தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆயினும் என்ன?
3 posters
Page 1 of 1
ஆயினும் என்ன?
(என் வாழ்வில் காதல் என்ற விபத்து இரண்டாவது முறையாக
நிகழ்ந்தபோது, என்ன நடந்ததோ நானுற்ற உணர்ச்சிகளும்
பாதிப்புகளும் எவையோ அவற்றை இங்கு ஒருவன் முதன்முறை சந்திப்பதாக பதிவுசெய்துள்ளேன்.)
கனவுகளின்
கதகதப்பில்-என்
கண்களை உறங்கவைத்தவளே!
நினைவுகளால் குடைவிரித்து
நெஞ்சுக்கு
நிழல் கொடுத்தவளே!
ஆலமரம் என்று
நினைத்தேன் என்னை!
அருகம்புல்லாய்
அறுத்தாய்....
மழு என்று
நினைத்தேன் என்னை!
மழுவெடுத்து
மலர்க்கூந்தல் கோதிக்கொண்டாய்...
எவளும் நுழைந்துவிடக் கூடாதென்று
இதயத்தைப் பூட்டிச்
சாவியைத் தொலைத்தேன்!
கண்கள் என்னும்
கள்ளச் சாவி
கொண்டுவந்தாய்....
இரண்டாம் உலகம்போரில்
பிரிட்டனைப்
பயமுறுத்திய
ஜெர்மன் கப்பற்படை போல்
அதிரடியாய்-என்
அஸ்திவாரம்
அசைத்தாய்....
பாதரசம்
பூசப்படாத கண்ணாடி
என் இதயம்.
அதில்
முதலும் கடைசியுமாய்
முகம்பார்த்தவள் நீதானடி...!
நான்
கருமியின் புதையலாய்க்
காதலை மறைத்தேன்!
ஆனாலும்
சிறகின் கதகதப்பில்
குஞ்சு
கருகிவிடக் கூடாதென்று
கண்டுகொண்டேன்...
திரைக்குள் போடும் நாடகத்திற்கு
விருதுகள் கிடைக்காதென்று
விளங்கினேன்....
என் வெட்கத்தின் நீள அகலமே
என் காதலின் கல்லறைக்கான
அளவுகோலாய்
ஆகிவிடக் கூடாதென்று
அறிந்துகொண்டேன்.....
பேச்சுப் போட்டிக்காய்
முதன்முதலில்
மேடை ஏறியவன்போல்
உளறி உளறிக்
குளறிக் குளறிக்
காதல் ஒப்பித்தேன்!
நீயோ
அமைதியாய்
அதே நேரம்
அழுத்தமாய்ச் சொன்னாய்.
அந்த நொடி....
இதுவரை
இந்த பூமி சந்தித்த
ஒட்டுமொத்த பூகம்பங்களும்
ஒன்றாய் நிகழ்ந்தது
என் இருதயப் பரப்பில்.....
அதை
நீ அறிய
நியாயமில்லை!
கடலுக்குள் வெடிக்கும் எரிமலையின் சப்தம்
கரைக்குக் கேட்க வழியில்லை..
ஆம்,
அதை
நீ அறிய
நியாயமில்லை!
ஓ!
அடுத்தவன் வாசலென்று
அறியாமல்
கோலம் போட வந்தேனா?
மாலையில் சேர்ந்தபிறகு
மலரை வண்டு
மொய்க்க வந்ததா?
ஆயினும் என்ன?
உன்னை நான் மறத்தற்கில்லை!
காற்று
கைக்குச் சிக்கவில்லை என்பதற்காக
சுவாசத்தை யாரும்
நிறுத்திக்கொள்வதில்லை!
நானுன்னை மறத்தற்கில்லை!
நேற்றுவரை
நீயென் வானத்தில்
நிலவு.
இன்றுமுதல்
நீயென்
வானத்தில் ஆறாத
வடு......
--------------ரௌத்திரன்
ரௌத்திரன்- மல்லிகை
- Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்
Re: ஆயினும் என்ன?
காதலின் வடுக்கள்தான்
காதல் தோல்வி
வடுக்களில் ரத்தம் வந்துகொண்டேயிருந்தாரும்
ரசித்துக்கொண்டேதானிருப்போம்.
கவிதை அழகு... காதலின் ஆழம் முதல்காதலில்தான் அதிகம் என் அனுபவமும்கூட...
இரண்டாவது காதலில் காமம் கலந்தவிடுகிறது என்பது எதார்த்தமான உண்மை...
காதல் தோல்வி
வடுக்களில் ரத்தம் வந்துகொண்டேயிருந்தாரும்
ரசித்துக்கொண்டேதானிருப்போம்.
கவிதை அழகு... காதலின் ஆழம் முதல்காதலில்தான் அதிகம் என் அனுபவமும்கூட...
இரண்டாவது காதலில் காமம் கலந்தவிடுகிறது என்பது எதார்த்தமான உண்மை...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஆயினும் என்ன?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» அண்றாட உணவில் நெய் - என்ன என்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது ?
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? பகுதி 2
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? பகுதி 1
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?பாகம் 3
» அண்றாட உணவில் நெய் - என்ன என்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது ?
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? பகுதி 2
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? பகுதி 1
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?பாகம் 3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum