தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Today at 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Today at 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Today at 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Today at 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Today at 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Today at 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Today at 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Today at 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Today at 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Today at 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Today at 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Today at 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Today at 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Today at 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Today at 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
மரப்பாச்சி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
2 posters
Page 1 of 1
மரப்பாச்சி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
* நூல் ஆசிரியர் : கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன்
நூலின் அட்டைப்படம் நவீன ஓவியத்துடன் நம்மை வரவேற்று உள்ளே அனுப்புகின்றது.
பெரிய கவிஞர்கனின் அணிந்துரைக்காக காத்திருந்து காலத்தை வீணடிக்காமல்
தன்னம்பிக்கையுடன் தனது என்னுரையுடன் நூல் தொடங்கி அணிந்துரையின்றியே மிக அழகாக
படைத்து உள்ளார். “உடைந்து போக மாட்டோம்” என்று என்னுரையில் தொடங்கி
சுற்றுச்சூழல் மாசுபடாமல் காத்தல், இயற்கையை பேணி காத்தல் போன்ற கருத்துக்களை
உரக்கப்பதிவு செய்து உள்ளார்.
தமிழகம், புதுவைத் தாண்டி உலகமெங்கும் புதுவைத் தமிழ் நெஞ்சன் என்றால்
அனைவருக்கும் தெரியும். ஆடம்பரமில்லாத எளிமையான, இனிமையான மனிதர். மிகச்சிறந்த
படைப்பாளி, கொள்கைக்குன்று, இனமுரசு, நிறைகுடம் ததும்பாது என்பதற்கு
இலக்கணமானவர், மனித நேய மிக்கவர் இப்படி நூலாசிரியர் பற்றி கூறிக் கொண்டே
போகலாம். இவை புகழ்ச்சி அல்ல. முற்றிலும் உண்மை. “புலிக்குப் பிறந்தது என்றும்
பூனையாகாது” என்ற பொன்மொழியை மெய்ப்பிக்கும் வண்ணம் தனது மகள் தமிழ்மொழியை
ஹைக்கூ கவிஞராக உருவாக்கி பெற வைத்து விருது பல பெற வைத்து, ஊக்கப்படுத்தி
மிகச்சிறந்த தந்தையாகவும் விளங்கி வருகிறார்.
இவருடைய மகள் தமிழ்மொழி இவரது படைப்பான இந்த மரப்பாச்சியை படித்துத்தான்
படைப்பாளியாக உருவெடுத்திருக்க வேண்டும். குழந்தைப் பாடல்கள் போல இருந்தாலும்,
பெரியவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டிய கருத்துக் குவியலாக உள்ளது. பிறமொழி
கலப்பில்லாத தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் நூல் இது. “சிறகின் விடுதலை”
என்று தொடங்கி பட்டாம்பூச்சிப் பற்றி பாடி ” வாழ்க்கைக்கல்வி” என்ற இறுதி
கவிதையில் கல்வியின் மேன்மையை விளக்குவது வர அத்துணை கவிதையும் தித்திக்கும்
சொற்களால் கருத்து விருந்து வைத்துள்ளார்.
விழித்திடு
கதிர் முளைக்கும் முன்னரிங்கே
சேவல் போல விழித்திடு
யானைத் தந்தம் போல நீயும்
பல்லை வெண்மையாக்கிடு
இப்படி எளிமையான இனிமையான வரிகள் ஏராளம், தாராளம்
ஆங்கில வழிக் கல்வியின் மூலமாக இன்று தாய்மொழியான தமிழ்மொழி கற்பிக்கப்படாமல்
குழந்தைகளை இயல்பாக மலர விடாமல் மொட்டிலேயே கருக்கும் வேலையை செய்து
விடுகின்றனர். காந்தியடிகள் தாய்மொழியை வலியுறுத்தினார். மாமனிதர் அப்துல்
கலாம் தமிழ் மொழியில் ஆரம்பக் கல்வி பயின்றார். இவற்றை அறியாமல், உணராமல்
ஆங்கில மோகம் கொண்டு அலைகின்றான் தமிழன். குறைந்த பட்சம் இந்த நூலை வாங்கி
உங்கள் குழந்தைகளுக்கு படிக்கக் கொடுங்கள். தமிழ் மொழி அறிவும். தானாக
சிந்திக்கும் திறனும் பெறும். குழந்தைகளுக்கு அறிவு புகட்டும் அற்புதநூல்.
நிலவும் கடலும்
நிலவும் கதிரும்
ஒன்று ஒன்று ஒன்றுதான்
சாதி மதமும்
கடவுள் மறுத்தால்
நன்று நன்று நன்று தான்.
உலகம் முழுவதும் இன்று சாதியின் பெயரால், கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால்
தான் வன்முறை தலைவிரித்து ஆடுகின்றது. உலகில் அமைதி நிலவ வேண்டுமானால் சாதியும்
மதமும் ஒழிக்கப்பட வேண்டும். அதனை வலியுறுத்துகின்றது இந்த கவிதை.
மரப்பாச்சி பொம்பை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தூங்கும் போது கூட
அருகில் வைத்துக் கொண்டு தான் தூங்குவார்கள். அது போலத் தான் இந்த நூலும்
மிகவும் பொருத்தமாக பெயர் சூட்டி உள்ளார். இந்நூல் குழந்தைகளுக்கு மிகவும்
பிடிக்கும். வாங்கி தந்தால் விரும்பி படிக்கும். தமிழ்மொழியின் வளமை உணரும்.
பகுத்தறிவை உணரும்.
எதுகை, மோனை, இயைபு நூலில் பொங்கி வழிகின்றது. படிக்க இனிக்கின்றது,
சுவைக்கின்றது. எளிய நடை, இனிய உவமை என குழந்தைகளின் நெஞ்சத்தில் பசுமரத்து அணி
போல பதியும் நல்ல பல கருத்துக்களை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஊடகங்கள் நமது பண்பாட்டை சீரழித்து வரும் இந்தக் காலத்தில் இது போன்ற நூல்களை
வாங்கி குழந்தைகளைப் படிக்க வைத்தால் வருங்கால சமுதாயம் வளமான சமுதாயமாக
அமையும். தொடர்ந்து எழுதுங்கள், படையுங்கள் நூலாக்குங்கள் தொடரட்டும்
தமிழ்தொண்டு.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: மரப்பாச்சி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
வரவேற்பதற்க்கும், வாழ்த்துவதற்க்கும் உயரிய சிந்தனையுடன் கூடிய ஒரு மனம் வேண்டும். போற்றத்தகுந்த பணி. நன்றி.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Similar topics
» மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» ராஜாங்கம்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» நிலை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» தன்னம்பிக்கை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» தமிழ்க்களஞ்சியம் 10000 * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» ராஜாங்கம்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» நிலை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» தன்னம்பிக்கை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» தமிழ்க்களஞ்சியம் 10000 * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum