தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பல்வகை மலர்களின் மருத்துவ குணங்கள்..

3 posters

Go down

பல்வகை மலர்களின் மருத்துவ குணங்கள்.. Empty பல்வகை மலர்களின் மருத்துவ குணங்கள்..

Post by அ.இராமநாதன் Tue Dec 18, 2012 12:41 am

நன்றி: http://ta.wikipedia.org/wiki/மலரின்_மகிமை

-


மல்லிகை பூ: இல்லறதில் ஆர்வமுண்டாக்கும். கபம், கண் மயக்கம்,
உடற்சூடு, குறையும். உடலுக்கு சூட்டை அளிக்கும்.அதிகப் பால்சுரப்பால்
அவதியுரும் பெண்கள் இப்பூவை மார்பில் மூன்று நாட்கள் கட்டி வந்தால்
பால்சுரப்பு குறையும்.

பன்னீர் பூ: வாந்தி, நாக்கில் சுவையின்மை, விந்துவிரையம், தண்ணீர் தாகம், உடற்சூடு ஆகியவை தீரும்.

மந்தார்ப்பூ: உடல் கொதிப்பு நீங்கும். கண்கள் குளிச்சியடையும்.உடலும் குளிச்சியடையும்.

மகிழம்பூ: இதனை முகர வாந்தி நிற்கும்.உடலிலுள்ள அனல் நீங்கும். புணர்ச்சியின் மீது ஆசையுண்டாகும்.

புன்னைப்பூ: கரப்பான்,சொறி,சிறங்கு, பால்வினைநோய் ஆகியவை நீங்கும். ஆனால், பித்த மயக்கம் ஏற்படும்.

பாதிரிப்பூ: பித்த சுரம் நீங்கும்.வெள்ளை போக்கு நிற்கும்.

பச்சைக் குங்குமப்பூ: மூக்கடைப்பு ஜலதோஷம், காது நோய், கப-பித்த நோய்கள் நீங்கும்

சண்பகப்பூ: வாத பித்த நோய், எலும்பு காய்ச்சல், பால்வினை நோய்,
விந்துவிரையம் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.இந்தப்
பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால்
தலைவலி, நீங்கும்

கொன்றைப்பூ: சர்க்கரை நோய், குடல்வலி, மலப்புழுக்கள் யாவும் ஒழியும்.

காட்டாத்திப்பூ: சீதபேதி, இரத்த பேதி,பால்வினை நோய் குணமாகும். செடியின் மலர் வகை.

தும்பைப்பூ; தாகம்,கண் நோய்கள், ஜன்னி பாத சுரம் யாவும் தீரும்.

கருஞ்செம்பைப்பூ: கபநோய்,மூக்கடைப்பு, தலைவலி,வாத நோய் போன்றவைகள் குணமாகும்.

செம்பருத்தி பூ: வெட்டைச் சூடு நீங்கத் தினமும் காலையில் வெறும்
வயிற்றில் சுத்தம் செய்யப்பட்ட பூவைச் சாப்பிட்டு வரலாம். உடலின்
உஷ்ணத்தைத் தக்கும். இதயத்தைபலப்படுத்தும்.

களாப்பூ: கண்களைத் தாக்கும் கரும்படலம், வெண்படலம்,ரத்தப் படலம்,சதைபடலம் போன்ற கண் நோய்களை அகற்றும்.

அலா஢ப்பூ: பித்தம்,உடற்சூடு,சொறிசிரங்கு, புண் இரத்தம், தலையில் நமைச்சல் ஆகியவை நீங்கும்.

அகத்திப்பூ: எலும்புகளையும் பற்களையும் வளரச் செய்யும்,
சுண்ணாம்புச் சத்து அகத்திப்பூவில் அதிகம் இருக்கிறது. ஜீரண சக்திகும்
மலச்சிக்கலை நீக்கவும் உதவும்.இம்மலரை தாரளமாகச் சமைத்துச் சாப்பிடலாம்.

அல்லிப் பூ: நீரிழிவை நீக்கும்.புண்களை ஆற்றும்.வெப்பச் சுட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீரும். இதை சர்பத் செய்து சாப்பிடலாம்.

இலுப்பைப் பூ: ‘ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்று
சொல்லப்படுவது இனிப்புத் தன்மையாலேயே! இலுப்பைப் பூவைச் சர்க்கரையுடன்
சேர்த்து அரைத்துக் காய்ச்சிய பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்
வலிகள் குறையும். உடல் களைப்புத் தீரும் இருமல் குறையும்.விரை
வீக்கத்திற்கும் இந்த மலரை வதக்கி ஒத்திடம் கொடுக்கலாம்.

கண்டங்கத்திரிப் பூ: மூல நோய்க்கு இந்தப் பூ கைகண்ட
மருந்து.வாதுமை நெய்யில்கண்டங் கத்திரிப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி
மூலம் உள்ள இடத்தில் தடவி வர, மூல நோய் குணமாகும்.

குங்குமப் பூ: பலவிதமான நோய்களைப் போக்குவதில் குங்குமப் பூ
தன்னிகரற்று திகழ்கிறது.தலைவலி கண் நோய் காதுநோய் சுரம் ஆகிய நோய்களை
இந்தப் பூ குணப்படுத்தும்.கர்ப்பிணி பெண்கள் ரோஜா இதழ்களுடன்
சாப்பிடலாம்.பசும் பாலிலும் காய்ச்சி பருகலாம்.குடல் புண்களுக்கு இது
உதவும்.சிகப்பான குழந்தை பிறக்கும் என்பது மட்டும் உண்மையில்லை.

சம்பங்கிப் பூ: காய்ச்சிய பசும்பாலில் இந்தப் பூவைப் போட்டு சாப்பிட்டு வந்தால் உடல் திடகாத்திரம் பெறும்.

சூரிய காந்திப் பூ: இந்தப் பூவிலுள்ள விதைகளியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பலம் அளிப்பதுடன் நோய்களுக்கு நன்மையளிக்கும்.

தாழம் பூ. இதில் தைலம் எடுக்கலாம். தலைவலி, வாதவலிக்கு இத்தையலாம் வெகுவாக பயன் அளிக்கும்.

வெள்ளை தாமரைப் பூ. ஈரலில் ஏற்படும் சூடு, ஒவ்வாத மருந்தின் துன்பம், உடலில் உண்டாகிற எரிச்சல் யாவும் தீரும்.

தாமரை பூ. இதயத்திற்க்கு பலமளிக்கும்.உடல் வெப்பத்தை நீக்கித் தாது எரிச்சலை தவிர்த்து இரத்த நாளத்தையும் சீர்செய்கிறது.

நொச்சிப் பூ. இதனை அரைத்துத் தடவி வந்தால் சிரங்குகள் குணமாகும்.

முருங்கைப் பூ. காய்ச்சியப் பாலில் இப் பூவைப் போட்டு தினம் சாப்பிட்டு வந்தால் தாதுப் பலம் ஏற்படும்.

வாழைப் பூ. இதில் சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகி வந்தால் பெண்களை வருத்தும் மாதவலி நீங்கும்.

வேப்பம் பூ. இது சிறந்த கிருமி நாசின் வயிற்றுப் பூச்சிக்களை
ஒழிக்கும். அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்தும். வயிறு சுத்தமாகவும்,
பித்தம் போக்கவும் தொண்டைப் புண் ஆறவும் காது இரணம் நீங்கவும் இப் பூ
கைக்கண்ட மருந்து.

வெங்காயப் பூ. இதைச் சமைத்துச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.

தூதுளம் பூ. உடல் மிக்க பலம் பெறும். வித்து பெருகும். உடல் அழகு பெறும்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பல்வகை மலர்களின் மருத்துவ குணங்கள்.. Empty Re: பல்வகை மலர்களின் மருத்துவ குணங்கள்..

Post by ஹிஷாலீ Tue Dec 18, 2012 2:13 pm

பயனுள்ள தகவல் ஐயா நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

பல்வகை மலர்களின் மருத்துவ குணங்கள்.. Empty Re: பல்வகை மலர்களின் மருத்துவ குணங்கள்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 02, 2013 11:40 am

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பல்வகை மலர்களின் மருத்துவ குணங்கள்.. Empty Re: பல்வகை மலர்களின் மருத்துவ குணங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum