தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
என்றும் இனிமை இளமை எஸ்.பி.பி
2 posters
Page 1 of 1
என்றும் இனிமை இளமை எஸ்.பி.பி
[You must be registered and logged in to see this link.]
வளரும் திரையிசை பாடகர் திரு. யூ,கே.முரளி
என்றும் இனிமை இளமை எஸ்.பி.பி கோவை இசை நிகழ்ச்சி
மூன்று வருடங்களூக்கு பிறகு (பாலுஜியின் இனிமை இளமை எஸ்.பி.பி இன்னிசை நிகழ்ச்சி சென்ற சனிக்கிழமையன்று (11.02.2012) மாலை 6 மணிக்கு கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் அமர்க்களத்துடன் துவங்கியது. மதியம் 2.30 மணிக்கு கோவை வந்திறங்கிய பாலுஜி அவர்கள் நேராக ஹோட்டலுக்கு சென்றார். அன்று மாலை 5 மணிக்கு நானும் கோவை
கோபாலகிருஷ்னன் மற்றும் கீதா நாராயணன் அவர்களும் ஹோட்டலில் சில மணித்துளிகள் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது நிகழ்ச்சிக்கு புறப்படும் அந்த நேரத்திலும் அவரின் நெருங்கிய நண்பர்களின் ரசிகர்கள் அவரை பார்க்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் பார்த்து விட்டு சென்ற பிறகு அவரை பார்க்க சென்றோம். அவரைப் பார்த்ததும் (எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே)
உடம்பு பாதியாக குறைத்திருந்தார் கிட்டத்தட்ட 45 கிலோ குறைத்திருப்பார் என்று தெரிகிறது. நிகழ்ச்சிக்கு செல்ல வெகு நேரமாகி விட்டபடியால் மரியாதை நிமித்தமாக (அரசியல் வாதிகள் தான் இந்த வார்த்தை உபயோகிக்க வேண்டுமா நாங்களூம் சமயம் வரும் போது யோசிப்போம்ல. அதிக நேரம் பேச வாய்ப்பில்லையாதலால் இப்படி ஒரு பில்டப் ஹி..ஹி..ஹி..) ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு. திரு.நாராயணன் சார் அவர்களின் கையில் இருந்த கேமிராவை பார்த்ததும் வழக்கம் போல் அவரே போட்டோ எடுக்க வேண்டுமா என்று கேட்டு விட்டு எங்களூடன் நின்று எடுத்துக்கொண்டது மறக்க முடியாது. சீக்கிரம் நிகழ்ச்சிக்கு செல்லுங்கள் நான் காரில் வேகமாக சென்றுவிடுவேன் என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
இசை நிகழ்ச்சி சரியாக 6.00 மணிக்கு துவங்கியதும் துவக்கத்தில் இசைக்குழுவின் உரிமையாளர் திரு.யூகே.முரளி அவர்கள் தன் இசைக்குழுவினருடன் பாடல்களை பாட துவங்கிவிட்டார் பாலுஜி மேடைக்கு செல்லும் போது
நேரம் கிட்டத்தட்ட 7 மணியை நெருங்கியிருக்கும் என்று நினைவு. பாலுஜி பாடத்துவங்கும் முன் ரசிகர்களுக்கு ஒரு தெலுங்கு படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்காக இப்படி ஒரு கெட்டப் என்றும் அந்த காலத்தில் ஹீரோக்கள்
ஷேவிங் செய்து கொண்டு பளபளவென்று இருப்பார்கள் இப்போ வரும் ஹீரோக்கள் தாடியுடன் வருகிறார்கள் என்று சொல்லி இதுவும் நல்லா தான் இருக்கு என்று தனக்கு தானே ஒரு சாமாதனத்தையும் ரசிகர்களையும் சிரிக்கவைத்தார்.
முத்துமணி மாலை என்ற பாடலை துவங்கினார் முதல் பாடலிலே பல்லவி முடிந்ததும் சடாரென்று நிறுத்தி விட்டு தபேலாவில் சுதி குறையுது சரிபார்க்க சொல்லி விட்டு துவங்கினார். ஏன் நிறுத்தினேன் என்ற காரணத்தையும் சொன்னார் மேல் கூரை இல்லாத மேடையாதலால் வாத்தியங்களில் அவ்வப்போது சுதி ஏறும் குறையும் இது வாத்தியாக்காரகளுக்கு மிகவும் சிரமத்தை தரும் செயல். ஆகையால், நான் பாடலை நிறுத்தியது வாத்தியக்காரகள் செய்த தவறு அல்ல காலநிலை தவறு என்று தபேலா வாத்தியாகாரரிடம் மன்னிப்பு கேட்டுகொண்டு பாடலை தொடர்ந்தார். இது போன்று இப்படி வரிசையாக பாடல்கள் (பாடல் பட்டியல் கீழே) பாடி நடு நடுவே அவரின் வழக்கமான உரையாடல்களூடன் நிகழ்ச்சி ஸ்வாரசியமாகவும்
ரசிக்கும் படியாகவும் இருந்தது. இடையில் சிங்காரி சரக்கு பாடல் பாடிவிட்டு இசை கலைஞர்களை பார்த்து யாரும் பயப்படாதீங்கப்பா நான் ஸ்டடியாக தான் இருக்கிறேன் என்று குடி பாஷையில் சொல்லிவிட்டு. யாரும் தொழில் சமயத்தில் குடி பழக்கம் வேண்டாம் அப்படி இருந்தால் அந்த தொழில் இரண்டு நாட்களூக்கு தான் தாங்கும் என்று அறிவுரையும் சொல்லிவைத்தார். அதையும் ரசிகர்கள் குதுகலத்துடன் கைதட்டி ரசித்தார்கள் குடிப்பாட்டை பாலுஜி குரலில் நேரடியாக கேட்க கொடுத்து வைக்கவேண்டும் எவ்வளவு நாளாயிற்று யப்பா.
நிகழ்ச்சியின் இடையில் பாலுஜி ரசிகர்களின் சாரிட்டி பவுண்டேசன் குழுவினர் திரு.கார்த்திக், நாமக்கல், கோவை கவுண்டம்பாளையம் திரு.விஸ்வநாதன் ஆகியோரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
பாலுஜி நிகழ்ச்சிகளில் எப்போதும் அந்தந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமான பாடல்களை கடைசியில் கண்டிப்பாக பாடுவார். ரசிகர்களூம் அடிக்கடி யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாடுங்க என்று குரல் கொடுத்ததை அவர் கவனித்துகொண்டு இருந்தார். அதுபோல், அந்த பாடலை மிகவும் அவருக்கே உரித்த பாணியில் யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாடலை நிகழ்ச்சியின் இறுதியில் பாடினார். நடுவிலே பாடினால் பாதி கூட்டம் எழுந்து போய்விடும் என்பது அவருக்கும் தெரியும். கிட்டத்தட்ட 11 பாடல்களுக்கு மேல் பாடியிருப்பார். இடையிடையே யு.கே.முரளி அவர்களின் குழுவின் பாடகர்கள் பாடிய பாடல்கள் இறுதியிலும் அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். பாலுஜி சென்ற பிறகு நான் சென்று விட்டேன்.
எப்போதும் பேஸ்புக் சாட் பாக்சில் ஆன்லைனில் இருக்கும் திரு.யு.கே.முரளி அவர்கள் எனக்கு நண்பரானதால் அவரை சந்திக்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. மேடையிலும் அவர் சில பாடல்களை இனிமையாக பாடினார் அவருக்கு மிகவும் பிடித்த இதயம் ஒரு கோவில் பாடலை மேடையை விட்டு கீழே இறங்கியும் ரசிகர்களுடன் பாடினார். அப்போதும் நான் இருந்த பக்கம் வரவில்லை. இசைக்குழுவினர் மிகவும் நன்றாகவே வாசித்தனர். பாலுஜி கிளம்பும் நேரத்தில் பாலுஜி பாடிய ஒரு பாடலை பாடினார் அப்போது வழக்கம் போல் ரசிகர்கள் மேடையிலே போட்டோ எடுக்க அவரை சுற்றி் கூட்டம் சேர்ந்து விட்டது. அந்த கூட்டத்தை பார்த்ததும் பாடியபடியே மிகவும் டென்சன் ஆகிவிட்டு பாடலை பாதியில் நிறுத்திவிட்டு மேடை அமைப்பாளரை எல்லோரையும் யார்
உள்ளே விட்டது என்று சத்தம்போட்டு விட்டு பாடலை தொடங்கினார். பாலுஜிக்கு இதுவெல்லாம் மிகவும் சகஜம் எத்தனை மேடையில் பார்த்திருப்பார். என்ன கூட்டத்தில் இருந்து தப்பி காரில் ஏறுவதற்கு தான் மிகவும் சிரமம்.
நிகழ்ச்சியின் பாடல்களை என் அலைபேசியில் பதிவு செய்தேன் சரியாக வரவில்லை கூட இருந்த கல்லூரி மாணவர்கள் கூட்டத்தின் கூச்சலில் பதிவு செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது இங்கே வழங்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. இருந்தாலும் என்ன இதோ இதே தளத்தில் முன்னமே வந்த நிகழ்ச்சியில் பாடிய பாட்டுகளின் பட்டியல் சுட்டிகளை தகவல்களுடன் படித்து ஒரிஜனலாக கேளூங்கள். உங்களூக்மு 90சதவீதம் நிகழ்ச்சி கேட்ட உணர்வு ஏற்படும் என்று நினைக்கிறேன்

மொத்தத்தில் நிகழ்ச்சி தலைப்பைப்போல் என்றும் இனிமை இளமை எஸ்.பி.பி போலவே அவரின் குரலும் இன்னும் மெருகேற்றியது போல் ( குறிப்பாக உச்சஸ்தாயில் இன்னும் பட்டையை கிளப்புகிறது ) அமர்க்களமாக இருக்கிறது. பாலுஜிக்கு கோவை ரசிகர்கள் சார்பாக சிறப்பான வாழ்த்துக்கள்.
அடெங்கப்பா எல்லா பாட்டுக்களின் சுட்டியும் கிடைத்து விட்டனவே இனி பாலுஜியின் பாடல்களை சந்தோசமாக இங்கேயே கேட்டுகலாம். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் அன்பர்களே.

Last edited by கோவை ரவி on Tue Feb 28, 2012 10:51 am; edited 2 times in total
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: என்றும் இனிமை இளமை எஸ்.பி.பி
பகிர்வுக்கு நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» என்றும் இளமை தரும் டெலோமியர் !!!
» இளமை இனிமை புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை : பேராசிரியர் இராமமூர்த்தி !
» இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் !
» இளமை இனிமை புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் : மு. வாசுகி !
» இளமை இனிமை புதுமை நூல் ஆசிரியர் கவிஞர் திரு.இரா.இரவி ! நூல் மதிப்புரை அ.அருள்மொழிவர்மன் (69) திருமங்கலம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum