தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” CHANNEL4முழுமையான காணொளி.

4 posters

Go down

தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” CHANNEL4முழுமையான காணொளி. Empty தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” CHANNEL4முழுமையான காணொளி.

Post by aarul Fri Mar 16, 2012 10:15 am

m

[You must be registered and logged in to see this image.]
லண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன்
பாலச்சந்திரன் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் அடங்கிய இரண்டாவது
வீடியோ தொகுப்பை, பிரிட்டனில் இயங்கி வரும் சேனல் 4 செய்தி நிறுவனம்,
நேற்று வெளியிட்டது. போர் விலக்களிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் மீது
நடந்த தாக்குதல்களை, இந்த வீடியோ அப்பட்டமாகக் காட்டுவதால், இலங்கைக்கு
மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின்,
19வது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், கடந்த 7ம் தேதி, இலங்கைக்கு
எதிரான தீர்மானத்தை, அமெரிக்கா கொண்டு வந்தது. 22 நாடுகள், இதற்கு
ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளன. இந்தத் தீர்மானத்தை முறியடிக்க, பல
முயற்சிகளை இலங்கை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே
அறிவித்தபடி, சேனல் 4 செய்தி நிறுவனம், "இலங்கையின் கொலைக் களங்கள்:
தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்ற தலைப்பிலான, இரண்டாவது வீடியோ
தொகுப்பை நேற்று வெளியிட்டது.

என்னென்ன காட்சிகள்? இந்த வீடியோ, போர் விலக்களிக்கப்பட்ட
பகுதியாக, இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் பகுதியின்
வரைபடத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, புதுமாத்தளன் பகுதியில் உள்ள
மருத்துவமனையில் குண்டுகள் வீசப்பட்ட பின் இருந்த நிலை, மக்கள் பாதுகாப்பான
இடங்களைத் தேடி, கூட்டம் கூட்டமாக செல்வது, குண்டு வீச்சில் குழந்தைகள்
பலியாகிக் கிடப்பது, அக்குழந்தைகளைப் பார்த்து பெற்றோர் கதறி அழுவது,
பிணங்களை அடுக்குவது என, கல் நெஞ்சையும் கரைய வைக்கும் காட்சிகள் இடம்
பெற்றுள்ளன.

உணவு, மருந்தின்றி பலியான அவலம்: அதேபோல், போர்
விலக்களிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மக்கள், உணவின்றி சாவின் விளம்பில்
துடிப்பது, தற்காலிக மருத்துவக் கூடங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும்
இன்றி, மருத்துவ சேவைகள் தொடர்வது போன்றவையும் காட்டப்பட்டுள்ளன. முள்ளி
வாய்க்கால் பகுதியை, போர் விலக்களிக்கப்பட்ட பகுதியாக அறிவித்த இலங்கை
அரசு, ராணுவத்தின், 55, 57, 58வது படைப் பிரிவுகளை படிப்படியாக உள்ளே
அனுப்பி, மக்களை வெளியே விரட்டியதையும், இந்த வீடியோ வெளிப்படுத்தியுள்ளது.

பிரபாகரன், பாலச்சந்திரன் மரணம்: வீடியோவின் மையப் பகுதியில்,
பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சுடப்பட்டுக் கிடப்பது, அவர் அருகில்,
அவரது பாதுகாவலர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டுக் கிடப்பது ஆகியவையும் இடம்
பெற்று உள்ளன. போரின் போது அங்கு இருந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என,
சிலரிடம் எடுக்கப்பட்ட பேட்டிகளும் இதில் உள்ளன. பிரபல தடயவியல் நிபுணர்
டெர்ரிக் பவுண்டர், பாலச்சந்திரன் மற்றும் பிரபாகரனின் சடலங்களின்
புகைப்படங்கள் மூலம், அவர்கள் எவ்விதம் கொல்லப்பட்டிருப்பர் என்பதை
விவரிக்கிறார். இந்தத் தொகுப்பில், பிரிட்டன் முன்னாள் வெளியுறவு அமைச்சரான
டேவிட் மிலிபேண்ட், ஐ.நா., மனிதாபிமான விவகாரங்களுக்கான முன்னாள் தலைவர்
சர் ஜான் ஹோம்ஸ், மனித உரிமைகள் வழக்கறிஞரும் போராளியுமான பேராசிரியர்
வில்லியம் சாபாஸ், இலங்கை பத்திரிகையாளர் அபயவர்த்தன ஆகியோர் பேசியுள்ளனர்.

டேவிட் மிலிபேண்ட் குற்றச்சாட்டு: இவர்களில், டேவிட்
மிலிபேண்டும், ஜான் ஹோம்சும், இலங்கை அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை
முன்வைக்கின்றனர். என்ன விலை கொடுத்தாவது, விடுதலைப் புலிகளை அழித்தே
தீருவது என்று, இலங்கை அரசு செயல்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
விடுதலைப் புலிகள் போர்க் குற்றங்கள் செய்திருந்தாலும் கூட, சட்டப்படி
அமைந்துள்ள ஓர் அரசு, அதே குற்றங்களை செய்வது எவ்விதத்தில் நியாயம்? எனக்
கேள்வி எழுப்பியுள்ளார் டேவிட் மிலிபேண்ட். போர் விலக்களிக்கப்பட்ட
பகுதியில் சிக்கிக் கொண்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு, உணவு, மருத்துவ
வசதிகள் வழங்கப்படாதது உள்ளிட்ட சில சம்பவங்களுக்கு, இலங்கை அரசு, ராணுவம்,
குறிப்பாக அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தான் காரணம் என,
வீடியோ குற்றம் சாட்டுகிறது. இந்த வீடியோவின் இறுதிப் பகுதியில், நேற்று
முன்தினம் வெளியான இலங்கை அரசின் மறுப்பு செய்தியும் இடம் பெற்றுள்ளது.

பிரபாகரன் மகன் கொல்லப்பட்ட காட்சி: "சேனல் 4' டிவி, வீடியோ காட்சியை சிறப்பு நிருபர் ஜான் ஸ்நோ தொகுத்து வழங்கினார்.

அதில் இடம் பெற்ற காட்சிகள்:

* போர் நடக்கும் நேரத்தில், இரண்டாவது மகன் பாலசந்திரன் (வயது 12)க்கு
ஐந்து பாதுகாவலர்களை பிரபாகரன் நியமித்திருந்தார். அந்த பாதுகாவலர்களையும்
அவரது மகனையும் ராணுவ வீரர்கள் சுற்றி வளைக்கின்றனர்.

* பாதுகாவலர்களின் உள்ளாடையை தவிர மற்றவை களையப்பட்டன.

* அவர்களின் கைகள் பின்னால் முறுக்கி கயிறால் கட்டப்பட்டு, கண்கள் துணியால் மூடப்பட்டன.

* சுற்றியிருந்த ராணுவ வீரர்களில் ஒருவர், அனைவரது பின் மண்டையிலும் துப்பாக்கியை வைத்து சுடுகிறார். அனைவரும் இறக்கின்றனர்.

* இந்த காட்சிகள் அனைத்தும், பாலச்சந்திரன் கண் எதிரிலேயே நடந்தது.

* இதை பார்க்கும் போதே அவனுக்கு தனது நிலை புரிந்து விட்டது.

* சுடப்பட்டு வீழ்ந்தவர்களை, ராணுவ வீரர்கள் "ஷூ' கால்களால் மிதிக்கின்றனர்.

* பாலச்சந்திரன் துப்பாக்கியால் சுடப்படுகிறான்.

* அவனது மார்புப் பகுதியை சுற்றி 5 குண்டுகள் பாய்ந்தன. அவன்
கொல்லப்படுவதற்கு முன் மன ரீதியான தொல்லைகளுக்கு தள்ளப்பட்டார் என லண்டன்
தடயவியல் நிபுணர் டெர்ரிக், ஆய்வறிக்கையில் தெரிவித்தார்.

இலங்கை மறுப்பு: சேனல் 4ன் புதிய வீடியோ தொகுப்பிற்கு
பதிலளிக்கும் வகையில், இலங்கை ராணுவ அமைச்சகம், தனது இணையதளத்தில், பல்வேறு
வீடியோக்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், "மனித
உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை, ராணுவம் நிராகரிக்கிறது.
அதேநேரம், விடுதலைப் புலிகள் தான் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்பதை
நிரூபிக்க, ராணுவத்திடம் ஆதாரங்கள் உள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணாவுக்கு வரவேற்பு: இலங்கை விவகாரம் குறித்து, நேற்று
முன்தினம் பார்லிமென்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா
அளித்த பதிலை வரவேற்றுள்ள இலங்கை அரசு, "தமிழகம் கொடுத்து வரும்
அழுத்தத்தின் அடிப்படையில், இந்தியாவின் நிலையை இலங்கை புரிந்து
கொண்டிருக்கிறது. அமைச்சரின் விளக்கத்தை, மதிப்புமிக்கதாகக் கருதுகிறது' என
கூறியுள்ளது.