தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்)

+2
அ.இராமநாதன்
கவியருவி ம. ரமேஷ்
6 posters

Go down

இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்) Empty இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்)

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 25, 2012 8:46 am

இது கனவு(ஹைபுன்)களின் நேரம்.

இது நாம் காணும் கனவுகளின் பகுதி.

யார் வேண்டுமானாலும் தான் கண்ட கனவினை பதிவு செய்யலாம்.

இப்படி ஒரு பகுதியைத் தொடங்க எனக்கு வெகு நாட்களாகவே இந்த எண்ணம் இருந்து வந்தது. ஆனால் ஏதோ காரணத்துக்காக முடியாமல் போனது.

இன்று இரவு 3 மணி இருக்கும் என்பது இல்லை மூன்று மணிதான். திடீர் யோசனை. கனவு வந்து முடிந்த சமயம் அது. விழித்துக் கொண்டேன். கனவை கொஞ்சம் அசை போட்டேன்.

கனவுகள் ஏன் வருகிறது? ஏன் வர வேண்டும்? எப்படி வருகிறது? வருவதால் என்ன நன்மை தீமை? ... என்று நினைத்துக்கொண்டே இருக்கும்போதுதான்...

திடீரென ஓர் எண்ணம் உதயமானது. ஆமாம் எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆச்சரியம்தான் ஹைபுன் கவிதை வடிவம். ஆமாம் நாம் காணும் காட்சிகள் (கனவுகள்) ஹைபுன் வடிவத்துக்கு ஏற்ற வடிவம் என்று மகிழ்ந்தேன். உடனே தோட்டத்தில் முதன் முதலாக இந்தப் பகுதியை தொடங்கிவிட்டேன்.

ஹைபுன் எழுதத் தெரிந்தவர்கள் கனவினை விவரித்துவிட்டு முத்தாய்ப்பாக இறுதியில் ஒரு ஹைக்கூவை எழுதுங்கள்... ஹைபுன் கவிதையாகிவிடப் போகிறது.

ஹைபுன் வடிவம் இதுதான்:

செறிவான உரைவீச்சில் முரணான நிகழ்வுகளை இணைத்தும், ஒரே விதமான சம்பவங்களை கோர்த்தும், அதற்கிணையான ஒரு செறிவான ஹைக்கூவோடு நிறைவு செய்வதே ஹைபுன் ஆகும். இன்னும் எளிமையாகச் சொல்வதானால், ஒரு துண்டு உரைநடை – அது கதை, கவிதை, வாய்மொழிச் சொல்லாடல் – உரையாடல், குறிப்புகள் மற்றும் விவரங்கள் அல்லது நாம் பார்த்த காட்சியாகவும் இருக்கலாம். இறுதியில் அதற்குப் பொருத்தமாக ஒரு ஹைக்கூ எழுத வேண்டும்.

இந்தப் பகுதியில் யார் வேண்டுமானாலும் கனவினை விவரித்து ஹைபுன் எழுதலாம். திருத்தங்கள் (கனவின் விவரிப்பில் அல்ல. இறுதியில் வரும் ஹைக்கூவில் மாற்றம்) தேவைப்படுமெனில் நான் திருத்தம் செய்கிறேன். ஹைக்கூ எழுதத் தெரியாது கனவினை மட்டும் நான் எழுதுகிறேன் என்றாலும் சரியே... நான் அதற்கு முத்தாய்ப்பான ஹைக்கூ எழுதிவிடுகிறேன்.

இங்கு கனவுகள் ஹைபுன் கவிதைகளாகட்டும்... வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்) Empty Re: இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்)

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 25, 2012 9:06 am

ம. ரமேஷ் ஹைபுன்

மலையின் உச்சியில் நான் மட்டும் தனித்திருக்கிறேன். தண்ணீர் தாகம். கையில் மினரல் வாட்டர் இல்லை. என்ன கடவுளே இது எனும் போது என் கிராமத்து விளையாட்டுத்திடலில் கபடி ஆடும் இடத்தில் ஒரே சப்தம். ஐயோ அவனுக்கு அடிப்பட்டுவிட்டதே... தண்ணி எடுத்துனு வாங்க... தண்ணீ எடுத்துனு வாங்க... பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் மலை உச்சியில் இருக்கும் எனக்கு அவர்களின் சப்தமும் அழுகையும் கேட்கிறது. அவர்களின் உருவம் தெளிவாய் தெரிகிறது... இந்நாள் வரை கபடி ஆடாத ஒருவனுக்கு அடிபட்டிருக்கிறது. அவன் தண்ணீ குடிக்கும் நேரம் மழை பெய்து பாறையில் தண்ணீர் தேங்க நான் அதை அள்ளிக் குடிக்கிறேன்.

தாகம் தணிகிறது
காதல் தோல்வியின் பின்னும்
பிரிந்தவர்கள் சந்திப்பு

என்று ஹைக்கூ எழுதலாம் என்றால் இது வலிந்து எழுதுவதாகவே தோன்றுகிறது எனவே, மேற்கண்ட கனவுக்கான முத்தாய்ப்பான ஹைக்கூ இதுதான்:

தண்ணீருக்காக ஏங்குகிறது
பாவம் உலகம்
மரம் செடி கொடி


கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்) Empty Re: இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்)

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Oct 26, 2012 8:49 am

எத்தனை கனவுகளை வேஸ்ட் செய்துவிட்டேன்... இனி கனவுகள் கவிதைகளாகும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்) Empty Re: இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்)

Post by அ.இராமநாதன் Fri Oct 26, 2012 8:57 am

தன் பங்குக்கு..
------------------
எரியாத மின்விளக்கு
ஏளனம் செய்தது நாய்
தன் பின்னங்காலைத் தூக்கி!

-
========================
>வெ.இறையன்பு
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்) Empty Re: இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்)

Post by ருக்மணி Fri Oct 26, 2012 11:02 am

நேற்று இரவு தான் ஒரு கனவு வந்தது... இன்று காலை தோட்டத்தில் உலா வருகையில் இப்படி ஒரு திரி... நல்ல முயற்சி ரமேஷ்... வாழ்த்துக்கள்.. என் கனவை சொல்கிறேன்... சிறிது சின்ன பிள்ளை தனமா கூட தோனலாம்... என்ன பண்ண!!

தேர்வு தொடங்கி சற்று நேரம் கழித்தே தேர்வை அறையை தேடி ஓடி கொண்டு இருக்கிறோம் நானும் என் நட்பும்... ஒரு வழியாக தேர்வு அறையை கண்ட பின் தான் எனக்கு நினைவு வருகிறது.. என்னிடம் எழுதுகோல் (பென்) இல்லை என்று ... அதற்குள் தேர்வு கண்காணிப்பாளர் எங்களை காண என் நட்பிடம் எழுதுகோலை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறேன்...

இப்போ இதை ஹைக்கூ எழுதினால்...

தேர்வின் பயம்
விரட்டுகிறது இன்றும்
கனவில் ...


தவறு இருப்பின் திருத்தம் சொல்லுங்கள் ரமேஷ்.. திரி வெற்றி பெற வாழ்த்துக்கள்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்) Empty Re: இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்)

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Oct 26, 2012 7:48 pm

தேர்வின் பயம்
விரட்டுகிறது இன்றும்
கனவில் ...

இது எல்லோருக்குமான கனவும்கூட நானும் அடிக்கடி இப்படிக் கனவு கண்டதுண்டு...

எந்த மாற்றமும் வேண்டாம். நன்றாக இருக்கிறது... நிறைய எழுதுங்கள்... இந்தப் பகுதியில் கனவினை பதியுங்கள்... ஹைக்கூ பகுதியில் வாழ்வியலை - தாங்கள் நினைப்பதை ஹைபுன்னாக படையுங்கள்... வாழ்த்துகள்... திருத்தங்கள் தேவைப்படின் நான் செய்கிறேன்.

வாழ்த்துகள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்) Empty Re: இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 30, 2012 12:21 pm

அருமையான முயற்சி பாராட்டுக்கள் தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்) Empty Re: இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்)

Post by thaliranna Fri Nov 02, 2012 9:03 pm

நல்லதொரு முயற்சி! வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்) Empty Re: இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்)

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Nov 22, 2012 8:06 am

வாங்கிக்கொடுத்த பொம்மையை மாலையில் பார்க்கிறேன். கை, கால், தலை, உடல் என்று வேறுவேறு இடத்தில் இறைந்து கிடக்கின்றன… அதட்டினால் குழந்தை கை தட்டிச் சிரிக்கிறது. என்ன இப்படிச் செய்கிறாளே என்று படுக்கையில் சாய்ந்தேன். என்னுடைய கை, கால், தலை, உடல் எல்லாம் தனித்தனியாக இருப்பதைக் கண்டு அலரியடித்துக் கொண்டு எழுந்தேன். அட… கனவுதானா?. அப்படி கனவு என்று விட்டுவிட முடியாது. சிதறிக்கிடந்த கை, கால், தலை, உடலை எல்லாம் திரும்ப இணைத்துவிட்டு நான் விளக்கை அணைத்துவிட்டு உறங்கினேன். குழந்தை சிரித்துக் கொண்டேயிருக்கிறது உறங்காமல்…

சிரிப்புச் சப்தம்
எட்டிப் பார்த்தேன்
குழந்தையுடன் பொம்மை


(வேறு எப்படியெல்லாம் எழுதலாம் என்பதற்காக சில எழுதியிருக்கிறேன். ஹைபுன் எழுதுபவர்களுக்கு உதவும் என்பதால்...)

சிரிக்கும் குழந்தை
உறங்கும் அப்பா
விழித்திருக்கும் பொம்மை

கடித்தப் பாம்பை
அடிக்க முடியவில்லை
கனவு

கை கால் தலை
சிதைந்தும் சிரிக்கும்
பொம்மையுடன் குழந்தை

கை கால் இணைகிறது
உயிர் பெறுகிறது
குழந்தையின் மனசு

© கவியருவி ம. ரமேஷ் ஹைபுன்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்) Empty Re: இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 22, 2012 11:41 am

[You must be registered and logged in to see this image.]அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்) Empty Re: இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்)

Post by pakee Thu Nov 22, 2012 9:06 pm

அருமை அண்ணா மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்) Empty Re: இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்)

Post by அ.இராமநாதன் Fri Nov 23, 2012 5:55 pm

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்) Empty Re: இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்)

Post by thaliranna Sat Dec 08, 2012 8:25 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்) Empty Re: இது கனவுகளின் நேரம் (ஹைபுன்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum