தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கடவுளின் கடைசி கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை .நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி
2 posters
Page 1 of 1
கடவுளின் கடைசி கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை .நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி
கடவுளின் கடைசி கவிதை !
நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை
நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி
வனிதா பதிப்பகம் சென்னை .17. விலை ரூபாய் 45
நூலின் தலைப்பும் ,நூல் ஆசிரியர் பெயரும் ,அட்டைப்படமும் வித்தியாசமாக
உள்ளது .பாராட்டுக்கள் .முனைவர் நா .இளங்கோ அவர்களின் மதிப்புரை
முத்தாய்ப்பாக உள்ளது .துளிப்பாப் பாவலர் புதுவை சீனு .தமிழ்மணி அவர்களின் அணிந்துரை அழகுரை . நூல்
ஆசிரியர் கவிஞர் மாமதயானை என்னுரை எண்ணங்களின் சுருக்க உரை .ஹைக்கூ கவிதை
இன்று பரவலாக எல்லோராலும் அறியப்பட்டு ,வாசிக்கப்பட்டு, பாராட்டப்
படுகின்றது என்றால் அதற்கு புதுவை ஹைக்கூ கவிஞர்களும் ஒரு காரணம்
.புதுவையில் குடும்பத்தோடு ஹைக்கூ கவிதை எழுதி வருகின்றனர் .அந்த
வரிசையில் ஹைக்கூ கவிதையில் தடம் பதித்து உள்ளார் .நூல் ஆசிரியரின்
இயற்ப்பெயர் மணிகண்டன் .
நூலின் முதல் கவிதையே விடுதலையின் அவசியம் உணர்த்துவதாக உள்ளது .
கட்டுண்ட கரங்களில்
பாதுகாப்பாய் இருக்கிறது
விடுதலைப் பற்றிய கவிதை !
தந்தை கோபத்துடன் மகனை அடிக்கும் போது உடன் தாய் வந்து தடுக்கும் பாச
நிகழ்வு தினந்தோறும் நம் இல்லங்களில் காணும் நிகழ்வு. அதனை காட்சிப்
படுத்தும் கவிதை !
.
அப்பா என்னை
அடிக்கும் போதெல்லாம்
அம்மாவிற்கு வலிப்பதெப்படி ?
தள்ளாத முதுமை வந்தப் பின்னும் பதவியை உடும்புப் போல பிடித்துக்
கொண்டிருக்கும் மூத்த அரசியல்வாதிகளின் பதவி ஆசைஉணர்த்தும் கவிதை !
நாற்காலி ஆசை
யாரை விட்டது
நாற்காலியில் பொம்மை !
புலம் பெயர்ந்தவர்களின் மன வலியை மிகவும் நுட்பமாக சொற்ச்சிக்கனத்துடன் நன்கு அதிர்வு செய்துள்ளார் .
அகதிகள் முகாம்
அடிக்கடி வந்து வெறுப்பேற்றும்
மண்வாசனை !
நடிகைக்கு கோயில் கட்டி உலக அளவில் தமிழகத்திற்கு தலை குனிவைத் தந்தவர்கள் நம் ரசிகர்கள் .திரைப்பட ரசிகர்கள் தமிழகம் அளவிற்கு உலகில் எங்கும் காண முடியாது .நடிகரின் கட்அவுட்டிற்கு
மாலை போடுவார்கள் ,சூடம் காட்டுவார்கள் ,நடிகரை அவதாரம் என்பார்கள் ,பால்
அபிசேகம் செய்வார்கள் .எல்லாம் செய்து விட்டு .சொந்தப் பணத்தில் அதிக விலை
கொடுத்து சீட்டு வாங்கி திரை அரங்கின் உள்ளே செல்வர்கள் .இந்த இழி நிலையை
மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார் .
சொந்த வீடில்லாதவர்கள்
கட்டி முடித்தார்கள்
நடிகைக்கு கோயில் !
இயந்திரமயமான உலகில் இன்று வேகமாக காதல் ,வேகமாக திருமணம் ,மிக வேகமாக விவாகரத்து என்றாகி விட்டது .விவாகரத்து ஆனபோதும் பழைய நினைவுகள் மறப்பதில்லை .
தினமும் கனவில்
தோள் சாய்கிறாள்
விவாகரத்தான மனைவி !
பிறந்தது முதல் இறக்கும் வரை வடுவாக இருக்கும் சொல் அனாதை.இந்தச் சொலின் வலியை, சொற்களில் கூறி விட முடியாது .சம்மந்தப் பட்டவர்கள் மட்டும் உணரும் கொடிய வலி .குற்றம் எதுவும் செய்யாமல் வந்த பழிச் சொல் .
அன்னையும் பிதாவும்
படித்துக் கொண்டிருக்கிறது
அனாதைக் குழந்தை !
உழைப்பாளி உழைப்பாளியாகவே வாழ்கிறான் .எந்த நாளும் முதலாளி
ஆவதில்லை தொழிலாளியாகவே வாழ்க்கை முடிந்து விடுகின்றது. பணக்காரன் மேலும்
பணக்காரன் ஆகிறான் . ஏழை மேலும் ஏழை ஆகிறான் .கடின உழைப்பிற்கு ஈடு இல்லை
இல்லை என்று பொன்மொழி உள்ளது .கடின உழைப்பாளி கடின உழைப்பாளியாகவே வாழ்கிறான்.பெரிய முன்னேற்றம் வரவில்லை .
எத்தனை வீடு கட்டினாலும்
வாடகை வீட்டில்தான்
சித்தாள் !
கடவுளின் கடைசி கவிதை என்ற நூலின் தலைப்பிற்கும் பொருந்தும் கவிதை !
பரமனுக்கு தெரியாது
பாமரனுக்கு தெரியும்
பசியின் வலி !
வரதட்சணைக் கொடுமை நம் நாட்டில் ஒழிந்த பாடில்லை .பெண்ணைப் பெற்றவர்கள்
எல்லாம் தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே செல்வதுக் கண்டு வேதனையில்
உள்ளனர் .
பெண்ணிற்கு
தலை தீபாவளி
அப்பாவிற்கு தலைவலி !
எள்ளல் சுவையுடன் சென்ரியு,ஹைக்கூ ,லிமரைக்கூ மூன்று வடிவிலும் முத்தாய்ப்பாக கவிதை வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .
கவிதை புத்தகத்தில்
கடைசி பக்கம் வரை தேடல்
கிடைக்கவில்லை கவிதை !
எள்ளல் சுவையுடன் சிந்தனை விதைக்கும் படைப்புகள் உள்ளது .
எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது
கருமியின் இல்லத்தில் திருட்டு !
வாழ்க்கையின் யதார்த்தத்தை நீதிமன்றங்களில் நடக்கும் நடைமுறை உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் .
நீதி மன்றத்தில்
முதல் பொய்
சொல்வதெல்லாம் உண்மை !
குறியீடாக சில கவிதை உள்ளது .இந்தக் கவிதைப் படித்ததும் என் நினைவிற்கு ஈழத்தமிழர் வந்தனர் .
நாளையாவது கிடைக்குமா
பூனைகள் தேசத்தில்
எலிகளுக்கு சுதந்திரம் !
நாகரீக உலகில் நகரத்தில் சிலர் குளிக்க விட்டாலும் வாசனை திரவியம் இட்டுச் செல்வதை கவனித்து ஒரு கவிதை எழுதி உள்ளார் .
வாசனை திரவியத்தை
மறக்கவில்லை
குளிக்க மறந்தவன் !
பகுத்தறிவு விதைக்கும் கவிதைகளும் நூலில் உள்ளது .
ஆயுதங்களுடன் இருந்தும்
திருடுபோனது
பத்திரகாளி சிலை !
அரசியலில் இன்றைய அவள் நிலையை தோலுரித்துக் காட்டும் துணிவு மிக்க ஹைக்கூ !
கள்ளச்சாராயம் விற்றவன்
அமைச்சரானதும் முதல் நிகழ்ச்சி
காந்தி சிலைத் திறப்பு !
மனம் குறித்து ஒரு கவிதை இதோ !
தெளிந்த நீரில்
முகம் பார்த்தபிறகும்
தெளியாத மனசு !
புகழ்ப் பெற்றப் புதுவை கவிஞர்கள் வரிசையில் இடம் பிடிக்கும் விதமாக படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கடவுளின் கனவு! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏ.எஸ். பிரான்சிஸ், நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கடவுளின் நிழல்கள் ! நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கடைசி விவசாயியின் மரண வாக்குமூலம்! ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வருகை பற்றிய அறிவிப்பு நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி .விமர்சனம் கவிஞர்இரா .இரவி
» கவிதை ஒளி! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum