தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா
3 posters
Page 1 of 1
புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா
அல்லாஹ் இவ்விறை இல்லத்தை கட்டப் பணித்த போது கிஸ்வாவைப்பற்றி ஏதும் குறிபபிடவில்லை எனினும் பண்டை காலம் தொட்டே கிஸ்வா போர்த்துவதை ஒரு வைபவமாகப் பல அரசர்களும் நடத்தி வந்ததாக வரலாற்றிலே காண முடிகிறது. கிஸ்வாவைப்பற்றி சில தகவல்களை தொகுத்துத் தருகிறார். கடடுரை ஆசிரியர் டாக்டர் பாக்கவி அவர்கள்.
முதல் கிஸ்வா
1. கி.பி 400-ல் யமன் நாட்டை ஆண்ட ஹுமைரி மன்னன் மக்கா வந்த போது அங்குள்ள மக்கள் அவரை சரிவர மரியாதை செலுத்தாததால் கஃபாவை இடித்துத்தள்ள எண்ணிய சமயம் கடுமையான நோய்க்குள்ளானார். அறிஞர்கள் பலரின் ஆலோசனையின் பேரில் உம்ரா செய்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்க நோய் நீங்கப் பெற்றார். பின்னர் கண்ட கனவின் பலனாக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் பொருட்டு கிஸ்வாவை போர்த்தியதாக ஆதாரங்கள் உள்ளன. இந்த கிஸ்வா உலர்ந்த பனை ஓலையாலும் நூலாலும் நெய்யப்பட்டதாக இருந்ததாம்.
2. பெருமானார் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பிறகு செய்த ஹஜ்ஜின் போது யமன் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினார்கள்.
3. கலீபா உமர் (ரலி) அவர்கள் கி.பி 634-ல் (ஹிஜ்ரி 13) எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினாhகள்.
4. கலீபா உத்மான் (ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் ரமளான் பிறை 27-லும் துல்ஹஜ் மாதம் ஹஜ்ஜுக்கு முன்னரும் இருமுறை கிஸ்வா அணிவிக்கப்பட்டது.
5. கலீபா முஆவியா (ரலி)யின் காலத்தில் முஹர்ரம் 10-ம் நாள் அன்று பட்டுத்துணியாலும் ரமலான் கடைசியில் கபாத்தி என்ற கட்டித் துணியாலும் போர்த்தினார்கள்.
6. இவர் காலத்தில் தான் ”லாயிலாஹ இல்லல்லாஹ்” ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை’ என்ற அரபி வாக்கியம் பொறித்த கிஸ்வாக்கள் பயன்படுத்தப்பட்டன.
7. காலப் போக்கில் ஒரு முறை அணிவித்த கிஸ்வாவை அகற்றாமலேயே அதன் மீது மீண்டும் கிஸ்வாவை அணிவித்து வந்தனர். இதனால் கஃபாவின் மீது பெருத்த பளு சேரவே ஹிஜ்ரி 160-ல் (கி.பி.775) கலீபா அல்மஹ்தீ அல் அப்பாஸி பழைய கிஸ்வாக்களை அகற்றிவிடப் பணித்தார்.
சிகப்பு, பச்சை,வெள்ளை கிஸ்வாக்கள்
8. சிகப்பு, பச்சை, வெள்ளை ஆகிய நிறங்களில் தான் ஆரம்ப காலங்களில் கிஸ்வாக்கள் போர்த்தப்பட்டு வந்தன்.
கறுப்பு நிற கிஸ்வா
கலீபா அல் நாஸிருல் அப்பாஸி காலத்தில் தான் (ஹிஜ்ரி 575 – கி.பி.1179) முதன் முதலில் கறுப்புநிறம் பயன்படுத்தப்பட்டது. அதுவே இன்று வரை தொடர்கிறது.
9. கி.பி.1342 – ஹிஜ்ரி 743 ல் எகிப்தை ஆண்ட சுல்தான் கலாவூன் கிஸ்வா தயாரிப்பிற்காகவும் கஃபாவின் பராமரிப்புக்காகவும் எகிப்து நாட்டு மூன்று விவசாய கிராமங்களின் வருமானத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
10. சுல்தான் கலாவூன் ஆட்சிக்கு 300 ஆண்டுகட்கு பிறகு வந்த உத்மானிய சுல்தான் சுலைமான் மேலும் ஏழு கிராமங்களின் வருமானங்களை வழங்கினார். கஃபாவுடன் மதீனா ரௌலா ஷரீபும் பராமரிப்பில் சேர்க்கப்பட்டது.
11. பல நூறு ஆண்டுகளாக கிஸ்வாக்கள் எகிப்திலிருந்து மக்காவிற்கு கொண்டு வரப்பட்டன. இவைகளை கொண்டுவர 15-க்கு மேற்பட்ட ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன.
‘மஹ்மல்’ என்று அழைக்கப்படும் அழகிய பல்லாக்குகளை ஒட்டகங்கள் மேல் வைத்து அவைகளில் கிஸ்வாவின் பகுதிகளை கொண்டு வருவர்.
12. இந்த ஊர்வலம் புறப்படும் போது எகிப்தே விழாக்கோலம் பூணும், அது மக்கா வந்தடைந்ததும் இசைத் தாளங்களுடன் ஆடிப்பாடி மக்கா வாசிகள் அந்த ஒட்டகங்களை வரவேற்பர்.
13. ஹிஜ்ரி 843 – (கி.பி 1924) ல் மன்னர் அப்துல் அஸீஸ் இப்ன் ஸவூது இப்படி ஆடிப்பாடி கிஸ்வாவை கொண்டுவரும் நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு முரணாகயிருப்பதைக் கண்டித்ததால் மீனாவில் வைத்து எகிப்தியர்களுடன் மோதல் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு முதல் கிஸ்வாவை எகிப்து அனுப்புவதை நிறுத்திக் கொண்டது.
சவூதியில் கிஸ்வா தயாரிப்பு
14. அவ்வாண்டே மன்னர் அப்துல் அஸீஸ் இந்தியாவிலிருந்து கை தேர்ந்த தொழிலாளிகளை கொண்டு வந்து கிஸ்வா தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார்.
15. 1927 –ல் (ஹிஜ்ரி 1346) இறுதியில் சவூதி தொழிற்சாலையில் தயாரிக்கப்;பட்ட கிஸ்வா போர்த்தப்பட்டது. இது பத்து ஆண்டுகள் தொடர்ந்தது.
16. 1950-ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு பின்பு எகிப்து மீண்டும் கிஸ்வாவை அனுப்பும் உரிமையப் பெற்றது. இது 1962 வரை தொடாந்தது.
17. அதன் பின்னர் மன்னர் ஸவூது பின் அப்துல் அஸீஸ் ஆட்சியில் மீண்டும் கிஸ்வாவை மக்காவிலேயே தயாரிக்கத் தொடங்கினார்.
18. சுமார் 240 சவூதி கைவினைஞர்கள் பணிபுரியும் இந்த தொழிற்சாலை பிற பள்ளி வாசல்களில் விரிக்க பயன்படும் விரிப்புகளையும் தயாரித்து வருகிறது.
19. கிஸ்வாவை தயாரிக்க 670 கிலோ தூய வெள்ளைப்பட்டு நூல் பயன்படுத்தப்படுகிறது. இந்நூலுக்குப் பின்னர் உயர்தர கறுப்புச் சாயம் பூசுகின்றனர்.
650 சதுர மீட்டர்
20. ஒரு கிஸ்வா 47 பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் 14 மீட்டர் நீளமும் 95 செ.மீ அகலமும் கொண்டது. அதன் மொத்த பரப்பு 650 சதுரமீட்டர்.
10 கோடி செலவில் கிஸவா (120 கிலோ தங்கமும் வெள்ளியும்)
21. 120 கிலோ தங்கமும் வெள்ளியும் (1க்கு 4 விகிதத்தில்) கலந்த இழைகளால் திருகுர்ஆன் வசனங்கள் மிக நுட்பமான முறையில் பின்னப் படுகின்றன. கிஸ்வா தயாரிக்க ஆகும் மொத்தச் செலவு 170 லட்சம் ரியால்கள் (சுமார் 10 கோடி ருபாய்)
தங்கத்தில் கதவு
22. கஃபாவின் கதவுகள் தரைமட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளன. இவை தங்கத்தினால் செய்யப்பட்டவை. இந்த வாயிற் பகுதியை மறைக்கும் திரை (7.5 ஒ 4 மீட்டர்) அளவுடையது. அதுவும் சிறந்த வேலைப்பாடுகளால் ஆனவை. கஃபாவின் உள்ளே செல்ல நகரும் ஏணிப்படிகளை பயன்படுத்துகின்றனர்.
23. கஃபாவின் உட்சுவர்களையும் அதன் கூரைப் பகுதிகளையும் பச்சை நிற பட்டுத் துணியால் அலங்கரிக்கின்றனர். அவைகளிலும் திருக்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்படுகின்றன.
24. ஒவ்வொரு ஆண்டும் ஷாபான் மாத்திலும், துல்ஹஜ்ஜு மாதத்திலும் கஃபாவின் உட்தளம் சந்தனத்தாலும், உயர்ரக வாசனைத் திரவியங் களாலும் கழுகப்படும். உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாமியப் பிரதி நிதிகளும் தலைவர்களும் பங்கேற்று கழுக வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
புதிய கிஸ்வாக்கள்
25. ஹஜ்ஜுக்கு முன்பாக கழுகும்போது புதிய கிஸ்வா அணிவிக்கப்படும்.
26. பழைய கிஸ்வா பல சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு முஸ்லிம் பிரதிநிதிகள், இஸ்லாமிய கலாசாலைகள், தொல் பொருட்காட்சியங்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்படுகிறது.
UNO வில் கிஸ்வாவின் ஒரு பகுதி
27. கஃபாவின் வாசல் திரையினைப் போன்ற வேலைப்பாடுகள் அமைந்த (9 ஒ 2.5 மீட்டர்); அளவுடைய திரைச் சீலையை 1983-ம் ஆண்டு சவூதி மன்னர் ஃபஹ்து உலக முஸ்லிம்கள் சார்பில் அமெரிக்காவில் உள்ள உலக நாடுகள் மன்றத்து (UNO) வரவேற்பு அறையில் தொங்விட அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்.
OH LORD! SHOW US RIGHT PATH!!
Regards,
D.Mustafa Kamal.
Dammam,KSA.
Source: http://groups.yahoo.com/group/K-Tic-group/message/288

கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Re: புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா
மிகவும் பிரயோசமானதொரு பதிவினை இட்டமைக்கு அன்பு நன்றிகள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தங்கள் கணினியை அலங்கரிக்கும் சிறந்த மென்பொருட்கள்
» இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் - கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.
» புனித ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்!!
» மதுரை புனித மேரி மேல்நிலைப் பள்ளியில்
» தமிழ்த்தோட்டம் நண்பர்கள் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum