தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
நட்பின் நாட்கள் ! நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
3 posters
Page 1 of 1
நட்பின் நாட்கள் ! நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நட்பின் நாட்கள் !
நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
குமரன் பதிப்பகம்
19.கண்ணதாசன் சாலை ,தி .நகர் ,சென்னை .17
விலை ரூபாய் 60
நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்கள் “ஒவ்வொரு பூக்களுமே ”
பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் .திரைப்படப் பாடல் ஆசிரியர் என்பதையும்
தாண்டி, சிறந்த படைப்பாளி அவரது பல்வேறு படைப்புகளை படித்து இருக்கிறேன்
.அதில் என்னை மிகவும் கவர்ந்த இந்த நூலான நட்பின் நாட்கள் ! நட்பின்
மேன்மையை பறை சாற்றுகின்றது.. நூலின் அட்டைப்படம் மிக நன்று. கவிதைகளுக்கான
நண்பர்கள் புகைப்படம் ,அச்சு, வடிவமைப்பு மிக நேர்த்தியாக உள்ளது குமரன்
பதிப்பகத்தாருக்கு பாராட்டுக்கள்.காதல் கவிதைகளுக்கு தபூ சங்கர் என்றால்
நட்பு கவிதைகளுக்கு பா .விஜய் என்று சொல்லலாம் .
நூலில் அணிந்துரை ,ஆசிரியர் என்னுரை என்று வழக்கமான மரபுகள் இன்றி
நேரடியாக கவிதையுடன் தொடங்குகின்றது .நூலில் சிறு கவிதைகளாக 62 கவிதைகள்
உள்ளது .நூலில் தேவையற்ற சொற்கள் எதுவுமின்றி மிக நேர்த்தியாக உள்ளது .
நூலில் முதல் கவிதையே முத்தாப்பாக உள்ளது .உங்கள் பார்வைக்கு இதோ கவிதை !
நண்பன் ஒரு கண்ணாடி
நாம் முகம் பார்க்க ..
நாம் கோபப்பட்டால் உடைக்க ..!
நண்பன் ஒரு போதிமரம்
நாம் ஊஞ்சல் ஆட
நாம் கிடந்து தூங்க !
நண்பன் ஒரு புத்தகம்
நாம் படிக்க ..
நாம் கிழிக்க ..!
இனிய நண்பர் பா .விஜய் அவர்கள் எழுதிய கவிதைகள் முழுவதையும் முக்கியமான
கவிதைகள் என்று அனைத்து பக்ககங்களையும் மடித்து வைத்து விட்டேன் .நூல்
விமர்சனத்தில் எல்லா கவிதையையும் மேற்கோள் காட்டக் கூடாது என்பதால் மிக,
மிக முக்கியமான கவிதைகளை மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன் .நட்பை
விரும்பாதவர்கள் யாரும் இல்லை .நட்பை விரும்பும் அனைவரும் இந்த நூலையும்
விரும்புவார்கள் எனபது உறுதி .நண்பர்களுக்கு பரிசாகத் தர சிறந்த நூல் இது
.இந்த நூலை எனக்கு பரிசாகத் தந்தது இனிய நண்பர் தன்னம்பிக்கை எழுத்தாளர்
மெர்வின் அவர்கள் .
பள்ளியில் மாணவர்கள் மதிய உணவை பகிர்ந்து உண்ணும் காட்சியை நம் மனக் கண்
முன் கொண்டு வந்து, நாம் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட ,மலரும் நினைவுகளை
தோற்றுவிக்கும் கவிதை இதோ !
மதியவேளை
வீட்டிலிருந்து
கொண்டுவந்த உணவை
கொண்டு வந்தவனே
உண்ட வரலாறு
ஈராயிரம் ஆண்டு
இரைப்பைகளிலும்
இல்லை ..!
இளம் ஆண் நண்பர்கள் குழுமினால் பெண் பற்றிய பேச்சு இல்லாமல் இருக்காது .அந்த இயல்பான உணர்வை நன்கு பதிவு செய்துள்ளார்..
அகில உலகமெங்கும்
நண்பர்கள் சபையில்தான்
முதன் முதலில் துவங்குகிறது
ஆய்வரங்கம் !
தலைப்பு – பெண் .
இந்தக் கவிதையைப் படிக்கும் எல்லா ஆண்களுக்கும் அவர்களது பழைய தோழியை
நினைவூட்டும் விதமாக நாம் கேட்க விருபும் கேள்வி போல ஒரு கவிதை .
சொல்லியிருக்கிறாயா …?
உன் கணவனிடம்
என்னைப் பற்றி !
எப்படி முடியும் ?
ஒரு உறவு
வளையமே இருக்குமே
உன்னைச் சுற்றி ..!
உன் படுக்கையறையின்
ஏதாவதொரு கண
உறக்கப் பிசிறுகளில் ..
உனக்கும் நினைவில்
வருமா ?
நாம் முதல்நாள் சிரித்ததும்
கடைசிநாள் அழுததும் …!
இதில் பல கவிதைகள் நமது பள்ளி,மற்றும் கல்லூரிப் பருவத்து பெண் தோழிகளை
நினைவூட்டும் விதமாக உள்ளது . சில கவிதைகள் நண்பர்களை நினைவூட்டும்
விதமாக உள்ளது .
கபடியில் விழுந்த
காயத்திற்கு மருந்து
உற்ற நண்பன் தூவும்
ஒருபிடி மண் !
அகோரப் பசிக்கு
அதிருசி விருந்து
உயிர்த் தோழி வீட்டு
அகத்திக்கீரை சாதம் !
நண்பர்கள் சிரித்துப் பேசுவது ஒரு சுகம்தான் .அம்மா ,அப்பா ஏன்
மனைவியிடம் சொல்ல முடியாததைக் கூட நண்பனிடம் சொல்லி ஆலோசனை கேட்பதுண்டு
.நட்புக்கு உயர்ந்த இடம் என்றும் உண்டு .
பள்ளிக்கூடங்களில்
பெல் சத்தங்களைப் போலவே
எத்தனை இனிமையானது
நண்பர்களின் கூட்டுச் சிரிப்பு !
நண்பனுக்கு ஒரு ஆபத்து என்றால் துடித்து விடுவோம் .நமக்கு ஒரு ஆபத்து
என்றால் நண்பன் துடிப்பான். தன்னால் முடிந்த உதவிகளை நாம் செய்வோம் .அவனால்
முடிந்த உதவிகளை நண்பான் செய்வான் .நட்பு என்பது மிகவும் உயவ்ர்வானது
.உன்னதமானது .
ஒரு புள்ளியாய்தான்
உருவானது நட்பு ..
வானமாய் அது
வியாபிக்கிறது …!
காலத்தின் சக்கரத்தில்
நட்பொரு
ஞாபக அச்சு ..!
நட்பில் நம்பிக்கை மிக முக்கியம் .நண்பனை சந்தேகிப்பது தவறு .என்பதை உணர்த்தும் வைர வரிகள் இதோ !
நட்பில் பொய்யில்லை
நண்பனிடம்
பொய்கூற தேவையில்லை ..!
ஏனெனில்
நட்பில்
அவநம்பிக்கை இல்லை .
நமது பள்ளி நண்பனை எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் முகம்
மறக்காது .கல்வெட்டாக முகம் பதிந்து இருக்கும் .ஆசிரியர்கள் முகமும்
மறப்பதே இல்லை .
உருவம் திரிந்து
உறவுகள் பிரிந்த
எண்பது வயசின்
சுருக்கத்திலும்
மறப்பதே இல்லை .
நண்பனின் முகங்கள் ..!
தோழிகளின் முகவரிகள் ..!
நூல் முழுவதும் பிடித்த கவிதைகள் .எதை எழுதுவது ? எதை விடுவது ?
குழப்பத்தில் ஆழ்ந்தேன் .நூலை படித்து முடித்ததும் ,கவிஞர் பா .விஜய் உள்பட
என்னுடைய அனைத்து நண்பர்களின் நட்பு பற்றி அசை போட்டு மகிழ்ந்தேன் .இனிய
நண்பர் ,நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய்அவர்களுக்கு
பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.com

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நம்பிக்கையுடன் ..பா .விஜய் . நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நூலின் பெயர் : சமர்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவிநூல் ஆசிரியர் : வித்தகக் கவிஞர் பா.விஜய்
» ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வித்தகக் கவிஞர் பா. விஜய்
» நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum