தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

நெல்லை அன்பன் அவர்களுக்கு

4 posters

Go down

நெல்லை அன்பன் அவர்களுக்கு  Empty நெல்லை அன்பன் அவர்களுக்கு

Post by கவினா Thu Jan 19, 2012 2:54 am

அன்பு நண்பர் நெல்லை அன்பன் அவர்களுக்கு.

விடுதலைப் புலிகள் குறித்த நம் விவாதத்தை முடித்துக் கொள்ளலாம் என் நினைத்தேன்.

ஆனாலும் அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த தமிழ்த் தோட்டத்தில் நம்முள் நல்லதொரு நட்பு துளிர் விடும் முன்னரே நாமிருவரும் எதிரெதிர் மேடையில் சென்று அமர்ந்து கொண்டோம்.

எங்கே இந்த விவாதம் நம்மை ஒருவருக்கொருவர் பகைவராக்கிவிடுமோ என்ற லேசான அச்ச உணர்வும் எனக்குள் துளிர் விடத் தொடங்கிவிட்டது.

நாம் நம் இருவர் கொள்கைகளையும் மோத விட்டு விட்டு நாம் நட்போடு இருக்கலாமே?

எனக்கு அந்த பக்குவம் இருக்கிறது.
உங்களுக்கும் இருந்தால் விவாதத்தை தொடரலாம்.

அன்பர் திரு.யார்ழ்பாணன் எழுதியுள்ள "தமிழனில்லா இலங்கை" என்ற கவிதைக்கு பின்னூட்டமாக

"இலங்கைத் தமிழர்கள் தனி ஈழம் பெற்றுவிட்டால் தமிழரில்லா இலங்கை சாத்தியமே"

என முற்போக்காக சிந்தித்து நீங்கள் எழுதியதற்கு முதலில் எனது சிறப்பான செவ்வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மையில் ஒவ்வொரு தமிழனிடமிருந்தும் நான் அதிக பட்சமாக எதிர்பார்ப்பது இதைத்தான்.
இது போதும்.

ஆக தமிழீழம் என்பது உங்களுக்குமான கனவாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

சரி இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழீழம் அமைக்க நம்மிடம் இருக்கிற ஒரே ஒரு அஸ்திரம் விடுதலைப் புலிகள் மட்டும்தான்.

உங்கள் குற்றச்சாட்டுகளை எல்லாம் கேட்டு நாம் விடுதலைப் புலிகளை ஓரம் கட்டிவிடுவதாகவே வைத்துக் கொள்ளலாம்.

எனவே விடுதலைப் புலிகளையும், விடுதலைப் புலிகளின் திட்டத்தையும் ஓரம் கட்டிய உங்களுக்கு மாற்றுத்திட்டத்தை அறிவிக்க வேண்டிய தார்மீக கடமை வந்து விடுகிறது.

அப்படி ஏதேனும் நல்லதொரு திட்டம் வைத்திருக்கிறீர்களா தோழரே?

சர்வதேச தமிழ் சமுதாயம் அதைத்தான் எதிர்பார்க்கிறது.

இருந்தால் சொல்லுங்கள் தோழரே.

"இலங்கைத் தமிழர்கள் அடுத்தவங்கதான்"

என்று மீண்டும் மீண்டும் சொல்லி தமிழனாய் பிறந்திருந்தாலும் தமிழ் சமுதாயத்தை விட்டு நீங்கள் தள்ளிச் சென்றுகொண்டு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரிய வில்லையா தோழரே?

அவர்கள் நம் பிரதமரைக் கொன்று விட்டார்கள் என்று மீண்டும் மீண்டும் பதறுகிரீர்களே

நம் பிரதமர் அனுப்பிய அமைதிப் படை தமிழர்களின் பிணங்களின் மீது சதுராடித் திரும்பிய சரித்திரத்தை நீங்கள் மறந்துவிட்டீர்களா தோழரே?

பெண்புலிகளின் பெண்ணுறுப்பில் துப்பாக்கிகளைக் கொண்டு தோட்டாக்களால் துளைத்த கோரத்தை எப்படி நண்பரே உங்களால் மறக்க முடிந்தது?

பிரதமரின் கொலைக்கு பிரபாகரனும் கூட மன்னிப்பு கேட்டுவிட்டார்.

ஆனால் இந்த இந்திய மண்ணிலே சோனியா என்ற ஒரே ஒரு பெண் தாலி அறுத்ததற்காக இலங்கையிலே தமிழச்சிகள் அனைவரும் முண்டச்சிகளான சோகத்தை என்னவென்று சொல்வது?

இதற்கு பின்னால் இருக்கும் நாடாள்பவரின் சூழ்ச்சி உங்களுக்கு புரியவில்லையா?

"20 க்கு மேற்பட்ட என் தமிழ் சகோதரர்களை ஸ்ரீபெரும்புத்தூரிலே கொன்றார்களே" என ஆவேசப் படும் தோழரே!

அங்கே இரண்டு இலட்சம் தமிழர்கள் துடிக்க துடிக்க இறந்தார்கள்.

அதையும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

அது ஒரு போர் என்பதை நீங்கள் அடிக்கடி மறந்து விடுகிறீர்கள்.

நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசிவதைப் போல

புல்லைப் புடுங்குகிற போது
சில நேரங்களில் நெல்லும் கையேடு வந்து விடுகிற சோகமெல்லாம் போக்களங்களில் நடை பெறுவது உண்டு.

அப்படி ஒரு சோகம்தான் அது.

கையேடு வந்த அந்த நெல்லுக்காக கண்ணீர் சிந்தப்போகிறவனும் நம் தமிழன்தான்.

ஆனால் அதற்காக விடுதலைப் போரையெல்லாம் விலக்கி வைக்க முடியாது.

உங்கள் பதிலில் நீங்கள் கடைசியாக சொன்னதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

"எவன் தவறான வழியில் போகிறானோ அவனுக்கு அழிவுதான்" -என்றீர்கள்.

ஆம் தவறான வழியில் போனவர்கள் யார் என்பதை சரித்திரம் கவனமாக கணக்கு எடுத்து வைத்திருக்கிறது.

அவர்களுக்கு அழிவு நிச்சயம்.
தனித் தமிழ் ஈழம்தான் நமது இலட்சியம்.

கொன்று குவிக்கும் கொலைவெறியோடு
கொள்கைகளை மோத விட்டாலும்
குறைந்து போகாத நட்போடு முடிக்கிறேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

நெல்லை அன்பன் அவர்களுக்கு  Empty Re: நெல்லை அன்பன் அவர்களுக்கு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 19, 2012 10:43 am

ஆரோக்கியமான விவாதத்தை தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நெல்லை அன்பன் அவர்களுக்கு  Empty Re: நெல்லை அன்பன் அவர்களுக்கு

Post by நெல்லை அன்பன் Thu Jan 19, 2012 2:16 pm

நிச்சயமாக இது ஆரோக்கியமான விவாதம் தான்.

தமிழீழம் என்பது தமிழராகிய நம் எல்லோருடைய கனவுதான். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் விடுதலைபுலிகள் எப்படிபட்டவர்கள் என்பதுதான் இப்போது விவாதம். விடுதலை புலிகளை விட்டால் ஆள் இல்லை அதனால் அவர்கள் செய்த தவறை கண்டு கொள்ளாமல் விட வேண்டும் என்கிறீர். அங்கு இரண்டு லட்சம் பேர் இறந்தார்கள், அதனால் நம் தமிழ்நாட்டில் 20 பேரை அவர்கள் கொன்றால் பரவாயில்லை என்கிறீர். இரண்டு லட்சம் பேர் இறந்தார்கள் என்றால் அது அவர்கள் உள்நாட்டு பிரச்சனை. இலங்கை தமிழர்களை சிங்களர்கள் கொன்றார்கள், சிங்களர்களை விடுதலை புலிகள் கொன்றார்கள். இதுவும் அவர்கள் உள்நாட்டு பிரச்சனை. நாம் அதற்காக போராடலாம். ஆனால் இதற்காக என் தமிழ்நாட்டு சகோதரர்களை கொன்றது எந்தவிததில் நியாயம். நீர் சொல்கிறீர் அங்கு 2 லட்சம் பேர் இறந்தார்கள், அதனால் நம்மில் 20 பேரை கொன்றால் அது தவறில்லை என்று. நீர் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கு போடுகிறீர் நான் நியாயத்தின் படி சொல்கிறேன். நான் அந்த 20 பற்றி பேரை மட்டும் பேசவில்லை. எத்தனை சிறார்களை அவர்கள் வழுக்கட்டாயமாக ராணுவத்தில் இணைத்தார்கள். ராணுவத்துக்கு வராதவர்களை அவர்கள் என்ன கொடுமை செய்தார்கள், தங்களுக்கு ஒத்துழைக்காத முஸ்லிம்களை பள்ளிவாசலோடு கொன்று குவித்தார்கள். இந்த வரலாறு உமக்கு ஏதாவது தெரியுமா?

நம் சொந்த நாட்டிலேயே நாம் வாழ வழியின்றி, பக்கத்து மாநில காரர்களால் அடுத்த நாட்டவர் போல வாழ வேண்டியுள்ளது. இதற்க்கு ஒரு பெரிய போராட்டத்தை முன்னெடுத்து செல்லவேண்டுயுள்ளது. இதை விடுத்து நீங்கள் அடுத்தவரை பற்றி கவலை படுகிறீர்
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

நெல்லை அன்பன் அவர்களுக்கு  Empty Re: நெல்லை அன்பன் அவர்களுக்கு

Post by கவினா Thu Jan 19, 2012 6:28 pm

நெல்லை அன்பன் wrote:நிச்சயமாக இது ஆரோக்கியமான விவாதம் தான்.

உங்களின் இந்த கடிததிற்கு பதில் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

ஆனால் உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் என் கட்டுரையிலேயே பதில் இருக்கிறது.

பதிலுக்கு பின்னால் கேள்வி எழுப்பிய வினோதத்தை நடத்திக் காட்டியிருக்கிறீர்கள்.

"விடுதலை புலிகளை விட்டால் ஆள் இல்லை அதனால் அவர்கள் செய்த தவறை கண்டு கொள்ளாமல் விட வேண்டும் என்கிறீர்"

என்று சொல்லி இருக்கிறீர்களே?

நான் எப்போது அப்படி சொன்னேன்?

நான் சொன்னது மறுத்து பேசுகிறவர்களிடம் மாற்றுத்திட்டம் இருக்கவேண்டும் என்பதைத்தான்.

அதைப் பற்றி நண்பர் ஒன்றுமே குறிப்பிடவில்லையே ஏன்?

அதே போல எண்ணிக்கையை இழிவுபடுத்தியும்

நான் எதுவுமே சொல்லவில்லை.

நான் இருபது பேருக்கும் அழுகிறேன்.

இரண்டு இலட்சம் பேருக்கும் அழுகிறேன்.

ஆனால் இருபது பேருக்கு மட்டும் அழுதால் போதும் என்பது உங்களுடைய நிலைபாடாக இருக்கிறது.

அதற்கு காரணம் இந்திய அரசு உங்கள் மனதில் இலங்கைத் தமிழர்கள் நம்மவர்கள் இல்லை என்று வெகு ஆழமாக எழுதி வைத்துள்ளது.

அவர்கள் நம்மவர்கள்தான் என்பதை புரிந்து கொள்ள இந்திய வரலாற்றையும், இலங்கை வரலாற்றையும், கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியான தமிழனின் வரலாற்றையும் நீங்கள் படித்து தெளிவதைத் தவிர வேறு வழியில்லை.(இதை உங்களை இழிவு படுத்தும் நோக்கத்தோடு சொல்லவில்லை அன்பரே. வேறு வழியின்றிதான் இந்த வார்த்தையைப் பயன் படுத்துகிறேன்.)

எப்போதும் தோழமைப் பாராட்டி...

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

Last edited by சுந்தரபாண்டி on Thu Jan 19, 2012 9:31 pm; edited 1 time in total
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

நெல்லை அன்பன் அவர்களுக்கு  Empty Re: நெல்லை அன்பன் அவர்களுக்கு

Post by நெல்லை அன்பன் Thu Jan 19, 2012 7:10 pm

ஐய்யா சுந்தர பாண்டி,

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழீழம் அமைக்க நம்மிடம் இருக்கிற ஒரே ஒரு அஸ்திரம் விடுதலைப் புலிகள் மட்டும்தான்.
இதற்க்கு நான் கூறியா பதில்

"விடுதலை புலிகளை விட்டால் ஆள் இல்லை அதனால் அவர்கள் செய்த தவறை கண்டு கொள்ளாமல் விட வேண்டும் என்கிறீர்"

இது உங்கள் கூற்று

"20 க்கு மேற்பட்ட என் தமிழ் சகோதரர்களை ஸ்ரீபெரும்புத்தூரிலே கொன்றார்களே" என ஆவேசப் படும் தோழரே!
அங்கே இரண்டு இலட்சம் தமிழர்கள் துடிக்க துடிக்க இறந்தார்கள்.

என் வாதம்

நீர் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கு போடுகிறீர் நான் நியாயத்தின் படி சொல்கிறேன். நான் அந்த 20 பற்றி பேரை மட்டும் பேசவில்லை. எத்தனை சிறார்களை அவர்கள் வழுக்கட்டாயமாக ராணுவத்தில் இணைத்தார்கள். ராணுவத்துக்கு வராதவர்களை அவர்கள் என்ன கொடுமை செய்தார்கள், தங்களுக்கு ஒத்துழைக்காத முஸ்லிம்களை பள்ளிவாசலோடு கொன்று குவித்தார்கள். இந்த வரலாறு உமக்கு ஏதாவது தெரியுமா?
உமது கூற்று

அது ஒரு போர் என்பதை நீங்கள் அடிக்கடி மறந்து விடுகிறீர்கள்.

என் கேள்வி

அவர்கள் நாட்டில் போர் என்றால் நாம் தமிழ் சகோதரர்கள் எதற்க்கு இங்கு சாகடிக்கப்படவேண்டும்

தங்கள் கேள்வி

நான் சொன்னது மறுத்து பேசுகிறவர்களிடம் மாற்றுத்திட்டம் இருக்கவேண்டும் என்பதைத்தான்.

அதைப் பற்றி நண்பர் ஒன்றுமே குறிப்பிடவில்லையே ஏன்?

எம் பதில்

அவர்களுக்கு மாற்று திட்டம் பற்றி கூற வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் தமிழ்நாடு சகோதரர்களையும் நம் பிரதமரையும் கொன்ற அவர்களுக்கு நான் எப்படி திட்டம் தீட்டுவது
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

நெல்லை அன்பன் அவர்களுக்கு  Empty Re: நெல்லை அன்பன் அவர்களுக்கு

Post by கவினா Thu Jan 19, 2012 9:02 pm

நெல்லை அன்பன் wrote:ஐய்யா சுந்தர பாண்டி,

நண்பர் நெல்லை அன்பனுக்கு.

இப்பொழுதுதான் நீங்கள் உங்களை சரியாக அடையாளம் காட்டி இருக்கிறீர்கள்.

புரிந்துகொள்வதில் உங்களுக்கு இருக்கும் திறமையையும் காட்டி இருக்கிறீர்கள்.

முன்னால் சொன்னதையும் விட்டு விட்டு

பின்னால் சொன்னதையும் விட்டு விட்டு இடையில் சொன்னதை மட்டும் அழகாக எடிட்டிங்கும் செய்து உங்கள் வாதத்தை நிலை நாட்ட முயற்சி செய்து இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

நான் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ல வைத்து நம் இருவரின் நேரத்தையும் வீணாக்குகிறீர்கள்.

சர்வதேச தமிழ் சமுதாயம் நம் இந்தியதமிழர்களின் மீது ஒரு குற்றம் சுமத்துகிறார்கள்.நாம் இவ்வளவு பக்கத்திலிருந்தும் அந்த தமிழர்களை பாதுகாக்கத் தவறிவிட்டோம். இந்திய நீரோட்டத்தில் கலந்து நாம் நம் தமிழ் இன உணர்வை இழந்துவிட்டோம் என்பதே அது.

உங்கள் ஒருவரை ஒரு மாதிரி தமிழனாக எடுத்துவைத்துக் கொண்டு பார்த்தால் அவர்கள் குற்றச் சாட்டில் எந்த தவறும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அவர்களுக்கு மாற்று திட்டம் பற்றி கூற வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் தமிழ்நாடு சகோதரர்களையும் நம் பிரதமரையும் கொன்ற அவர்களுக்கு நான் எப்படி திட்டம் தீட்டுவது

என்று சொன்னதின் மூலம் உங்களுக்கு இருக்கும் அக்கறை இன்மையையும் தனித் தமிழ் ஈழம் அமைப்பதில் உங்களுக்கு இருக்கும் விருப்பமின்மையையும் நிரூபித்து விட்டீர்கள்.

பிறகு எதற்கு இந்த விவாதம்?

பொழுது போக்கவா?

விவாதத்திற்கு ஒரு தவறான நபரைத் தேர்ந்தெடுத்துவிட்டோமா? என்றுகூட என்னை நினைக்க வைத்து விட்டீர்கள்.

வேறு வழியில்லை தோழரே முடித்துக் கொள்ளலாம்.

இந்த தமிழ் தோட்டத்தில் நான் நடவு செய்ய வேண்டிய இன்னும் சில பூச்செடிகள் உள்ளன.

முதலில் அவற்றை முடித்துக் கொள்கிறேன்.

பிறகு மீண்டும் களம் காணலாம்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி.
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

நெல்லை அன்பன் அவர்களுக்கு  Empty Re: நெல்லை அன்பன் அவர்களுக்கு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 19, 2012 9:14 pm

இரண்டு பேருக்குமான விடை இதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

யாதும் ஊரே யாவரும் கேளீ்ர்

என்பது சுந்தரபாண்டி அவர்களின் கருத்து...

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சைளக்கியமே

என்பது நெல்லை அன்பன் அவர்களின் கருத்து...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நெல்லை அன்பன் அவர்களுக்கு  Empty Re: நெல்லை அன்பன் அவர்களுக்கு

Post by நெல்லை அன்பன் Fri Jan 20, 2012 11:48 am

நன்றி சுந்தர பாண்டி முடித்துக்கொள்ளுவோம். ஆனால் அதற்க்கு முன் சிலவரிகள்...

பின் வரும் கூற்றை வன்மையாக மறுக்கிறேன் & கண்டிக்கிறேன்

என்று சொன்னதின் மூலம் உங்களுக்கு இருக்கும் அக்கறை இன்மையையும் தனித் தமிழ் ஈழம் அமைப்பதில் உங்களுக்கு இருக்கும் விருப்பமின்மையையும் நிரூபித்து விட்டீர்கள்.

தமிழ் ஈழம் என்பது தமிழர் அனைவரது கனவு. நானும் அதில் ஒருவன். என்னுடைய விவாதமேல்லாம் விடுதலை புலிகள் நல்லவர்கள் அல்ல அவர்கள் பல தவறுகள் செய்துள்ளார்கள் என்பதே. கருத்து வேறுபாடு என்பது எல்லா நிலையிலும் இருக்கக்கூடியதே. இதிலும் நம்மில் இருக்கிறது.

நீங்கள் உங்கள் நடவு பணியை தொடரலாம்......
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

நெல்லை அன்பன் அவர்களுக்கு  Empty Re: நெல்லை அன்பன் அவர்களுக்கு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum