தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கடவுளுக்குத்தான் வெளிச்சம்
5 posters
Page 1 of 1
கடவுளுக்குத்தான் வெளிச்சம்
கடவுளுக்குத்தான் வெளிச்சம்
By தினமணி
First Published : 02 February 2013 02:58 AM IST
பெட்ரோலிய எண்ணெய் மட்டுமே நம் கவனத்தை ஈர்க்கிறது. டீசல் விலை 55 காசுகள் உயர்த்தப்படும்போதும், பெட்ரோல் விலை 50 காசு கூடும்போதும் பெருமூச்சு விடும் இந்தியர்கள், சமையல் எண்ணெய் விலை உயரும்போது அதைப் பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை. அந்தக் கவலை, பெருமூச்சு எல்லாமும் பெண்களின் வேலையாக சமையலறையில் முடிந்து போகிறது.
ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் விலை சுமார் ரூ.90 ஆக இருந்தது. இப்போது ரூ.120 ஆக உயர்ந்துவிட்டது. நல்லெண்ணெய் விலை ரூ.145 லிருந்து ரூ.170 ஆக உயர்ந்துவிட்டது. விலை உயர்வுக்குச் சொல்லப்படும் ஒரே காரணம்: எண்ணெய் வித்துகள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
நிலைமை இப்படி இருக்கும்போது, மத்திய அமைச்சரவையில் ஜனவரி 31-ஆம் தேதி எடுக்கப்பட்ட பல முடிவுகளில் ஒன்றாக, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை தளர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது, வணிகமுத்திரை உள்ள, 5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் ஏற்றுமதி ஆண்டுக்கு 20,000 டன்கள் மட்டுமே என்ற வரையறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தேங்காய் எண்ணெயை இதுவரை கொச்சி துறைமுகத்திலிருந்து மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நிபந்தனையைத் தளர்த்தி, எந்தத் துறைமுகத்திலிருந்தும் ஏற்றுமதி செய்யலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு 2008-ஆம் ஆண்டு முதலாகவே தடை உள்ளது. ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் உணவுப் பழக்கத்தைக் காரணம் காட்டி சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் பல்வேறு நிபந்தனைகளை அவ்வப்போது அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. "5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட' என்ற நிபந்தனையே அபத்தமான ஒன்று!
2012 காரீப் பருவத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) பருவமழை பொய்த்துப்போனதால் எண்ணெய் வித்துகள் உற்பத்தி 20 விழுக்காடு குறையும் என்று வேளாண் துறை அரசுக்கு அறிக்கை அளித்ததால், சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு 2012 ஆகஸ்ட் மாதம் அரசு தடை விதித்தது. உள்நாட்டில் சமையல் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. ஆனால் அடுத்த இரு மாதங்களில் இந்தத் தடை தளர்த்தப்பட்டு 10,000 டன் வரை ஏற்றுமதி செய்ய அனுமதித்தார்கள். அதன் பிறகு இதை 20,000 டன் வரை ஏற்றுமதி செய்யலாம் என்றார்கள். இப்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏற்றுமதி செய்துகொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரே நிபந்தனை - குறைந்தபட்ச விலை நிர்ணயம் ஒரு டன் 1,500 அமெரிக்க டாலர்!
இந்த நிபந்தனையின் காரணமாக, எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம் என்று அரசு அனுமதிப்பதால், ஏற்கெனவே உள்நாட்டில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் எண்ணெய் விலை உயராமல் இருக்கும் வகையில் இந்த குறைந்தபட்ச விலை அறிவிக்கப்பட்டுள்ளது என்று சொல்லும் அரசு, குறைந்தபட்ச விலையைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள ஒரு குழுவையும் அமைத்திருக்கிறது.
இந்த நிபந்தனையை வைத்துப் பார்க்கும்போது, இது கடலை எண்ணெயை மட்டுமே கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கருதலாம். தற்போது சர்வதேசச் சந்தையில் கடலை எண்ணெய்க்குத்தான் இந்த அளவுக்கு விலை கிடைக்கும். மற்ற சமையல் எண்ணெய்க்கு விலை குறைவு.
இத்தகைய ஏற்றுமதி நிபந்தனைகளைத் தளர்த்தும் முடிவால் உள்நாட்டுச் சந்தை பாதிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் அளவும் குறைவு என்று அரசு கூறுகிறது. அப்படியானால், 2012 ஆகஸ்ட் மாதம் பதறிப்போய்த் தடை விதிக்கக் காரணம் என்ன?
இந்த ஆண்டு எண்ணெய் வித்துகள் வரத்து மிகையாக இருக்கிறதா? இந்த ஆண்டு எண்ணெய் உற்பத்தி அதிகமா? என்ற கேள்விகளை எழுப்பினால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.
120 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் தனிநபர் சமையல் எண்ணெய் பயன்பாடு 13.60 கிலோ. கொலஸ்ட்ரால் அச்சுறுத்தல்களை மீறி, எல்லா வகை சமையல் எண்ணெயும் சந்தையில் விற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. பயன்பாட்டு அளவு ஆண்டுதோறும் கூடிக்கொண்டு வருகிறதே தவிர, குறையவில்லை. இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய்த் தேவை 171 லட்சம் டன். ஆனால் சமையல் எண்ணெய் உற்பத்தி வெறும் 68 லட்சம் டன் மட்டுமே. குறைந்தது 100 லட்சம் டன் சமையல் எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தாக வேண்டும்.
உலகிலேயே அதிகமாக சமையல் எண்ணெய் பயன்படுத்தும் நாடு இந்தியாதான். உலகிலேயே அதிகமாக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடும் இந்தியாதான்.
இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயில் 90 விழுக்காடு பாமாயில் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவிலிருந்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பாமாயில் விலை, நம் உள்நாட்டு சமையல் எண்ணெய் விலையைக் காட்டிலும் குறைவுதான். அதற்காக எத்தனை காலம் நாம் இறக்குமதி எண்ணெயை நம்பிக்கொண்டிருக்க வேண்டும்? உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற நம்மால் முடியவில்லை. எண்ணெய் வித்து சாகுபடி பரப்பை விரிவு செய்ய முயற்சிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.
எண்ணெய் வளம் இல்லை இந்தத் திருநாட்டில்; அது தெரிந்தும், ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பது ஏனாம்?
[You must be registered and logged in to see this link.]

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கடவுளுக்குத்தான் வெளிச்சம்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கடவுளுக்குத்தான் வெளிச்சம்
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கடவுளுக்குத்தான் வெளிச்சம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கடவுளுக்குத்தான் வெளிச்சம்
பெருமூச்சு எல்லாமும் பெண்களின் வேலையாக சமையலறையில் முடிந்து போகிறது.
எல்லாமே ஒரு நாடகம் தான் ஏற்றுமதி யென்ற பெயரில்...
வருட கணக்கு காட்டவே இது ...

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Similar topics
» வெளிச்சம்…
» வெளிச்சம்!!!!!!!!!!!!
» வெளிச்சம்!!!!!!!!!!!!
» நிலா வெளிச்சம்
» வெளிச்சம் - ஒரு பக்க கதை
» வெளிச்சம்!!!!!!!!!!!!
» வெளிச்சம்!!!!!!!!!!!!
» நிலா வெளிச்சம்
» வெளிச்சம் - ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum