தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விரல்கள் பத்தும் மூலதனம் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

2 posters

Go down

விரல்கள் பத்தும் மூலதனம் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி Empty விரல்கள் பத்தும் மூலதனம் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

Post by eraeravi Thu Jun 24, 2010 12:05 pm


* நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்


வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்

என்ற இரண்டே வரிகளின் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட அற்புதக் கவிஞர் தாராபாரதியின் வைர வரிகளையே நூலிற்கு பெயராக சூட்டிய பேராசிரியருக்கு முதல் பாராட்டுகள். நூலின் பெயரை வைத்தே இந்நூல் தன்னம்பிக்கை விதை விதைக்கும் சுயமுன்னேற்ற நூல் என்பது விளங்கி விடுகின்றது. இந்நூலில் பிரபல இதழ்களில் பிரசுரமானவைகளும், பிரசுரமாகாத புதியவைகளும் மொத்தம் 60 கட்டுரைகள் அத்தனையும் முத்திரை பதிக்கும் கட்டுரைகள்,சிந்தனை விதை விதைக்கும் அறிவார்ந்த கட்டுரைகள், நூலாசிரியர் இரா.மோகன் மு.வ.அவர்களின் செல்லப்பிள்ளை என்பதால் கட்டுரை எப்படி? எழுத வேண்டும் என்பதை எளிதாக பயிற்றுவிக்கின்றார். எழுத்துலகில் கால் பதிக்க விரும்புகிறவர்கள் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள நூல் இவரின் நடை, தனி நடை, வேறு எவரின் நடையையும் பின்பற்றாமல் தனக்கென தனி பாணி அமைத்துக் கொண்டு எப்படி ஒரு கட்டுரையை வடிவமைக்க வேண்டும் என்பதை உணர்ந்து சிற்பி சிலை செதுக்குவது போல மிகவும் கவனமாக செலுக்கி இருக்கிறார்கள். ஒப்பிலக்கியத் துறைத் தலைவராக இருக்கின்ற காரணத்தால் மொழிப்புலமை இலக்கியப்புலமை அனைத்தும் இருப்பதால் பல நூல்கள் படித்தப் பட்டறிவின் காரணமாக அற்புதமாக வடித்து இருக்கிறார். இந்நூல் ஒரு நூல் படித்தால் நூறு நூல் படித்த இன்பம் கிடைக்கின்றது. பிழிந்து கொடுத்த பழச்சாறு போல இனிமையாக உள்ளது.மு.வ.முதல் கல்கி, கு.ப.ரா.புதுமைப்பித்தன் கண்ணதாசன், என்.எஸ்.கிருஷ்ணன் வரைபடம் பிடித்து காட்டி இருக்கிறார். இவர்களை பற்றி அறிந்திராத இளைய சமுதாயம் அறிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது. ஒவ்வொருவரிடமும் உள்ள தனிச்சிறப்புகளை நம் கண் முன் காட்சி போல கொண்டு வந்து விடுகிறார். இதுவே நூலின் வெற்றியாகும். ஜென் கதைகள் முதல் ஆனந்த் விகடன் முத்திரைக் கவிதைகள் வரை எதையும் விட்டு வைக்கவில்லை. அலசி ஆராய்ந்து இருக்கிறார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகளில் நெஞ்சம் கவர்ந்த கவிதைகளை தொகுத்து கவி விருந்து வைத்துள்ளார்.

திரைப்படச் சுவரொட்டியை
தின்ற கழுதை கொழுத்தது
பார்த்த கழுதை புழுத்தது

இந்த ஒரு கவிதை போதும் திரைப்படத் துறையின் பண்பாட்டு சீரழிவை படம் பிடித்துக் காட்டும். ஒரு பானை சோற்றுக்க ஒரு சோறு பதம் போல ஒரு நறுக் கவிதை

குழல் இனிது யாழ் இனிது என்பர்
யாழ்ப்பாணத் தமிழ் கேளாதவர்

இது நூலாசிரியரின் பொன்பொழி, இம்மொழியில் உள்ள உண்மை யாழ்ப்பாணத் தமிழர்களின் தமிழ் கேட்டவர்களுக்கு நன்கு விளங்கும். புலம் பெயர்ந்த தமிழர்கள் பலருடன் நல்ல நட்பு இருக்கின்ற காரணத்தால், உணர்ந்த காரணத்தால் மிகவும் ரசித்துப் படித்தேன். நூலாசிரியர் பொன்மொழியை. அவருடைய நேர்முகத்தையும், இந்நூலில் கேள்வி பதில் வடிவில் அப்படியே பதிவு செய்திருப்பது நூலிற்கு தனிச் சிறப்பு. நூலாசிரியரின் திறமையை தரணிக்கு பறைசாற்றுகின்றது இவருடைய வயதை விட இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை அதிகம். இவருடைய படைப்பில் சிறந்த நூல் இதுவென்று பட்டிமன்ற நடுவருக்கே நாம் தீர்ப்பு கூறலாம். மனதில் கவலை இருந்தால் சோகம் இருந்தால் வேதனை இருந்தால் இந்த நூலை படியுங்கள்.கவலை, சோகம்,வேதனை, அனைத்தும் காணாமல் போகும் புத்துணர்வு பிறக்கும், மனம் புதுப்பொழிவு பெறும். நூலினை வாங்கிப் படித்து பாருங்கள். நான் எழுதியது எதுவும் பொய் இல்லை உண்மை என்பதை எல்லோரும் உணரூவீர்கள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

விரல்கள் பத்தும் மூலதனம் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி Empty Re: விரல்கள் பத்தும் மூலதனம் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

Post by eeranila Mon Jul 05, 2010 9:10 pm

சமுதாய சீரழிவை படம் பிடித்து காட்டுகிறது நூல், நல்லதோர் எடுத்தாய்வு.
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

விரல்கள் பத்தும் மூலதனம் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி Empty Re: விரல்கள் பத்தும் மூலதனம் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

Post by eraeravi Wed Jul 14, 2010 11:12 pm

வணக்கம் பாராட்டுக்கு மிக்க நன்றி

அன்புடன்

இரா .இரவி
www.kavimalar.com
http://wtrfm.com/?cat=3

http://eraeravi.wordpress.com/
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

விரல்கள் பத்தும் மூலதனம் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி Empty Re: விரல்கள் பத்தும் மூலதனம் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum