தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி?

4 posters

Go down

தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி? Empty தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி?

Post by அ.இராமநாதன் Thu Nov 08, 2012 6:13 pm

[You must be registered and logged in to see this image.]

-
இந்த உலகத்தில் தெளிவாய் பேசிக் குழப்புகிறவர்களும்
உண்டு. குழப்பமாய் பேசித் தெளிவுப்படுத்துகிறவர்களும்
உண்டு.
-
அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு கொள்வது தான்
இந்த கட்டுரையின் நோக்கம்.
-
ஒரு பெரிய திடல்.
-
அங்கே ஒருவன் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறான். அங்கே
இருக்கிற புல்வெளியில் ஏராளமான ஆடுகள் மேய்ந்து
கொண்டிருக்கின்றன.
-
அவற்றில் கருப்பு ஆடுகளும் இருந்தன.
வெள்ளை ஆடுகளும் இருந்தன.
-
அங்கே ஆடு மேய்க்கிறவன் எதிலும் தெளிவாக இருக்க வேண்டும்
என்று நினைக்கிறான்.
-
குழப்பப்படுவது – குழம்புவது இரண்டுமே அவனுக்கு பிடிக்காது.
-
அந்த வழியாக ஒரு பெரியவர் வந்தார்.

தம்பி இங்கே ஆடு மேய்க்கிறீயா…?

ஆமாம்

உன்கிட்டே சில விவரம் கேட்டு தெரிஞ்சிக்கலாம். எதுவா
இருந்தாலும் தெளிவாக கேளுங்க… பதில் சொல்றேன்…!

இந்த மந்தையில் மொத்தம் எத்தனை ஆடுகள்….?

பார்த்தீங்களா? குழப்பமாக கேக்கறீங்க….!

வேற எப்படிக் கேட்கணும்ங்கறே?

நீங்க. கறுப்பு ஆட்டை கேக்கறீங்களா? வெள்ளை ஆட்டை கேக்கறீங்களா?

கறுப்பு ஆடு எத்தனை?

அப்படி கேளுங்க… கறுப்புஆடு ஐம்பது இருக்கு

வெள்ளை ஆடு?

அதுவும் ஐம்பது தான்!.

பெரியவர் அடுத்த கேள்வியை கேட்டார்.

இந்த ஆடெல்லாம் ஒரு நாளைக்கு எவ்வளவு புல் சாப்பிடும்?

மறுபடியும் குழப்புறீங்க!

என்ன சொல்றே?

கறுப்பு ஆடா? வெள்ளை ஆடா?

கறுப்பு ஆடு…!

10 கிலோ சாப்பிடும்.

சரி வெள்ளை ஆடு….?

அதுவும் 10 கிலோ சாப்பிடும்?

பெரியவர் லேசாக குழம்ப ஆரம்பித்தார். அடுத்த கேள்வி…
இதெல்லாம் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் கறக்கும்?

மறுபடியும் தெளிவாக கேளுங்க…. கறுப்பு ஆடா? வெள்ளை ஆடா?

கறுப்பு ஆடு…!

ஐந்து லிட்டர் கறக்கும்

வெள்ளை ஆடு…?

அதுவும் ஐந்து லிட்டர் கறக்கும்.

பெரியவர் கொஞ்சம் குழப்பத்தோடு யோசிக்க ஆரம்பித்தார்.
அப்புறம் கேட்டார்
தம்பி எல்லாத்துக்கும் பதில் ஒண்ணாத்தானே இருக்கு.

ஆமாம்!

அப்படி இருக்கும்போது… எதுக்கு பிரிச்சி பிரிச்சி கேக்க சொல்றே…?

ஓ,…. அதை கேக்கறீங்களா… இதை ஆரம்பத்திலேயே கேட்டிருந்தா
தெளிவாக சொல்லியிருப்பேனே.. எதுக்காக அப்படி கேக்க
சொல்றேன்னா….
இங்கே இருக்கிற அந்த கறுப்பு ஆடுகள் எல்லாம் எதிர்த்த
வீட்டுக்காரனுக்கு சொந்தமானவை.

வெள்ளை ஆடுகள்….?

அதுவும் எதுத்த வீட்டுக்காரனுக்குத் தான் சொந்தம்

இதற்கு மேலும் இவனிடம் பேசிக்கொண்டிருந்தால் நமக்கு
பைத்தியம் பிடித்து விடும் என்பதை உணர்ந்த அந்த பெரியவர்
சரி.. நீ உன் வேலையை பாரு… நான் என் வேலையை பார்க்கிறேன்.
என்று சொல்லிவிட்டு மெல்ல அந்த இடத்தை விட்டு நழுவினார்.
தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி? என்பதை
அந்த ஆடு மேய்க்கிறவனிடம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
-
========================================


-தென்கச்சி கோ.சுவாமிநாதன்
நன்றி: கலைமகள்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி? Empty Re: தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி?

Post by பார்த்திபன் Thu Nov 08, 2012 6:36 pm

மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி? Empty Re: தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 09, 2012 12:13 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி? Empty Re: தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 10, 2012 9:32 am

[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி? Empty Re: தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum