தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சங்க காலப் பெண்களின் சாவு விழைவு

3 posters

Go down

சங்க காலப் பெண்களின் சாவு விழைவு Empty சங்க காலப் பெண்களின் சாவு விழைவு

Post by ganeshebi Tue Feb 14, 2012 5:27 pm

மனிதன் சாவை நாடும் மனநிலையும் சூழலும் தனித்துவம் வாய்ந்தவை. ‘உலகின் முக்கியப் பிரச்சினையே தற்கொலைதான்’ என்றார் ஆல்பர்ட் காம்யூ. ஒரு மனிதன் தன்னுடைய சாவை விழைந்து ஏற்பதற்குத் தனிப்பட்ட மனநிலை மட்டுமின்றி, அவன் வாழும் சமூகத்தின் நிர்ப்பந்தமும் முக்கியக் காரணமாகிறது. அதாவது ஒரு மனிதன் சாவை நாடிச் செல்வது தனிமனிதப் பிரச்சினையன்று; சமூகப் பிரச்சினை.
சங்க இலக்கியத்தில் சில இடங்களில் அக்காலப் பெண்கள் தங்கள் சாவை விரும்பி ஏற்றுக்கொள்ளும் விதமான நிகழ்வுகளைக் காணமுடிகிறது. சடங்கு வயப்பட்ட இந்நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள சமூக அசைவியக்கம் ஆராயப்பட வேண்டியது.
சமூகம் பொருளாதாரம் பெண்:
ஆதிகாலத் தாய்மைச் சமூகத்தில் பெண் மனிதவளத்தைப் பெருக்கும் ஜீவாதார சக்தியாக மதிக்கப் பெற்றாள். ஆணாதிக்கச் சாயல்கள் ஏதும் படியாத அச்சமூகத்தினைத் தொடர்ந்து பின்னர் வந்த உடைமைச் சமூகத்தின் தோற்றம் பெண் வகித்து வந்த சமூகப் பாத்திரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மனிதவள உற்பத்தி என்பது பெண்ணை மட்டும் சார்ந்ததன்று எனும் உண்மை ஆணாதிக்கச் சமூகத்தை உருவாக்கியது. அதாவது பெண் மையம் தகர்க்கப்பட்டு ஆண் மையச் சமூகம் தோற்றம் பெற்றது. இதையே ‘தாயுரிமை தூக்கியெறியப்பட்டது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வி’ என்றார் ஏங்கெல்ஸ்.1
நிலைவுடைமைச் சமூகத்தில் பெண்ணின் பொருளாதாரச் சுதந்திரம் முற்றிலுமாக முடக்கப்பட்டு, குடும்பப் பொருளாதாரம் முழுக்க முழுக்க ஆணை குடும்பத் தலைவனை மையமிட்டதாகக் கட்டமைப்புச் செய்யப்பட்டது. அதாவது, சமூக இயக்கத்தின் அடித்தளமான பொருளாதாரத்திற்கு ஆணையே சார்ந்து நிற்க வேண்டிய நிலைக்குப் பெண் உள்ளாக்கப்பட்டாள். பெண் தனித்து நின்று பொருளாதார பலத்தை அடைந்துவிடாமல் இருக்கும் விதமான சமூகச் சட்டகம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. இச்சட்டகத்தை உடைத்துப் பெண் வெளியேறி விடாதபடி வெளியேற விரும்பியும் விடாதபடி சமூகக் கருத்தமைவுகள் உருவாக்கப் பெற்றன. ஆண் மையச் சமூகம் தன் வெற்றியை ஈட்டியது; பெண் அடிமையானாள்.
சங்க காலச் சமூகத்தில் பெண்:
சங்க காலத்தில் கற்பு எனும் கருத்தாக்கம் ஆண் மையச் சமூகத்திற்கு இணக்கமான பெண் உளவியலைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. கணவனின் மறைவுக்குப் பின், தன்னுடைய கற்பொழுக்கத்தை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக மூன்று வகைக் கற்பு நிலைகள் மனைவியின் தேர்வுக்கு முன்வைக்கப்பட்டன.
தலைக் கற்பு எனப்படும் உடனுயிர் மாய்தல், இடைக்கற்பு எனப்படும் உடன்கட்டை ஏறுதல், கடைக்கற்பு எனப்படும்கைம்மை நோன்பிருத்தல் ஆகிய இம்மூன்று கற்பு நிலைகளும் ஓர் ஆணின் இறப்பையொட்டி அவனுடைய மனைவி(யர்) தேர்ந்தெடுக்கும் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. கணவன் உயிரோடிருக்கும் போது மனைவி பேணும் கற்பொழுக்கத்தை விட, அவன் இறந்த பிறகு அவள் மேற்கொள்ளும் கற்பொழுக்க நிலைப்பாட்டிற்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆணின் மறைவுக்குப் பின்னர் பெண் தனித்து நின்று பொருளாதாரச் சுதந்திரத்தை அடைந்து விடமாலிருக்கச் செய்யப்பட்ட ஏற்பாடு இது.
சங்க கால ஆணாதிக்கச் சமூகம் வரையறுத்த கற்பு அறங்களைப் போற்றிப் பேணி, அவற்றின் வழி தன்னுடைய கடமைகளை நிறைவேற்றி முடிப்பதே பெண்ணுக்குப் பெருமையளிக்கும் செயல் என்று அக்கால மகளிர் நம்ப வைக்கப்பட்டனர். தொடர்ச்சியான இந்த சமூக அசைவியக்கத்தின் மூலம் கணவன் இறந்தவுடன் தங்கள் உயிரைப் போக்கிக் கொள்ளும் மனத்துணிவு மகளிர் மனத்தில் உருவாக்கப்பட்டது.
கற்பு நெறியும் சாவு விழைவும்:
சங்க இலக்கியங்களில் மரபுகளின் ஆதிக்கம் பெருமளவு காணப்பட்ட போதிலும், இடையிடையே சிற்சில வாழ்வியற் தகவல்களும் தென்படவே செய்கின்றன. சங்க காலப் பெண்களின் நிலையைத் தெரிவிக்கும் ஆனந்தப் பையுள், உவகைக் கலுழ்ச்சி, தாபதநிலை, முதுபாலை போன்ற புறப்பொருட் துறைகளில் அமைந்த சில பாடல்கள் புறநானூற்றில் காணக் கிடைக்கின்றன.
கணவன் இறந்தவுடன் தன் உடலில் உயிர் தங்காது உடன் உயிர் மாய்தலாகிய தலைக்கற்புநிலை புறநானூற்றின் 62வது பாடலில் குறிக்கப்படுகிறது. போர்க்களத்தில் இறந்துபட்ட சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் மற்றும் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி ஆகிய மன்னர்களின் மனைவியர், கைம்மை நோன்பு நோக்கும் இழிநிலையை விரும்பாது தத்தம் தலைவர்களின் மார்பில் வீழ்ந்து உடன் உயிர் மாண்டதாக அப்பாடல் குறிப்பிடுகிறது.


‘உடன்வீழ்ந் தன்றால் அமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே’
-கழாத் தலையார் (புறம்.62)
இப்பாடலின் வழியாக, தலைவன் இறந்தவுடன் உயர்குடிப் பெண்கள் தன்னுயிரைப் பேணுதல் தகாது எனும் சமூக அறம் நுட்பமாகப் போதிக்கப்படுகிறது.
அக இலக்கியமான குறுந்தொகையில் உள்ள ஒரு பாடல் தலைவனைப் பிரிந்து ஒரு கணமும் உயிர் வாழ விரும்பாத தலைவியின் உளவியலைச் சித்திரிக்கிறது.


‘உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மைநாம் உயற்கே’
-சிறைக்குடி ஆந்தையார் (குறுந். 57)
தோழி கூற்றாக அமைந்த மற்றொரு குறுந்தொகைப் பாடலில் ஆண் குரங்கு இறந்துபட்டதும் கைம்மைத் துன்பத்திற்கு ஆளாக விரும்பாத பெண் குரங்கு ஒன்று உயர்ந்த மலையில் இருந்து குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாகக் குறிப்பிடுகிறது.


‘கருங்கட் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துஉயிர் செகுக்கும்’
-கடுந்தோட் கரவீரன் (குறுந். 69)
விலங்குகளின் செயல்பாடுகள் குறித்த கற்பிதங்களின் வழியாகவும் தலைவியர்க்கு தன்னுயிர் நீக்கும் அறம் போதிக்கப்பட்டுள்ளதை இப்பாடல் உணர்த்துகிறது.
கணவன் மறைவுக்குப் பின்னர், சான்றோர் முன்னிலையில் தீவலம் வந்து எரிபுகுந்து உயிர் நீத்தலாகிய உடன்கட்டை ஏறுதலெனும் இடைக்கற்பு நிலையைப் புறநானூற்றின் மூன்று பாடல்களின் வழியாக அறிய முடிகிறது. வேணாட்டுத் தலைவனான ஆய் அண்டிரன் இறந்தவுடன் அவனுடைய உரிமை மகளிர் (மனைவியர்) உடன்கட்டையேறி இறந்ததாகக் குட்டுவன் கீரனார் பாடலில் (புறம். 240) குறிப்பு காணப்படுகிறது.2
பூதப்பாண்டியன் இறந்தவுடன் அவன் மனைவி பெருங்கோப்பெண்டு சான்றோர் முன்னிலையில் தீப்பாய்ந்து உயிர் விடுகிறாள். அதற்கு முன்பாக அவள் வாய்மொழிந்து கூறியதாக உள்ள பாடலில் (புறம். 246) இடைக்கற்பு நிலை போற்றப்படுகிறது. அவள் தீப்பாய்ந்து உயிர் விட்ட போது அக்காட்சியை நேரில் கண்டவராகிய மதுரைப் பேரலவாயர் சொல்லியதாகவும் ஒரு பாடல் (புறம். 247) இடம் பெற்றுள்ளது.
இப்பாடற் செய்திகள் யாவும், கணவன் மறைவுக்குப் பின்னர் மனைவி தன்னுடைய சீரிய கற்பு நெறியை உயிர் விடுதல் மூலம் உலகிற்குப் பறைசாற்றிச் செ(õ)ல்வதே தலையாய அறம் என்று நிறுவப்பட்டிருந்த நிலையைத் தெரிவிக்கின்றன. தன்னுடைய இறப்பை மனம் விழைந்து ஏற்றுக்கொள்ளுதல் எனும் நிலை நோக்கிப் பெண்ணின் உளவியலைச் செலுத்துவதிலும், உயிர் நீக்கும் வினைக்கு அவளைத் தயார்ப் படுத்துவதிலும் பண்பாடு சில கூறுகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. அவற்றுள் முக்கியமானவை கைம்மை நோன்பும், மறுமை நம்பிக்கையும்.
கைம்மை நோன்பு:
கணவனின் இறப்புக்குப் பின்னர் மனைவி கைம்மை நோன்பிருக்கும் நிலை மூன்றாம் நிலைக் கற்பாக வலியுறுத்தப்படுகிறது. முதலிரு கற்பு நிலைகளும் மகளிருக்கு உயிர் விடுதல் எனும் தீர்வைப் பரிந்துரை செய்யும் நிலையில், இம்மூன்றாம் நிலைக்கற்பு அவர்களுக்கு உயிர் வாழ்தல் எனும் தீர்வைப் பரிந்துரைக்கிறது. ஆனால் உயிர் விடுதல் எனும் முதலிரண்டு கற்புநெறி நோக்கி கணவனை இழந்த பெண்ணின் மனத்தைச் செலுத்துவதில் இம்மூன்றாம் நிலைக் கற்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
புறநானூற்றில் கைம்மை நோன்பு குறித்தச் செய்திகள் பல பாடல்களில் (பு<றம். 143, 248, 249, 250) இடம் பெற்றுள்ளன. இப்பாடற் செய்திகளின் வழியாக கைம்மை நோன்பிருந்த மகளிரின் இழிநிலை அறியப்படுகிறது. ‘கைம்பெண்கள் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. இவர்கள் தண்ணீர்ச் சோற்றைப் பிழிந்து எடுத்துக் கொண்டு, அரைந்த எள்ளையும், புளியையும் கூட்டி வெந்த வேளைக் கீரையுடன் உண்பர். மற்றும் இவர்கள் பாய்மேல் படுக்காமல் வெறுந்தரையின் மேல் படுப்பார்கள். தலையை மழித்துக் கொள்வர்’ என்று அக்காலத்திய கைம்பெண்களின் நிலையைக் குறிப்பிடுகிறார் கே.கே.பிள்ளை.3
இதில் தலையை மழித்துக் கொள்ளும் வழக்கம், கணவனுக்குப் பின்னர் தனித்தோ, வேறு ஆடவரைச் சார்ந்து நின்றோ பொருளாதாரத் தன்னிறைவடைவதைத் தடுக்கும் நோக்கில் அவளது தோற்றப் பொலிவைக் குலைக்கும் ஒரு பண்பாட்டுக் கூறாகக் கருதலாம்.
கணவனுடைய மறைவுக்குப் பின்னர் கைம்மை நோன்பிருந்து பெரும் அவல நிலையில் உயிர்ப்பற்று உயிர் வாழும் நிலைக்கு அஞ்சி, அதனை விட முதலிரு கற்பு நெறிகளைத் தேர்வு செய்து தன்னுடைய உயர்ந்த கற்பு நெறியை நிறைவேற்றிப் புகழுடன் இறந்துபடுவதே மேல் என்னும் மனநிலை உயர்குடிப் பெண்கள் மனத்தில் உருவாக்கப்பட்டது. இந்த உளநிலையைக் கட்டமைப்பதில் கைம்மை நோன்பு எனும் பண்பாட்டுக் கூறு முக்கியப் பங்கு வகிக்கிறது.
மறுமை: ஆசைத் தூண்டல்கள்:
சங்ககால மக்கள் இறப்புக்குப் பின்னரும் வாழ்வு தொடருவதாக மறுமைக் கோட்பாட்டினை நம்பினர். மறுபிறவி என்பது மட்டுமின்றி, சொர்க்கம், நரகம் போன்ற கருத்தமைவுகள் இம்மறுமைக் கோட்பாட்டிலிருந்து பிறந்தவையே. ‘அன்றைய தமிழர்கள் இறப்பை வாழ்க்கையின் முடிப்பாகக் கருதவில்லை. இறப்பு என்பது அடுத்த உலகத்தின் பயணம் என்று நம்பினர்’4. அக்காலத்தில் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த சமணம், பவுத்தம் மற்றும் வைதிக சமயங்களும் மறுமைக் கோட்பாட்டை ஆதரிப்பவை. பெண்கள் மனத்தில் கற்புக் கோட்பாட்டை நிறுவுவதற்கு இந்த மறுமை குறித்த கற்பிதங்களும் பங்காற்றின.
கணவன் இறந்த பின்னர் பெண்கள் மேற்கொள்ளும் கற்பு நெறி சார்ந்த செயல்பாடுகளை வைத்தே அவளுடைய மறுமை வாழ்வு அமையும் என்பதான கருத்துகள் பரவலாக்கப்பட்டிருந்தன. கணவன் இறந்ததும் உடன் உயிர் விட்டோ அல்லது உடன்கட்டை ஏறியோ தன் கற்பு நெறியைப் பேணும் மகளிர் கணவனுடன் தேவருலகத்தை அடைவர் என்ற கருத்து உருவாக்கப்பட்டிருந்தது. அவ்வாறு உயிர்விடாது கைம்மை நோன்பு நோற்று கற்புநெறி பேணும் பெண்களுக்கும் மறுபிறப்பில் பலன்கள் உண்டு. அவர்கள் அடுத்த பிறவியில் மீண்டும் தத்தம் கணவரையே அடைந்து இன்புற்று வாழ்வர் என்று கூறப்பட்டது.
அன்பரோடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர் என்று மணிமேகலை இதனைக் கூறுகிறது. இம்மை மட்டுமின்றி மறுமையிலும் தத்தம் கணவருடனேயே உடனுறைந்து வாழ விரும்பும் சங்கப் பெண்களின் மனநிலை ஒரு குறுந்தொகைப் பாடலில் வெளிப்படுகிறது.


‘இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே’
-அம்மூவனார் (குறுந். 49)
இந்த உளநிலையைக் கற்புநெறி உருவாக்கத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கணவன் இறந்ததும் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் சாவு விழைவு மனநிலையைப் பெண்களிடத்தில் உருவாக்கியது ஆண் மையச் சமூகம்.
நிறைபு:
பெண்ணின் பொருளாதாரச் சுதந்திரத்தை முடக்கும் நோக்குடன் கற்பு நெறியைக் கட்டமைப்புச் செய்து வலுப்படுத்தியது ஆண் மையச் சமூகம். சங்ககாலச் சமூகத்தில் பெண்களின் கற்பொழுக்கம் ஆணின் சாவையொட்டியே வெளிப்படும் விதமாக கருத்தாக்கம் செய்யப்பட்டிருந்தது. இது கணவனுக்குப் பின்னர் மனைவியின் வாழ்தல் சுதந்திரத்தை மறுக்கும் நோக்கிலானது. இதனடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு போன்ற கருத்துகளை உள்ளடக்கிய கற்புக் கோட்பாடு கணவன் இறந்ததும், மனைவியின் மனத்தில் சாவை நாடும் மனநிலையை உருவாக்குவதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளது. அவ்வாறு உயிரை விடப் பரிந்துரைக்கும் முதலிரு கற்பு நெறியைப் பின்பற்றாமல், மூன்றாம் நெறியைப் பின்பற்றும் பெண்களுக்கு கைம்மை நோன்பு எனும் இழிநிலை காத்திருந்தது. இந்த அவல வாழ்வு நிலையும் முதலிரு கற்பு நெறி நோக்கி பெண்களின் உள்ளத்தைச் செலுத்தியது. கற்பு நெறி தவறாமல் தன் கடமைகளைச் செம்மையாகச் செய்யும் பெண்கள் மறுமையில் பெரும் பலன்களை அடைவர் என்றும் நம்பவைக்கப்பட்டதன் மூலம் கற்புக் கோட்பாடு வலுப்படுத்தப்பட்டு ஆணின் மறைவுக்குப் பின்னர் சாவை நாடும் பெண்ணின் மனநிலை உருவாக்கப்பட்டது.

குறிப்புகள்:
1. பிரடெரிக் ஏங்கெல்ஸ், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், அயல்மொழிப் பதிப்பகம், மாஸ்கோ, பக்.129.
2. குட்டுவன் கீரனார் பாடிய இப்பாடலில் ‘கோடேந்தல்குற் குறுந்தொடி மகளிரொடு’ ஆய் அண்டிரன் தேவருலகத்தை அடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அவ்வுரிமை மகளிர் உடன்கட்டையேறி உயிர் விட்டனரா அல்லது உடனுயிர் மாய்ந்து உயிர்விட்டனரா எனத் தெளிவாக அறிய முடியவில்லை. ஆய் அண்டிரனின் உடம்பு எரிபடும் ஈமத்தீயில் விழுந்து உயிர் நீத்ததாக அவ்வை சு.துரைசாமிப்பிள்ளை தன்னுடைய உரையில் குறிப்பிடுகிறார். புறநானூறு (இரண்டாம் பகுதி), கழக வெளியீடு, திருநெல்வேலி, 1972, பக்.89.
3. கே.கே.பிள்ளை, பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் சமூக வரலாறு, பல்கலைப் பழந்தமிழ் (பதிப்பாசிரியர்: ந.சஞ்சீவி), சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு, 1974, பக்.100.
4. க.ப.அறவாணன், தமிழ் இலக்கியச் சமூகவியல், தமிழ்க் கோட்டம், புதுச்சேரி, 1972, பக்.71.
ganeshebi
ganeshebi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 1
Points : 3
Join date : 14/02/2012
Age : 47
Location : Madurai

Back to top Go down

சங்க காலப் பெண்களின் சாவு விழைவு Empty Re: சங்க காலப் பெண்களின் சாவு விழைவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 14, 2012 7:59 pm

கட்டுரை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சங்க காலப் பெண்களின் சாவு விழைவு Empty Re: சங்க காலப் பெண்களின் சாவு விழைவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 14, 2012 9:46 pm

பயனுள்ள இலக்கியக் கட்டுரை

பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சங்க காலப் பெண்களின் சாவு விழைவு Empty Re: சங்க காலப் பெண்களின் சாவு விழைவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum