தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முதல் சந்திப்பு.....

+2
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
6 posters

Go down

முதல் சந்திப்பு.....   Empty முதல் சந்திப்பு.....

Post by ரௌத்திரன் Sat Jan 12, 2013 1:27 am

சாலையோர மின்கம்பமாய்க்
காத்திருந்தேன்
கன்னியுன் வரவு பார்த்து.

ஒலிம்பிக்கில்
ஓடத் தொடங்கியவனின்
இருதயமாய்
இருமடங்கில் துடித்தது
அடி நெஞ்சு

வனிதை நீ
வந்து நின்றாய்

தங்கப் பதக்கத்தைத்
தட்டிவிட்டதுபோல்
துள்ளிய மனதை
மெல்ல அடக்கினேன்

நாணம்,நடுக்கம்,ஆனந்தம்
மூன்றுக்கும் மத்தியில்
மூச்சுத் திணறிய நீ

எங்கே
காக்க வைத்ததற்காய்க்
கோபிப்பேனோ என்று
மன்னிப்புக் கேட்டாய்.

ஓ!
தெய்வம்
தாமதமாய்த் தோன்றியபோதும்
தவசி கோபிப்பதில்லை கண்ணே!

"வா.....!" என்றேன்
உன் தோளணைத்து.

எனக்கென்ன?
தயக்கமே இல்லாமல்
தொட்டுவிட்டேன்.

உனக்குள் எத்தனையோ
உருவான பூகம்பங்கள்!

பூப்படைந்த போது
பரிட்சயம் இல்லாத வெட்கத்தில்
பரிதவித்ததுபோல்

அறிமுகம் இல்லாத
ஆனந்தத்தின் அடித்தளத்தில்
ஆன்மா உருகினாயோ?

சாலை கடந்து
மெல்ல நடந்தோம்
பூங்கா நோக்கி

சருகுகளையே பார்த்துப் பார்த்துச்
சலித்துக் கிடந்த பூங்கா
சற்றே உயிர்த்தது
பூ உன்னைப் பார்த்த
புளகத்தில்.....

உட்கார இடம்தேடி
ஒரு
மரத்தடி நிழலில்
மெல்ல அமர்ந்தோம்!


என்ன பேசுவது?
எதைப் பேசுவது?
எப்படிப் பேசுவது?
எதுவும் புரியாமல்
இருவரும் தவித்தோம்!

பேச வேண்டுமே என்று
உளறி வைத்தாய் நீ!

பதில் சொல்ல வேண்டுமே என்று
பிதற்றி வைத்தேன் நான்!

பேசத்தெரிந்த எனக்கும்
பேசத்தெரியாத உனக்கும்
பேதமற்றுப் போனது.

மீண்டும்
மௌனத்தின் கருப்பையில்
முடங்கினோம்

பணக்காரனின்
வருமான வரிபோல்
வர மறுத்தது
வார்த்தை...

பத்துநாள்
பட்டினி கிடந்தவன்
அமுதத்தைப் பார்ப்பதுபோல்
ஆசையாய்ப் பார்த்தேன் உன்னை.

முகத்தில் வந்து
மொய்த்த முடியை
விரல்கொண்டு மெல்ல
விலக்கியவன்
கடித்துவிடலாமா என்று
கன்னத்தையே பார்க்க...

"அச்சோ!
அப்படிப் பாக்காதீங்க
வெட்கமா இருக்கு...."

சுட்டெரிக்கும் கோடையில்
சொட்டிய மழைபோல்
சுகமாய்ச் சிணுங்கினாய்....


"இனியும் உற்றுப் பார்த்தல்
இங்கிதம் ஆகாது"

நாகரிகம் என்னை
நச்சரிக்க

உன் கையோடு
கைகோத்தேன்.

மீண்டும் நம்
காதலைப் போலவே
கனமான மௌனம்....

நீயோ
ஆயிரம் மொழிகளை
ஆர்வமாய்க் கற்றவன்
திடீர் ஊமையானதுபோல்
தவித்துக் கொண்டிருக்க

நானோ
உன்
செவியழகில்
சொக்கியபடி
கைவிரல் கொண்டு
காதணியில் குறும்பு புரிய

"மன்னவர் மகுடங்கள்
=====இறங்கின வெனவும்
பின்னெவர் உள்ளவர்
======பேசுக எனவும்
கண்ணன் கோவில்
=====மணியென இலங்கும்
சின்னஞ் சிறுச்செவித்
=====தோடுகள் அசையும்!"


மனசுக்குள் மொட்டுவிட்ட
மோகக் கவிதையை
உனக்கு உரைக்க
உதடு திறக்கையில்....

"சீய்ய்ய்ய்...
சும்மா தான் இருங்களேன்.."

வெட்கத்தில்
நீ தொலைய

வெட்கம் கெட்டு
நான் அலைய

விவஸ்தையற்ற நேரம்
விஷம் போல் ஏற

கேட்டே விட்டாய்
"கிளம்பட்டுமா?"

புறப்பட்டோம் இருவரும்!

புலம்பியது
பூங்கா!

சிரித்தது
சருகு!

பூங்கா மீண்டும்
சருகுக்குள்
சமாதியானது.

வேர்வை வழிய வழிய
விடைகொடுத்தனுப்ப
உன்னோடு நடக்கையில்

சாலை என்பதையும்
சட்டென்று மறந்து
துப்பட்டா கொண்டு
துடைத்தாய்

வேர்வையை மட்டுமல்ல
என் வாழ்வின்
ஒட்டுமொத்தக் கண்ணீரையும் சேர்த்து.....



(விரைவில் என் காதல் மனைவியாகவிருக்கும் "லலிதா"வுக்கு இது என் காதல் காணிக்கை)


----------------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

முதல் சந்திப்பு.....   Empty Re: முதல் சந்திப்பு.....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 12, 2013 1:47 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முதல் சந்திப்பு.....   Empty Re: முதல் சந்திப்பு.....

Post by pakee Mon Jan 14, 2013 8:30 pm

கவிதை அருமை மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

முதல் சந்திப்பு.....   Empty Re: முதல் சந்திப்பு.....

Post by நிலாமதி Tue Jan 15, 2013 1:40 am

பாராட்டுக்கள். காதல் கனிந்து கல்யாணத்தில் வாழட்டும் . வாழ்த்துக்கள்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

முதல் சந்திப்பு.....   Empty Re: முதல் சந்திப்பு.....

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 16, 2013 9:08 pm

வாழ்த்துகள் நண்பரே... அழைப்பிதழ் கொடுக்கவும்...
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

முதல் சந்திப்பு.....   Empty Re: முதல் சந்திப்பு.....

Post by பார்த்திபன் Thu Jan 17, 2013 5:42 pm

மிக்க மகிழ்ச்சி கலக்கல் வாழ்த்துக்கள்
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

முதல் சந்திப்பு.....   Empty Re: முதல் சந்திப்பு.....

Post by ரௌத்திரன் Thu Jan 17, 2013 7:45 pm

நிலாமதி wrote:பாராட்டுக்கள். காதல் கனிந்து கல்யாணத்தில் வாழட்டும் . வாழ்த்துக்கள்.

நன்றி மதிப்புக்குரிய‌ நிலாமதி அவர்களுக்கு
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

முதல் சந்திப்பு.....   Empty Re: முதல் சந்திப்பு.....

Post by ரௌத்திரன் Thu Jan 17, 2013 7:47 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:வாழ்த்துகள் நண்பரே... அழைப்பிதழ் கொடுக்கவும்...
[You must be registered and logged in to see this image.]



நிச்சயம் அழைப்பிதழ் கொடுக்கிறேன் தோழர் ரமேஷ் அவர்களே! நன்றி!
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

முதல் சந்திப்பு.....   Empty Re: முதல் சந்திப்பு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum