தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்
3 posters
Page 1 of 1
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்
நூல்ஆசிரியர் ,பேராசிரியர் எ .எம் .ஜேம்ஸ் manithaneyajames@hotmail.com செல் 9790128232
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
பதிப்பகம் காவ்யா சென்னை. விலை 500
நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் மதுரை யாதவர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வுப்
பெற்று ,மனிதநேய மாத இதழ் நடத்தி வருபவர் .இதழில் எழுதி வந்த வள்ளுவர் முன்மொழிந்தார் உலக அறிஞர்கள்
வழிமொழிந்தார்கள். என்ற தொடர் கட்டுரையின் தொகுப்பு இந்நூல். உலகப் பொது
மறையான திருக்குறளுக்கு மகுடம் சூட்டும் விதமாக நூல் வந்துள்ளது . உலக
அறிஞர்ககள் யாவருக்கும் மூலவராக நமது திருவள்ளுவர் திகழ்ந்துள்ளார் .என்பதை
உணர்த்தும் விதமாக இந்நூல் வந்துள்ளது .பாராட்டுக்கள் .
மொழி, நாடு ,சமயம் ,இனம் ,காலம் என்ற எல்லைகளைக் கடந்து திருவள்ளுவர்
,உலக மானுடத்திற்கு உவந்து உரிமைச் செல்வமாக வழங்கிச் சென்றுள்ள பரம்பரைச்
சொத்துதான் திருக்குறள் .ஆங்கிலக் கட்டுரையாளர் திரு .ஜோசப் அடிசன்
கருத்துடன் நூல் தொடங்குகின்றது .மதுரை ஆதீனம் ஆசியுரை மிகச் சிறப்பாக
உள்ளது .மதுரைப் பேராயர் ,குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர்
வாழ்த்துரை முத்தாய்ப்பாக உள்ளது.
திருக்குறள் நாள்தோறும் நாம் அசைபோட்டுச் சீரணிக்க வேண்டிய நூல் என்று நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் உண்மைதான் நம் வாழ்க்கைச் சிறக்க வழி காட்டுவது திருக்குறள் .கர்னல் முனைவர் க.திருவாசகம் ஆங்கிலத்தில் மிக நன்றாக அணிந்துரை வழங்கி உள்ளார் .தமிழறிஞர் தமிழண்ணல் ,கவிவேந்தர் கா .வேழவேந்தன் தமிழ்த்தேனீ இரா .மோகன் ஆகியோரின் அணிந்துரை அற்புதமாக உள்ளது. நூலிற்கு வளம் சேர்ப்பதாக உள்ளது .
காவ்யா சண்முக சுந்தரம் அவர்களின் பதிப்புரை மனதில் பதியும் உரையாக
உள்ளது .நூலில் முதலில் திருக்குறள் அடுத்து மிக எளிய தெளிவுரை அடுத்து உலக
அறிஞர்கள் அந்த திருக்குறளுக்கு பொருத்தமாக சொன்ன கருத்து ஆங்கிலத்தில்
,அடுத்து அதன் மொழி பெயர்ப்பு தமிழிலும் மிக சிறப்பாக எழுதி உள்ளார் .நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் .
நூல் ஆசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது .பல்வேறு மலர்களில்
இருந்து தேனீ தேன் எடுப்பது போல பல்வேறு நூல்களில் இருந்து திருக்குறள்
தொடர்பான கருத்தை சேகரித்து அதனை அதற்க்கு பொருத்தமான திருக்குறளோடு
பொருத்தி மிகப்பெரிய ஆய்வு நடத்தி உள்ளார் .
பல்வேறு அறிஞர்களின் கருத்தை படித்து தெளிந்து திருக்குறளோடு ஒத்து
வரும் கருத்தை தொகுத்து நூலாக வழங்கி உள்ளார் .மேல் நாட்டு அறிஞர்கள் சேக்க்ஷ்பியர் ,போப் ,மில்டன் ,வால்டர் ,ஜான்ஜெய் ,ஜியோ ,மேக்டோனால்டு , தாம்சன் ,ஹீல்ஸ் ,இராபர்ட்சென் ,ஜெரேமை டெய்லர், பெளரிங் ,ஷ்டிரட்ஸ் ,டேனியல் வெப்ஷ்டர் ,டுபின் ,ரோஜர்ஸ் ,சீசரோ ,சேரன் ,அடிசன் ,பென், ஜனாதன் எட்வர்ட்ஸ் ,ஜியார்ஸ் எலைட்,சுவீடன் பர்க் இப்படி 224 அறிஞர்களின் கருத்தை மேற்கோளாகக் காட்டி உள்ளார் .
நம் நாட்டில் வாழ்ந்த அறிஞர்கள் கவியரசர் இரவீந்திர நாத் தாகூர் ,அன்னை
தெரசா ,சுவாமி சித்பவானந்தா கருத்துகளும் இந்நூலில் உள்ளது. ஒவ்வொரு நூலைப்
படிக்கும் போதும் திருக்குறளை ஒட்டிய கருத்து எங்கு ? உள்ளது என்று தேடிக்
கண்டுப் பிடித்து அதற்க்கு பொருத்தமான திருக்குறளோடு பொருத்திக் காட்டி
உள்ளார் .நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் அவர்களுக்கு தமிழ்
,ஆங்கிலம் இரண்டு மொழியிலும் நல்ல புலமை இருப்பதால் ,மகாகவி பாரதியாரின்
கருத்துப்படி தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வண்ணம் நூலை வடித்து
உள்ளார் .
அறிஞர்களின் அறிஞர் திருவள்ளுவர் ,உலக நூல்களின் சிகரம் திருக்குறள்
.என்று ஆய்வின் மூலம் ஆணித்தரமாக நிருபித்து உள்ளார் .நூல் ஆசிரியர் .இந்த
நூலை மைய அரசுக்கு அவசியம் அனுப்பி வைக்க வேண்டும் .உலகப் பொது மறையான
திருக்குறளை இன்னும் தேசியநூலாக அறிவிப்பதற்கு தயங்குவதன் காரணம் என்ன
என்பது புரியாத புதிராக உள்ளது .இந்நூலை பார்த்து விட்டாவது திருக்குறளை தேசியநூலாக அறிவிக்க வேண்டும் .
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கண்நீர் பூசல் தரும்.
புகழ்ப்பெற்ற இந்த திருக்குறளுக்கு நோபல் நாயகன் ,மிகச் சிறந்த கவிஞர் ,ஓவியர், கவியரசர் தாகூரின் உயந்த கருத்தை பொருத்தி உள்ளார் .
நாம் அன்பு செலுத்துபவர் யாராயினும் ,அவரில் நமது சொந்த ஆன்மா மிக ,மிக
உச்சமான உயர்ந்த அன்பு உணர்வுடன் ஒன்றி இருப்பதைக் காண்கிறோம் .
தாகூரின் கருத்தை மிக எளிதாக நுட்பமாக தமிழில் மொழி பெயர்த்துள்ளார் .நூல்ஆசிரியர் பேராசிரியர் எ .எம் .ஜேம்ஸ் ஏற்கனேவே தாகூரின் கீதாஞ்சலியை தமிழில் மொழி பெயர்த்தவர் .
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று .
மிகப் பிரபலமான இந்த திருக்குறளுக்கு சரண் என்ற அறிஞரின் கருத்தை இணைத்துள்ளார் .
ஒருவரிடமிருந்து ஒரு உதவியைப் பெற்றவன் அதை எப்போதும் மறக்கக் கூடாது .உதவியை வழங்கியவன் அதை நினைவில் வைக்கக் கூடாது .
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னாவாம் இன்னா செயின் .
என்ற இந்த திருக்குறளுக்கு ரோஜாஸ் என்ற அறிஞரின் கருத்தை ஒப்பிட்டு உள்ளார் .
நாம் எதிரி என்று சந்தேகப் படாமலிருக்கும் நபர்தான் மிக மிக ஆபத்தான எதிரி .
முனைவர் பட்ட ஆய்வாளர்களை விஞ்சும் வண்ணம் மிகப் பெரிய ஆய்வு செய்து நூலை
படைத்துள்ளார் .இவருக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் மதிப்புறு முனைவர்
பட்டம் வழங்கி பாராட்ட வேண்டும் என்பது என் விருப்பம் .நூல் ஆசிரியர் இது
வரை எழுதிய நூல்களில் மிகச் சிறந்த நூலாக இந்த நூல் வந்துள்ளது .பாராட்டுக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum