி இந்தா பெட் காபி என்று
கொடுப்பார்கள். காபி குடித்துவிட்டுதான் பல் தேய்ப்பேன்! எட்டு
மணிக்கெல்லாம் குளிப்பாட்டி டிரஸ் போட்டுவிட்டு தலை வாரி விடுவார்கள் மாமா
ரேடியோ வைத்திருப்பார்கள் அதில் விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்பு 8.15க்கு
ஆரம்பமாகும்.
நான் ரெடியாகி அதைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
மணி
எட்டு ஐம்பதை நெருங்கும் போது மாமா குரல் கொடுப்பார் டேய் பள்ளிக்
கூடத்திற்கு கிளம்பு என்று! பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். அங்கே
என் நண்பர்கள் காத்திருப்பார்கள் வழியே! அவர்களுடன் நடந்து பள்ளிக்குப்
போய் விடுவேன்.
பூவரச
மரத்தின் அடியில் பள்ளியின் பிரேயர் நடக்கும் தமிழ்த் தாய் வாழ்த்து
உறுதிமொழி, தேசியகீதம் மூன்றையும் ஆசிரியர் சொல்ல நாங்களும் சொல்வொம்.
ஆசிரியருக்கு நல்ல குரல் வளம். அருமையாக பாடுவார். பின்னர் சில ஐந்தாம்
வகுப்பு மாணவிகள் சேர்ந்து வாழ்த்து பாட ஆரம்பித்தனர்.
தனித்
தனி வகுப்பறை எல்லாம் கிடையாது ஒரே கட்டிடம் தான். நான்கு பக்க சுவர்களில்
இருபக்கம் மட்டும் கருப்பு வண்ணம் அடித்திருக்கும் அதுதான் பிளாக் போர்டு!
அது தவிர ஒரு மர போர்டும் உண்டு. மாணவர்கள் அமர பலகைகள் உண்டு ஒரு
பலகையில் ஐந்து பேர் அமரலாம். அது போல ஒரு பத்து பலகைகள் உண்டு!
வகுப்பு
வாரியாக எல்லாம் பிரிக்காமல் அவரவர் வசதிப்படி அமர்ந்து கொள்வோம் பாடம்
நடத்தும் போது மட்டும் அந்தந்த வகுப்புகள் பிரிந்து செல்லும் அப்படி ஒரு
ஏற்பாடு நமக்கு பிடித்த நண்பர்கள் பக்கத்தில் அமருவது என்றால் குஷிதானே!
நான் புதியவன் என்பதால் என்னை தங்கள் பக்கத்தில் அமர்த்திக் கொள்ள ஒரு
போட்டியே நடக்கும். இப்படி இனிமையாக சென்றது எனது பள்ளி நாட்களில் திடீர்
என்று ஒரு வில்லன் முளைத்தார்! அவர்! அப்புறம் சொல்கிறேனே!
[You must be registered and logged in to see this link.]
எல்லோருக்கும்கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் போது சுகமாக இருக்கும்! அந்த கால

thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: பசுமை நிறைந்த நினைவுகள்!
அருமையாக உள்ளது பாராட்டுக்கள் தளிர் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பசுமை நிறைந்த நினைவுகள் 3
» பசுமை நிறைந்த நினைவுகள்! பகுதி 2
» பசுமை நினைவுகள்
» பசுமை!!!!!!!!!!!!!!!
» பசுமை!!!!!!!!!!!!!!!
» பசுமை நிறைந்த நினைவுகள்! பகுதி 2
» பசுமை நினைவுகள்
» பசுமை!!!!!!!!!!!!!!!
» பசுமை!!!!!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum