தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



2011 ல் தமிழ்நாடு

2 posters

Go down

2011 ல் தமிழ்நாடு Empty 2011 ல் தமிழ்நாடு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 01, 2012 8:46 am

ஜனவரி

1 - சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதற்கான குழுக்களை அறிவித்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

- நித்தியானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தன்னை கற்பழிக்க முயற்சி செய்தார் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி நித்திய சுப்ரியானந்தா என்ற நித்தியானந்தாவின் பக்தை புகார் கூறினார்.

- சேலம் மாவட்டம் தொப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 9 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்.

2 - சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி வரவேற்கப் போகாததால் சலசலப்பு ஏற்பட்டது.

- லோக்சபா தேர்தலில் நான், பிரபு, கார்வேந்தன், தங்கபாலு, மணிசங்கர அய்யர் உள்ளிட்ட 7 காங்கிரஸ் தலைவர்களை திமுகதான் திட்டமிட்டுத் தோற்கடித்தது என்று கூறினார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

- 1853ம் ஆண்டு கட்டப்பட்ட நாகபட்டினம்-காரைக்காலை இணைக்கும் பழமை வாய்ந்த திருமலைராஜனார் பாலம் சேதமடைந்தது.

3 - முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜ்பவனில் சந்தித்தார். சந்திப்புக்குப் பின்னர் திமுக காங்கிரஸ் இடையிலான உறவு சிறப்பாகவே உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், கருணாநிதியும் தெரிவித்தனர்.

10 - தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையின்போது ரகளையில் ஈடுபட்டதாக கூறி 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

12 - வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர் பாண்டியன் என்பவரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சுட்டுக் கொன்றனர்.

14 - எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பாரதி விருது வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

21 - அடையாறில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அதற்கு தொல்காப்பியர் பூங்கா என்ற அழகிய பெயரையும் சூட்டினார்.

23 - நாகை மாவட்ட மீனவர் ஜெயக்குமாரை, இலங்கைக் கடற்படையினர் பிடித்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்தனர்.

27 - செங்கம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன் மாரடைப்பால் மரணமடைந்தார்.

28 - தர்மபுரி பஸ்ஸுக்கு தீவைத்து, 3 மாணவிகள் உயிரோடு எரிந்து சாம்பலாக காரணமான வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன், நெடு என்கிற நெடுஞ்செழியன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அவர்கள் தாக்கல் செய்த அப்பீலை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

29 - அதிமுக எம்.எல்.ஏ. பி.கே.சேகர் பாபு கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார். எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

30 - தமிழக மீனவர்களைக் கொல்வதைத் தடுக்கும் வகையில், இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று சென்னையில் வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்தார்.

பிப்ரவரி

1 - இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட புதுக்கோட்டை மீனவர் பாண்டியனின் சகோதரிக்கு ரூ. 1 லட்சம் நிதியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழங்கினார்.

2 - சென்னை அடையாரில் உள்ள கல்லூரியில் படித்து வந்த மாணவி, தன்னிடம் கல்லூரி ஆசிரியைகள் உடைகளை கழற்றி சோதனையிட்டதால் அவமானமடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

3 - ராசா கைதைத் தொடர்ந்து நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் கைது செய்யப்பட்டதால் மட்டுமே ராசா குற்றவாளியாகி விட மாட்டார். அவருக்கு திமுக ஆதரவு தரும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5 - கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் கடைசி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

6 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக சுப்பிரமணியம் சாமிக்கு திமுக தலைவர் கருணாநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

13 - தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் குழுவினர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.

14 - ராஜபக்சே ஆதரவு அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, சென்னையில் சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

15 - கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவன் ஆதித்யாவைக் கொடூரமாக கொலை செய்து உடலை சூட்கேஸில் அடைத்து கொண்டு சென்று பஸ் நிலையத்தில் போட்டு வந்து கைதான இளம் பெண் பூவரசிக்கு சென்னை செஷன்ஸ் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பூவரசியின் கள்ளக்காதலர் மீது எந்த நடவடிக்கையும் பாயாதது அனைவரையும் வியப்படைய வைத்தது.

- நாகை மீனவர்கள் 106 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து கொண்டு சென்ற செயல் தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

- புதிய தமிழகம் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய குடியரசுக் கட்சிக்கு ஒரு இடத்தையும் அதிமுக ஒதுக்கியது.

16 - தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததைக் கண்டித்து சென்னையில் கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

17- மூவேந்தர் முன்னணிக் கழகம் கட்சிக்கு ஒருசீட் ஒதுக்கியது அதிமுக.

18 - பாமகவுக்கு 31 சீட்களும், ராஜ்யசபா சீட்டும் வழங்குவதாக திமுக அறிவித்தது. இதனால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்தது.

21 - செக்ஸ் சாமியார் பிரேமானந்தா சென்னை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

24 - சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக, தேமுதிக இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

28 - சட்டசபைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக 10 தொகுதிகளை ஒதுக்கியது.

மார்ச்

1 - தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

2 - தமிழகத்தில் பஸ் தினம் கொண்டாடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

- திமுக கூட்டணியில், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட்களும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு சீட்டும் தரப்பட்டது.

3 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் போயஸ் தோட்ட வீட்டில் சந்தித்துப் பேசினார். தேமுதிகவுக்கு 41 சீட்களை அதிமுக ஒதுக்கியது.

5 - காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சில் பெரும் இழுபறி ஏற்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசிலிருந்து விலகுவதாகவும், தங்களது அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்றும் திமுக அறிவித்தது.

7 - பல்வேறு நாடார் சமுதாய அமைப்புகள் ஒருங்கிணைந்து பெருந்தலைவர் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கின.

8 - காங்கிரஸ் கட்சிக்கு சட்டசபைத் தேர்தலில் 63 தொகுதிகள் வழங்க திமுக உடன்பட்டது.

10 - பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சரத்குமார் நீக்கப்படுவதாக அந்தக் கட்சி அதிரடியாக அறிவித்தது.

- பெருந்தலைவர் மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், அதிரடியாக அதிமுக கூட்டணியில் இடம் பெற்று 2 சீட்களையும் பெற்றார்.

11- கலைஞர் டிவி பங்குதாரர்களான தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடம் கலைஞர் டிவி அலுவலகத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

12 - அதிமுக கூட்டணியில் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 சீட்களும் ஒதுக்கப்பட்டன.

13 - பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு மேலும் ஒரு சீட்டை திமுக ஒதுக்கியது.

14 - அதிமுக கூட்டணியில் சிபிஎம்முக்கு 12 சீட்களும், சிபிஐக்கு 10 இடங்களும் தரப்பட்டன.

15 - திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான 63 தொகுதிகளின் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார். பாமக, விடுதலைச் சிறுத்தைகளுக்கான தொகுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

16 - அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்த ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. மதிமுகவை அதிமுக கைவிட்டது.

- ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளியான முன்னாள் அமைச்சர் ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

17 - திமுக போட்டியிடும் 119 தொகுதிகளின் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார். திருவாரூரில் கருணாநிதியும், கொளத்தூரில் ஸ்டாலினும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

- 7 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக அறிவித்தது.

19 - திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

20 - அதிமுகவால் புறக்கணிக்கப்பட்ட மதிமுக சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது.

21 -தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளை அதிமுக அறிவித்தது. அதற்கான வேட்பாளர்களை விஜயகாந்த் அறிவித்தார். அவர் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

- மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

- அதிமுகவின் திருத்தப்பட்ட வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார்.

22 - தேர்தல் ஆணையத்தின் நெருக்குதலால் டிஜிபி லத்திகா சரண், கூடுதல் டிஜிபி ஜாபர்சேட் நீண்ட விடுமுறையில் சென்றனர்.

23 - காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளில் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டது.

24 - இலவச மிக்சி, கிரண்டைர், மின்விசிறி உள்ளிட்ட இலவச அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை திருச்சியில் ஜெயலலிதா வெளியிட்டார்.

- தமிழக டிஜிபியாக போலேநாத் பதவியேற்றார்.

26 - தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்தது.

ஏப்ரல்

1 - ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா திடீரென மர்மமான முறையில் இறந்தது குறித்து சிபிஐ விசாரணை தொடங்கியது.

4 - மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்குப் போடச் சொல்லி வற்புறுத்துகிறார் மதுரை கலெக்டர் சகாயம் என்று புகார் கூறிய தேர்தல் அதிகாரி சுகுமாறன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

5 - திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசினார். கருணாநிதியும் இதில் கலந்து கொண்டார். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பேசினர்.

- திருச்சியில் ஆம்னி பஸ் மீது வைக்கப்பட்டிருந்த ரு. 5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக இந்தப் பணம் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் கூறின.

6 - இலங்கையை இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்கடித்த அன்று இரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று மாயமான தமிழக மீனவர்கள் விக்டர், மாரிமுத்து, அந்தோணிராஜ், ஜான் பால் ஆகியோரின் இறந்த உடல்கள் கொழும்பு அருகே கரை ஒதுங்கின. அவர்களை இலங்கை வீரர்களே படுகொலை செய்ததாக சர்ச்சை கிளம்பியது.

9 - கோவையில் நடந்த திமுக கூட்டணி பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார்.

12 - ரூ. 2 கோடி பரிசுப் பொருள் பெற்றது தொடர்பான வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவிக்க முடியாது என்று சென்னை சிபிஐ கோர்ட் உத்தரவிட்டது.

13 - தமிழகத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் நடந்தேறியது. 80 சதவீத வாக்குகள் பதிவாகின.

- சேரன்மாதேவி தொகுதியிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர் வேல்துரை வென்றது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

19 - இலங்கைத் தமிழர்களின் அவல நிலைக்காக சங்கரன்கோவில் அருகே கிருஷ்ணமூர்த்தி என்ற என்ஜீனியர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

20 - சட்டசபைத் தேர்தலில் தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஜெயலலிதா பொய் அறிக்கைகளை வெளியிட்டார் என்று கூறி முதல்வர் கருணாநிதி, 2 அவதூறு வழக்குகளை தொடுத்தார்.

23 - மாணவர் நாவரசு கொலையில் இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட மாணவர் ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறைக்கு்ச சென்று சரணடைந்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

25 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று நூலான "ஜெயலலிதா-ஒரு சித்திரம்'' என்ற நூலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

மே

12 - திமுக எம்.பி. கனிமொழியிடம் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

13 - தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அதிமுக வரலாறு காணாத வெற்றியை சந்தித்தது.160 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி 147 இடங்களை அள்ளியது. தேமுதிக 2வது பெரிய கட்சியாக வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. திமுக படு தோல்வியைச் சந்தித்து 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

14 - சட்டசபை அதிமுக தலைவராக ஜெயலலிதாவை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்தனர். இதையடுத்து அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

- சட்டசபை தேமுதிக தலைவராக தேமுதிக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்தனர்.

15 - சட்டசபை அதிமுக தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை ஆளுநர் பர்னாலாவிடம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கொடுத்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

16 - 3வது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 33 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

- தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக தேவேந்திர நாத் சாரங்கி நியமிக்கப்பட்டார். உள்துறைச் செயலாளராக ஷீலா ராணி சுங்கத் நியமிக்கப்பட்டார். சென்னை காவல்துறை ஆணையராக ஜே.கே.திரிபாதி பதவியேற்றார்.

20 - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு தள்ளுபடியானதால் கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

- தமிழக அமைச்சராக நியமிக்கப்பட்ட திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மரியம் பிச்சை திருச்சி அருகே நடந்த கோரமான சாலை விபத்தில் பலியானார். மரியம் பிச்சை உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஜெயலலிதா இந்த விபத்து குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

22 - சமச்சீர் கல்வி முறை தரமானதாக இல்லை என்பதால் வருகிற கல்வியாண்டுக்கு அது நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் பள்ளிகளின் திறப்பையும் ஜூன் 15 தேதி வரை தள்ளி வைப்பதாகவும் தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது.

- தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் நடந்தது. 229 புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

24 - தமிழகத்தில் சட்ட மேலவை மீண்டும் வராது என்று முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தார்.

26 - சபாநாயகர் பதவிக்கு ஜெயக்குமாரும், துணை சபாநாயகர் பதவிக்கு தனபாலும் மனுத் தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை.

30 - அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் பலியாகக் காரணமான லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். டிரைவரும் பிடிக்கப்பட்டார்.

- திமுக தலைவர் கருணாநிதி சபாநாயகர் அறையில், சபாநாயகர் ஜெயக்குமார் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார்.

31 - தமிழக டிஜிபியாக லத்திகா சரணை தேர்வு செய்த நியமனம் செல்லாது என்று நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆர்.நடராஜை மீண்டும் டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.

ஜூன்

1 - ரேஷன் கார்டுகளுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

3 - தமிழக சட்டசபையில் அதிமுக ஆட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் செப்டம்பர் 15ம் தேதி முதல் இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கலைஞர் காப்பீடு உள்ளிட்ட முந்தைய திமுக அரசின் பல திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும், சென்னையில் மோனோ ரயில் தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளையும் அரசு அறிவித்தது.

6 - ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவியுடன் 4 கிராம் இலவசத் தங்கம் தரும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

7- சென்னையிலிருந்து பொள்ளாச்சிக்கு சென்ற கேபிஎன் ஆம்னி பேருந்து காஞ்சிபுரம் அருகே தீவிபத்தில் சிக்கி அதில் பயணித்த 22 பேர் உயிரோடு கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

- சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் வகையில், சமச்சீர் கல்விதிருத்த மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் இத்திட்டத்தை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

- தமிழகத்தில் மேல்சபை கொண்டு வரும் திமுக அரசின் திட்டம் வாபஸ் பெறப்படுவதாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்புக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டது.

8 - தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழகசட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

9 - கச்சத்தீவு தொடர்பான வழக்கில் தமிழக அரசையும் சேர்க்க கோருவது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் தமிழகஅரசின் சட்ட மசோதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

- திமுக ஆட்சிக்காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டு மிச்சமுள்ள இலவச டிவிகள் அனாதை இல்லங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

10 - ஸ்பெக்ட்ரம் வழக்கை சட்டப்படி சந்திப்போம், கனிமொழியை சிபிஐ வழக்கில் சேர்த்தது கண்டனத்துக்குரியது என்று திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

11- தூத்துக்குடி, கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது.

- சென்னையில் காணாமல் போன உயர்நீதிமன்ற வக்கீல் சங்கரசுப்புவின் மகன் சதீஷ், சென்னை அருகே உள்ள ஏரியில் பிணமாக மிதந்தார்.

13 - விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரும் வழக்கை விரைவாக விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டார்.

14 - முதல்வராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி சென்ற ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார் மன்மோகன் சிங்.

- 1 முதல் 6ம் வகுப்பு வரை நடப்பாண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர வேண்டும், பிற வகுப்புகளுக்கு இதை விரிவுபடுத்துவது தொடர்பாக 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து ஆராய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

15 - தலைமைச் செயலகத்தை புதிய கட்டடத்திலிருந்து புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

17 - சமச்சீர் கல்வியை பிற வகுப்புகளுக்கும் நீட்டிப்பது குறித்து அறிக்கை தருமாறு 9 பேர் கொண்ட குழுவை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

22 - புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டியதில் முறைகேடு நடந்ததா என்பதை அறிய உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜ் தலைமையில் கமிஷன் ஒன்றை தமிழக அரசு அறிவித்தது.

24 - முன்னாள் அமைச்சர் ராசாவி்ன் மனைவி பரமேஸ்வரி, அண்ணன் ராமச்சந்திரன் ஆகியோரிடம் திருச்சியில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

25 - முதல்வர் ஜெயலலிதாவை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் நேரில் சந்தித்து, இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்கக் கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதற்குப் பாராட்டு தெரிவித்தார்.

26 - இலங்கையின் போர்வெறியாட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தியபடி அஞ்சலியில் பங்கேற்றனர்.

27 - செல்வ வரி வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதாவை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்தது.

29 - டெல்லி ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளராக ரபி பெர்னார்ட் நியமிக்கப்பட்டார்.

- தமிழகத்தின் புதிய அமைச்சராக முகம்மது ஜான் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

ஜூலை

2 - சென்னை ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு வளாகத்தில் மாங்காய் பறிக்க முயன்ற சிறுவன் தில்ஷனை அங்கிருந்த முன்னாள் ராணுவ அதிகாரி கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

3 - தமிழக சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கப்பட்டார். 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன.

- பண மோசடி வழக்கில் சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டார்.

4 - தமிழகத்தில் புதிய அமைச்சராக செந்தூர்ப்பாண்டியன் பதவியேற்றார்.

- அரசு கேபிள் டிவி கழக தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

5 - சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் அமல்படுத்த முடியாது. அதில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

10 - சென்னையில் சிறுவன் தில்ஷன் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராம்ராஜ் கைது செய்யப்பட்டார்.

20 - சென்னை வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார்.

25 - நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போலீஸில் சரணடைந்தார்.

- மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமான பொட்டு சுரேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

27 - திமுக கூட்டணியிலிருந்து விலகுவது என்ற முடிவை பாமக பொதுக்குழு எடுத்தது.

ஆகஸ்ட்

1 - திமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி சென்னையில் அக்கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

2 - ரூ. 150 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக கூறி முன்னாள் திமுக எம்எல்ஏ ரங்கநாதன் மற்றும் அவரது உதவியாளர் கெளரிசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

5 - சிவகாசி அருகே காளையார்குறிச்சி என்ற கிராமத்தில் பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 7 பெண்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

8 - முன்னாள் திமுக எம்எல்ஏ ரங்கநாதன், அவரது உதவியாளர் கெளரிசங்கர் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

9 - நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. தமிழக அரசின் அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

10 - முன்னாள் ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர் சென்னையில் மரணமடைந்தார்.

- கொலை முயற்சி வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

12 - தமிழகத்தின் 7 மாவட்டங்களில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

13 - நில அபகரிப்பு வழக்கில் பிரபல லாட்டரி அதிபரும், திமுக குடும்பத்துக்கு நெருக்கமானவருமான மார்ட்டின் கைது செய்யப்பட்டார்.

19 - திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் அதி உயர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

23 - தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற திமுக அரசின் சட்டம் ரத்து செய்யப்பட்டு, சித்திரை 1ம் நாளே இனி தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

25 - கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான இடத்தை மோசடியாக அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது தம்பி ராமஜெயம் உள்ளிட்ட 6 பேர் திருச்சியில் கைது செய்யப்பட்டனர்.

27 - பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைக் காக்க வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற இளம் பெண் தீக்குளித்து உயிர் நீத்த சம்பவம் தமிழகத்தை பெரும் பரபரப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

30 - பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

31 - தமிழகத்தின் புதிய ஆளுநராக ரோசய்யா பதவியேற்றுக் கொண்டார்.

- நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர்

2 - இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தமிழக அரசு வழங்க தடையில்லை என்று உச்சநீதி்மன்றம் உத்தரவிட்டது.

5 - திருச்சி அருகே அரசுப் பேருந்துடன், ஆம்னி பேருந்து மோதியதில் 14 பயணிகள் கொல்லப்பட்டனர்.

7 - மீனவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கேபிபி சாமி கைது செய்யப்பட்டார்.

11 - பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்காக திரண்டிருந்த தலித் மக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனால் தென் மாவட்டங்கள் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.

12 - பரமக்குடியில் தலித்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

13 - அரக்கோணம் அருகே காட்பாடி பாசஞ்சர் ரயில் மீது மின்சார ரயில் மோதி நடந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர்.

14 - உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

15- அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவச ஆடு மாடுகள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

16 - தமிழகத்தின் 10 மாநகராட்சிகளிலும் போட்டியிடும் அதிமுக மேயர் வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்தார்.

- திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்சோதி போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

- முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

22 - கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் போக்கப்படும் வரை அணுமின்நிலையப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

27 - தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

29 - வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் 19 ஆண்டு இழுபறிக்குப் பின்னர் இன்று தீர்ப்பளித்தது தர்மபுரி செஷன்ஸ் கோர்ட். குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

அக்டோபர்

2 -சட்டவிரோதமாக மணல் அள்ளி ரூ. 100 கோடிக்கும் மேல் சம்பாதித்ததாக கூறி திமுக எம்எல்ஏ கே.சி.பழனிச்சாமியை போலீஸார் கரூரில் கைது செய்தனர்.

4 - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரது வீடு, தொழில்நிறுவனங்கள் உள்பட 11 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

7 - கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினைக்குத் தீர்வு காண நிபுணர் குழு அமைக்கப்படும் என்று தன்னை சந்தித்த தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான குழுவிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

8 - புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரம் மீது விழுப்புரம் மாவட்ட போலீஸார், பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

- முன்னாள் திமுக அமைச்சர் சுரேஷன் ராஜனின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரெய்டு நடத்தினர்.

- திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

14 - ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரது வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தியது.

16 - டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட 14 பேரின் வீடுகளில் அதிரடி ரெய்டு நடந்தது.

17 - தமிழகத்தில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.

19 - தமிழகத்தில் 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது.

20 - திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மு.பரஞ்சோதி வெற்றி பெற்றார்.

21 - உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகின. 10 மாநகராட்சிகளையும், பெருவாரியான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் அதிமுக தனித்துப் போட்டியிட்டு அபாரமாக கைப்பற்றியது. திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மோசமான தோல்வியைத் தழுவின.

22 - அமைச்சர் கருப்பசாமி புற்றுநோய் காரணமாக சென்னை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

29 - லாட்டரி அதிபர் மார்ட்டின் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

31 - சென்னை தி.நகரில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட கடைகளுக்கு சிஎம்டிஏ அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்து மூடினர்.

நவம்பர்

1 - மதுரை திருமங்கலம் அருகே அத்வானி சென்ற பாதையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

2 - சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உயர் சிறப்பு குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

4 - கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

- டாக்டர் ராமதாஸையும், அவரது மகன் அன்புமணியையும் படு கேவலமாக பேசியதாக கூறி பண்ருட்டி வேல்முருகன் பாமகவை விட்டு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.

6 - தமிழகத்தில் புதிய அமைச்சர்களாக தாமோதரன், காமராஜ், டாக்டர் சுந்தர்ராஜ், மு.பரஞ்சோதி, வி. மூர்த்தி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

- கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது. அதனால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

2011 ல் தமிழ்நாடு Empty Re: 2011 ல் தமிழ்நாடு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 01, 2012 3:45 pm

தொகுப்புக்கு நன்றி நண்பரே சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum