தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உண்மையே பேசுங்கள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
2 posters
Page 1 of 1
உண்மையே பேசுங்கள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் : திரு.ச.மணிமொழி இளங்கோ
நூல் ஆசிரியரின் பெயர் காரணப் பெயராக இருக்க வேண்டும். மணியான மொழியில் இளங்கோவடிகள் போல வாழ்க்கைக்கு மிகவும் தேவையான உயர்ந்த பல கருத்துக்களை உள்ளடக்கிய நூல்.
உண்மையே பேசுங்கள் என்று நூலின் தலைப்பை படித்தவுடன் நம் நினைவிற்கு வருவது அரிச்சந்திரன் நாடகம். அதனைப் பார்த்து வாய்மையை கடைபிடித்த காந்தியடிகளும் தான். உண்மையின் மேன்மையே விளக்கும் நூல்.
உலகப் பொதுமறை படைத்த ஒப்பற்ற திருவள்ளுவரின் இரண்டு திருக்குறளுடன் முன்னுரை தொடங்குகின்றது.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்.
நீங்கள் பல நூல்களை ஆராய்ந்து படித்தாலும், எவ்வளவு விளக்கமாகப் படித்தாலும், எந்த அளவு உண்மையைக் கடைபிடித்து வாழ்கிறீர்களோ அந்த அறிவாகிய உண்மையே உங்களுடன் இருக்கும். அதைத் தவிர வேறு எந்த அறிவும் நிச்சியமாக உங்கள் வாழ்வில் வளம் தராது. ஆகவே உண்மையை நம் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் கடைபிடிக்க முடியும் என்பதை விளக்குவதற்காக இந்நூல் எழுதப்பட்டது என்கிறார் நூல் ஆசிரியர்.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
அதாவது நம்மைப் பெற்ற தாய் பசியால் துடித்துக் கொண்டு இருந்தாலும், சான்றோர் பழிக்கக் கூடிய செயல்களை செய்யக்கூடாது என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
தாய் பசித்து இருந்தால், பஞ்சமா பாதகம் செய்யலாம் என்கிறது வேதம். வேதங்களை எல்லாம் மிஞ்சும் வகையில் இந்தத் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் ஒரு தமிழன் என்பதற்காகவே உலகத்தமிழர் எல்லோரும் மார்தட்டிக் கொள்ளலாம்.
மதங்களில் சொன்னவை, அறிஞர்கள் சொன்னவை பொன்மொழிகளோடு தொடங்குகின்றது நூல்.
நூறு உத்தமபுத்திரர்களைப் பெறுவதை விட உண்மையைக் கடைபிடிப்பது சிறந்தது -மகாபாரதம்
உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசிர்வாதங்களைப் பெறுவான் -நீதிமொழிகள்
உண்மையே பேசு;அது மற்றவர்களுக்கு கசப்பாக இருந்தாலும் சரியே -நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள்
பொய்யை உண்மையால் வெல்லுங்கள் -திருமூலர்
உண்மையை அறிவதே தத்துவஞானம்-அரிஸ்டாட்டில்
உண்மையைப் புறக்கணிப்பவன் இறந்தவனுக்குச் சமமாகிறான் -அறிஞர்
இப்படி நூல் ஆசிரியர் பல்வேறு மத நூல்களையும், அறிஞர்களின் சித்தர்களின் பொன்மொழிகளையும் கற்ற அறிவு இருக்கின்ற காரணத்தால் உண்மையைப் பற்றி மிகப்பெரிய ஆராய்ச்சி கட்டுரையாக வடித்துள்ளார். நூலைப் படித்து முடித்தவுடன் உண்மையைப் பற்றிய மதிப்பு மேலும் மேலும் உயர்ந்து விடுகின்றது. உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் பண்பாட்டு சீரழிவு அரங்கேற்றமாகி வரும் இக்காலத்தில் அறநெறி போதிக்கும் இது போன்ற நூல்களை இளைய சமுதாயம் வாசித்து
உணர வேண்டும். வாழ்வியல் கருத்துக்களை விளக்கும் அற்புத நூல்.
உண்மை என்றால் என்ன ? என்ற கேள்விக்கு மிக எளிமையாகவும், இனிமையாகவும் விடை தந்துள்ளார். உண்மை என்பது மிகவும் சுலபமான நாம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று ஆகும். உண்மை என்பது பார்த்ததைப் பார்த்தப்படி கூறுதல், கேட்டதைக் கேட்டப்படி கூறுதல், பேசியதைப் பேசியபடி கூறுதல், நுகர்ந்ததை அப்படியே கூறுதல், உணர்ந்ததை (உடலால்) உணர்ந்தபடி கூறுதல்.
வாழ்வில் இதனைக் கடைபிடித்தால் நம் மதிப்பு உயரும் என்பது உண்மை. உண்மையே பேசி வருபவருக்கு மதிப்பு அதிகம். ஒரு முறை பொய் பேசி விட்டால் திரும்ப அவர் உண்மை பேசினாலும் நம்ப மறுப்பார்கள். அது தான் நடைமுறை உண்மை. நூற்றாண்டு கடந்த பின்னும் காந்தியடிகளை இந்த உலகம் போற்றக் காரணம் அவர் வாழ்வில் கடைபிடித்த நேர்மை, உண்மை தான்.
பொய்யின் வகைகளைக் கூட வகைப்படுத்தி உள்ளார் நூல் ஆசிரியர். 1.சும்மாப் பொய், 2.இயலாமைப் பொய், 3.பெருமைப் பொய், 4.பணப் பொய், 5.பிறருக்காக பொய் இதற்கான விளக்கமும் நுட்பமாக உள்ளது.
பொறமை குணத்தைத் தடுக்க உண்மை பேச வேண்டும். புகழ்பெற உண்மை பேச வேண்டும். கோபத்தைத் தடுக்க உண்மை பேச வேண்டும், தீய பழக்கங்களை விரட்ட உண்மை பேச வேண்டும், அறத்தின் பயனை அடைய உண்மை பேச வேண்டும், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு மறைய உண்மை பேச வேண்டும்,
நண்பர்களுடன் உறவை வளர்க்க உண்மை பேச வேண்டும், மனத்தூய்மைக்கு உண்மை பேச வேண்டும், காமத்தை விட்டு விட உண்மை பேச வேண்டும், சான்றோர்க்கு விளக்கமாக உண்மை பேச வேண்டும், குடும்ப நன்மைக்கு உண்மை பேச வேண்டும், உலக நன்மைக்கு உண்மை பேச வேண்டும், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த உண்மை பேச வேண்டும், இப்படி பல்வேறு தலைப்புகளில் விரிவான கட்டுரை நமக்கு விழிப்புணர்வு தருகின்றது. மனிதன் மனிதனாக வாழ வேண்டிய விசயத்தை வலியுறுத்துகின்றது. கூடா நட்பு பற்றி தீய பழக்கங்கள் பற்றியும் எடுத்து இயம்பி தெளிவுபடுத்துகின்றார்.
உண்மையைப் பற்றி இவ்வளவு உயர்வாகவும், விரிவாகவும், விளக்கமாகவும் வேறு எந்த நூலிலும் படித்ததில்லை என்று அறுதியிட்டுக் கூறலாம். அந்த அளவிற்கு உண்மையின் மகத்துவத்தை, அவசியத்தைப் படிக்கும் வாசர்களின் மனதில் பதியும்படி மிக எளிமையாகவும், இனிமையாகவும் வடித்து உள்ள ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: உண்மையே பேசுங்கள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
அரியதோர் வாழ்வியல் தொகுப்பு அதற்க்கு அழகியதோர் மதிப்புரை.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: உண்மையே பேசுங்கள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
வணக்கம் பாராட்டுக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
www.kavimalar.com
http://wtrfm.com/?cat=3
http://eraeravi.wordpress.com/
அன்புடன்
இரா .இரவி
www.kavimalar.com
http://wtrfm.com/?cat=3
http://eraeravi.wordpress.com/
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» தமிழ்க்களஞ்சியம் 10000 * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» கவன ஈர்ப்பு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» பகத்சிங் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» நிலை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» தன்னம்பிக்கை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» கவன ஈர்ப்பு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» பகத்சிங் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» நிலை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» தன்னம்பிக்கை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum