தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இவள் தன்மானத் தமிழச்சி....
+9
சிசு
அப்துல்லாஹ்
தங்கை கலை
தமிழ்1981
அ.இராஜ்திலக்
அ.இராமநாதன்
கலைநிலா
eeranila
Aathira
13 posters
Page 1 of 1
இவள் தன்மானத் தமிழச்சி....
இவள் தன்மானத் தமிழச்சி....
மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!
பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!
அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!
பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!
தளிர்க்கரமே வா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!
விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!
கொடியிடைதான் துவளுதென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் கூர்வேலென்றாள்!
மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!
ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!
ஆதிரா..
Last edited by Aathira on Mon Oct 24, 2011 7:47 pm; edited 1 time in total
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
சங்க இலக்கிய காலங்களில் தமிழ் பெண்கள் மானத்துக்கும் வீரத்துக்க்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தார்கள் என்பதை இலக்கியங்களில் நாம் அறிந்திருக்கிறோம். அதில் ஒரு உதாரணம் பின்வருமாறு: கிண்டலுக்கு பெயர் போன கிழட்டு தமிழச்சி ஒருவள் தன் வீட்டுவாயிலில் அமர்ந்திருக்கிறாள் அப்போது காவலன் ஒருவன் ஓடி வந்து, அவளருகே நின்று மூச்சு வாங்குகிறான், அவனை பார்த்த அந்த தமிழச்சி ஆடிவந்த சிறு பெண்ணை போல் மூச்சு வாங்குகிறாயே நீ கொண்டு வந்த சேதி என்ன என்று கேட்டாள் , அதற்க்கு அந்த காவலன் மடிந்தான் உன் மகன் போர்களத்தில் என்றான்
அதற்க்கு அந்த தமிழச்சி, காயம் மார்பில் தானே என்றாள், அதற்க்கு அந்த காவலன் இல்லை முதுகில் என்றான், உடனே வெகுண்டெழுந்தாள் இப்போதே செல்கிறேன் போர்களத்திற்க்கு தேடுகிறேன் என் மகனின் சடலத்தை அங்கே நான் முதுகில் காயத்தை கண்டால் அறுத்தெரிகிறேன் அவனுக்கு பால் கொடுத்த என் மார்புகளை, மார்பினில் காயம் பட்டிருப்பின் பொய்யுரைத்த உன் நாக்கினை அறுத்திடுவேன் என சூளுரைத்தாள் அந்த தமிழச்சி.
அதற்க்கு அந்த தமிழச்சி, காயம் மார்பில் தானே என்றாள், அதற்க்கு அந்த காவலன் இல்லை முதுகில் என்றான், உடனே வெகுண்டெழுந்தாள் இப்போதே செல்கிறேன் போர்களத்திற்க்கு தேடுகிறேன் என் மகனின் சடலத்தை அங்கே நான் முதுகில் காயத்தை கண்டால் அறுத்தெரிகிறேன் அவனுக்கு பால் கொடுத்த என் மார்புகளை, மார்பினில் காயம் பட்டிருப்பின் பொய்யுரைத்த உன் நாக்கினை அறுத்திடுவேன் என சூளுரைத்தாள் அந்த தமிழச்சி.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
”புலி கிடந்து போகிய கல்லளை போல ஈன்ற வ்யிறோ இதுவென் மாதோ”
என்று உரைப்பாள் இன்னொரு தமிழச்சி. ஒரு மறக்குடி தமிழச்சியை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி ஈர நிலா அவர்களே..
என்று உரைப்பாள் இன்னொரு தமிழச்சி. ஒரு மறக்குடி தமிழச்சியை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி ஈர நிலா அவர்களே..
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
பெண்ணை வர்ணிக்கும் ஆணுக்கும்
பெண்ணின் அழகில் அமைந்திற்கும்
விவேகம் சொல்லும் விடை இது!
ஆதிராவின் பார்வை அதிசியம் தான்!
இன்னும் தொடர்ந்தால் நமது பாக்கியம்!
எங்கே எங்கே என்று கேட்குது மனம்.
பெண்ணின் அழகில் அமைந்திற்கும்
விவேகம் சொல்லும் விடை இது!
ஆதிராவின் பார்வை அதிசியம் தான்!
இன்னும் தொடர்ந்தால் நமது பாக்கியம்!
எங்கே எங்கே என்று கேட்குது மனம்.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
தளிர்க்க் கரமேவா என்றான் என்பதை
தளிர்க்கரமே வா என திருத்துக...
-
கொடியிடைதான் துவழு தென்றான்..
துவளுதென்றான் என இருக்க வேண்டுமோ..
-
கவிதை நல்லா இருக்கு..
தளிர்க்கரமே வா என திருத்துக...
-
கொடியிடைதான் துவழு தென்றான்..
துவளுதென்றான் என இருக்க வேண்டுமோ..
-
கவிதை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
வணக்கம்
வணக்கம் ,
மிகவும் அருமையான தமிழ் கவிதை..... இப்படி தமிழ் கவிதை படித்து மிகவும் நாளாகிவிட்டது நண்பரே,
நிச்சயம் தமிழன்னை உங்கள் இதயத்தில் உயிராய் உள்ளாள்.. அருமையான வரிகள்....... தமிழச்சியின் வீரத்தை மட்டுமல்லாது, தமிழச்சியின் ஆதங்கத்தையும் சொல்லிவிட்டீர் உமது வரிகளில்........
உமது வரிகள் வெறும் எழுத்துககள் அல்ல, உமது மனதில் உள்ள தமிழ் பற்றினையும் காட்டுகின்றது..........
"தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் கூர்வேலென்றாள்!"
என்றென்றும் நட்புடன்.
ஜோஸி
மிகவும் அருமையான தமிழ் கவிதை..... இப்படி தமிழ் கவிதை படித்து மிகவும் நாளாகிவிட்டது நண்பரே,
நிச்சயம் தமிழன்னை உங்கள் இதயத்தில் உயிராய் உள்ளாள்.. அருமையான வரிகள்....... தமிழச்சியின் வீரத்தை மட்டுமல்லாது, தமிழச்சியின் ஆதங்கத்தையும் சொல்லிவிட்டீர் உமது வரிகளில்........
உமது வரிகள் வெறும் எழுத்துககள் அல்ல, உமது மனதில் உள்ள தமிழ் பற்றினையும் காட்டுகின்றது..........
"தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் கூர்வேலென்றாள்!"
என்றென்றும் நட்புடன்.
ஜோஸி
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
எப்படி எழுதிருக்கிங்க ,,,,,
சான்ஸே அ இல்லை ,,,,,,,,
:héhé: :héhé: :héhé: :héhé:
சான்ஸே அ இல்லை ,,,,,,,,
:héhé: :héhé: :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
மலரவளின் மணிமுகத்தை முரசத்தின் முகமாக்கி
மண முல்லை பற்களெல்லாம் மறப்புலியின் கூட்டமென்று
கள்ளுறும் அதரமில்லை கடு நஞ்சாம் அதனுள்ளே
சொல்லிடும் தமிழ் தனை நாவாய் பெற்ற மகள்
அருஞ்சுவை கவியொன்றை அழகுத்தமிழில் தந்த அன்புச் சகோதரிக்கு என் அன்பும் மகிழ்ச்சியும்..
வாழ்க தமிழ
ஓங்குக தமிழர் புகழ்
மண முல்லை பற்களெல்லாம் மறப்புலியின் கூட்டமென்று
கள்ளுறும் அதரமில்லை கடு நஞ்சாம் அதனுள்ளே
சொல்லிடும் தமிழ் தனை நாவாய் பெற்ற மகள்
அருஞ்சுவை கவியொன்றை அழகுத்தமிழில் தந்த அன்புச் சகோதரிக்கு என் அன்பும் மகிழ்ச்சியும்..
வாழ்க தமிழ
ஓங்குக தமிழர் புகழ்
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
கலை wrote:எப்படி எழுதிருக்கிங்க ,,,,,
சான்ஸே இல்லை ,,,,,,,,
[You must be registered and logged in to see this image.]
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
திருத்தம் செய்துள்ளேன் ஐயா
அருமையான பகிர்வு அக்கா பாராட்டுக்கள், தொடர்ந்து உங்களின் பூக்களையும் நமது தோட்டத்திலும் பூக்க விடுங்க
அருமையான பகிர்வு அக்கா பாராட்டுக்கள், தொடர்ந்து உங்களின் பூக்களையும் நமது தோட்டத்திலும் பூக்க விடுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
பழையனவும் தங்களால் பாராட்டப்பெறுவது யான் பெற்ற பாக்கியமே கலை நிலா.எனக்கும் எழுத ஆசை. காலம் இடம் கொடுக்கவில்லை. வருந்துகிறேன். மீண்டும் முன் போல எழுதுவேன் என்று நம்பிக்கையில்...தங்களின் ஊக்குவிப்புக்கு, பாராட்ட்டுக்கு மிக்க நன்றி கலைநிலா.kalainilaa wrote:பெண்ணை வர்ணிக்கும் ஆணுக்கும்
பெண்ணின் அழகில் அமைந்திற்கும்
விவேகம் சொல்லும் விடை இது!
ஆதிராவின் பார்வை அதிசியம் தான்!
இன்னும் தொடர்ந்தால் நமது பாக்கியம்!
எங்கே எங்கே என்று கேட்குது மனம்.
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
தவறைச் சுட்டிக்காட்டியமைக்கும் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி இராமநாதன் ஐயா. தவழுது என்று எழுதத் தொடங்கி அதை துவளுது என்று மாற்றியதில் ஏற்பட்ட குழப்பம் ஐயா இது.அ.இராமநாதன் wrote:தளிர்க்க் கரமேவா என்றான் என்பதை
தளிர்க்கரமே வா என திருத்துக...
-
கொடியிடைதான் துவழு தென்றான்..
துவளுதென்றான் என இருக்க வேண்டுமோ..
-
கவிதை நல்லா இருக்கு..
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
மிக்க நன்றி இராஜ்த்லக் [You must be registered and logged in to see this image.]அ.இராஜ்திலக் wrote:மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
விரிவான தங்கள் பாராட்டு இன்னும் எனை எழுதத் தூண்டும். மிக்க நன்றி தமிழ். [You must be registered and logged in to see this image.]தமிழ்1981 wrote:வணக்கம் ,
மிகவும் அருமையான தமிழ் கவிதை..... இப்படி தமிழ் கவிதை படித்து மிகவும் நாளாகிவிட்டது நண்பரே,
நிச்சயம் தமிழன்னை உங்கள் இதயத்தில் உயிராய் உள்ளாள்.. அருமையான வரிகள்....... தமிழச்சியின் வீரத்தை மட்டுமல்லாது, தமிழச்சியின் ஆதங்கத்தையும் சொல்லிவிட்டீர் உமது வரிகளில்........
உமது வரிகள் வெறும் எழுத்துககள் அல்ல, உமது மனதில் உள்ள தமிழ் பற்றினையும் காட்டுகின்றது..........
"தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் கூர்வேலென்றாள்!"
என்றென்றும் நட்புடன்.
ஜோஸி
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி கலை. [You must be registered and logged in to see this image.]கலை wrote:எப்படி எழுதிருக்கிங்க ,,,,,
சான்ஸே அ இல்லை ,,,,,,,,
[You must be registered and logged in to see this image.]
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
அந்தக் கவியை விட உங்கள் பின்னூட்டமல்லவா அழகிய கவியாக ஒளிர்கிறது. இனிய தமிழில் வாழ்த்து சொன்ன அன்புக்கு மிக்க நன்றி அப்துல்லாஹ். [You must be registered and logged in to see this image.]அப்துல்லாஹ் wrote:மலரவளின் மணிமுகத்தை முரசத்தின் முகமாக்கி
மண முல்லை பற்களெல்லாம் மறப்புலியின் கூட்டமென்று
கள்ளுறும் அதரமில்லை கடு நஞ்சாம் அதனுள்ளே
சொல்லிடும் தமிழ் தனை நாவாய் பெற்ற மகள்
அருஞ்சுவை கவியொன்றை அழகுத்தமிழில் தந்த அன்புச் சகோதரிக்கு என் அன்பும் மகிழ்ச்சியும்..
வாழ்க தமிழ
ஓங்குக தமிழர் புகழ்
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
:héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
நன்றி சிசு. [You must be registered and logged in to see this image.] நன்றி வினிதா [You must be registered and logged in to see this image.]
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
நன்றி அக்கா ,,நீங்கள் மிக மிக மிக மிக அருமையாக எழுதுரிங்க ,,
உண்மையை சொன்னால் எனது ஒன்பதாம் செய்யுல்நியாபப் படுத்தியது ...
அக்கா புலவர்கள் என்பது தாங்கள் தான்
உண்மையை சொன்னால் எனது ஒன்பதாம் செய்யுல்நியாபப் படுத்தியது ...
அக்கா புலவர்கள் என்பது தாங்கள் தான்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை தோழி. முயன்றால் முடியாதது இல்லை. எல்லோரும் சிறிது பயிற்சி எடுத்தால் எழுதலாம். தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கலை .கலை wrote:நன்றி அக்கா ,,நீங்கள் மிக மிக மிக மிக அருமையாக எழுதுரிங்க ,,
உண்மையை சொன்னால் எனது ஒன்பதாம் செய்யுல்நியாபப் படுத்தியது ...
அக்கா புலவர்கள் என்பது தாங்கள் தான்
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
அருமையான கவிதை.
:héhé:
:héhé:
பி.அமல்ராஜ்- மல்லிகை
- Posts : 95
Points : 135
Join date : 22/10/2011
Age : 40
Location : Colombo, Srilanka
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
ஆதிரா உங்கள் கவிதை அற்புதம்! தொடர்ந்து மணம் பரப்ப வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தன்மானத் தமிழா
» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி
» என் காதலி இவள் தான் ..!!!
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
» காதல் வலியுடன் இவள்..
» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி
» என் காதலி இவள் தான் ..!!!
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
» காதல் வலியுடன் இவள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum