தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க...
2 posters
Page 1 of 1
வியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க...
If you were just intent on killing people you could do better with a bomb made of agricultural fertilizer. -Ian Hacking
நகரத்தின் புழுதிகளை சுமந்து சுமந்து என் கைகளும், முகமும் எங்கள் கிராமத்து வயல்களில் வேலை பார்த்த மகளீரின் கரங்கள் போல் ஆகிவிட்டன. அன்றாடம் இரு சக்கர வாகனத்தில் சென்னை வீதிகளில் சர்க்கஸ் பழகும் அத்தனை பேருக்கும் இப்படித்தான் ஆகிவிட்டது, அதுவும் மழைவிட்ட மறுநாள் அடிக்கும் வெயிலில் கிளம்பும் புழுதி இலவசமாய் எங்கள் தலைகளுக்கு டை அடித்துவிட்டுப்போகும், அதனால் ஷாம்பூ கம்பெனிகள்தாம் வாழ்கின்றன. சமீபத்தில் என் நண்பன் விக்கிரவாண்டி அருகே ஒரு அரைகிரவுண்டு வாங்கப்போவதாக சொன்னான். அங்க வாங்கி என்னடா பண்ணுவே என்றேன். சும்மா ஒரு முதலீடு செஞ்சு வைக்கத்தான் என்றான். நான் ஊருக்கு போகிறபோதெல்லாம் செங்கல்பட்டு தாண்டியபின் இரு புறமும் சவுக்கு காடுகளையும், திண்டிவனம் தாண்டியபின் முந்திரிக்காடுகளையும், சேத்தியாதோப்பு தாண்டியபின் பசேலென நெற்பயிர்களையும் பார்ப்பேன், பகலில் பயணம் செய்யும்போது இதனை வழிநெடுக பார்க்கையில் மனதிற்கு இதமாக இருக்கும். ஆனால் கடந்த இருபது வருடத்தில் மெல்ல பொலிவிழந்து பொட்டல் காடுகளாய் கற்தூண்கள் நட்டுவைக்கப்பட்டு வீட்டுமனைகள் ஆக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலும் நகர வாசிகள் தங்கள் முதல் முதலீடுகளை தங்கத்திலும், அதற்கடுத்த முதலீடுகளையும் வீட்டுமனைகளிளும்தான் போடுகிறார்கள். தங்கம் அதன் விலையில் பல மடங்கு ஆகிவிட்ட நிலையிலும், அதன் ஸ்திரத்தன்மை என்பது கேள்விக்குறிதான்,காரணம் சமீபத்தில் மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கத்தை தூக்கப்போவதாக சொன்னதும், அதன் விலை கிராமுக்கு Rs.1200 க்கு வந்துவிடும் என வியாபாரிகள் சொன்னதை நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் நிலம் அப்படி அல்ல போட்ட காசுக்கு மேல் கண்டிப்பாக கிடைக்கும். காரணம் ஒரு நிலம்போல் மற்றொரு நிலத்தை நாம் உருவாக்கவே முடியாது.
ஒரு காலத்தில் எங்கள் ஊரில் சர்க்கரை வள்ளிகிழங்கு விளைவித்து அதனை வண்டி கட்டி பக்கத்து ஊர்களில் எடுத்து சென்று விற்ப்பார்கள். நெல்லை வாங்கிக்கொண்டு கிழங்கை தருவார்கள், பின்னர் சிங்கப்பூர் சம்பாத்தியம் அதனை நிறுத்திவிட்டது. படிப்படியாக எல்லா நிலங்களிலும் தென்னை மரம் நடப்பட்டு விட்டது. இதனால் தற்போது நாடு திரும்பிவிட்ட எங்கள் ஊர்க்காரர்கள் பாலங்களில் அரட்டைகச்சேரிகளும்,மாலையானால் டாஸ்மாக் பார்களிலும் பொழுதை கழிக்கிறார்கள். மற்றவர்களும் தங்கள் வயல்களை குத்தகைக்கு விட்டுவிட்டு நகரங்களுக்கு நகர்ந்துவிடார்கள். நான் உட்பட, நானும் விவசாயத்தை மறந்து தொழிலதிபர் கனவுக்கு மாறி, நிரந்தரமாக சென்னைவாசியாகிவிட்டேன், ஆனால் தற்போது வியாபாரம் பற்றிய விசயங்களை தேடித்தேடி படிக்க படிக்க இனி இந்த உலகின் நடக்கபோகும் அடுத்த புரட்சி என்பது, தண்ணீருக்கும், உணவுக்கும் நாம் கொடுக்கபோகும் விலைதான். நீங்கள் கவனமாக பார்த்தீர்கள் என்றால் எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்புக்கு நாம் செலவிட்ட தொகை இன்றைய கணக்கில் பைசாக்களாக குறைந்துவிட்டது. ஆனால் இன்றைக்கு ஒரு கிலோ சர்க்கரை விலை எக்கச்சக்கமாக ஏறி விட்டது. இதற்க்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று பணவீக்க விகிதம், இன்னொன்று உணவுப் பொருட்களையும் ஆன்லைன் வர்த்தகத்துள் கொண்டுவந்தது. சர்க்கரை மட்டுமன்றி ஒவ்வொரு மாதமும் நம் வீட்டிற்க்கு வாங்கிகொண்டிருக்கும் மளிகை பொருட்களின் விலை அதிகமாகிகொண்டே வருவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
நம் உணவுத்தேவை என்பது மிகுந்துவிட்டது, ஆனால் உற்பத்தியோ குறைந்துகொண்டே வருகிறது. இதற்க்கு முக்கியமான காரணம் எல்லா விளைநிலங்களும் இன்றைக்கு மொத்தமாக அரசியல்வாதிகளின் கைக்கு மாறிவருகிறது. இன்னும் நில உச்சவரம்பு சட்டம் உயிரோடு இருக்கிறது. ஆனால் எல்லா அரசியல்வாதிக்கும் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வளைக்கபட்டுவிட்டன. விவசாயிகளும் அதிக விலை கிடைக்கிறதே என தங்கள் நிலங்களை விற்றுவிட்டார்கள். சமீபத்தில் மானாமதுரைக்கு போயிருந்தேன் அங்கு ஒரு வட இந்திய சேட்டிடம் ஆயிரத்து முந்நூறு ஏக்கர் நிலங்கள் கைவசம் வைத்திருப்பதாக சொன்னார். அவர் ஒரு சென்ட் நிலத்தை ஐம்பது ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். இப்பொது சென்ட் ஐந்நூறுக்கு விற்க தயாராக இருப்பதாக சொன்னார். நான் இடத்தை சென்று பார்வையிட்டேன், அருமையான விளைநிலம் ஆனால் ஆண்டுக்கணக்காக அவை விவசாயம் செய்யபடாமல் இருந்தது. அதற்கான காரணத்தை விசாரித்த போது அங்கு வசிக்கும் மக்கள் மிக சொற்பம், அவர்களுக்கான தேவைகளும் மிக குறைவு அதனால் சும்மா கிடக்கும் நிலம்தானே என விற்றுவிட்டு நகைகள் வாங்கிவிட்டனர்.
ஆனால் இவர்களுக்கு போதுமான வழிப்புணர்வு இருந்தால் அந்த நிலத்தை விற்றிருக்கமாட்டார்கள். அமெரிக்காவில் ஐநூறு ஏக்கர் நிலத்தை மூன்று பேர் மட்டுமே உள்ள குடும்பத்தினர் நிர்வாகிப்பார், காரணம் அவர்களுக்கு கிடைக்கபெற்ற அரசு மானியங்களும், கடனில் கொடுக்கப்பட்ட விவசாய எந்திரங்களும், ஆனால் குடும்பத்தில் ஐந்து பேருக்கு மேல் இருக்கும் நம் ஆட்கள் வெறும் ஐந்து ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என புலம்புவார்கள். ஒரு காலத்தில் முறையாக கூட்டு விவசாயம் செய்த முன்னோர்கள் கொண்ட பரம்பரை கால மாற்றத்தில் வயலில் இறங்காமலே சாப்பிட நினைப்பதால்தான் இந்த நிலைமை. கூட்டு விவசாயம் என்பது ஒரு குழுவாக சேர்ந்துகொண்டு ஒருவர் வயலில் மற்றவர்கள் வேலை செய்து கொடுப்பது. இப்போதோ ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை (தஞ்சை, நாகை, திருவாரூர்) எடுத்துகொண்டால் ஒரே நேரத்தில் அத்தனை பேரும் ஒரே பயிரை விவசாயம் செய்வார்கள். பின் ஆட்கள் எப்படி கிடைப்பார்கள். அதிலும் இலவச மின்சாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள். அதிலும் ஒழுங்காக பட்டம் பார்த்து விதைக்காமல் பருவ மாற்றங்களில் சிக்கி நிவாரண நிதி கேட்டு அரசிடம் கையேந்துவார்கள். அரசு ஒதுக்கிய தொகையை கிராம நிர்வாக அதிகாரி, கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் பங்கிட்ட பிறகு கிடைக்கும் மிச்சத்தை வாங்கி சரக்கடிச்சுட்டு உலக அரசியல் பேசுவார்கள்.
உங்களுக்கு விவசாய ஆர்வம் இருந்தால் விவசாயம் செய்ய வாருங்கள், நம் மரபு விதைகளை பயன்படுத்தி முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்யுங்கள். நம்மிடம் இருந்த அற்புதமான விதைகளை நாம் இணைந்து மீண்டும் உருவாக்கி ஒரு புதிய புரட்சியை செய்வோம். எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற ஏமாற்றுக்காரர்களின் முகமூடியை கிழிப்போம். நம்மாழ்வார் போன்ற சமூக சிந்தனையாளர்களின் வழி நடந்து தரமான, ஆரோக்கியமான உணவுப் பொருட்களை விளைய வைப்போம். குறைந்த தண்ணீரை பயன்படுத்தி ஏக காலத்தில் நிறைய உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் முறைகளை அநேக விவசாய ஆர்வலர்கள் இலவசமாக நமக்கு சொல்லித்தருகிறார்கள். எங்கோ ஒரு நாட்டில் பிறந்து புதுச்சேரியில் இருக்கும் ஆரோவில்லில் குடிவந்து நம் மரபு விதைகளை பாதுகாக்கும் வெளிநாட்டவர்கள் பற்றிய கட்டுரை ஒன்று சமீபத்திய விகடன் தீபாவளி மலரில் வந்துள்ளது.மேலும் விகடன் வெளியீடான "பசுமை விகடன்" முழுக்க முழுக்க இயற்க்கை விவசாயத்தை பற்றி மட்டும் கட்டுரைகள் கொண்ட தமிழின் தலை சிறந்த இதழ். அதனை நாம் தொடர்ச்சியாக வாசித்து வந்தாலே நமக்குள் விவசாய ஆர்வம் ஊற்றெடுக்கும். இன்னும் சில வருடங்களில் நானும் முழுநேர விவசாயியாக மாறுவேன். நீங்களும் மாற ஆயத்தமாகுங்கள். கரங்களை இணைத்துகொள்வோம்.
அடுத்த கட்டுரையில் விவசாயம் எந்ததெந்த வகையில் நமக்கு லாபகரமாக இருக்கும் என்பதனைப்பற்றி எழுதுகிறேன்

krpsenthil- புதிய மொட்டு
- Posts : 2
Points : 6
Join date : 20/11/2010
Re: வியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க...
விவசாயத்தைப் பற்றி அறிய தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» புன்னகை செய்யலாம் வாங்க...!
» தேனீக்களை மறந்ததால் குறைந்து வரும் விவசாயம்
» விவசாயம் செழிக்க விரைவான நடவடிக்கை : நம்மாழ்வார்.
» விவசாயம்..
» விஞ்ஞானம் வளர்ந்தது, விவசாயம் தேய்ந்தது..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum