தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மண்ணும் மக்களும் - தொகுப்பு: கவிஞர் இரா.ரவி
2 posters
Page 1 of 1
மண்ணும் மக்களும் - தொகுப்பு: கவிஞர் இரா.ரவி
அறிஞர் முனைவர் தொ.பரமசிவம் உரை அறிஞர் முனைவர் தொ.பரமசிவம் உரை
மதுரை புகழ்மிக்க மதுரை.கடவுளையே மண் சுமக்க வைத்த மதுரை.மதுரை மண் சுமந்து
என்று பாடலும் உள்ளது.தமிழ் அறிவுலகம் உருவாக்கிய பெருமை மதுரைக்கு உண்டு.
உலகத்தையும் மதுரையையும் தராசில் நிறுத்துப் பார்த்தால் உலகம் மேலே போகும்.,
மதுரை கீழே வரும். அவ்வளவு அறிவாற்றல் மிக்க ஊர் மதுரை.கடவுளின்
பாடலையே,பொருட்பிழை உள்ளது என வாதிட்ட பெருமை பெற்றது மதுரை.வயதாகி விட்டதால்
மனிதன் மதிக்கப்படுவதில்லை.ஆனால் நூல்கள் வயதானாலும் மதிக்கப்படும்.
நான் சிறுவனாக இருந்த போது,12 வயதில் வீட்டில் சேட்டை செய்து விட்டு நூலகத்தில்
ஒளிந்தேன்.அங்கே சிறுவர் பிரிவு இருந்தது.அன்று ஒரு நூலை எடுத்துப்
படித்தேன்.அன்று படித்த அந்த நூலின் விதை எனக்குள் முளைத்தது.45 ஆண்டுகள்
ஆகியும் இன்னும் மறக்கவில்லை.அந்த நூலைப் படித்ததன் விளைவாகவே மனித உரிமை
ஆர்வலராக இருந்து வருகிறேன்.யாருக்கும் உரிமை மறுக்கப்படக்கூடாது என்பது என்
எண்ணம்.
மண்ணில் விதைத்த விதை கூட சில சமயம் விளையாமல் போகலாம்.ஆனால் மனித மனத்தில்
விழுந்த சிந்தனை முளைக்கத் தவறுவதில்லை.ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு மனிதன்
வாழ்கிறான்.நம்மை திரும்ப வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் நுல்கள்
நல்ல நூல்கள்.அவ்வகையில் புதுமைப்பித்தனின் நூலை 200 முறை நான் வாசி;த்து
இருக்கிறேன்.
கிறித்தவ நண்பர் ஒருவர் சொன்னார்,சாகும் வரை தலைமாட்டில் 2 நூல் இருக்க
வேண்டும்.ஒன்று விவிலியம்,மற்றொன்று அகராதி. திருவள்ளுவர்,சாகும் வரை படிக்க
வேண்டும் என்றார்.அதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் அறிஞர் அண்ணா.முதல்வராக இருந்த
போது,உடல் நலம் குன்றி,மருத்துவமனை செல்லும் போது கூட,படிக்க நூல்களைக் கொண்டு
சென்றார் என்று 19 வயதில் நான் செய்தி படித்தேன்.இன்றும் என் நினைவில் உள்ளது.
1832-ம் ஆண்டு முதல் அறிவியல் தமிழ் நூல் வந்தது.ஒரு ஜெர்மானியர்
பாளையங்கோட்டையிலிருந்து எழுதினார்.நான் பிறந்த ஊர் பாளையங்கோட்டை.முதன்
முதலில் பார்வையற்றோருக்கும்,காது கேளாதோருக்கும் பள்ளி அமைந்த ஊர்.இந்த ஊர்
சிறையில் தான் சித்தரஞ்சன் தாஸ்,வ.உ.சிதம்பரம்,கலைஞர் போன்றோர் இருந்தார்கள்.
வாசிப்பு உணர்வை உருவுhக்க இது போன்ற மேடைகள் உருவாக்கி உள்ளனர் பிரேமி
எழுத்துக்கள் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது மதுரை மாவட்டத்தில் தான்.
அறிஞர்கள் மட்டும் பயன்படுத்தியதாகத் கூறப்பட்ட எழுத்துக்களை நாட்டார் மக்களும்
பயன்படுத்தியதற்கான ஆதாரம் சமீபத்தில் கிடைத்து உள்ளது.மதுரை எழுத்து தந்த
ஊர்,எண்ணம் தந்த ஊர்,இலக்கியம் தந்த ஊர்,மதுரையின் பெருமையை சொல்லிக் கொண்டே
போகலாம்.
திருக்குறளுக்கு ஸ்காட் என்ற வெள்ளையர் உரை எழுதினார். ஆவர் பெயரில் மதுரையில்
ஒரு சாலை உள்ளது.தவறாக உரை எழுதிய நூல்களை,பாண்டித்துரைத் தேவர் கொண்டு வரச்
சொல்லி தீயிட்டுக் கொளுத்தினார்.காரணம் வருங்கால சந்ததிக்கு தவறான தகவல் போய்
விடக் கூடாது என்பதற்காக.எல்லீசு என்ற ஆங்கிலேயர் திருக்குறளை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்தார்.1810-ம் ஆண்டில் பதிப்பித்தார்.தனது பெயரை வள்ளுவதாசன் என்று
வைத்துக் கொண்டு,வள்ளுவர் மயிலையில் வாழ்ந்தார் என்று கருதி,மயிலாப்பூரில் ஏழு
கிணறுகள் வெட்டினார்.
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார் வள்ளலார்.வருத்தத்தில் வெற்றி பெற்றார்
வடலூர் வள்ளலார்.இளங்கோவடிகள்,மதுரை வைகை ஆற்றில் மிதந்து சென்ற பலவகையான
பூக்களை வர்ணிக்கின்றார்.ஒழுக்கம் மிக்க வைகை என்கிறார்.மதுரையில் பெருமை மிக்க
நூலகங்கள் பல உள்ளன. மதுரை தமிழ்ச்சங்கத்தில் சென்னையில் கூட கிடைக்காத அரிய பல
நூல்கம் உண்டு.பல நூல்கள் வெளிவர உதவிய வள்ளல்,கலைத்தந்தை,கருமுத்து தியாகராசன்
அவர்களுக்கு நன்றி கூறி பல நூல்கள் உள்ள பெருமை மதுரைக்கு உண்டு.
ஒவ்வொரு நூலும் நமக்குள் விதைக்கும் விதையை வைத்துள்ளது நாம் நூல்களைப்
படிக்கப் படிக்க,நாம் படிக்கவில்லை என்பதை உணருகின்றோம்.தமிழர்கள்
அறிவால்,திறமையால்,ஆற்றலால் உயர்ந்தவர்கள்.ஆனால் ஒரு பொருளைத் திட்டமிட்டு
பழசாக்கி வழக்கொழிய வைத்து நம்மை முட்டாளாக்கும் வேலையை உலகமயம் செய்து
வருகின்றது.அதற்கு எதிராக நாம் கலகக் குரல் கொடுக்க வேண்டும்.
அறிஞர் சாக்ரடீஸ் சொன்னார்,என் அறியாமையை உணர்கின்றேன்.நாம் அறிஞர் அல்ல என்பதை
அறிய வைப்பது நூல்கள்.அகங்காரம் அகற்றுவது சைவம்.ஆனால் இன்று,சைவம் படித்து
விட்டேன்; என்று அகங்காரமாக இருப்பவர்களும் உண்டு.நண்பர்கள் கூட
வருத்தப்படலாம்,சண்டை போடலாம்,நூல்கள் அப்படி அல்ல.ஒரு நண்பர் நூல்களை அடுக்கி
வைக்காமல் வீட்டில் கீழே போட்டு இருந்தார்,ஏன் இப்படி? என்று கேட்டதற்கு,
நண்பர்கள் இலவசமாக நூல்கள் தான் தருகின்றனர்,அலமாரி தருவதில்லையே என்றார்.
மிதிவண்டி தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்,ஓய்வு பெற்ற பின் அவரால் மிதிவண்டி
தயாரிக்க முடியாது.காரணம் பெல் தயாரிப்பவர் பெல் மட்டுமே தயாரிக்க
முடியும்.சக்கரம் தயார் செய்பவர் சக்கரம் மட்டுமே தயார் செய்ய முடியும்.இப்படி
திட்டமிட்டு நம்மை முட்டாளாக்கி வைத்தனர் அன்று.உலகமயம் தாராளமயம் என்ற பெயரில்
நம்மை முட்டாளாக்கி நமது பண்பாட்டைச் சிதைக்கும் சுரண்டலுக்கு எதிராக உரக்கக்
குரல் கொடுப்போம்,நமது பெருமைகளைக் காப்போம்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: மண்ணும் மக்களும் - தொகுப்பு: கவிஞர் இரா.ரவி
உலகின் அரிய பொக்கிஷங்களையெல்லாம் விட மேலானது புத்தகங்கள் அத்தகைய புத்தகங்களின் வரலாற்றினை நோக்கின் தமிழ் மொழிக்கொரு தலையாய இடமுண்டு. நிறைய கருத்துக்கள் பொதிந்த தமிழ் புத்தகங்களை படைத்து தமிழன் மற்றும் தமிழின் பெருமை உலகெங்கும் பரவச்செய்த அறிஞகளுக்கு தலை வணங்குதல் சால சிறந்ததாகும்.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
NANDRI
வணக்கம். கட்டுரையைப்
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» மண்ணும் மக்களும் - தொகுப்பு: கவிஞர் இரா.ரவி
» மண்ணும் மக்களும் அழிவை நோக்கி ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» இதழ்கள் முகவரிகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» மண்ணும் மக்களும் அழிவை நோக்கி ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» இதழ்கள் முகவரிகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum