தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கற்பு என்றால் என்ன?
4 posters
Page 1 of 1
கற்பு என்றால் என்ன?
கற்பு என்றால் என்ன? – இந்திரா பார்த்தசாரதி
அற்ப விஷயங்களையும் அரசியலாக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வாயில் அகப்பட்டு, சமீபத்தில், மிகவும் அவதியுற்றச் சொல், ‘ கற்பு ‘.
‘கற்பு ‘ என்றால் என்ன ?
‘கல் ‘ என்ற வேர்ச்சொல்லினின்றும் பிறந்தவை ‘கற்பு ‘, ‘கல்வி ‘ போன்ற சொற்கள்.
‘கல் ‘ என்றால், ‘தோண்டுதல் ‘. ஆங்கிலச் சொல், ‘ cultivate ‘, ‘culture ‘ போன்ற சொற்களும் இந்தத் ‘ தோண்டுதலை ‘ ( ‘உழுதல் ‘- லத்தீன்-cultivatus) அடிப்படையாகக் கொண்டு பிறந்த சொற்கள்தாம்.
கற்பிக்கப்படுவது எதுவோ அது ‘கற்பு ‘. கல்வியினால் உண்டாகும் ஞானமும் ‘கற்பு ‘தான். ‘பெரிய திருமொழியில் ‘ (திருமங்கைமன்னன்), ‘கற்பு ‘ என்ற சொல் ‘பெரிய ஞானம் ‘ என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது.
‘ஆழி ஏந்திய கையனை, அந்தணர்
கற்பினை கழுநீர் மலரும் வயல்
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே ‘.
‘அந்தணர் கற்பு ‘ என்றால் ‘சான்றோர் ஞானம் ‘ என்ற பொருள்.
அகத்திணை ஒழுக்கத்தில் ‘களவு ‘க்குப் பிறகு, ‘கற்பு ‘.
‘களவு ‘ என்றால் என்ன ?
தொல்காப்பியம் கூறுகிறது:
‘ இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணுங்காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்பே ‘
இன்பமும், பொருளும், அறனுமென்று கூறப்பட்ட மூவகைப் பொருள்களுள், முதன்முதல் சந்திக்கும், திருமணம் ஆகாத இளம் ஆண், பெண் ஆகிய இருவரிடையே தோன்றும் அன்பின் விளைவாக ஏற்படும் இன்பத்தின் பகுதியாகிய புணர்தல் முதலிய ஐவகைப்பட்ட ஒழுக்கம். ‘காமக் கூட்டம் ‘ என்பது, ‘புணர்தலை ‘க் குறிக்கும்.
வேதத்துள் குறிப்பிடப்பட்டுள்ள எட்டுவகை மணங்களுள், ‘களவு ‘, ‘கந்தர்வத் ‘ திருமணமாகும் என்பது நச்சினார்க்கினியர் கருத்து. ‘கந்தருவ குமரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்தது போலத் தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டுப் புணர்வது, ‘ என்கிறார் நச்சினார்க்கினியர். சகுந்தலையும் துஷ்யந்தனும் வனத்தில் சந்தித்துப் புணர்ந்தது கந்தர்வம்.
‘கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும்; ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாதென்றற்குத் ‘துறையமை ‘ என்றார் ‘ என்று மேலும் கூறுகிறார் நச்சினார்க்கினியர்.
‘கற்பின்றி ‘ என்றால் என்ன பொருள் ? ‘கற்பு ‘ என்றால் திருமணம். மக்களைப் பொருத்த வரையில், களவொழுக்கம் பயிலுகின்ற தலைவனும் தலைவனும் திருமணம் செய்துகொண்டாக வேண்டும். கந்தருவர்களுக்கு இந்தச் சட்டம் கிடையாது. அதே சமயத்தில், திருமணத்துக்கு முன்பு, களவொழுக்கத்தில் இருக்கும் தலைவனும் தலைவியும் புணர்தல்( உடலுறவு) குறித்துச் சமூகத் தடை ஏதுமில்லை.
‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரிய மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுமே ‘
தலைவன், தலைவி ஆகிய இருவருடைய பெற்றோர்கள், இருவருக்கும் களவுக்குப் பிறகு, இருவருடைய உறவையும் உறுதிப் படுத்த நிகழ்த்தும் சடங்கே ‘கற்பு ‘
எனப்படும். ‘கற்பியல் ‘ என்று தொல்காப்பியத்தில் வரும் பகுதியில், திருமணத்துக்குப் பிறகு, தலைவன், தலைவி, தோழி, போன்றோர் எந்தெந்தச் சூழ்நிலையில் பேசுவார்கள்
என்ற செய்திகள் அனைத்தையும் நாடகக் காட்சிகள் போல் சித்திரித்துக் கூறப்படுகின்றன.
‘கற்பியலில் ‘, ஊடல் பற்றியும்( கணவனுடைய பரத்தையர் தொடர்பின் காரணமாக அவனுக்கும் அவன் மனைவிக்குமிடையே உண்டாகும் பூசல்கள்) , கணவன் பொருள் தேடவோ அல்லது உயர்கல்வி படிப்பதற்கோ அல்லது அரசு காரியமாகவோ மனைவியிடமிருந்து பிரிந்தால் அப்பிரிவு பற்றியும், பிரிந்திருக்கும் காலத்தில் மனைவியின் பொறுமை காத்து இருத்தல் பற்றியும் பேசப்படும். புணர்ச்சியைப் பற்றிய செய்தி ‘கற்பியலில் ‘, நினைவு கூர்தலாகக் கூறப்படுமே யன்றி, நிகழும் செயலாகச் சித்திரிக்கப்படவில்லை. . அதாவது, திருமணத்துக்கு(கற்புக்கு) அடிப்படையான, தலைவன் -தலைவிக்கிடையே நிகழும் புணர்ச்சி (உடலுறவு) திருமணத்துக்கு(கற்பு) முந்திய ஒழுக்கமாகிய ‘களவிலேயே ‘ கூறப்பட்டுவிடுகிறது என்பது பொருள்.
‘ மெய்தொட்டுப் பயிறல் பொய் பாராட்டல்
இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்
நீடுநினைந்திரங்கல் கூடுதலுறுதல் ‘
எண்று கூறுகிறார் தொல்காப்பியர்.
இதற்குச் சான்றாகக் குறுந்தொகைப் பாடலை எடுத்துக் காட்டுகிறார் நச்சினார்க்கினியர்.
‘ஒடுங்கீரோதி ஒண்ணுதற் குறுமகள்
நறுந்தண் ணீர ளாரணங் கினளே
இனையள் என்றவள் புனையளவு அறியேன்
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே ‘
இப்பாடல், புணர்ந்து நீங்கும் தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்லியது
‘தலைவியைத் தழுவும் போது , கூந்தலாலும், நெற்றியாலும், மெய்யெங்கும் பரவியுள்ள இனிமையாலும் கண்ணிற்கும், நல்ல நறுமணத்தால் மூக்கிற்கும், தண்ணிய நீரின் தன்மையால் வாய்க்கும் மெல்லிய சொற்கள் பேசுதலால் செவிக்கும், மெல்லிய இயல்பால் உடம்பிற்கும் கண்டு, கேட்டு,உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலன் இன்பங்களையும் ஒருங்கே தந்தாள். அவளைத் தழுவதழுவ, மேலும் தழுவ வேண்டுமென்ற வேட்கை உண்டாகின்றது.. ‘
இதைப் பார்க்கும்போது, களவொழுக்கம் வெறும் platonic love தான் என்று சொல்லமுடியுமா ?
இதனால், ஒருவரை யொருவர் விரும்புகின்ற ஆணும் பெண்ணும் அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு உடலுறவு கொள்ளுவதில் தமிழ் மரபில் எந்தவிதமான சமூகத் தடையும் இருந்தததாகத் தெரியவில்லை. கட்டில், கல்யாணத்தில் முடியவேண்டும் என்பதுதான் கட்டளை.
தொடக்கக் காலத்தில், ஓர் ஆணும் பெண்ணும் திருமணமாகி ஒருவரை யொருவர் புரிந்து கொண்டு, இல்லறம் என்ற நல்லறம் பயிலுதலைச் கூற வந்த ‘கற்பு ‘ என்ற சொல், பிற்காலத்தில், பெண்ணைச் சார்த்தியே பேசப்பட்டு, அவளுடைய பதிவிரதா தன்மையும், ‘பொறுமையும் ‘ ( முல்லைத்திணை ஒழுக்கமாகிய ‘இருத்தல் ‘ என்ற பண்பு)
குறிக்க வந்த சொல்லாக மாறிவிட்டது.
இதற்கு என்ன காரணம் ?
பெண்ணைக் கண்டு ஆண் அஞ்சுகிறான். அவளுடைய சக்திக்கு எல்லையில்லை என்ற பயம். அவளை அடக்கி ஆளுதல்தான் தனக்குத் தற்காப்பு என்று நினைக்கின்றான். ‘இயற்கையைப் பெண்ணாக பாவிக்கும் மனிதன், அவளைக்கண்டு அஞ்சிய நிலையில்,
சுற்றுப்புறச் சூழலை அழிப்பதின் மூலம், அவளைக் கற்பழிப்பதாக நினைத்துத் தன்
ஆளுமையையும் ஆக்ரமிப்பையும் உணர்த்துகிறான் ‘ என்கிறார் காப்ரா.
இந்திய ஆணின் பெண்ணைப் பற்றிய அடிமன அச்சந்தான் துர்க்கையின் உருவகம்.
அவளுடைய சீற்றம் அடங்கிய நிலையில், ஆணின் ஆளுமைக்குட்பட்ட நிலையில்,
உமாவாகி, சாந்தத்தின் உறைவிடமாகத் திகழ்கிறாள். இந்தியாவில் பெண்களுடைய ‘தீட்டு ‘ பற்றிய சிந்தனையும் அச்ச உணர்வின் அடிபடையில் உருவானதுதான் என்று சில மேல்நாட்டு அறிஞர்கள் கருதுகிறார்கள்.
தமிழில், ‘அணங்கு ‘ என்ற சொல், ‘ பேயை ‘ யும், ‘பெண் ‘ ணையும் குறிக்கின்றது என்பது சிந்தித்தற்குரியது.
ஆகவே, பெண்ணைக் கண்டு அஞ்சும் ஆண், அவளுக்குக் ‘கற்பு ‘ என்ற பொன் விலங்கைப் பூட்டியிருக்கிறான் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அவளை ‘ ‘பத்தினி ‘ யாக்கி அடக்குவதாகும். அநியாயத்தைப் பொறுக்கமுடியாத சீற்றத்தில், மதுரையை எரித்த கண்ணகி, தன் நாட்டு எல்லைப்புறத்துக்கு வந்து சொர்க்கம் எய்தினாள் என்று கேட்டு, அவள் சீற்றம் இன்னும் எஞ்சியிருக்கமோ என்று அஞ்சி, அவளை ‘ ‘பத்தினிக் கடவுளாக்கி ‘ அவள் சினத்தைத் தணிக்க முயல்கிறான் சேரன் செங்குட்டுவன்
பெண்களுடைய ‘கற்பு ‘ப் பற்றிய விவாதத்தை முதலில் தொடங்கி வைத்தவன்,
சேரன் செங்குட்டுவன். சாத்தனாரிடமிருந்து கண்ணகி வரலாற்றைக் கேட்டபின்,
தன் கணவன் உயிர் நீத்தவுடன் அவனைத் தொடர்ந்து உயிர்நீத்த பாண்டிய மாதேவி,
கோவலன் கொல்லப்பட்டவுடன் அவனைத் தொடராமல், வழக்காடி வென்ற பிறகு அவனோடு சொர்க்கம் புகுந்த கண்ணகி ஆகிய இருவர்களில் யார் சிறந்தவர் என்று தன் மனைவியை வினவி, இக்காலப் பட்டிமன்ற வீரர்களுக்கு முன்னோடியாக
விளங்குகிறான்! இக்காலப் பட்டிமன்ற வீரர்களும் அவனை ஏமாற்றிவிடவில்லை.
‘அறக்கற்பு ‘, ‘ மறக்கற்பு ‘ போன்ற சொற்களை வீசிச் சொற்சிலம்பம் ஆடி
வருகின்றனர்.
திருமணத்துக்கு முன் தலைவனும் தலைவியும் உள்ளப் புணர்ச்சியாகிய இயற்கைப் புணர்ச்சிப் பழகினார்களே தவிர( platonic love) உடல் உறவு கொண்டிருக்க இயலாது என்று தமிழ்ப் பெண்களுடைய கற்புக் காவலர்கள் இப்பொழுது கூறுகிறார்கள். அப்படி உடல் உறவு கொண்டிருந்தால், திருமணம் ஆவதற்கு முன் கருவுற்றார்கள் என்பதற்குச் சான்றுகள் சங்கப் பாடல்களில் இருந்திருக்கும் என்பது அவர்கள் வாதம்!
‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப ‘
என்கிறார் தொல்காப்பியர்.
களவொழுக்கத்தில், பொய்யும், குற்றமும் ஏற்படத்தொடங்கிய பிறகு, குடும்ப மூத்தவர்கள் திருமணச் சடங்குக்குத் தான் முன்னுரிமை தந்தார்கள் என்பது இதன் கருத்து. ‘பொய் ‘, ‘வழு ‘ என்று குறிப்பிடப்படுபவை யாவை ? ‘பொய்யாவது செய்த ஒன்றனைச் செய்திலேன் என்றல்; வழுவாவது சொல்லுதலே அன்றி ஒழுக்கத்து இழுக்கி ஒழுகல் ‘ என்று உரை எழுதுகிறார் நச்சினார்க்கினியர். திருமணச் சடங்குக்குச் சான்றாக, அகநானூற்றுப் பாடலொன்றை எடுத்துக் காட்டுகிறாரேயன்றி, ‘பொய் ‘ ‘வழு ‘ ஆகியவற்றுக்கு அவர் எடுத்துக் காட்டு ஏதும் தரவில்லை. காரணம், அத்தகையப் பாடல்கள் இருந்திருந்தாலும், தொகை நூல்களில் இடம் பெறாமல் தணிக்கைச் செய்யப் பட்டிருக்கக் கூடும். அல்லது, உரையாசிரியர்களே இதற்கு உதாரணம் காட்ட விரும்பாமலும் இருந்திருக்கலாம்.
திருமணச் சடங்குக்கு நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டியிருக்கும் அகச்செய்யுள், வாயில் மறுத்த தோழிக்குத் தலைவன் கூறுவதாக மருதத் திணையில் வருகின்றது. பரத்தையரிடமிருந்துவருகின்ற தலைவனை வீட்டுக்குள் அணுமதிக்கத் தோழி மறுப்பதுதுதான் ‘வாயில் மறுத்தலா ‘கும். தலைவி ஊடலைச் சொல்வதுதான் மருதத்திணை. வாயில் மறுக்கப்பட்ட தலைவன், தனக்கும் தலைவிக்கும் நடந்த திருமணச் சடங்கை நினைவு கூர்ந்து தோழியிடம் சொல்லுகிறான். ஆகவே இதுவும் திருமணச் சடங்கை விளக்குவதற்காகஅமைந்த பாடல் என்றும் கூறமுடியாது. ‘களவொ ‘ழுக்கத்துக்குப் பிறகு, தலைவனும் தலைவியும் பெற்றோர்கள் சம்மதத்துடன் ஒன்று கூடி வாழும் தோழமையைத்தான் ‘கற்பு ‘ என்று கருதினார்களோ என்று நினைக்க இடமிருக்கிறது.
திருமணச் சடங்கை வேதநெறிக்குள் அடக்கப் பார்க்கிறார் நச்சினார்க்கினியர். கரணம்
‘நிகழுங்கால் இவளை இன்னவாறு பாதுகாப்பாயெனவும், இவனுக்கு நீ குற்றேவல் செய்து ஒழுகுவாயாக எனவும், அங்கியங்கடவுள் அறிகரியாக( அக்னிச் சாட்சியாக)
மந்திரவகையாள் கற்பிக்கப்படுதலின் அத்தொழிலைக் ‘கற்பு ‘ என்றார் ‘ என்பது நச்சினார்க்கினியர் வாக்கு. வேத நெறியைப் பற்றியோ அல்லது அக்னிக் கடவுள் சாட்சியாக இருப்பது பற்றியோ தொல்காப்பியர் எதுவும் கூறவில்லை.
தலைவன் நினைவுகூர்வதாகக் கூறப்படும் திருமணச் சடங்கு என்ன ?
‘ அந்நாள், தீய கோள்கள் நீங்கப்பெற்ற, வளைந்த வெண்மையான திங்களைத் தீமையற்ற, புகழையுடைய உரோகிணி நட்சத்திரம் வந்து கூடும் நன்னாள்.அதுவே எங்கள் திருமண நாள்.உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த குழைவாக வெந்த பொங்கலோடு பெரும் சோற்றுத் திரளை உண்பது இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது. வரிசையாகக் கால்களை நட்டுக் குளிர்ந்த பெரிய பந்தலை அமைத்தனர். அப்பந்தலில், கொண்டு வந்த மணலைப் பரப்பினர். மனையின்கண் விளக்கினை ஏற்றி மாலைகளைத் தொங்கவிட்டனர். பொழுது புலர்ந்ததும், முதிய
மகளிர், தலையில் நீர்க்குடத்தினைச் சுமந்தவராய்க் கைகளில் புதிய மண்டை எனும்
கலத்தினை ஏந்தியவராய் ஒருங்கு கூடினர்..முன்னே தருவனவற்றையும் பின்னே தருவனவற்றையும் முறை முறையாக் எடுத்துத் தந்த வண்ணமிருந்தனர். தேமல் படர்ந்த அழகிய வயிற்றினையுடைய தூய அணிகலன்களை அணிந்த மகனைப் பெற்றெடுத்த
மகளிர் நால்வர், ‘ தோழமையினின்றும் வழுவாது நீங்கள் இருவரும் ஒருவரையொருவர்
பேணுவதில் பெரும் விருப்பத்துடன் இருப்பீர்களாக ‘ என்று வாழ்த்தி, மலருடன் கூடிய
நெல்லை அவள் கரிய கூந்தலின்மீது தூவினர். சுற்றத்தினர் கல்லென்ற ஒலியினராய் விரைந்து வந்து, ‘பெருமனைக் கிழத்தி ஆவாய் ‘ என்று கூறி, ஓர் அறையினில் என்னுடன் அவளைக் கூட்ட, அன்றிரவு நாங்கள் புணர்ந்தோம். பிறகு, முதுகினை
வளைத்துக் கொண்டு அவள் புடவைக்குள்ளே ஒடுங்கிக் கிடந்தாள். அவளை அணுகி அவள் முதுகை அணைத்துக் கொள்ளும் விருப்பத்துடன் முகத்தை மூடியிருந்த ஆடையை விலக்கினேன். அவளோ அச்சத்துடன் பெருமூச்சு விட்டாள். அவளை மகிச்சியுடன், இருக்கையில் அமர்த்தி, ‘ உன் நெஞ்சத்து நினைத்ததை மறையாது உரைப்பாயாக ‘ என்றேன். மானின் மடப்பத்தினையும், செருக்கிய பார்வையையும் கொண்ட கண்களையும், குளிர்ந்த கூந்தலையும் உடைய மாமை நிறமுடைய என் தலைவி, உள்ளம் நிறைந்த உவகையளாகி, முகம் தாழ்த்தி என்னை வணங்கினாள் ‘
தோழி வாயில் மறுத்தபோது, தலைவன் அவளிடத்து இவ்வாறு கூறியதாகப் பாட்டில் ஒரு குறிப்பும் இல்லை. அவன் இதை தலைவியிடத்தும் கூறியிருக்கக்கூடும். இல்லறக் காட்சி என்பதாலும், நெல், உழுத்தம் பருப்பு முதலியவற்றால் மருதத் திணையாகி, அந்நிலத்து ஒழுக்கமாகிய ஊடலுக்கேற்ப, வாயில் மறுக்கப்பட்ட நிலையில் தலைவன்
கூறுகின்றான் என்ற நாடகக் காட்சி, தொகுத்தவர்களின் கற்பனையாகக் கூட இருக்கலாம். இப்பாட்டில், திருமணச் சடங்கு சமயச் சார்பு ஏதுமில்லாமல், ஒரு secular
நிகழ்வைக் கூறுவதைப் போலத்தான் அமைந்திருக்கின்றது என்பதைக் கவனிக்க வேண்டும். சடங்கு கூட இங்கு அவ்வளவு முக்கியமாகத் தெரியவில்லை. கற்பு நிலையாக, தலைவந்தலைவிக்குமிடையே தோழமைதான்( companionship ) வற்புறுத்திப் பேசப்படுகிறது. இங்குத் திருமணத்துக்குப் பிறகு, தலைவனும் தலைவியும் பெற்றோர்
ஒப்புதலுடன் ஓர் அறையில் இணைவதும், ‘ புணர்ச்சி ‘ என்றுதான் கூறப்படுகிறது.
‘ஓர் இற் கூடிய புணர் கங்குல் ‘ , (அதாவது, இல்லத்தில், ஓர் அறையில், இரவில் அதிகாரப் பூர்வமாகக் கூடுதல்) என்பது அகநானூற்று வரி.
ஆகவே, களவொழுக்கத்தின்போது கூறப்படும் ‘புணர்ச்சி ‘, உடலுறவைக் குறிக்காது என்று சொல்வது தவறு. புணர்ச்சிப் பழகுகிறவர்கள் திருமணம் செய்துகொண்டாக
வேண்டும் ஒரு கட்டாய நியதி இருந்தது. இக்கால ஆணினத் தமிழ்ப் பண்பாளர்களுக்கு, உடலுறவைப் பற்றிப் பொதுவாகவே இருக்கிற ஒரு.விசுவரூப மனச் சிக்கல் (magnificent obsession) அக்காலத் தமிழர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.
பக்தி இயக்கத்தின்போது பேசப்பட்ட, பக்தனுக்கும் இறைவனுக்குமிடையே ஏற்படுகின்ற தலைவி- தலைவன் உறவு (உடலுறவு உட்பட- bridal mysticism) தொன்மைத் தமிழிலக்கியங்களில் கூறப்படும் களவொழுக்கத்தைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Mon Oct 01, 2012 1:59 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கற்பு என்றால் என்ன?
கற்பு என்பது ஒழுக்கம்.
ஆணோ, பெண்ணோ ஒழுக்கமாக இருத்தலையே, கற்புடன் இருக்கிறார்கள் எனப் பேசப்பட்டு வருகிறதே

yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: கற்பு என்றால் என்ன?
கற்பு என்ற சொல் பயின்று வந்த கால சூழலை - காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அந்தக் கட்டுரை விவரிக்கிறது.
இன்று கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கற்பை - ஒழுக்கமாக நாம் ஏற்றக்கொள்ளும் நிலையில் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி - ஒருத்திக்கு ஒருவன் என்கிற மனநிறைவு இப்போது இல்லை - காதல் தோல்வியும் இதற்கு முக்கியக் காரணம்.
கற்பே அவரவர் வாழ்க்கையை உயர்த்தும்.
இன்று கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கற்பை - ஒழுக்கமாக நாம் ஏற்றக்கொள்ளும் நிலையில் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி - ஒருத்திக்கு ஒருவன் என்கிற மனநிறைவு இப்போது இல்லை - காதல் தோல்வியும் இதற்கு முக்கியக் காரணம்.
கற்பே அவரவர் வாழ்க்கையை உயர்த்தும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கற்பு என்றால் என்ன?
கவியருவி ம. ரமேஷ் wrote:கற்பு என்ற சொல் பயின்று வந்த கால சூழலை - காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அந்தக் கட்டுரை விவரிக்கிறது.
இன்று கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கற்பை - ஒழுக்கமாக நாம் ஏற்றக்கொள்ளும் நிலையில் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி - ஒருத்திக்கு ஒருவன் என்கிற மனநிறைவு இப்போது இல்லை - காதல் தோல்வியும் இதற்கு முக்கியக் காரணம்.
கற்பே அவரவர் வாழ்க்கையை உயர்த்தும்.
தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: கற்பு என்றால் என்ன?
மகிழ்ச்சி நண்பரே...
விரைவில் கற்பைப் பற்றிய கவிக்கோ அப்துல் ரகுமானின் கட்டுரையைப் பதிவுசெய்கிறேன்.
விரைவில் கற்பைப் பற்றிய கவிக்கோ அப்துல் ரகுமானின் கட்டுரையைப் பதிவுசெய்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கற்பு என்றால் என்ன?
கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி நண்பரே...
விரைவில் கற்பைப் பற்றிய கவிக்கோ அப்துல் ரகுமானின் கட்டுரையைப் பதிவுசெய்கிறேன்.
(கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளில் வடிவமும் வளமும் என்ற என்னுடைய முனைவர் பட்ட ( Ph.D., ) ஆய்வேட்டில் கற்பு பற்றி அப்துல் ரகுமானின் கூற்றை எடுத்துக்காட்டியுள்ளேன். அதை அப்படியே கொடுத்துள்ளேன்.)
கற்பு
ஆண்கள் கற்பிலிருந்து வெளிப்பட்டு நிற்பது போன்றே இன்றைய பெண்களும் கற்பிலிருந்து – கற்பு கோட்பாட்டிலிருந்து விலகவே முயற்சிக்கிறார்கள். காதல் தோல்வி அடையும்போது கற்பு என்பதும் கேள்விக்குறியாகிறது. இச்சைகள் மனிதர்களுக்கு ஒன்றானபோது பெண்ணுக்கு மட்டும் அதில் கட்டுப்பாடு விதிப்பது, இன்றைய நாகரிக – மேற்கத்திய கலாச்சாரத்துக்கு மாறிவிட்ட நமக்கு சிறிதும் பொருந்தி வராது. விவாகரத்து – இரண்டாவது மூன்றாவது திருமணம் என்று செய்து கொள்ளும் போதும் ‘லிவிங் டூகெதர்’ வாழ்க்கை முறைக்கு நம்மை உட்படுத்திக் கொண்ட போதும், பாதுகாப்பான உடலுறவைப் பற்றிய பேச்சும் கற்பை கேள்விக் குறியாகிவிட்டது.
மனிதன் வாழ்வாங்கு வாழ அறநூல்களை பல அறநெறிகளை வகுத்துக் கொடுத்துள்ளன. பெண்களுக்கென வகுத்துக் கொடுத்த அறநெறிகளுள் ‘கற்பு’ என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு வந்துள்ளது. அறநூல்கள் மட்டுமன்றிச் சங்க காலம் தொடங்கி இன்றுவரை உள்ள இலக்கியங்களும் கற்பைப் பெண்ணுக்கு மட்டுமே உரியதாக்கி வேடிக்கை பார்க்கின்றன. மிகச் சிலவே கற்பை இருபாலருக்கும் பொதுவாகக் வேண்டும் என்ற சிந்தனையை முன்வைக்கின்றன. கற்பு என்பது கணவனிலும் தெய்வம் வேறில்லையென எண்ணிக் கலங்காது அவனை வழிபடுவது (அபிதான சிந்தாமணி, ப.383.) என அபிதான சிந்தாமணி கூறுகிறது.
தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் கற்பு என்பதற்கு உரை கூறவந்த நச்சினார்க்கினியர்,
“கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
(தொல்காப்பியம், ‘கற்பியல்’, நூற்பா.142.)
என்ற நூற்பாவுக்கு உரை எழுதும்போது ‘கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும், அவனை இன்னவாறே வழிபடுகவெனவும் இருமுது குரவர் கற்பித்தலானும் ‘அந்தணர் திறத்துஞ் சான்றோர்தே எத்தும்’, ‘ஐயர் பாங்கினும் அமரர்ச்சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் தலைமகன் கற்பித்தலானும் கற்பாயிற்று’ (தொல்காப்பியம், ‘கற்பியல்’, நச்சினார்க்கினியர் உரை, ப.163.) என்கிறார் நச்சினார்க்கினியர். இங்குக் ‘கற்றல்’ என்ற பொருளிலேயே கற்பு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கற்பைப் பற்றிக் கவிக்கோ விளக்குகையில்,
கற்புக்குப் பல்வேறு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் உண்மையான பொருள் ஒரு பெண் இவன்தான் என் கணவன் என்று தானே கற்பித்துக் கொள்வது என்பதுதான். கற்பு என்பதன் பொருள் புரியாத சிலர் அதைப் பெண்ணுக்கு மட்டும் வற்புறுத்துவது ஏன் என்று கேட்கிறார்கள். கற்பு என்பது ஒரு பெண் தன் துணைவனைத் தானே தேடிக்கொள்ளும் உரிமை. இந்த உரிமையைப் பழந் தமிழகம் பெண்களுக்கு வழங்கியிருந்தது. அது மட்டுமல்ல அதை அறநெறி தவறாத ஒழுக்கம் என்றும் பாராட்டியது. (அப்துல் ரகுமான், இது சிறகுகளின் நேரம், ப.112)
என்று, கற்பின் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்ட பெண்ணிய வாதிகள் ஆணுக்கும் வற்புறுத்த வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். கவிக்கோ குறிப்பிடுவதுபோல ஆண்கள் தன் துணைவியைத்தானே தேடிக்கொள்கிறதைப் போன்று பெண்ணுக்கும் அந்த உரிமையை அன்றே வழங்கியுள்ளது என்று புரிந்துகொள்ள வேண்டும்.
அறநூல்களுள் ஒன்றாகிய திருக்குறளில், திருவள்ளுவர் கற்பு பற்றிக் கூறும்போது,
“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகக் பெறின்” (திருக்குறள், குறள் எண். 54.)
என்னும் குறட்பாவில் கற்பு என்பதற்குத் திண்மை என்று பொருள். திண்மை என்பது ‘மனஉறுதி’ என்று பொருள்படும். கொன்றை வேந்தனில் ஒளவையார், “கற்பெனப் படுவது சொற்றிளும்பாமை”( ஒளவையார், கொன்றைவேந்தன், பாடல் எண்.14.) என்று கணவன் சொல்லைத் தட்டாமல் நடப்பது கற்பு எனக் கூறுகின்றார் ஒளவையார். பாரதியார்,
“கற்புநிலை என்று சொல்லவந் தாரிரு
கட்சிக்கு மஃது பொதுவில் வைப்போம்”(பாரதியார் கவிதைகள், ப.732.)
என்று, கற்பு என்பதை பாலுறவு என்னும் பொருளில் கையாள்கிறார்; கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக்கினார்.
கற்பு என்றால் அது பெண்ணுக்கு மட்டும் என்று அர்த்தமில்லை. ஆண் பெண் இருவருக்கும்தான். ஒருவர் கற்போடும், மற்றவர் கற்பில்லாமலும் இருக்க முடியாது. ஓர் ஆண், கற்பிழக்கிறான் என்றால் யாரோ ஒரு பெண்ணும் கற்பிழக்கிறாள் என்று பொருள். அதைப் போலவே ஒரு பெண் கற்பிழக்கிறாள் என்றால் யாரோ ஓர் ஆணும் கற்பிழக்கிறான் என்று பொருள். (அப்துல் ரகுமான், முத்தங்கள் ஓய்வதில்லை, ப.144)
என்று பாரதியாரின் கற்பு நிலை கோட்பாட்டுக்குக் கவிக்கோவும் வலுசேர்க்கிறார்.
அறநூலார் கூறும் கற்பு பற்றிய கொள்கையும் இக்காலப் பெண்ணிய மாண்புக்குப் பொருந்தாது. இன்றைய நிலையில் கற்பு என்பது திருமணத்துக்கு முன்னர் உடல் தூய்மையையும், திருமண வாழ்க்கையில் கணவனிடமும், குடும்பத்திடமும் வாய்மை தவறாத பற்றுறுதியையும் கொண்டவளாகப் பெண் இருக்க வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது (Loganayaki Nannithamby, Women in Modern Tamil Literature, p.36.). இவ்அடிப்படையில் கற்பு தவறினால் பெண்ணுக்கு வாழ்வு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய சமூக வாழ்வில், ‘கற்பு’ என்ற தத்துவம் மறுபரிசீலனைக்கு உரியதாகி விட்டது (மா.இராமங்கம், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், ப.60.). வேகமாக வளர்ந்து வரும் இவ்வுலகிற்கேற்ப வாழ்க்கை முறைகளும் மாறிவருகின்றன. அந்த நேரத்திலும்,
மண்ணுக்குத்தான் நாம்
அரசர்கள் ஆகின்றோம்
கற்புக்கு உங்களைத்தான்
அரசிகள் ஆக்குகிறோம் (அப்துல் ரகுமான், முத்தமிழின் முகவரி, ப.57)
என்று கவிக்கோ கூறுவதைப்போல இன்றும் கற்பை பெண்ணுக்கு மட்டுமே வயுறுத்திக் கொண்டுள்ளோம். மேலும் ஆண்கள் கற்புக் கொள்கையை தங்களுக்கும் பொருந்தும் என்று ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாகவே இருப்பதையும் காட்டுகிறது.
கற்பு பற்றி கருத்து என் ஆய்வேட்டில் இத்தோடு முடிகிறது.
கற்பு குறித்து என்னுடைய கவிதைகள் இவை.
• விபச்சாரி உண்மை பேசுகிறாள்
இருபத்து மூன்றில்
ஒன்று...
இரண்டு...
மூன்றென...
ஒரு நாளைக்குத் தொடங்கியது
பணத்தாசையோடு
உடற்சுகமும் சேர
இருபத்தைந்தில்
நான்காகிப்போனது...
இப்படியே
வயதும் ஐம்பதாகிப்போனது!
இப்போழுதாவது
உண்மையை ஒப்புகொள்கிறேன்.
இல்லை என்றாள்
நான்
மனசாட்சியைக் கொன்றவளாகி விடுவேன்.
“உடலை மட்டுமே விற்கிறேன்
கற்பை அல்ல” என்றால்
அது பொய்.
எத்தனை ஆயிரம் பேரிடம்
உடற்சுகம் கண்டு
கற்பை இழந்திருக்கிறேன்!
“கணவனோடு இருக்கப் பட்டவளுக்கு
ஒரு கற்பு.
என்னைப் போன்றவளுக்கு
படுத்தெழும் போதெல்லாம்
புதிது புதிதாய் ஒரு கற்பு.”
• காதலின் காதல்
நினைவுகளில் கூட
உன் உருவம்
மறைந்து விட்டது.
கற்புக் கிழித்தப்
பயிற்புத் தீண்டலின் ரணமாய்
முதற்காதல்
இன்றும்
வடுவாகவே உள்ளது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கற்பு என்றால் என்ன?
பெண்ணைக் கண்டு அஞ்சும் ஆண்,
அவளுக்குக் ‘கற்பு ‘ என்ற பொன் விலங்கைப்
பூட்டியிருக்கிறான்...
-
அவளுக்குக் ‘கற்பு ‘ என்ற பொன் விலங்கைப்
பூட்டியிருக்கிறான்...
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கற்பு என்றால் என்ன?
கவிக்கோ அப்துல் ரகுமானின் கட்டுரையைப் பதிவு செய்தமை பலருக்கு நன்மை தரும் கருத்துகளைப் படிக்க முடிந்திருக்கிறது.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Similar topics
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» 786 என்றால் என்ன?
» ‘படி’ என்றால் என்ன?
» ஓசி (OC) என்றால் என்ன ..?
» .COM என்றால் என்ன?
» 786 என்றால் என்ன?
» ‘படி’ என்றால் என்ன?
» ஓசி (OC) என்றால் என்ன ..?
» .COM என்றால் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum