தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சந்தோஷம் சாமி!

4 posters

Go down

சந்தோஷம் சாமி! Empty சந்தோஷம் சாமி!

Post by ரௌத்திரன் Fri Jul 13, 2012 6:02 pm

என் அன்புக்குரியவளே!

கடைசியாக நீ

சொல்லிப் புலம்பிய வார்த்தை

"
சந்தோஷம் சாமி!"



இப்போது சொல்!

புலம்பி முடித்துவிட்டாயா

பெண்ணே?



எப்படி நினைத்தாய்?

நானுன்னை

நிரந்தரமாகப் பிரிந்துவிடுவேன்

என்று

எப்படி நினைத்தாய்?



பைத்தியமே!

நமக்கிடையில்

நீண்டுகிடப்பது தூரமல்ல

நேசத்தின்

நீளமல்லவா?



எப்படி நினைத்தாய்

நானுன்னை

நிரந்தரமாய்ப் பிரிந்துவிடுவேன் என்று?



உன்னை விட்டு

எத்தனை தூரம் பறந்தாலும்

உன்

நினைவுச் சிறகுகளோடுதான்

நான் பறந்துகொண்டிருப்பேன் என்பதை

நீ அறிவாயா?



என்

பாலைவெளிகளில்

பாலூற்றாய் வந்தவளே!



நீ

அன்போடு பேசும்

அந்த நிமிடங்களிலெல்லாம்

என் ரத்தக் குழல்களில்

பன்னீர் நதியின்

பாய்ச்சல்....



என்

ஹார்மோன் சுரப்பிகளெல்லாம்

அமுதச் சுரபிகளாய்

ஆகியிருக்கின்றன...



எப்படி நினைத்தாய்

நானுன்னை

நிரந்தரமாய்ப் பிரிந்துவிடுவேன் என்று?



நரம்புகள் அறுபட்ட யாழாய்ப்

பிறைநிலா கதறுவதுபோல்....

இந்தப் பிள்ளை நிலாவும்

உன்

நினைவுகளில்

நிச்சயம் கதறிக்கொண்டுதான் இருக்கப்போகிறது!



என்

நெஞ்சை நோக்கி

நினைவுக் கற்களை

நிறுத்தாமல் வீசிக்கொண்டிருப்பவளே!



என் கல்நெஞ்சை

ஏன் கண்ணாடியாய் மாற்றினாய்?

உன் நினைவுக்கற்களால்

உடைபட்டுச் சிதறும்

இருதயச் சில்லுகள் ஒவ்வொன்றும்

என் உயிரைக் கிழிக்கின்றன...



நீ அறிவாயா?

துக்கங்களாலும்

தோல்விகளாலும்

என்

இருதயத்தின் அறைகள்

இருண்டு போகும் போதெல்லாம்

அங்கே

உன் நினைவுகளென்னும் மெழுகுவர்த்திகள்தான்

எரியப் போகின்றன

என்பதை அறிவாயா?



நான்

பாறையாய் இருந்தபோதெல்லாம்

பூவைப் போல் வருடிக்கொடுத்தாய்!

இப்போது

பூவாக மாறியிருக்கிறேன்.

ஏன்

சொற்கள் என்னும்

சம்மட்டியால் அடிக்கிறாய்?



என்

மனமென்னும்

மரத்தடி நிழலில்

இதுவரை எத்தனையோ பேர்

இளைப்பாறிவிட்டுப் போனதுண்டு.

அப்போதெல்லாம்

ஆனந்தமாய்க் கிளைத்தேன்!

ஆனால்

நீ வந்த பிறகுதானடி

எங்கே வெளியேறிவிடுவாயோ

என்ற வேதனையிலேயே

பட்டுப் போகிறேன்!



நம் பிரிவு

நிரந்தரமானதென்று

நீயே முடிவுசெய்துவிட்டாயா?



எப்படிச் சொன்னாய்?

"
இந்தப் பிரிவு

நிரந்தரமானது போலத் தோன்றுகிறது!"



அடி பேதைப் பெண்ணே!

முத்து போனபிறகு

சமுத்திரத்திற்கு ஏதம்மா

சரித்திரம்?



"
மறக்க மாட்ட இல்ல?"

என்

அன்பின் மீது

அவ்வளவு சந்தேகமா?



இன்னும் நீ

நான்

"
நிரந்தரமாய்ப் பிரிந்துவிடுவேன்" என்று

நினைத்தால்

ஒரு வழி இருக்கிறது.



என் முகவரியை

அனுப்பி வைக்கிறேன்!

வந்து

உன் கூந்தல் பூவை

என் கல்லறையில் வைத்துவிட்டுப் போய்விடு.....



-----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

சந்தோஷம் சாமி! Empty Re: சந்தோஷம் சாமி!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jul 13, 2012 6:11 pm

என் கல்நெஞ்சை
ஏன் கண்ணாடியாய் மாற்றினாய்?
உன் நினைவுக்கற்களால்
உடைபட்டுச் சிதறும்
இருதயச் சில்லுகள் ஒவ்வொன்றும்
என் உயிரைக் கிழிக்கின்றன...

- காதலின் வரிகள்... கடைசி அடிகள் மனத்தைக் கணக்கச் செய்துவி்ட்டது. காதலிப்பவர்களுக்கு ஏற்படுவதுதான். கவிதையில் காதல் பொங்கி வழிகிறது... தோட்டம் நிறையட்டும்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சந்தோஷம் சாமி! Empty Re: சந்தோஷம் சாமி!

Post by கலைவேந்தன் Sat Jul 14, 2012 3:29 pm

நெஞ்சைப்பிழிந்து சென்ற ஓர் அழகிய காதல் கவிதை..

ரௌத்திரனுக்கு ஆவேசமாய் மட்டுமே எழுதத்தெரியும் என நான் முன்னர் கொண்ட கருத்தை மாற்றியமைத்த கவிதை..!!

பாராட்டுகள் இளவலே..!!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

சந்தோஷம் சாமி! Empty Re: சந்தோஷம் சாமி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jul 14, 2012 4:23 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சந்தோஷம் சாமி! Empty Re: சந்தோஷம் சாமி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum