தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கையைக் கடிக்குதா கரண்ட் பில்?

3 posters

Go down

கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Empty கையைக் கடிக்குதா கரண்ட் பில்?

Post by கலைநிலா Mon Nov 29, 2010 4:51 pm



கையைக் கடிக்குதா கரண்ட் பில்?



கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.1
கரன்ட் ஷாக் அடிச்சு யார் உணர்ந்திருக்காங்களோ இல்லையோ, கரன்ட் பில்லைப் பார்த்து ஷாக்கடிச்சு விழுந்தவங்க ஏராளம்! ஓலை விசிறியும் குண்டு பல்ப்புமா இருந்த வாழ்க்கையா இன்னைக்கு இருக்குது! டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர்னு ஐயிட்டங்கள் பெருகிக்கிட்டே போக, கரன்ட் பில்லும் எகிறிக்கிட்டே போகுது. பழையபடி ஓலை விசிறிக்கு இனிமே போக முடியாது. ஆனா, குறைந்தபட்சம் மின்சாரத்தை அளவா செலவழிக்கிறது எப்படிங்கிற விஷயமாவது தெரிஞ்சா, கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். அதுக்கு என்னென்ன செய்யணும்?

கணக்கு முக்கியம்!

ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு இவ்வளவு ரூபாய்னு நமக்கு பில் போடுது மின்சார வாரியம். ஒரு யூனிட் அப்படிங்கிறது எப்படி கணக்கிடப்படுதுன்னு தெரிஞ்சாதான் மின்சாரத்தை எப்படிச் சேமிக்கலாம்ங்கிறதும் புரியும். 1,000 வாட்ஸ் பல்ப் ஒரு மணி நேரம் இயங்கினா அது ஒரு யூனிட். அதுவே 500 வாட்ஸ் பல்ப்னா ரெண்டு மணி நேரம். 40 வாட்ஸ் பல்ப் 25 மணி நேரம் இயங்கினா அது ஒரு யூனிட். ஆக, நாம வாங்குற அல்லது பயன்படுத்துற ஒவ்வொரு மின்சாதனத்தையும் ஒரு நாளைக்கு எத்தனை மணி பயன்படுத்துவோம், அதுக்கு எத்தனை வாட் மின்சாரம் செலவு ஆகும்ங்கிற விஷயத்தை மனசுல உள்வாங்கினாலே போதும், கரன்ட் பில் சரசரனு தானாவே குறைய ஆரம்பிச்சிடும்.
ஸ்டார் ரேட்டிங்!
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.1மின்சாரத்தை சிக்கனமா பயன்படுத்துற வழிமுறைகளைப் பின்பற்றுவதைவிட குறைவான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும் பொருட்களை வாங்குறதே புத்திசாலித்தனம். ரெஃபிரிஜிரேட்டர், ஏ.சி. மாதிரியான பொருட்களை வாங்குறப்போ கண்டிப்பா ஸ்டார்ரேட்டிங் பார்த்துதான் வாங்கணும். இந்த ஸ்டார் ரேட்டிங்கைத் தேடி எங்கேயும் அலைய வேண்டிய தில்லை. எல்லா மின்சார சாதனங்களிலும் அதிலேயே போட்டிருக்கும். அதிக ஸ்டார் ரேட்டிங் உள்ள பொருட்களுக்கு குறைவான மின்சாரமே தேவைப்படும். (அதிகபட்சம் 5 ஸ்டார் ரேட்டிங்) ஆனா அதோட விலை கொஞ்சம் அதிகமா இருக்கும்! 'அய்யோ விலை அதிகமா இருக்கே’னு அதை வாங்காம விட்டுடாதீங்க. ரேட்டிங் குறைஞ்ச பொருளை வாங்கி, அதிகமா கரன்ட் பில் கட்டுறதோட ஒப்பிட்டுப் பார்த்தா இந்த விலை ஒண்ணும் அவ்வளவு பெருசா இருக்காது. இனி ஒவ்வொரு மின் சாதனத்திலும் எப்படி மின்சாரத்தைச் சேமிக்கலாம்னு பார்ப்போம்...
ரெஃபிரிஜிரேட்டர்!
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.124 மணி நேரமும் ஓடும் ரெஃபிரிஜிரேட்டரில் என்ன சேமிக்க முடியும்னு நினைக்கிறீங்களா, நிறைய சேமிக்க முடியும்!
ஃப்ரிட்ஜை அடிக்கடி திறந்து மூட வேண்டாம். உள்ளே வைக்கும் ஒவ்வொரு பொருளையும் அப்படியே வைக்காமல், ஒரு பையில போட்டு மூடி வையுங்கள். மூடாம அப்படியே வச்சா ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால் அதிக மின்சாரம் தேவைப்படும்.
சூடான பொருளை அப்படியே உள்ளே வைக்க வேணாம். அது சாதாரண வெப்பநிலைக்கு வந்த பிறகு உள்ளே வைக்கவும்.
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.1அதே மாதிரி சும்மா சும்மா ஆஃப் பண்ணாதீங்க. குறைந்தபட்சம் ஒரு நாள் முழுக்க பயன்படுத்தப்போறதில்லை அப்படின்னா மட்டும் ஆஃப் செய்யவும். அணைத்து விட்டு மூணு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பவும் ஆன் செஞ்சா அதிக மின்சாரம் தேவைப்படும்.
ஃபிரிட்ஜை சுவரோட ஒட்டி வைக்காம குறைந்தபட்சம் 20 சென்டி மீட்டராவது தள்ளி வைக்கலாம். இப்படி வைக்கிறதால சூடான காற்றை சுலபமாக வெளியேற்ற முடியும். சுவரை ஒட்டி வைத்தால் சூடான காற்றை வெளியே தள்ள அதிக சக்தி தேவைப்படும். இந்த அதிக சக்திதான் அதிக மின்சாரம்.
ஏ.சி.!
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.1எல்லா கதவுகளும் நல்லா மூடியிருக்கான்னு செக் பண்ணிட்டு அதுக்குப் பிறகு ஏ.சி.யை ஆன் செய்யவும்.
ரூமோட ஈரப்பதத்தை (humidity) குறைவாவே வச்சிருக்கணும்.
ரூம் கதவு ஜன்னல்களில் ஓட்டை இல்லாமல் பார்த்துக் கொள்ளணும். ஓட்டை இருந்தா வெளியிலிருந்து சூடான காற்று வரும் பட்சத்தில், அறையை குளுமையாக்க கூடுதல் மின்சாரம் தேவைப்படும்.
அறையின் அளவுக்கு ஏற்றமாதிரிதான் ஏ.சி.யை செலக்ட் பண்ணணும். பெரிய ரூமுக்கு குறைந்த டன் ஏ.சி. போட்டால் அதிக மின்சாரம் தேவைப்படும்.
அறையின் அளவு ஏ.சி. யின் அளவு
100 சதுர அடி வரை 1 டன்
100 முதல் 150 சதுர அடி வரை 1.5 டன்
150 சதுர அடிக்கு மேல் 2 டன்
வாட்டர் ஹீட்டர்!
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.1தேவைப்படும் நேரத்துக்கு சற்று முன்பாக மட்டும் வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யவும். தெர்மோஸ்டட் இருக்கிறது, தண்ணீர் சூடானால் தானாகவே நின்றுவிடும்னு நினைக்க வேணாம். தண்ணீரின் சூடு குறைஞ்ச பிறகு மீண்டும் ஹீட்டர் தானாவே செயல்பட ஆரம்பிக்கும். அதனால கூடுதல் மின்சாரம் தேவைப்படும். ஒரு ஆள்தான் குளிக்கப் போறாங்கன்னா தெர்மோஸ்டட் மூலமா ஆஃப் ஆகுற வரை காத்திருக்க வேணாம். கொஞ்ச நேரத்திலேயே அணைத்துவிடவும்.
பல்ப்!
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.1குண்டு பல்ப்புகளை (incandescent lamp) கண்டிப்பா பயன்படுத்த வேணாம். அதுக்கு அதிக வாட் தேவைப்படும். அது மட்டுமல்லாமல் குண்டு பல்ப் மின்சக்தியை வெப்ப சக்தியாக மாற்றிதான் வெளிச்சத்தைக் கொடுக்குது. ஆனால் சி.எஃப்.எல். (compact fluorescent lamps) மின்சக்தியை நேரடியாவே ஒளிசக்தியாக மாற்றுகிறது.
படிக்கும் போது ரூம் முழுவதற்கும் வெளிச்சம் தர்ற மாதிரி பெரிய விளக்குகளை பயன்படுத்துறதைவிட டேபிள் விளக்குகளைப் பயன்படுத்த லாம். 40 வாட் டியூப் லைட்களைவிட 36 வாட் ஸ்லிம் டியூப்களை பயன் படுத்தலாம்.
அயர்ன் பாக்ஸ்!
தினமும் ஒவ்வொரு துணியா அயர்ன் பண்ண வேண்டாம். மொத்தமா ஒரு வாரத்துக்குத் தேவையான துணிகளை எடுத்து அயர்ன் செய்யவும்.
மின்விசிறிகள்!
கையைக் கடிக்குதா கரண்ட் பில்? ?ui=2&ik=334424429d&view=att&th=12c9204b00c9f24b&attid=0.1எலெக்ட்ரானிக் ரெகுலேட்டர்களையே பயன்படுத்தவும். இதன் ஆயுட்காலம் குறைவுன்னாலும் நமக்குத் தேவைப்படும் வேகத்தில் வைத்துக் கொள்ள முடியும். பழைய ரெகுலேட்டர்களோடு ஒப்பிடும் போது எலெக்ட்ரானிக் ரெகுலேட்டரே சிறந்தது. மின்விசிறியின் இறக்கைகளை சுத்தமாக வைத்திருக்கவும். இறக்கை மீது அதிக தூசி படர்ந்து அழுக்கேறும் போது அதன் எடை கூடும். சுழல அதிக மின்சாரமும் தேவைப்படும்.
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Empty Re: கையைக் கடிக்குதா கரண்ட் பில்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 29, 2010 4:57 pm

பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி கலைநிலா நண்பரே அன்பு முத்தம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Empty Re: கையைக் கடிக்குதா கரண்ட் பில்?

Post by jeba Mon Nov 29, 2010 4:58 pm

தகவலுக்கு நன்றி
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

கையைக் கடிக்குதா கரண்ட் பில்? Empty Re: கையைக் கடிக்குதா கரண்ட் பில்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum