தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!

3 posters

Go down

அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Empty அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!

Post by RAJABTHEEN Fri Jun 01, 2012 1:44 pm

காதல், திருமணம், தாம்பத்யம் இவை எல்லாமே மனிதனால், மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை.


[You must be registered and logged in to see this image.]


இதில்
தாம்பத்யம் என்பது உடல், மனம் இரண்டுக்குமான ஒரு சிகிச்சை. இதனால்
மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம். ஆனால் இரண்டு மனங்களும் ஒத்து,
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தாம்பத்யம் கொள்ளும்போதுதான் இது
சாத்தியமாகிறது.


நமது
கலாச்சாரத்தின் படி, இரண்டு மனங்களை இணைப்பதே திருமணம். இந்த நோக்கம்,
இருவரும் இசைந்து தாம்பத்தியம் கொள்ளும்போதுதான் முழுமையடைகிறது.


தாம்பத்யத்தின்
வாயிலாக இருவரது உணர்வுகளும், சந்தோஷங்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
கணவன் - மனைவிக்கு இடையே உள்ள தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும்
இந்த தாம்பத்தியத்தின் வாயிலாக மறக்கப்படுகிறது.


இவ்வளவு புனிதமான, இல்லறத்திற்கு அவசியமான தாம்பத்யம் தற்போது மாறி வரும் உலகில் கணவன் - மனைவிக்கு இடையே எந்த இடத்தில் உள்ளது?

அதற்கெல்லாம் எங்கு நேரம் என்று கூறும் தம்பதிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.


[You must be registered and logged in to see this image.]


பெயர்,
புகழ், பணம் சம்பாதிக்க நீண்ட தூரம், வேகமாக ஓட வேண்டிய நிலையில் நாம்
தற்போது இருக்கிறோம். அதனால் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேச இங்கே
யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அந்த நேரத்தை தகவல்
தொழில்நுட்பங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் விழுங்கி விடுகின்றன.


எதிர்
வீட்டில் இருப்பவரைப் பற்றியோ, பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறதோ என்பதையோ
அறிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் இப்போதெல்லாம்,
அவரவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை.
அதிகாலையிலேயே பணிக்கு செல்வதும், இரவில் நேரம் கழித்து வருவதும்
வழக்கமாகிவிட்டது.


குடும்பத்திற்காகத்தான்
உழைக்கிறார்கள் என்றாலும், பிள்ளைகளிடம் கொஞ்சி மகிழவும், வாழ்க்கைத்
துணையுடன் நேரத்தை செலவிடவும் இயலாமல் போய்விடுகிறது. அதுபோன்றதொரு பொன்னான
நேரத்தை எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்பப் பெற இயலாது என்பதை அவர்கள்
உணர்வதில்லை.


காலத்தின்
சூழ்நிலையால் மனிதன் எந்திரமாக மாறிவிட்டான். சக்கரம் போல் சுழலும் அவனது
வாழ்க்கையில், எந்த இடத்திலும் சிறிது நேரம் களைப்பாறகூட அவனுக்கு நேரம்
கிடைப்பதில்லை. இதனால் மனிதன் விரும்பும் பல நல்ல விஷயங்களை அவன்
அறியாமலேயே இழந்து வருகிறான். இதில் தாம்பத்யமும் ஒன்று. இது மிகவும்
சிந்திக்க வேண்டிய, கவலை அளிக்கும் விஷயமாகும்.


கணவன்
- மனைவி இருவருமே பணிக்கு செல்லும் நிலை இப்போதுள்ளது. ஒருவர் பணி
நிமித்தமாக வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்று கொண்டிருப்பதும்,
மற்றொருவர் பணியில் மூழ்கி இரவு - பகலென தெரியாமல் உழைப்பதும் இங்கெல்லாம்
சாதாரணம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Empty Re: அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!

Post by RAJABTHEEN Fri Jun 01, 2012 1:45 pm

இதனால் கிடைப்பது என்ன?
மிடுக்கான வாழ்க்கை, குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி, வெளிநாடுகளுக்கு
பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவு, நினைத்தப் பொருள் நினைத்தவுடன்
கையில் என அனைத்தும் கிடைக்கும். ஆனால்... இதுதான் வாழ்க்கையா? இதில் மனம்
நிறைவு பெறுமா? சரி இவற்றுக்கெல்லாம் நாம் கொடுக்கும் விலை என்ன தெரியுமா?
தாம்பத்ய வாழ்க்கை! இதற்கெல்லாம் தாம்பத்யம் ஈடாகுமா?



[You must be registered and logged in to see this image.]


ஒருவருக்கொருவர்
நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும் தாம்பத்யம் தற்போது குறைந்து வருகிறது.
நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதற்கும், பல
திருமணங்களின் உடனடி முறிவிற்கும் முக்கிய காரணமாக இந்த தாம்பத்யமே மையமாக
அமைகிறது.


வாழ்க்கையில்
முன்னேறவும், முக்கிய இடத்தை பிடிக்கவும் மனமும், உடலும் உற்சாகமாக இருக்க
வேண்டியது அவசியம். ஆனால் அந்த மனதிற்கும், உடலுக்கும் உற்சாகத்தை
அளிக்கும் தாம்பத்தியத்தை பலர் மறந்தேவிட்டனர். "நேரம் இல்லை அதனால் செக்ஸ்
இல்லை" என்பதே தற்போது பலர் சொல்லும் மந்திரமாகிவிட்டது.


மேலும்
சில தம்பதிகளிடையே காலையில் எழுவதும், பணிக்கு செல்வதும், குழந்தைகளை
பராமரிப்பதும் போல் தாம்பத்யமும் ஒரு பணியாக, அதனை கடமையாக எண்ணும்
மனப்பான்மை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் காலையில் இருந்து நாம்
சந்திக்கும் பிரச்சினைகளும், பணிச் சுமையுமே ஆகும்.


இதுபோல்
பணியிலும், தாங்கள் சார்ந்துள்ள துறையிலும் உள்ளவர்களை `பணிச் சிறையில்
வாழ்பவர்கள்' என்றே அழைக்கலாம். இவர்கள் ஒரு நாளும் இந்த சிறையில் இருந்து
விடுதலை ஆவதில்லை. இவர்கள் ஆயுள் கைதிகளாகவே இருந்து விடுகின்றனர். இதனால்
இவர்களது திறமை வெளிப்பட்டு பெயர், புகழ் கிடைத்தாலும், உள்மனது
அதற்கெல்லாம் மகிழ்ச்சியடைவதில்லை. அது உள்ளுக்குள் புழுங்கிக்
கொண்டிருப்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல பல சமயங்களில் அவர்களுக்கே
தெரிவதில்லை.


பணமும்,
புகழும், தங்களை சார்ந்தவர்களையும், தங்களது தேவைகளையும்
திருப்திப்படுத்துமே தவிர, மனதையும், அதன் உணர்வுகளையும் அல்ல. பணத்தால்
மனதை நிறைவு செய்ய இயலாது. பணம் தான் வாழ்க்கை என ஓடும் பலர் சிறிது நேரம்
நின்று பார்த்தால் தெரியும், எவ்வளவோ பேர் பணம் கிடைத்தும் நிம்மதி
இல்லாமல் நிம்மதியைத் தேடி ஓடிக் கொண்டிருப்பதை.


பலர்
தங்களது வேலையில் ஏற்படும் பிரச்சினைகளுடனே வீட்டிக்குள் நுழைகின்றனர்.
இது தவிர்க்க முடியாததே ஆனாலும், தள்ளி வைக்க வேண்டிய விஷயமாகிறது.


இதுபோன்று
பணியாற்றும் தம்பதிகள் பலருக்கு வீடு ஒரு விடுதி போலவும், இரவு வருவதும்,
காலையில் கிளம்பிச் செல்வதும் வழக்கமாகிவிடுகிறது. ஒருவருக்கொருவர்
புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து, அன்பையும், நேசத்தையும்
வெளிப்படுத்தும் தாம்பத்யம் இல்லாமல், அவர்கள் அறியாமலேயே அவர்களது
தன்னம்பிக்கையை இழந்து வருகின்றனர்.



[You must be registered and logged in to see this image.]


தங்களது
நிறைகுறைகளை, இன்ப துன்பங்களை, கோபதாபங்களை தனது துணையுடன் பகிர்ந்து
கொண்டு, அதற்காக நேரம் ஒதுக்குவதும் தான் நல்ல தாம்பத்தியம். நல்ல
தாம்பத்யம் என்பதே இல்லற வாழ்வின் இனிய வாசற்படி. அதற்குள் நுழைந்தால்தான்
குழந்தைகள், செல்வம் என்னும் வீட்டிற்குள் வாழ இயலும்.


மனித வாழ்க்கைக்கு ஆதாரமான தாம்பத்தியத்தை தொலைத்து விட்டு நாம் தேடப்போகும் பொருள் தான் என்ன?
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Empty Re: அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!

Post by அ.இராமநாதன் Fri Jun 01, 2012 3:39 pm

[You must be registered and logged in to see this image.]

தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம்.
இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய்
நிதானமாய் அமைய வேண்டும்

அவசரங்களால் தாம்பத்தியம் அரைகுறையாக
அலங்கோலமாக ஆகிவிடும்.

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Empty Re: அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jun 01, 2012 6:33 pm

வேகம்... சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Empty Re: அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum