தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!
5 posters
Page 1 of 1
இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!
மாமன்னன் இராசராச சோழன் இல்லை என்றால் சைவக்களஞ்சியமாம் பன்னிருதிருமுறை உருவாகி இருக்கவே வாய்ப்பில்லை. எனவே,தமிழர்கள் இராசராச சோழனைப் போற்றக் கடமைப்பட்டவர்கள் எனலாம். இப்படி ஓர் எண்ணம் அவனுக்குத் தோன்றியதும் ஒரு வரலாறே.
சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் தனது பெரியப்பா உறவின் முறையிலான மதுராந்தகச் சோழனைச் சில ஆண்டுகள் அரசுக்கட்டிலில் அமர்த்தி இராசராச சோழன் அரசாங்கக் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்த காலையில் இவன் திருமுறைகளைக் கண்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இராசராச சோழன் அவையில் இருந்த அரசவையில் சிலர் வந்து அழகான தமிழ்ப்பாடல்கள் சிலவற்றைப் பாடினர். இவை யாவை? பாடியவர்கள் யார்? பாடிய பாடல்கள் மொத்தம் இவ்வளவுதானா? என்ற கேள்விகளைக் கேட்டபோது இவை சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடிய பாடல்கள், இவை மொத்தம் எத்தனை என்று தெரியாது என்றும் இவனிடம் கூறிய போது இவையனைத்தும் கண்டெடுக்க வேண்டும் என்று உரியவர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டான்.
எவரிடமும் சரியான விவரம் கிடைக்காத நிலையில் திருவருள் இருந்தால்தான் இவையனைத்தும் கிடைக்கும் என்று அன்பர்களால் தெரிவிக்கப்பட்டான். எனவே திருவருள் மிக்க ஒருவரை இவன் தேடிக் கொண்டிருந்தான். அந்நிலையில் ஓர் அதிசயச் செய்தி இவன் காதுக்கு எட்டியது.
அதாவது திருநாரையூர் என்ற ஓர் ஊரில் நம்பியாண்டார் நம்பி என்ற ஓரு சிறுவன் அவ்வூர்ப் பிள்ளையார்க்கு அமுது படைக்க அதனை அக்கல் பிள்ளையார் உண்ணுகிறார் என்ற அதிசயச் செய்திதான் அது.
உடனே இச்சிறுவன் திருவருள் மிக்கவனாய் இருக்கிறான், ஒருவேளை இவன் மூலம் மூவர் அருளிய மொத்தப்பாடல்களையும் கண்டுபிடித்துவிடலாம் என்ற எண்ணம் இராசராச சோழனுக்குத் தோன்றியது.
இச்சிறுவனை சோதித்து அறியவேண்டும் என்று எண்ணி பெரும்படையல் பொருட்களை திருநாரையூரில் குவித்து அக்கல் பிள்ளையாரை அமுது செய்விக்க என்று சிறுவனை வேண்டினான். அப்படையல்கள் எல்லாம் கணநேரத்தில் காணாமல் போகவும், இவன் திருவருள் பெற்ற சிறுவனே என்று உணர்ந்து தனது ஏக்கத்தைக் கூறி அதன்படி மூவர் தேவாரம் முழுவதையும் கண்டுபிடித்துத் தரவேண்டினான்.
நம்பியாண்டார் நம்பி என்ற அச்சிறுவன் அரசன் முன்னிலையிலேயே பிள்ளையாரிடம் சென்று மனமுருக வேண்டிட பிள்ளையார் அவனுக்கு உணர்த்தியதாக இந்தச் செய்தியைக் கூறினான். அதாவது மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதே.
இராசராசன், நம்பிகளை அழைத்துக் கொண்டு தில்லைத் தீட்சிதர்களை அந்த இருட்டறையில் இருந்து எடுத்துத் தர பணித்தான். அவர்கள் அந்த இருட்டறையில் மூவர் தேவார ஏடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டு அந்த மூவரும் (திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர்) வந்தால் அறையைத் திறந்து எடுத்துத் தருவதாகக் கூறினர். (திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் முக்தியடைந்து விட்டனர்; இப்போது வரமுடியாது என்ற காரணத்தினால் அவ்வாறு தீட்சிதர்கள் சொன்னனர்.)
இராசராசன் மனம் சோராது மூவர் செப்புத் திருமேனிகளைச் செய்து எடுத்து வந்து, ‘மூவர் வந்தனர்; தேவார ஏடுகள் தருக’ என்றான். அவை செப்புத் திருமேனி ஆயிற்றே என்று தில்லைத் தீட்சிதர்களால் மறுக்க இயலவில்லை. காரணம் அவர்கள் நாடோறும் வணங்கும் நடராசரும் செப்புத் திருமேனியாதலால், அது உண்மையானால் மூவர் செப்புத்திருமேனியும் உண்மைதானே என்று இராசராசன் உணர்த்த வேறுவழியில்லாமல் இருட்டறையைத் திறந்து கட்டி வைத்திருந்த மூவர் தேவார ஏடுகளைக் காட்டினர். ஆனால் அவை செல்லரித்துப் பெரும்பான்மை தூளாகக் கிடந்தன. மனம் சோராமல் செல்லரித்தது போக எஞ்சியதை எடுத்துப் பாதுகாத்து அவைகளைச் செல்லரிக்காவண்ணம் செப்பேடுகளில் எழுதி வைத்தான். அவற்றை நம்பியாண்டார் நம்பிகளைக் கொண்டு திருமுறைகளாக தொகுக்கச் செய்தான். அவர் அவற்றைக் கொண்டு 7 திருமுறைகளைத் தொகுத்தார். இதன் பின்னர் ஏனைய 4 திருமுறைகளையும் இராசராச சோழன் வேண்ட அவன் வேண்டுகோளுக்கு இணங்கியே நம்பியாண்டார் நம்பி தொகுத்தார்.
இப்பதினோரு திருமுறைகளையும் மீண்டும் செல்லரிக்காதவண்ணம் இராசராசன் செப்பேடுகளில் ஏற்றி தில்லையில் வைக்காமல் திருவாரூரில் கொண்டு வைத்தான்.
ஓலைச்சுவடிகளாக கிடைத்தவற்றில் செல்லரித்தது போக கிடைத்தவையே தொகுக்கப்பட்டுள்ளன. மூவர்கள் பாடியவற்றிற்கும் கிடைத்தவற்றிற்கும் உள்ள வேறுபாடு நினைக்கத் தக்கது.
மூவர் பாடிய பதிகங்களும் கிடைத்தவையும்
சம்பந்தர் பாடியது 16,000 பதிகங்கள் கிடைத்தவை 384
அப்பர் பாடியது 49,000 பதிகங்கள் கிடைத்தவை 307
சுந்தரர் பாடியது 38,000 பதிகங்கள் கிடைத்தவை 100
இராசராசனுக்கு ஏறத்தாழ 200 ஆண்டுகட்குப் பின் வந்த இரண்டாம் குலோத்துங்கன் என்ற அநபாயன் காலத்தில் சேக்கிழார் எழுதிய ‘பெரியபுராணம்’ 12 வது திருமுறையாகச் சேர்க்கப்பட்டது.

சாமி- புதிய மொட்டு
- Posts : 9
Points : 21
Join date : 28/06/2012
Age : 57
Location : chennai
Re: இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!
எவ்வளவோ அழிந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன...
மிஞ்சியிருக்கும் இலக்கியங்கள் இனி மறையாமல் வாழும்... வாழட்டும்.
மிஞ்சியிருக்கும் இலக்கியங்கள் இனி மறையாமல் வாழும்... வாழட்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்
திருவள்ளுவர் எழுதிய குறள்கள் அழியாமல்
பாதுகாக்கப்பட்டது எப்படி..?
-
கிடைத்தது 1330 ...கிடைக்காதது...?
திருவள்ளுவர் எழுதிய குறள்கள் அழியாமல்
பாதுகாக்கப்பட்டது எப்படி..?
-
கிடைத்தது 1330 ...கிடைக்காதது...?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!
எனக்கும் சந்தேகம் இருக்கிறது.
எதையும் முழுமைப்படுத்துவதுதான் வாடிக்கை.
மொத்தம் 1500 குறட்பாக்கள் இருந்திருக்கலாம்.
அழிந்தது வீடுபேற்றை உள்ளடக்கியதாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
எதையும் முழுமைப்படுத்துவதுதான் வாடிக்கை.
மொத்தம் 1500 குறட்பாக்கள் இருந்திருக்கலாம்.
அழிந்தது வீடுபேற்றை உள்ளடக்கியதாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!
சரி எப்படியோ...
எழுத்தாணியை வெச்சே இம்புட்டு குறள் எழுதினவரு...
பேனா மட்டும் அப்போ இருந்திருந்தால்...!!
எழுத்தாணியை வெச்சே இம்புட்டு குறள் எழுதினவரு...
பேனா மட்டும் அப்போ இருந்திருந்தால்...!!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!
ஐயா போங்க ஐயா... நல்ல பதிலா சொல்லுவீங்கன்னு பாத்தா...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!
திருக்குறள்
திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவை
1. அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
2.பொருட்பால் - 70 அதிகாரங்கள்
3.காமத்துப்பால் - 25 அதிகாரங்கள்
திருக்குறள் 1330 குறள்களைக் கொண்டது.
திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள்
1. பரிமேலழகர்
2. தருமர்
3. மல்லர்
4. மணக்குடவர்
5. திருமலையர்
6. தாமத்தர்
7. கவிப்பெருமாள்
8. பரிதி
9. காளிங்கர்
10. நச்சர்
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்
1. நாயனார்
2. தேவர்
3. முதற்பாவலர்
4.தெய்வப்புலவர்
5. நான்முகனார்
6. மாதானுபங்கி
7. செந்நாப்போதார்
8.பெருநாவலர்
திருக்குறளின் வேறு பெயர்கள்
1. முப்பானூல்
2. உத்தரவேதம்
3 தெய்வ நூல்
4. திருவள்ளுவம்
5. பொய்யாமொழி
6. வாயுறை வாழ்த்து
7. தமிழ் மறை
8. பொதுமறை
புகழ்பெற்ற நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
சங்க இலக்கியங்கள்:
பதினெண் மேற்கணக்கு நூல்கள் = எட்டுத்தொகை(8) + பத்துப்பாட்டு(10)
நூல் பாடல்கள் - திணை
1. நற்றிணை - 400 +1 -அகம்
2. குறுந்தொகை - 400+1 -அகம்
3.ஐங்குறுனூறு - 500+1 -அகம்
4.அகநானூறு - 400+1 -அகம்
5. கலித்தொகை - 400+1 - அகம்
6.புறநானூறு -400+1 - புறம்
7.பதிற்றுப்பத்து 10+10 - புறம்
8. பரிபாடல் 70, கிடைக்கப்பெற்றது 22 இதில் அகம், புறம் இரண்டும் உள்ளது.
நூல் - தொகுத்தவர் - தொகுப்பித்தவர்
நற்றிணை -------- - பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை - பூரிக்கோ - ------------------
ஐங்குறுநூறு - கூடலூர்க்கிழார் - சேரல் இரும்பொறை
அகநானூறு - உருத்திரசன்மன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
கலித்தொகை - நல்லந்துவனார் - ------------------
மற்ற மூன்று நூல்களுக்கும் ஆசிரியர்கள் பெயர் செரியவில்லை.
பத்துப்பாட்டு
நூல்
புலவர்
1. திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
2. பொருநராற்றுப்படை - முடத்தாமக்
கண்ணியார்
3.பெரும்பாணாற்றுப்படை - உருத்திரங்கண்ணனார்
4.சிறுபாணாற்றுப்படை - நல்லூர்
நத்தத்தனார்
5. மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை - பெருங்கெளசிகனார்
அகநூல்கள்
6.குறிஞ்சிப்பாட்டு
- கபிலர்
7.முல்லைப்பாட்டு
- நப்பூதனார்
8. பட்டினப்பாலை
- உருத்திரங்கண்ணனார்
புறநூல்கள்
9. நெடுநெல்வாடை -
நக்கீரர்
10. மதுரைக்காஞ்சி
- மாங்குடி மருதனார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்( சங்கம் மருவிய காலம் கி.பி.100 - 600)
நூல் -----------
ஆசிரியர்
1.நாலடியார்
- சமண முனிவர்கள்
2.நான்மணிக்கடிகை
- விளம்பிநாகனார்
3.இன்னா நாற்பது
- கபிலர்
4.இனியவை நாற்பது -
பூதஞ்சேந்தனார்
5.திரிகடுகம்
- நல்லாதனார்
6. ஆசாரக்கோவை
- பெருவாயிற் முள்ளியார்
7. பழமொழி
- முன்றுறை அரையனார்
8. ஏலாதி
- காரியாசான்
9.முதுமொழிக் காஞ்சி -
கூடலூர்க் கிழார்
10. திருக்குறள்
- திருவள்ளூவர்
அகநூல் - 6
ஐந்திணை ஐம்பது
- மாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது -
கண்ணன் சேந்தனார்
ஐந்திணை எழுபது
- மூவாதியார்
திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
கைந்நிலை
- புல்லங்காடனார்
கார்நாற்பது
- கண்ணங்கூத்தனார்
புறநூல் - 1
களவழி நாற்பது
- பொய்கையார்
தமிழ்ச்சங்கம் நடைபெற்ற இடங்கள்
முதல் சங்கம் - கடல்கொண்ட தென்மதுரை
இடைச்சங்கம் - கபாடபுரம்
கடைச்சங்கம் - தற்போதைய மதுரை
காப்பியங்கள்
இரட்டைக் காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை
சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்
1.முதல் காப்பியம்
2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
3.குடிமக்கள் காப்பியம்
4.தேசியக்காப்பியம்
5.முத்தமிழ்க் காப்பியம்
காண்டங்கள் மொத்தம் 3, காதைகள் மொத்தம் 30
1.புகார்க் காண்டம் -10
2.மதுரைக் காண்டம் - 13
3.வஞ்சிக் காண்டம் -7
உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார்.
மணிமேகலை
1.முதல் சமயக் காப்பியம் (பெளத்தம்)
2.எழுதியவர் சீத்தலைச் சாத்தனார்
ஐம்பெருங்காப்பியங்கள்
1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்
4. வளையாபதி ---------------------
5. குண்டலகேசி - நாதகுத்தனார்
ஐஞ்சிறு காப்பியங்கள்
1.சூளாமணி
- தோலாமொழி தேவர்
2. நீலகேசி
-----------------------
3. உதயணகுமார காவியம் ----------------------
4. யசோதா காவியம்
----------------------
5. நாககுமார காவியம்
----------------------
* திருமுறைகள்(பக்தி இயக்க காலம்)
* திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு
தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
நாயன்மார்கள் அறுபத்து மூவர், அவர்களின் முக்கிய நூல்களில் சில
1. சம்பந்தர் -
திருக்கடைக்காப்பு
2. நாவுக்கரசர் - திருத்தாண்டகம்
3. சுந்தரர்
- தேவாரம்
4. மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவை, திருவெம்பாவை
5.திருமூலர் -
திருமந்திரம்
6. சேக்கிழார் -
பெரியபுராணம்
ஆழ்வார்கள்
* ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர்
* நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் தொகுத்தவர் நாதமுனிகள்
பன்னிரு ஆழ்வார்கள்
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசையாழ்வார்
5. பெரியாழ்வார்
6. ஆண்டாள்
7. நம்மாழ்வார்
8. மதுரகவியாழ்வார்
9. திருப்பாணாழ்வார்
10. திருமங்கையாழ்வார்
11. தொண்டரடிப்பொடியாழ்வார்
12. குலசேகர ஆழ்வார்
-
====================
நன்றி: தினமணி

ஐய்யா ஐயா தான்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!
சாமி உங்களின் பதிவு அருமை, தோட்டதுக்கு வருக வருக, உங்களின் தமிழமுதினைத் தருக தருக
இராமநாதன் சார், நல்ல தகவல் பதிந்தமைக்கு நன்றி
இராமநாதன் சார், நல்ல தகவல் பதிந்தமைக்கு நன்றி
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» மறைக்கப்பட்ட உண்மை!!!!!!!!!!!!!!!!!
» விண்டோஸ்:- மறைக்கப்பட்ட Administrator கணக்கில் நுழைய
» நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மறைக்கப்பட்ட வரலாறு!
» பெண்கள் மனதிற்குள் இதைத்தான் பூட்டி வைத்திருக்கிறார்கள்…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum