தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நிகமானந்தா!
3 posters
Page 1 of 1
நிகமானந்தா!
"மங்கையர்தம் கற்பினைப்போல் நதிகள் தாமும்
====மாசுறாமல் காத்திடுதல் வேண்டு மன்றோ?
கங்கைதனில் தொழிற்சாலைக் கழிவு வந்துக்
====கலப்பதனை உடனடியாய்த் தடுத்தல் வேண்டும்
இங்கிதனை மனத்திடையே அரசு கொண்டு
====இதற்கொரு தீர்வுதரல் வேண்டும்" என்று
பொங்கிநின்றான்; போராட்டம் தனிலி றங்கி
====புதுமைவழி காட்டியவன் நிகமா னந்தா!
காலங்கள் பலவாக நமது நாட்டில்
====காவியெனில் கயமையதன் நிறமாய் மாறிக்
கோலங்கள் காட்டியது; அதனை மாற்றிக்
====காவியெனில் என்றைக்கும் புரட்சி யென்றே
ஞாலத்தில் நாட்டவந்தான்; கிழக்கில் தோன்றும்
====ஞாயிறுபோல் உலகுக்காய் எரிந்து நின்றான்!
பாலத்தைக் கட்டிவைத்தான் ஆன்மீ கத்தைப்
====புரட்சியொடு இணைத்திட்டான் வாழ்க மாதோ!
பொன்னுக்கும் பொருளுக்கும் ஆன்மீ கத்தைப்
====பயன்படுத்தும் புலையரிடை, நாட்டு மக்கள்
நன்மைக்குப் பயன்படுத்தி மாண்ட நல்லோன்!
====நாட்பலவாய் உண்ணாமல் நோன்பி ருந்து
மண்ணுக்குள் புதைந்திட்டான்; மாணிக் கங்கள்
====மேதினியில் பலகாலம் வாழ்வ தில்லை!
விண்ணுக்குள் அவர்மறைந்து போனா லென்ன?
====வரலாறாய் நம்மிடையில் வாழ்ந்தி ருப்பார்!
கோவிலுக்குத் தீபங்கள் தேவை யில்லை!
=====குறைகளிங்கு அவற்றாலே தீர்வ தில்லை!
கோவிலுக்குள் தீபங்கள் எரிந்தால் ஏழைக்
=====குடிசைக்குள் சூழ்ந்தவிருள் மறைந்து போமோ?
கோவிலுக்குள் எரிகின்ற தீபம் போன்றோர்
=====காவிக்குள் வாழ்கின்ற துறவோர் தாமும்!
கோவிலுக்குள் தீபமென இருத்தல் வாழ்வோ?
=====குடிசைக்குள் தீபமெனக் கருகல் வாழ்வு!
இத்தகைய சிந்தனைகள் வளர்ந்து விட்டால்
====இம்மியும் துயரங்கள் சூழ்வ துண்டோ?
சத்திரங்கள் தாமுமிங்கு முயன்று நின்றால்
====சரித்திரங்கள் படைத்திடலாம் உண்மை யன்றோ?
சித்துகளைப் புரிந்திங்கு மக்கள் வாழ்வைச்
====சீர்குலையச் செய்பவர்கள் தலைது ணித்தே
நித்தமிங்கு புரட்சிபல நடத்தி வைப்போம்
====நானிலத்தில் நன்மையினை நாட்டி வைப்போம்!
பத்திதனைக் கடைச்சரக்காய் மாற்றி மிக்கப்
====பொருள்சேர்த்து வாழுகின்ற சாமி யார்க்கும்
வித்தைகள் பலபுரிந்து தமது மேனி
====மினுமினுப்புக் காட்டிவாழும் வேசி யர்க்கும்
இத்தரணி மீதினிலே வேற்று மைகள்
====இம்மியள வேனுந்தான் உண்டோ கூறீர்!
சத்தியமும் கடைச்சரக்காய் போகக் கண்டும்
====சகித்துக்கொண் டிருப்பமெனில் ஆண்மை உண்டோ?
பொங்கட்டும் நாளுமொரு புரட்சி இங்கு!
====பொடிப்பொடியா கட்டும்போ லித்த னங்கள்!
மங்கட்டும் பொன்னெனவே போக்குக் காட்டும்
====மதியிழந்த மத்தர்தம் அரிதா ரங்கள்!
தொங்கட்டும் நம்வேஷம் கலைந்த தென்றே
=====தருக்கர்தம் தலைகளெல்லாம் அவமா னத்தால்!
தங்கட்டும் பூமியிலே மனித நேயம்
=====தழைக்கட்டும் நிகமானந் தாவின் நாமம்!
(மாத்ரிசன் என்னும் ஆசிரமத்தின் 34 வயதான
சாமியார் நிகமானந்தா.
ரிஷிகேஷம் முதல் பிரயாகை வரையிலான
பகுதியில் 146 தொழிற்சாலைகளின் கழிவுகளும்
நுற்றுக்கு மேற்பட்ட சிறு பெரு நகரங்களின்
சாக்கடைகளும் கங்கையில் கலப்பதைத் தடுத்து
அந்த நதியைப் பராமரிக்கக் கோரி 1998 -ல்
73 நாட்களும்,2010 -ல்68நாட்களும்உண்ணாவிரதம்
இருந்தார்.ஆனால் உத்தர்கண்டை ஆண்ட ப.ஜ.க.
அதனைக் கண்டுகொள்ளவில்லை.2011 பிப்ரவரி19
அன்று மேலும் 27 நாட்கள் உண்ணாவிரதம்
மேற்கொண்டு உடல் நிலைபாதிக்கப்பட்ட
நிகமானந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோமா நிலைக்குத் தள்ளப் பட்டு
ஜூன் 13 ம் தேதி மரணத்தைத் தழுவினார்.
நாட்டு மக்களின் நன்மைக்காக கங்கையைச்
சுத்தம் செய்யச் சொல்லிக் கூவத்திடம்(அரசு)
போராடி உயிர்துறந்த அந்தத் தியாகச் சாமியாருக்கு இது சமர்ப்பணம்)
--------ரௌத்திரன்
ரௌத்திரன்- மல்லிகை
- Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்
Re: நிகமானந்தா!
கோவிலுக்குள் எரிகின்ற தீபம் போன்றோர்
=====காவிக்குள் வாழ்கின்ற துறவோர் தாமும்!
கோவிலுக்குள் தீபமென இருத்தல் வாழ்வோ?
=====குடிசைக்குள் தீபமெனக் கருகல் வாழ்வு!
- கருகிய வாழ்வு... இன்று கொஞ்சம் வெற்றியைக் கண்டுள்ளது. உங்கள் கவிதை அவரின் மனத்தை சாந்தி அடைய செய்திருக்கும். பாராட்டுகள்.
=====காவிக்குள் வாழ்கின்ற துறவோர் தாமும்!
கோவிலுக்குள் தீபமென இருத்தல் வாழ்வோ?
=====குடிசைக்குள் தீபமெனக் கருகல் வாழ்வு!
- கருகிய வாழ்வு... இன்று கொஞ்சம் வெற்றியைக் கண்டுள்ளது. உங்கள் கவிதை அவரின் மனத்தை சாந்தி அடைய செய்திருக்கும். பாராட்டுகள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நிகமானந்தா!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum