தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆந்தை
2 posters
Page 1 of 1
ஆந்தை
-
ஆந்தைகளில் 205 ஜாதிகள் உள்ளன. ஆந்தைகள் வேட்டையாடி
மற்ற உயிர்களை அழித்து, தன் உணவாக்கிக் கொள்ளும்.
இதனால் இவை விவசாயிகளின் எதிரியான எலி, அணில், முயல்
ஆகியவற்றை அழித்துத் தின்று விவசாயிகளின் தோழனாகக்
கருதப்படுகின்றன. இவற்றைத் தவிர பூச்சிகள், சிறிய பறவைகள்
மற்றும் ஓணான் போன்றவற்றையும் ஆந்தைகள் உணவாகக் கொள்ளும்.
• ஆந்தைகளைப் பற்றிய விவரங்களை மனிதன் சுமார் 15,000 –
20,000 ஆண்டுகளுக்கு முன்னரே கல்வெட்டுகளிலும் குகைச்
சித்திரங்களிலும் குறித்து வைத்துள்ளான். எகிப்து நாட்டு லிபியில்
இவை பற்றி விவரங்கள் உள்ளன.
• மற்ற பறவைகளைப் போல வாயில் பற்கள் இல்லாததால் தனது
உணவை முழுமையாக விழுங்கிவிட்டு, செரிக்காத எலும்பு, சிறகு
மற்றும் உரோமங்களை வாய் மூலம் வெளியேற்றிவிடும்.
•எல்லா ஆந்தைகளும் இரவிலேயே சுற்றித் திரிகின்றன. இதனால்
பகல் நேரப் பறவைகளான பருந்து, கழுகு ஆகியவற்றுடன் இவற்றுக்குப்
போட்டி கிடையாது. சில இன ஆந்தைகள் மட்டுமே அதிகாலையிலோ,
மாலை வேளைகளிலோ வேட்டையாடும்.
•ஆந்தையின் கண்கள் தன் குழியில் நகர இயலாதவை! ஆகையால்
தனது கழுத்தைத் திருப்பித்தான் ஆந்தையால் அங்குமிங்கும் பார்க்க
முடியும். இரண்டு கண்களும் தலையின் முன்பக்கமே அமைந்துள்ளதால்
இவைகளுக்கு மனிதனைப் போல துணை விழிப் பார்வை உள்ளது.
•ஆந்தையின் சிறகுகள் சத்தமின்றிப் பறப்பதற்கு ஏற்றபடி அமைந்துள்ளன.
இறக்கையின் முன் பகுதியில் கட்டையான வரிகளும் பின்புறத்தில்
மென்மையான வரிகளும் ஒலியைக் குறிக்கின்றன. அதனால் இரவில்
சத்தமின்றிப் பறந்து தன் இரையை எளிதில் பிடிக்க ஆந்தையால்
முடிகிறது.
•ஆந்தையின் காதுகளைப் பார்க்க இயலாது. ஏனெனில் காதுகள்
கண்களின் பின்புறம் அமைந்துள்ளன. இது போதாதென்று சிறகுகளும்
காதுகளை மூடியிருக்கும். இந்தக் காதுகள் மிகவும் மெல்லிய ஒலியையும்
கேட்க வல்லவை. இலைகளினூடே மெதுவாக நகரும் சிறிய எலிகள்
ஏற்படுத்தும் ஒலியைக் கூடக் கேட்டு அவற்றை ஆந்தை பிடித்துவிடும்.
•மற்ற பறவைகளைக் காட்டிலும் ஆந்தைகளின் கால்களிலுள்ள நான்கு
விரல்களில் இரண்டு முன்புறமும் இரண்டு பின்புறமும் வளைந்து
அமைந்திருக்கும். இதனால் தனது இரையை நன்றாகப் பிடித்துக் கொண்டு
ஆந்தையால் பறந்து செல்ல முடியும்.
•ஆந்தையின் அலகு பார்ப்பதற்கு சிறியது போலத் தோன்றினாலும்,
சற்றுப் பெரியதுதான். சிறகுகளுக்குள் ஒளிந்திருப்பதால் அவை
சிறியவை போலத் தோன்றும். மிகக் கூர்மையாகவும் வளைந்தும்
இருப்பதால் தனது இரையை நன்றாகக் கிழித்து உண்பதற்கு ஏதுவாக
இருக்கும்.
•ஆந்தையின் கூச்சல் பலவிதமானவை. மிகவும் சத்தமாகவும்
தாழ்ந்த சுருதியிலும் இதன் ஓசை இருப்பதால் வெகுதூரம் இவற்றின்
குரலொலியைக் கேட்க முடியும். தனது இனத்தைக் கண்டு கொள்ளவும்
தான் இருக்கும் பகுதியைத் தெரியப்படுத்தவும் ஆந்தை தனது குரலைப்
பயன்படுத்துகின்றது.
---------------------------------------------
-தொகுப்பு: எஸ்.கணேசன்,
நன்றி: சிறுவர் மணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஆந்தை
தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum