தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அருள் தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி படைப்புகளில் சமூக அணுகுமுறைகள் Socilogical Approach of the Vedatri Maharishi வொர்க்ஸ்- Dr M.Thyagarajan Singapore 558286

2 posters

Go down

அருள் தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி படைப்புகளில் சமூக அணுகுமுறைகள் Socilogical Approach of the Vedatri Maharishi வொர்க்ஸ்-  Dr M.Thyagarajan Singapore 558286 Empty அருள் தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி படைப்புகளில் சமூக அணுகுமுறைகள் Socilogical Approach of the Vedatri Maharishi வொர்க்ஸ்- Dr M.Thyagarajan Singapore 558286

Post by Dr Maa Thyagarajan Tue Jan 22, 2013 10:44 am

அருள் தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி படைப்புகளில் சமூக அணுகுமுறைகள்
Socilogical Approach of the Vedatri Maharishi Works
Dr M.Thyagarajan
Singapore 558286


முன்னுரை
அருள் தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி அவர்கள் சமுதாயம் நலம்பெற பல வகையான தத்துவங்களைக் கூறியுள்ளார். இத்தத்துவங்கள் மனித வாழ்வை மேம்பாடு அடையச் செய்திருக்கின்றன. "பலன்தரும் போது தான் தத்துவங்கள் உயிர்பெறுகின்றன" என்ற கூற்று அவருடைய தத்துவங்கள் அனைத்தும் மனித குலம் நல்வாழ்வு வாழத் துணைபுரிந்துள்ளதன் மூலம் அறியலாம். மகரிஷி அவர்கள் சமுதாயம் இன்னும் இருட்டறையில் உள்ளதை எண்ணி அதை மாற்ற முனைந்துள்ளார். அத்தகைய மாற்றங்கள் சமூகத்திற்குத் தேவையான ஒன்றாக இருந்துள்ளது. மகரிஷி அவர்கள் மனதை அறிந்து வாழ்வைச் சுருக்கும் கவலைகளில் இருந்து விலக உதவும் எளிமையான வழிகளை விளக்கி உள்ளார்.
இவர் பல நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இத்தகைய நூலகளில் மனித சமூகம் எதிர்நோக்குகிற சிக்கல்களையும் அவற்றை நீக்கும் வழிமுறைகளையும் புதிய அணுகுமுறையில் அணுகி அதற்கான தீர்வுகளையும் புதிய சமூக அணுகுமுறைகளையும் கூறியுள்ளார். இக்கட்டுரையில் அருள் தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி அவர்கள் படைப்புகளில் அமைந்துள்ள சமூக அணுகுமுறைகளைக் காண்போம்.

சமூக அணுகுமுறை என்றால் என்ன?
தனிமனிதன் மற்ற மனிதர்களுடன் எவ்வாறு தன் உறவைக் கையாளுகின்றான் என்பதை ஆராய்வதே சமூக அணுகுமுறையாகும். மனித அமைப்புகளை ஆராயும் அறிவியலாகத் திகழும் சமூகவியலுக்கு ஓர்நூற்றாண்டு வரலாறு உண்டு.

மனித சமுதாயத்தை உள்ளடக்கிய தனிமனிதர்கள் குழுக்கள் மற்றம் நிலையங்கள் ஆகியவற்றை ஆராய்வதே சமூகவியலாகும். இத்துறை மனித சமூக வாழ்வில் ஒரு மிகப்பெரும் பகுதியினை ஆராய முனைகிறது. சமூகவியல் ஆய்வாளர்கள் மனிதர்கள் எவ்வாறு ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்கின்றனர் என்பதினையும் தங்களுடைய சுற்றுச் சூழலுடன் மனிதர்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றனர் என்பதினையும் குறித்துக் கொள்வர். குழுக்களின் உருவாக்கம் பல்வேறு சமூகப் பழக்கங்ளின் காரணங்கள் மற்றும் ஒரு சமூகத்தில் வழிபாட்டுத் தலங்கள் பள்ளிகள் மற்றும் சமூகத்திலுள்ள மற்ற அமைப்புகளின் பங்களிப்பைப் பற்றியும் சமூகவியல் ஆய்வாளர்கள் படிப்பர். சமூகவியல் என்பது சமூகஅறிவியல் அது மனிதனின் சமூக நடவடிக்கைகளை ஆராயச்சிகசளுக்கும் மனோவியலுக்கும் மற்ற சமூக அறிவியலுக்குள்ளும் அதிகமாக ஊடுருவுகிறது. இவ்வாறு சமூக அணுகுமுறையென்றால் என்ன என்பதற்கு ரோலாண்ட் கெமிலிரிஎன்பவர்(Roland Camilleri www.pointask.com ) Å¢Çì¸õ ÜÚ¸¢È¡÷.

இனி மகரிஷி அவர்களின் படைப்புகளில் சமூக அணுகுமுறையென்றால் என்ன என்பதற்கு ரோலாண்ட் கெமிலிரி என்பவர்(Roland Camilleri www.pointask.com )ÜÈ¢ÔûÇ Å¢Çì¸ò¾¢üÌ ²üÀ «¨ÁóÐûǾ¡ ±ýÚ ¸¡ñ§À¡õ.

அருள் தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி அவர்கள் சமுதாயம் நலம்பெற என்ன செய்யவேண்டும் என்று எண்ணிய எண்ணத்தின் விளைவு தான் தனிமனிமனித வாழ்வின் மேம்பாட்டிற்கான திட்டங்களாகவும், உலக சமுதாய மேம்மபாட்டிற்குரிய சீர்திருத்த வாழ்க்கைமுறைகளாகவும் மலர்ந்திருக்கின்றன.அதோடு இயற்கையின் ஆற்றலையும், இறைநெறியின் ஆற்றலையும் இணைத்துத் தம் ஆன்மீக அறிவியல் சிந்தனைகள் மூலம் அரிய கருத்துக்களை வழங்கி வருகிறார்கள்.

அருள்தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷியின்உயர்ந்த குறிக்கோள்.

இன்றைய சமுதாயம் அறிவியலில் முன்னேற்றம் கண்டுள்ள சமுதாயம். அறிவியலையும் ,ஆன்மீகத்தையும் இணைத்துப்பார்க்கும் போது தான் சமுதாயம் புதிய புதிய சிந்தனைகளைப் பெற்று உயரும். இயற்கையின் சுழற்சியும் , மானுடவாழ்வின் சுழற்சியும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதை இன்றைய அறிவியல் கண்டு பிடிப்புகள் நமக்குக் காலந்தோறும் உணர்த்தி வருகின்றன.இத்தகைய கருத்துக்களை உலக மக்கள் பின்பற்றி வாழவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

மனிதகுலம் குழுவாகப் பிரிந்து வாழ்ந்தாலும் உள்ள ஒருமையினால் ஒரே குலமாகவே வாழலாம் என்பது அருள்தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி அவர்களின் உயர்நத குறிக்கோளாகும்.

மானுட வாழ்க்கையில் வெற்றிக்கு மன நலமும் , வினைநலமும் வேண்டும். மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம். வினைநலம் வேண்டியன எல்லாம் தரும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப வாழ்ந்தவர். மனநலம்- வினைநலம் இரண்டும் வாழ்வின் இரு நெறிகளாக இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தால் உலகம் ஒளி பெற்றுத் திகழும் ஞான ஒளி பெற்றுத் திகழும் என்ற உயர்ந்த சிந்தனையை உடையவர் சுவாமி வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்வின் வெற்றிக்கு அருள்தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி அவர்கள் முன்னையோரின் பல் நூற்றாண்டு கால வாழ்க்கையின் பட்டறிவு அருள் தந்தையின் ஒரு நூற்றாண்டுக் கால வாழ்வில் ஒளியாகத் திகழ்கின்றது, மானுடத்திற்கு வழிகாட்டும் ஞானஒளி விளக்காகவும் இவருடைய கருத்துக்கள் திகழ்கின்றன.

மனித சமுதாயம் உயர்வு பெறும் வழிகள்
இக்காலத்தில் விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்று வருகிறது. மக்களும் சிந்தனையாற்றலில் மேம்பட்டுக் காணப்படுகிறார்கள். இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்தி நாம் மனிதகுலத்திற்கு வேண்டிய சமுதாய ஒழுக்கங்களை நடைமுறையில் செயல்படுத்தி, மனிதவாழ்வில் உள்ள சிக்கல்கள் அனைத்தையும் படிப்படியாகக் குறைத்து நிறைவும் அமைதியும் உடைய வாழ்க்கை வாழலாம் என்று அருள்தந்தை சுவாமி வேதாந்திரி மகரிஷி அவர்கள் கூறுகின்றார். இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால் முதலில் சிந்தனையாற்றலை மக்களிடம் தூண்டிவிடவேண்டும் என்று கூறுகிறார். இதுவே தினசரி வாழ்விலும் கல்விமுறையிலும் மனிதகுலத்திற்கு வழிகாட்டியாய் அமையவேண்டும். இந்த அடிப்படையில் சிந்தித்துத் தேவையற்ற செயல்களை , சடங்கு முறைகளை ஒதுக்கி விட்டு வாழ்க்கைத் திட்டங்கள முறையாக வகுத்துக் கொண்டு வாழவேண்டிய அவசியத்தைச் சிந்தித்து உணரும்போது மனித சமுதாயம் உயர்வு பெறும் என்று அருள்ததை சுவாமி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகின்றார்.

போரில்லாத உலகம், பொருள் துறையில் சமநீதி, நேர்மையான நீதி முறை, நிலவுலகுக்கோர் ஆட்சி, சீர் செய்த பண்பாடு, சிந்தனையோர் வழி வாழ்வு, சிறப்புணர்ந்த பெண்மதிப்பு, தெய்வநீதி வழி வாழ்தல், தேர்த்திருவிழா தவிர்த்தல், சிறுவர்கட்கே விளையாட்டு, செயல் விளைவு உணர்வு கல்வி, சீர்காந்த நிலை விளக்கம், பார் முழுவதுதும் உணவு நீர் பொதுவாக்கல், பல மதங்கள், பல கடவுள் பழக்கம் ஒழித்து உண்மை ஒன்றைத் தேர்ந்திடுதல் இந்தப் பதினான்கு திட்டங்களை எடுத்தக் கொண்டு அவற்றிற்கேற்ப போதனை, சாதனை முறைகளை மனித இன நல்வாழ்வுக்கு ஒத்தபடியும் மனினுடைய ஆற்றலுக்கும் அறிவுக்கும் பொருந்துமாறு செயல்முறைகளை வகுத்துக் கொண்டு செயல்பட்டால் மனித சமுதாயம் உயர்வு பெறும் என்று அருள்தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகின்றார்.

வினா - விடை முறையில் அமைந்த கருத்து
முதலில் எடுத்துக் கொள்ளும் திட்டம் போரில்லா நல்லுகம். முதலில் ஒரு வினாவைக் கேட்கச் சொல்கிறார், அதாவது போர் என்பது மனித குலத்திற்குத் தேவை தானா? மனித குலத்திற்குத் துன்பம் நீங்கிய, வீண் விரையம் அற்ற, அமைதியான வாழ்க்கையே தேவை என்று விடை பகர்கின்றார்.
மனிதனை மனிதன் பகைத்துக் கொண்டு , துன்புறுத்திக் கொன்று விடுவது என்ற கொலை பாதகச் செயலே போர் ஆகும். இதுவரையில் எத்தனையோ போர்கள் உலகில் நடந்து விட்டன. அத்தனை போர்களின் துன்ப விளைவுகளையும் அனுபவித்த மனித இனம் ஆழந்த சிந்திக்க வேண்டிய காலம் இது. குழு குழுவாகப் பிரிந்து நின்று, மனிதனை மனிதன் கொன்று குவிப்பதே போர் எனப்படுகிறது. இதுவரை அத்தனைப் போர்களினால் வந்த இலாபங்களும், நட்டங்களும், துன்பங்களும் எவ்வளவு? என்று சிந்தித்தால், "ஜயோ! போர் என்பது வேண்டவே வேண்டாம்" என்ற தீர்வு அனைவருக்கம் கிடைத்து விடும் என்று அருள்தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகின்றார்.

மனித வாழ்வில் விஞ்ஞானமும் தத்துவமும் இருகண்கள்
ஆழ்ந்த சிந்தனையோடு அணுகும் போது இயற்கையின் முக்கிய பரிணாமங்களில் நமக்குத் தெளிவு கிடைக்கும். புலன்களால் உணரமுடியாத இயற்கையின் ஆற்றல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 1) பிரபஞ்சத்தின் ஆதி நிலை 2) நுண்விண் துகள் எனனும் வேதான் 3) காந்தம் 4) காந்தத்தின் தன்மாற்ற நிலைகள். இந்த நான்கு தத்துவத்துவங்களையும் அறியாத விஞ்ஞானமோ அல்லது மெய்ஞ்ஞானமோ தெளிவான விளக்கத்தையோ அல்லது தத்துவக் கருத்துத் தொகுப்பையோ அளிக்க முடியாது. எனவே தான் இந்நான்கு தத்துவங்களின் மீது அறிவைச் செலுத்துமாறு அருள்தந்தை கல்வியில் உயர்ந்த அறிஞர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறார்.
இயற்கையில் அமைந்த எந்தப் பொருளையும் ஆற்றலையும் தத்துவ ஞானத்தின் அடிப்படையில் தனது சிந்தனை ஆற்றலைக் கொண்டு ஆக்கமுறையில் வாழ்வின் வளத்திற்குப் பயன்படுத்தும் விளக்கமும் அதற்கேற்ற செயல்களும் விஞ்ஞானமாகும். மனித இன வாழ்வில் தத்துவமும் விஞ்ஞானமும் தத்துவமும் ஒன்றிணைந்தே எச் செயலும் நடைபெறவேண்டும். தத்துவத்தைப் புறக்கணித்த விஞ்ஞானமோ, விஞ்ஞானத்தைப் புறக்கணித்த தத்துவமோ முழுப்பயன் தராது.
ஆதலால் இரண்டும் நம் இரு கண்கள் போன்றவை என்று கூறுகின்றார்.

பொருளாதார ஏற்றத் தாழ்வுக்குக் காரணமும் அதன் தீர்வும்
பின்னால் நிகழக்கூடிய விளைவைப் பற்றித் தகுந்த விழிப்பு நிலையோ உண்மையான அக்கறையோ காட்டாது பழக்கத்தின் காரணமான செயல்களில் சிக்கிக் கொண்டு தவறான ஆனால் வரையறைகளுக்கு உட்பட்ட கொள்கைகளைப் பற்றிக் கொண்டு செயல்படுவது தான் பொருளாதார ஏற்றத் தாழ்வு சிக்கலுக்கான காரணம் என்று குறிப்பிடுகிறார் அருள் தந்தை.
ஒவ்வொரு செயலையும் ஆசைகளையும் மதிப்பிடுகையில் ஒருவர் தன்னுடைய அறிவை விழிப்புணர்வுடன் கடந்த கால அனுபவங்கள், தற்காலச் சூழ்நிலைகள், வருங்கால விளைவுகள் ஆகிய மூன்று திசைகளில் செலுத்த வேண்டும். இரண்டாவது, விழிப்புணர்வை 1) தான் 2) சமுதாயம் 3) இயற்கை இவற்றைப் பக்கங்களாகப் பெற்றுள்ள வாழ்க்கை முக்கோணத்தில் ஒரு பகுதியே `தான்’ என்பதில் செலுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வினால் ஒவ்வொருவரும் சகிப்புத்தன்மை, விடடுக் கொடுத்தல், தியாகம் ஆகியவற்றைத் தனது பண்பில் பெற்று விடுகிறார். எனவே இவ்வாறு அமையும் வாழ்க்கையின் போக்கு பொருளாதாரச் சமத்துவத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதரா ஏற்றத் தாழ்விற்குக் காரணமும் கூறி அதற்கான தீர்வையும் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

எல்லாம் வல்ல இறைநிலையை உணர்தல்
மெய்ப்பொருள் பற்றிய அறிவு விஞ்ஞானத்திற்குத் தொடர்பு இல்லாதது என்றோ, அப்பாற்பட்டது என்றோ யாரும் நினைக்க வேண்டியதில்லை. மெய்ப்பொருளைப் பற்றி அறிவதும் விஞ்ஞானத்தின் மறைபொருட் பகுதியேயாகும். இதை ஆராய்வதற்கும் உணர்வதற்கும் கருவியாக இருப்பது புலன்களுக்குப் புலப்படாத தத்துவமாகிய `மனம்` ஆகும். மனம், பேரறிவு, மெய்ப்பொருள் இவற்றை உணர்தல் என்பது ஒரே செயலாகும்.மறைபொருளை உணர்வதற்கான சரியான முறை அகத்தவத்தின் மூலம் மன அலைச் சுழலைக் குறைத்து மனதை அமைதி நிலைக்கு எடுத்துச் செல்வதே ஆகும். இதை முன் அனுபவம் உள்ள ஒருவரிடம் இருந்து தான் கற்றாக வேண்டும். இந்த மனப்பயிற்சியை அளித்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை உலக சமுதாய சேவா சங்கம் உருவாக்கியுள்ளது. அவர்கள் எளியமுறைக் குண்டலினி யோகம் ( Simplified Kundalini Yoga) என்ற பெயரில் கற்பித்து வருகிறார்கள்.
எல்லாம் வல்ல இறைநிலையின் இருப்புத்தன்மை நமது புலன்களால் உணர முடியாத ஒன்றாகும். எப்பொருளிலும் எவ்விடத்திலும் நுண்ணிய அலை வடிவில் ஊடுருவிப் பாய்ந்தறியும் வியத்தகு ஆற்றல் ஆன மனதால் தான் இதை யூகம் செய்ய முடியும்.
இறைநிலை, நுண் விண்துகள்கள், காந்தம் காந்தத்தின் ஆறுவகைத் தன் மாற்றங்கள் ஆக நான்கு மறை பொருட்களையும் தெளிவாகப் புரிந்து கொண்டால் இறை நிலையின் இருப்புத்தன்மை, பிரபஞ்சத் தோற்றம், செயல் ஒழுங்கு முறைகள், இவற்றை நாம் நன்குணர்ந்து கொள்ளலாம். எவ்வாறு எனில், எங்கும் நிறைந்த எல்லையற்ற பெரு வெளியானது பூரணம், பேராற்றல், பேரறிவு, என்னும் மூன்று தன்மைகளையும் அடக்கமாகப் பெற்ற தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலாகும். இதுவே பிரம்மம், தெய்வம், கடவுள் என்று வழங்கப்படுகின்றது.

பிறரை மதியாத நிலையைப் போக்குவதற்குரிய வழி
இயற்கையின் எல்லாவற்றையும் அறியும் பேரறிவின் உள்ளார்ந்த நோக்கத்தின் தூண்டுதலினாலேயே எல்லாப் பொருட்களும் ஒழுங்கான அமைப்பில் தோன்றுகின்றன. பிரபஞ்சத்தின் எல்லா வெளிப்பாடுகளும் இயக்கங்களும் என்றும் தவறாத செயல் விளைவுத் தத்துவத்திற்கு உட்பட்டவையே ஆகும்.
மன அலைச்சுழல் விரைவைக் குறைப்பதற்கான தியானப்பயிற்சியை உள்ளடக்கிய மெய்ஞ்ஞான தத்துவ அறிவைச் சிந்திக்கும் வயது வந்த எல்லாருக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு மனிதனும் பிற மனிதர்களைப்ம் உயிரினங்களையும் உண்மையாகவே மதித்து வாழ ஆரம்பித்துப் பிறர்க்குத் துன்பம் கொடுக்காது முடிந்தவரை எல்லா வகைகளிலும் ஒத்துதவி வாழ்வதைத் தான் வாழ்க்கையின் புனிதமான கடமையாகக் கொள்வான். இதுவே , தற்காலத்தில் உள்ள பிறரை மதியாத நிலையைப் போக்குவதற்கான ஆய்வுத் தீர்வாகும். அறியாமை என்னும் இருளிலிருந்து விடபட்டு உதிக்கும் சூரியனைப் போல பிரகாசிக்க இந்த அறிவின் தெளிவு ஒளியூட்டும் என்கிறார் அருள் தந்தை அவர்கள்.

எது தெய்வீகமாகும்?
இயற்கையின் உண்மைகளை மக்களுக்கு விளக்கித் தெளிவுபடுத்தும் காலம் வரையில், போலியான ஆன்மீகத் தலைவர்கள் இறைவன், சொர்க்கம், நரகம், மறுபிறப்பு, போன்ற மறை பொருள்கள் பற்றித் தவறான கருத்துக்களைப் போதித்து மக்களைக் குழப்பியும் பயமுறுத்தியும் தான் வருவார்கள். இன்றைய நிலையில் உலக மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் இந்தத் தவறான கொள்கைகளின் பிடியில் தான் இருக்கிறார்கள். தன்னலம் பற்றி ஆணவமும் கொண்டு ஏமாற்றும் நபர்கள் பலர் தங்களைத் தெய்வீக அவதாரம் என்றும் ஆன்மீகத் தலைவர்கள் என்றும் பிரபல்யப்படுத்தி வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மனிதன் மீது தெய்வீகம் எங்கே இருக்கிறது? ஒவ்வொருவரும் அவரவர் தாயின் கருப்பையில் உற்பத்தியாகி வளரத் தொடங்குகின்றனர். ஒரு மனிதன் தெய்வீகமாக இருக்க வேண்டுமானால் அது அவனுடைய அறிவிலும் செயல்களில் மட்டும் தான் முடியும். இறைநிலையின் தெய்வீகத் தன்மையையும் எல்லா இடங்களிலும் அதன் செயல் ஒழுங்கையும் தெளிந்து உணர்ந்து ஒவ்வொரு பொருளுடனும் பிற மனிதனுடனும் சரியான முறையில் தொடர்பு கொண்டு மதித்து வாழ்வதே தெய்வீகமாகும். தெய்வநிலை இது தான் எனும் உண்மையைத் தெளிவாக உணராமையினால் உண்டாகும் சமயத் தொடர்பான சகிப்புத்தன்மையின்மை பற்றி அருள் தந்தை மகரிஷி அவர்கள் மிகத் தெளிவாக உரைத்துள்ளார்.

"மனவளக்கலை" பாடத்திட்டம்
மனித வாழ்வு சீர்பட வேண்டுமானால் இளையர் மனத்தை மாற்ற வேண்டும். இத்தகைய மாற்றத்தைத் தனியொருவரால் செய்து விட முடியாது. ஆதலால் அரசாங்கம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டங்களிலில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். புதுமையைப் புகுத்த வேண்டும் என்னும் நோக்கில் அருள் தந்தை வோதாந்த மகரிஷி அவர்கள் விரும்பினார். சமூகத்தைப் புதிய நோக்கில் சிந்திக்க வைத்தார் அதன் விளைவே மன வளக்கலை பாடத்திட்டமாகும்.
வாழ்க்கைப் பிரிவுகள் பலவற்றைக் கொண்ட கல்லூரிகளின் பாடத் திட்டங்களில் "மனவளக்கலை" எனும் பிரிவு சேர்க்கப்படவேண்டும். மற்ற எல்லாப் பிரிவு கல்விகளுக்கும் இந்த மனவளக்கலை பிரிவு ஆன்மீக உயிரூட்டம் அளித்து உலகில் மனித இனப்பண்பாட்டினையே உயர்த்திச் சிறப்பளிக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

தேவையற்ற செலவுகளை எவ்வாறு கட்டுப்படுதலாம்?
சமயத் திருவிழாக்களையும், நடைமுறைச் சடங்குகளையும் சுருக்கி அதன் விளைவாகப் பெரும் மதிப்புள்ள ஆற்றலையும் , நிதியையும் சேமிக்கலாம்.
பின்விளைவுகளைத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ இடத்திற்கும் காலத்திற்கும் தகுந்தவாறு தவிர்க்க முடியாத தேவைகளின் உந்துதலால் குறிப்பிட்ட சில சடங்குமுறைகள் உருவாகிவிட்டன. இதனால் பெரிய அளவில் பணமும் ஆற்றலும் வீணாக்கப்படுகின்றன. இத்தேவையற்ற செயல்கள் பண, ஆற்றல் இழப்புகளோடு கூட மனப்பிணக்கையும் உடல் நல இடையூறுகளையும் தோற்றுவித்து உடல் நலக் கேட்டை உண்டாக்கி மற்றும் நட்பையும் குலைத்து விடுகின்றன. ஆதலால் சமயத் திருவிழாக்களையும், நடைமுறைச் சடங்குகளையும் சுருக்கி அதன் விளைவாகப் பெரும் மதிப்புள்ள ஆற்றலையும் , நிதியையும் சேமிக்கலாம்.

திருமணங்களை முன்னிட்டு ஏற்படும் தேவையில்லாத செலவுகளைப் பற்றி நீண்டகாலமாக மகரிஷி ஆழ்ந்து சிந்தித்து, இறுதியாக உலக அனைத்திலும் உள்ள எல்லாத் தரப்பட்ட மக்களுக்குப் பொருந்துமாறு ஒரு சீர்திருத்த நெறி சார்ந்த திருமணமுறையை வெளியிட்டுள்ளார். இவ்விதத் திருமணங்கள் பொதுமக்கள் முன்னிலையில் மணமகனும் மணமகளும் ஒருவரையொருவர் வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொள்ளச் சம்மதிக்கிறோம் என்பதை ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உரக்கப்படித்து உறுதி செய்து விட்டுக் குழுமியுள்ள உறவினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அதில் கையொப்பமிடவேண்டும். இதைத் தொடந்து இந்தத் திருமணத்திற்குத் தங்கள் ஒப்புதலை மனப்பூர்வமாகத் தெரிவிக்கும் விதத்தில் மணமக்களின் பெற்றோர் சபையின் முன் வந்து தம்பதியரை வாழ்த்த வேண்டும். பெற்றோர்கள் அந்த ஆவணத்தில் சாட்சிகளாகக் கையெழுத்திட வேண்டும். பின் அதில் திருமணத்தை முன்னின்று நடத்தி வைக்கும் ஆச்சாரியாரும் கையொப்பமிட வேண்டும். இறுதியாகக் கூடியிருப் போரில் ஐந்து பேர் சமுதாயத்தின் சார்பாகச் சாட்சிகளாகக் கையொப்பமிட வேண்டும். அடுத்துத் தம்பதியர் மாலைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். திருமணத்தில் கலந்து கொள்ளும் எல்லோரும் வாழ்த்துக்கள் கூற வேண்டும். இத்துடன் திருமணம் இனிதே முடிவடைகிறது. பகல் கொள்ளையாகிய வரதட்சணை இங்குக் கிடையாது. பெற்றோர்களும் நண்பர்களும் அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு அன்பளிப்புகள் வழங்கலாம். இந்த முறை திருமணத்திற்குச் சில நாட்கள் முன்போ பின்போ திருமணத்தை அரசாங்கத்தில் பதிவு செய்து கொள்வது மிகவும் பாதுகாப்பான முறை.
இந்த வகைத் திருமணத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் அடங்கியுள்ளன.

1) தம்பதியர் ஒருவரையொருவர் விரும்பி ஏற்றுக் கொள்கின்றனர்.
2) பெற்றோர்கள் மனமுவந்து தங்களது ஒப்புதலை அளிக்கின்றனர்.
3) இந்தத் திருமண உறவைச் சமுதாயமும் ஒத்துக் கொள்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட எளியமுறைத் திருமணங்கள் இவ்வாறு நடைபெற்றுள்ளன. இன்றும் நடைபெற்று வருகின்றன. நாளடைவில் இம்முறைத் திருமணம் உலகிலுள்ள பிற பகுதிகளுக்கும் கூடப் படிப்படியாய் பரவும் என நம்புகிறார் மகரிஷி.

முடிவுரை
அருள் தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி அவர்கள் சமுதாயம் நலம்பெற பல கருத்துக்களைச் சமூதாயத்திற்கு வழங்கியுள்ளதைக் கண்டோம். அதோடு தவறான பழக்கங்களை நிறுத்தப் பயன்படும் எளிமையான வழிகளையும் விவரித்து உள்ளார். இவற்றை முறையாக மனதில் செலுத்தினால் கவலை அலைகள் ஓயவும், தீய பழக்கங்கள் நீங்கவும், குடும்ப வாழ்வு சிறக்கவும், கல்வி தொழில் முதலியவற்றில் பெரிய வெற்றிகளை அடைய அறிவைத் தீட்டித் தீவிரப்படுத்தவும் பயன்படும். ஆதலால் நாம் இவருடைய நூல்களை வாசிப்போம் சமுதாயத்தை நேசிப்போம். அருள் தந்தையின் கூற்றுப்படி அனைவரும் "வாழ்க வளமுடன்" என்று கூறி நிறைவு பெறுகிறேன். நன்றி! வணக்கம்!

இக்கட்டுரை எழுதத் துணைநின்ற நூல்கள்

1) எனது வாழ்க்கை விளக்கம், அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி

2) ஞானமும் வாழ்வும், அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி

3) உலக சமுதாய சேவா சங்கம், அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி

4) இறையுணர்வும் அறநெறியும், அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி

5) செயல் விளைவுத் தத்துவம், அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி

6) உலக சமுதாய வாழ்க்கை நெறி, த்த்துவஞானி வேதாத்திரி மகரிஷி

7) சமூகச் சிக்கல்களுக்கான ஆய்வுத் தீர்வுகள் அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி

8) Roland Camilleri , www.pointask.com

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

அருள் தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி படைப்புகளில் சமூக அணுகுமுறைகள் Socilogical Approach of the Vedatri Maharishi வொர்க்ஸ்-  Dr M.Thyagarajan Singapore 558286 Empty Re: அருள் தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி படைப்புகளில் சமூக அணுகுமுறைகள் Socilogical Approach of the Vedatri Maharishi வொர்க்ஸ்- Dr M.Thyagarajan Singapore 558286

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 22, 2013 1:23 pm

அருள் தந்தை சுவாமி வேதாத்திரி மகரிஷி படைப்புகளில் சமூக அணுகுமுறைகள் Socilogical Approach of the Vedatri Maharishi வொர்க்ஸ்-  Dr M.Thyagarajan Singapore 558286 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum