தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என்னுடன் வாழ்ந்திட வா..........அன்பே

3 posters

Go down

என்னுடன் வாழ்ந்திட வா..........அன்பே Empty என்னுடன் வாழ்ந்திட வா..........அன்பே

Post by தமிழ்1981 Wed Jan 04, 2012 8:11 pm

என் இனியவளே,
நான் உன்னை
திருமண மான நாட்முதல்
மனைவியாய் அல்ல‌
காதலியாய் எந்தன்
தோழியாய் எந்தன்
குழந்தையா யெண்ணித்
தானடி உன்னை
என் உயிருக்குள் உயிராக‌
நேசித்தேன்........

காதலித்து திருமணம்
முடித்தவர்களா என்று
நட்பும் உலகமும்
பொறாமைக் கண்கொண்டு
பார்க்குமளவு வாழ்ந்தோமடி......

என் அன்பிற்கு
வானமே எல்லையென்று
நம்பி உன்னை
நேசித்தேன் காதலித்தேன்

ரோஜா தோட்டமாய்
வளர்த்த வாழ்ந்த
நம் வாழ்வில்
சூறாவளியாய் புயலாய்
நின் தகப்பனின்
சுயநலம் வந்ததடி........

காலத்தின் கோலத்தால்
உனது குடும்பத்தால்
நான்பட்ட
நிந்தைகள் அவமானங்கள்
பலப் பல.....
ஊர்க் கூட்டி உன்னை
திருமணம் செய்தேன்...
அதற்கு பழியாக
ஊர் பழிக்க‌
என்னையும் குடும்பத்தையும்
காவல் நிலையம்
அழைத்துச் சென்றார்
உன் தகப்பன்........

காவல் நிலையத்திலும்
உன் தகப்பன்
தன் சுயநலத்தை மட்டுமே
வென்றெடுக்க‌
அடுகடுக்கான பொய்கள்
கட்சி ஆதரவுடன்.............

உனக்கு காலையில்
காப்பி போட்டு
மிஸ்டு கால் கொடுத்து
எழுப்பும் என் அன்னையை
வார்த்தைகளினால் காவலர்
சுட்டப் போதும்
புன்னகையுடன் நின்
குடும்பத்தாரும் நீயும்......

இதனால்
எனது குடும்பமும்
தலைக் குனிந்தது........
உற்றாரும் உறவினரும்
என் பின்னால்
நான் கேட்கும் படியே
ஏளனம் பேசி பேசி
என்னை
கேலிப் பொருளாக்கினர்.........

நாம்
நலமுடன் வளமுடன்
வாழ்கவென்று வாழ்த்திய உறவு
இந்த உறவே.....
வேண்டாமென்று சொல்லி
நம் உறவை
உடைக்கவும் சொல்லியது

ஆத்திரத்தில் அவசரத்தில்
அதையும் நான் செய்தேன்.....
ஆனாலும்...........
நான் உன் மீதுக் கொண்ட‌
காதலினால் அன்பினால்
அதையும் உடைத்து
என் தாயை
பேசிய சுடு
சொற்களையும் மறந்து
உன்னுடன் வாழ‌
உன்னுடன் மட்டும் வாழ‌
என் குடும்ப கூட்டை
உடைத்துக் கொண்டு
அன்னையை அனாதையாக்கி விட்டு
வெளியில் வந்தேன்.........

நீயோ நன்றாகத்
தான் வாழ்ந்தாய் என்னுடன்
ஆனாலும் உந்தன்
தகப்பனின் ஆலோசனைப்படி........

நான் உன்மீது
அளவற்ற அன்புக் கொண்டேன்
ஆனால் நீயோ....
காசு தான் உலகம் என்றாய்..........

பாசம் தான் உலகம் என்றேன்
ஆனால் நீயோ
வேஷமாய் தான் வாழ்ந்தாய்
என்னுடன் ‍ என்னை நம்பாமல்

உன்னிடம் தாயன்பை
எதிர் பார்த்தேன்.....
ஆனால் நீயோ
உந்தாயை நேசித்து
என்னை அவமானப் படுத்தினாய்........

அன்பின் மிகுதியில்
நானிருக்கும் போதும்
உன் சுயநலத்தோடு
உந்தாய் வீட்டிற்கு
போவதற்கு அனுமதி கேட்பாய்......
என்னதொரு கொடுமை..........

உன்னிடம் கிடைக்காத‌
பாசத்திற்காய் அன்பிற்காய்
நான் மதுவினை
நாடினேன்......
என் மனதையும்
மரக்கச் செய்து
மதுவின் போதையில்
உன்மீது கொண்ட
அன்பை விட‌
உன் தகப்பன் மீதான‌
கோபத்தையும் உன்னிடம் காட்டினேன்.......

அதனையும் நீ புரியாது
என்னை
மீண்டும் மீண்டும்
சுடு சொற்களால் என்னை
வதைத்தாய்........ நானோ
எந்தன் உயிரையே
எந்தன் அன்பையே
அடித்தேன் ... அடித்தேன்.....
அதனால் நானே
என் மீதே
வெறுப் படைந்தேன்................

உன்னை எவ்வளவு
நேசித்தேனோ
அதை விட அதிகமாய்
உன் குடும்பத்தை
வெறுத்தேன்..............

ஆனால் நீயோ
நானில்லாத போது
வீட்டைக் காலி செய்துவிட்டு
உன் தகப்பனாருடன்
சென்று விட்டாய்..........
உனக்கோ என் மீதுக்
கோபம்.... உன்
தகப்பனுக்கோ
தன் சுயநலம்
ஜெயிக்க மீண்டுமொரு
வாய்ப்பு என்றினைத்து
அழைத்து சென்று விட்டார்........

நான் மீண்டும்
உறவையும் நாட முடியாமல்
நட்பையும் நாட முடியாமல்

இப்பவும்
நானுன்னை நேசிக்கின்றேன்...
அதிகமதிகமாய் நேசிக்கின்றேன்.....
என் அன்பை
என் காதலை
என்றாவது ஒரு நாள்
புரிந்துக் கொள்வாயென
காதலுடன் காத்திருக்கின்றேன்.....

என் இல்லறமே,
நீ என்னருகில்
இருக்கும் போது
உந்த னருமை
எனக்குத் தெரியவில்லை........

நீ என்னை விட்டுச்
சென்றவுடன்
நீ என்னை விட்டு
விலகிடுவா யொயென்று
என்னுயிர் என்னை
வதைக்கின்றது............

இன்று நான்
உதடுகளில் சிரித்தப் படி
வாழ்ந்தாலும்
உள்ளத்தில் நின் பிரிவால்
மரண வேதனையில்..........

காதலுக்குள்
ஊடல் வரலாம் ‍ ஆனால்
பிரிவு கூடாது
அன்பே.........

நின் தகப்பன் மீதான
கோபத்தில் என்
சொற்களால்
உன்னை வதைத்தேன்.....
அடிகளால்
உன்னை சிதைத்தேன்.......
அப்போது நான்
எண்ண வில்லை.........
நான்
வதைப்பதும் சிதைப்பதும்
என்மீது நீ
கொண்ட நேசித்த‌
அன்பையென்று...........

உன் தகப்பனை
நேசிப்பது தவறல்ல‌
ஆனால் அவர் செய்யும்
தவறினை எண்ணத்தினை
நீ உணரா திருப்பது தவறு.......

ஒரு நிமிடம்
எனக்காக என்னை நினைத்து
நம் வாழ்வைக் குறித்து
நீ முடிவெடு..........
உன்னைப் பெற்றவரே யானாலும்
நம் வாழ்வின் முடிவை
அவர் கையில் தராதே..........

பிறந்த புத்தாண்டில்
நான் என் தவறினை
உணர்ந்து விட்டேன்..........
நின் குடும்பம்
செய்த தவறினை
மன்னித்து மறந்து விட்டேன்............

நாம் தொடர்வோம்
நம் இல்லற பயணத்தை
அன்பு காதல் துணைக் கொண்டு......

நீயில்லாமல் நான்
உயிரில்லாத வெற்றுடல் தான்.........
மழையில்லாத மேகம் தான்......
மணமில்லாத மலர் தான்........

என் மீதான
கோபம் குறைய‌
ஆண்டுகள் பல ஆனாலும்
உனக்காக
காத்திருக்க தயார்......
அதை நீ எனக்குச் சொல்.......
உன் தகப்பனல்ல.......
நம் இல்லறத்தை
பிரிக்கும் உரிமையை
யார் அவர்க்கு கொடுத்தது?????

இப்பவும்
நானுன்னை நேசிக்கின்றேன்...
அதிகமதிகமாய் நேசிக்கின்றேன்.....
என் அன்பை
என் காதலை
என்றாவது ஒரு நாள்
புரிந்துக் கொள்வாயென
காதலுடன்
பல ஆண்டுகள் ஆனாலும் காத்திருக்கின்றேன்.....

உன்னுடன் மீண்டுமொரு
வசந்த வாழ்க்கை வாழ்
உன்னை நேசிக்க‌
உன்னை காதலிக்க‌
உன்னை சேயாய் கவனிக்க‌
உன்னுடன் தோழனாய் நட்புகொள்ள‌
உன் கணவனாய்
உன்னை
அணைத்திடவும் அரவனைக்கவும்..............
உலகமே எதிர்த்தாலும்
உன்னுடன் காதலாய் வாழ‌
என்னை நானே
தயார் படுத்திக் கொண்டேன்...........

எந்தன் அன்பே
உன்னிடம்
நான் **நோக்குவது
என்மீது தூய அன்பும்
நல் நட்பும்
நல் இல்லறமும்
என்னை நம்பும்
என்னை நேசிக்கும்
பெண்ணொருத்தியாய்
புத்தாண்டில் புதியவளாய் வா......

என்னுடன் வாழ‌
விரைவில் வா...........
இல்லையேல்
நீயே புன்னகையுடன்
உந்தன் கரங்களால்
விஷம் தந்து செல்..........
என் வாழ்வினை
ஆரம்பிக்க வா
அல்லது
என் வாழ்வினை
முடிக்க வா............

(** நோக்குவது : எதிர்பார்ப்பது என்ற அர்த்ததில்.....)
=====
என் மனைவியை துன்புறுத்த வேண்டும், அவளைக் கொடுமைப் படுத்த வேண்டும் என்று என் கனவிலும் நான் நினைக்கவில்லை.........அதே சமயம் நான் என் தவறுகளையும் நியாயப்படுத்தவும் இல்லை..... அவளை துன்பப்படுத்தியது என் மீதான தவறு தான்.... அதனை மிகுந்த வேதனையுடன் ஒத்துக் கொள்கின்றேன்......


என் மனைவியைப் பற்றி நான் எழுதிய கவிதைகள் வெறும் எழுத்துக்கள் அல்ல.... அவை என் இதயத்தில் அவளை நேசித்த அன்பின் சிறு பகுதி.....
என் மனைவி :
[You must be registered and logged in to see this link.]

அவளின் பிறந்த நாளுக்கு எழுதியது.......:

[You must be registered and logged in to see this link.]

என் அம்மாவின் ஆதங்கம் :

[You must be registered and logged in to see this link.]





சிறு விண்ணப்பம் :
நானும் என் மனைவியும் இப்போது பிரிந்து உள்ளோம்........விரைவில்
நாங்கள் இருவரும் சேர்ந்து புதிய வாழ்க்கை வாழ தமிழ் தோட்ட மலர்கள் அனைவரும்
இறைவனிடம் வேண்டுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

என்னுடன் வாழ்ந்திட வா..........அன்பே Empty Re: என்னுடன் வாழ்ந்திட வா..........அன்பே

Post by தங்கை கலை Wed Jan 04, 2012 8:22 pm

அண்ணா ரொம்ப கஷ்டமா இருக்கு ....
முதலில் பிரச்ச்நை வரும்போதே நீங்கள் பேசி அம்மாவையும் அவர்களையும் சமாதானம் படுத்தி இருக்க வேணும் ...ஆனால் அப்புடி செய்யாமல் விட்டது உங்கள் தவறு தான் ....

உங்கள் வாழ்க்கையில் ப்ராப்ளம் ண்ண நீங்களும் அண்ணியும் தான் பேச வேணும் ..இதில் உங்க வீடு சைட் அவங்க வீடு சைட் யாரையும் பேச அனுமதிச்சிருக்கக் கூடாது நீங்க ....

அண்ணா மது சாப்பிட்டு நீங்க பண்ணியது எல்லாம் ஓவர் தான் ...ஒண்ணு நீங்க அவங்களுக்கு புரிய வைக்கணும் இல்லை அவங்க உங்களுக்கு புரிய வைது இருக்கலாம் ...

சரி விடுங்க இனிமேல் ரெண்டு பெரும் நல்ல மனசு விட்டு பேசி புது வாழ்க்கையை தொடங்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

என்னுடன் வாழ்ந்திட வா..........அன்பே Empty Re: என்னுடன் வாழ்ந்திட வா..........அன்பே

Post by தமிழ்1981 Wed Jan 04, 2012 8:30 pm

வணக்கம் சகோதரி,
சிறு பிள்ளைக்குச் சொல்வதைக் காட்டிலும் அதிகமாய் புரிய வைக்க முயன்றேன்.... கலை... ஆனால் அவள் மனதில் ஒரேயொரு எண்ணம் தான்.... " நான் அவளுக்குச் சொல்வது எல்லாம் அவளை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும், அவள் தகப்பன் கூறுவது தான் "இறைவன்" கூறுவதாய் எண்ணம்".... மேலும் ஆரம்பத்திலேயே " தனிக்குடித்தனம்" அவளது ஆசை என்று என்னிடமோ அல்லது என் அம்மாவிடமோ சொல்லியிருந்தால் மிகவும் சந்தோஷமாக தனிக் குடித்தனம் வைத்திருப்பர்..... என் அம்மா என்னிடமே கூட சொல்லாமல் மிக நாசூக்காக இதனை செய்திருப்பார்..... ஆனால் என் மனைவி தனிக்குடித்தனம் போவதாக சொல்லியது காவல் நிலையத்தில் வைத்து..... மேலும் அவளை திட்டக் கூட என் அம்மா அனுமதித்தது கிடையாது.......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

என்னுடன் வாழ்ந்திட வா..........அன்பே Empty Re: என்னுடன் வாழ்ந்திட வா..........அன்பே

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 04, 2012 11:27 pm

நம்பிக்கையோடு இருங்கள் அண்ணே, இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்க முடியாது, விரைவில் உங்களிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்க்கிறோம்... அண்ணே மது அருந்துவதால் அந்த நொடி பொழுதில் தான் நிம்மதி கிடைக்கும், மது அருந்துவதை பழக்க படித்திவிடாதீங்க, இறைவனிடம் உங்கள் பாரங்களை ஒப்படையுங்கள் இறைவன் புதுவருடத்தில் நல்லதை செய்வார்.

உங்களுக்காக நாங்களும் பிராத்தனை செய்கிறோம் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என்னுடன் வாழ்ந்திட வா..........அன்பே Empty Re: என்னுடன் வாழ்ந்திட வா..........அன்பே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum