தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர்

5 posters

Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் Empty உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 12, 2012 4:18 pm

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் 222222
ஒரு பானைப் பொங்கலிலே – நூறு
பானை சந்தோசம்; பொங்கும்
நூறு பானையிலும் –
மணக்குதுப் பார் மண்வாசம்!

மஞ்சக் கொத்துக் கட்டியதும்
சிரிக்குதுப் பார் சூரியனும்,
வெந்தப் பானைக் குளித்ததுபோல்
மினுக்குதுப் பார் வீடுகளும்!

குருத்தோலைத் தோரணமும், கரும்பச்சை மாயிலையும்
அறுத்தமர வாசலுக்கு அடிப்பச்சை பூசிவிடும்,
மஞ்சுவிரட்டுக் காளைகளும் - நீளம் சிவப்பு
வண்ணஞ்சொலிக்கப் பொங்கல் தின்னுத் தலையாட்டும்!

முகங் காட்டிய வெளிச்சத்திற்கும்
தைப்பிறந்தாலே வெண்பொங்கலினிக்கும்,
வீசும் காற்றுக்கும் குடிக்கும் நீருக்கும்
ஆற்றங்கரையில் கற்பூரமெரியும்; ஊதுபத்தி வாசம் பரப்பும்!

நன்றி சொல்ல வாய்நிரைத்து
இயற்கையை வணங்கும் நாளுயிது – நன்றி
மறக்கும் மனிதருக்கு – நன்றியை
நினைவில் மீட்டும் தைப் பொங்கலிது!

உழைக்கும் மாடுக் கூட்டத்தையும்
வணங்கிய சனத்தின் பண்பு இது,
வியர்வையால் நனைந்த நெல்விதையை
விளைத்த’ வயலுஞ் சாமியான சாட்சியிது!

குடிக்கும் குவளைத் தண்ணீருக்கும்
நன்றியைப் பாராட்டும் பக்தியிது, ஏர்பிடித்த
கைகளுக்கு தேரிழுத்து சாமி காட்டும்
சடங்கின் மீதெழுந்த நம்பிக்கையிது!

அப்பாம்மா கைபிடித்து நடந்தத் தெரு அத்தனையும்
கதைசொன்ன கருசுமந்து கையெடுத்துக் கும்பிட்டோம்,
பாட்டன் முப்பாட்டன் நட்டக்கல்லை சாமியாக்கி
மண்ணையும் வணங்கிப் பொங்கலிட்டோம்!

நானிலம் சுற்றியத் தமிழர் – பாலையிலும்
ஓயவில்லை, இங்குவந்தும் பொங்கல்வைத்தோம், இனி வருங்காலம்
வயலை யறிய – மாட்டுக்கும் மண்ணுக்கும்
படத்திலேனும் பொட்டுவைத்தோம்!

குடித்த பாலுக்கும் கும்பிட்ட வர்க்கம்
வளர்த்த மண்ணை விட்டுவிடுமா?
வெடித்த காலில் பசியை யடைத்து – உழவர்
பூட்டியக் காளையை மறந்திடுமா?

மிதித்தச் சேற்றில் விளைந்தநெல்லை
அறுக்கும் கைகளை கும்பிடுவோம்;
நன்றி என்பதை நினைக்கும் மட்டில்
பொங்கலோப் பொங்கல் சொல்லிடுவோம்!!

- வித்யாசாகர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் Empty Re: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 12, 2012 4:37 pm

பொங்கலுக்கும் தமக்கும் சிறப்பான வாழ்த்துகள் கவிஞரே...

நானிலம் சுற்றியத் தமிழர் – பாலையிலும்
ஓயவில்லை, இங்குவந்தும் பொங்கல்வைத்தோம், இனி வருங்காலம்
வயலை யறிய – மாட்டுக்கும் மண்ணுக்கும்
படத்திலேனும் பொட்டுவைத்தோம்!

- மழை பொய்த்தல் முக்கிய காரணமாகிவிட்டது... விவசாயிகளைச் சொல்லி குற்றம் இல்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் Empty Re: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர்

Post by பார்த்திபன் Fri Jan 13, 2012 12:28 pm

பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்!
நிரந்தரமாய் தங்கட்டும் நிம்மதி நம் வீட்டில்!

பொல்லாத குணத்தை எல்லாம் போகியிலே தீ வைப்போம்!
இல்லாத நற்குணங்கள் இரவல் வாங்கி சேமிப்போம்!

உழவு இன்றி உலகம் இல்லை என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே உறுதியேற்று உதவுவோம்!

கதிரவனின் கருணைக்கு நன்றி கூறும் நாளிது!
கரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது!

குறைந்த செலவில் சிறந்த உணவு பொங்கல் தவிர வேறில்லை!
வெங்காயமும் வெள்ளைபூண்டும் இதற்குமட்டும் தேவையில்லை!

தைமகளின் பிறந்தநாளை தமிழ் மணக்க போற்றுங்கள்!
குதுகலமாய் கொண்டாட பார்த்திபனின் வாழ்த்துகள்!


நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் Empty Re: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 13, 2012 2:19 pm

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் 35578
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் Empty Re: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர்

Post by தேனி சூர்யா பாஸ்கரன் Fri Jan 13, 2012 7:25 pm

வித்யாசாகர் கவிதையும்,நிலவை.பார்த்திபன் கவிதையும்
மிக அருமையாக உள்ளது...
பகிர்ந்ததற்கு அன்பு நன்றிகள்
.. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் 868492 உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் 868492 உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் 868492
தேனி சூர்யா பாஸ்கரன்
தேனி சூர்யா பாஸ்கரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)

Back to top Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் Empty Re: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 14, 2012 12:17 am

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் 64660 உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் 35578
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் Empty Re: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர்

Post by பார்த்திபன் Sat Jan 14, 2012 2:40 am

தேனி சூர்யா பாஸ்கரன் wrote:வித்யாசாகர் கவிதையும்,நிலவை.பார்த்திபன் கவிதையும்
மிக அருமையாக உள்ளது...
பகிர்ந்ததற்கு அன்பு நன்றிகள்
.. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் 868492 உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் 868492 உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் 868492

மிக்க நன்றி கவிஞரே! உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் 35578
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் Empty Re: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர்

Post by அ.இராமநாதன் Sat Jan 14, 2012 7:53 am

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் Pongal+003
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் 548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் Empty Re: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 14, 2012 10:10 pm

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் 35578
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர் Empty Re: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! -வித்யாசாகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum