தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்ணின் பெருமை உணர்வோம்!
3 posters
Page 1 of 1
பெண்ணின் பெருமை உணர்வோம்!
பெண்ணின் பெருமை உணர்வோம்!
பூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் உலகைக் காக்கும் குழந்தையைப் பாதுகாக்கும் கருவறையினுள், பூமியைக் குளிரச் செய்யும் கடல் போன்ற கருப்பைத் திரவத்தினுள் மிதந்து வாழ்ந்து கரு இருளில் களித்துறங்கிய கருமுகில் பெண்ணாள், கருவிறங்கி உலகின் குளிர்மைக்காய்க் கண்விழித்தாள். உலகின் ஒளி பூமித் தாயின் மடியில் புகலிடம் புகுந்தது. பெண்ணாய்ப் பிறந்து கள்ளிப் பாலுக்கு இரையாகிய காலம் கரைந்தோடி, அவள் சொல்லுக்காய் நாடு விழித்திருக்கும் காலம் காட்சிக்கு வந்து விட்டது. இன்று விண்வெளியில் உலாவந்த பெண் தைரியத்தின் முழுவடிவம், இன்பம் சுவைக்கும் சுதந்திரப் பறவை.
பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை. அவளே அடங்கி வாழ்ந்தாள். அவளின் மென்மை அடக்கத்தை அணிகளனாக்கியது. அன்றும் இன்றும் பெண்களைப் பாடும் கவிஞர்களே அதிகம். கொடியெனக் கணவன் தோளில் சாய்ந்தாள். கொழுகொம்பாய் அவன் இருக்க, அவனைப் படர்ந்தாள். கரமென மாமியார் உறவில் கைகோர்த்தாள். ஆசானாய் குழந்தைகளை ஆற்றுப்படுத்தினாள். நாத்தனார் வாழ்வில் நலன் விரும்பியானாள். மொத்தத்தில் குடும்பச் சொத்தே அவளானாள். பல வீடுகளின் ஆட்சியே நாட்டின் ஆட்சி. பல வீடுகள் இணைந்ததே, நாடு. வீடு விளங்க நாடு விளங்கும். எனவே தான் பெண்கள், வீட்டின் ஒளி அல்லது நாட்டின் ஒளி என்கின்றோம்.
இந்த வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு பெண் தேவை என மாமியார் நாடுவதன் சூட்சுமம்தான் என்ன? விளக்கேற்ற விரல்கள் அற்றவர்களா வீட்டிலிருப்போர். புகுந்த வீட்டின் பெருமை ஒளியை உலகிற்கு விளக்கவென புகுந்தவளாதலால் விளக்கெரிக்க ஒரு பெண் வரவேண்டுமென்ற வார்த்தையைப் பிரயோகித்தனர், பெரியோர். மென்மையான இதழ் பட்ட ஊதுகுழல் வெறுங்காற்றை உள்ளெடுத்து இசையாக வெளியே பரப்புதல் போல கணவன் மனையில் மென்மையாகப் புகுந்து சாதாரண குடும்பத்தைத் தரமான குடும்பமாய் உலகிற்கு உணர்த்தப் புகுமனையில் கால் வைப்பாள்.
உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். பெண்ணுக்குப் பிரசவம் என்பது மறுபிறப்பு என்பார்கள். ஒரு குழந்தை பிறக்கும் வரை எத்தனையோ வேதனைகளைச் சுமக்கின்றாள். தன் உயிரைப் பணயம் வைத்து அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். குழந்தை பிறந்து மறு வருடமே அடுத்த குழந்தைக்குத் தயாராகி விடுகின்றாள். இதுவே அவளின் தைரியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. கருணைக்கும் இரக்கத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் பொறுமைக்கும் இருப்பிடம் பெண்தான். எனவேதான் ஒரு குழந்தை வளரும் வரையில் தாயின் பராமரிப்பில் இருக்க வேண்டுமென்று சட்டம் கூறுகிறது.
இல்லறத்தை விடச் சிறந்த அறம் ஒருவனுக்கு இல்லை. இந்த இல்லறத்தைச் சிறப்பான முறையில் நடத்த வேண்டுமென்றால், சிறந்த இல்லாள் தேவை. இதன் மூலமே அவன் சமூகத்தின் முன் ஏறுபோல் பீடுநடை பயில முடியும் என வள்ளுவப் பெருந்தகை கூறியிருக்கின்றார். உடலால் வாழும் ஆணைவிட உள்ளத்தால் வாழும் ஆற்றல் பெற்ற பெண் உலகில் சிறப்புப் பெறுகின்றாள். இந்தப் பெண்மையின் பெருமையை உணர்ந்துதான்
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா
என்று கவிமணி தேசியவிநாயகம்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.
“ஒரு அழகிய கற்புடைய பெண் ஆண்டவனின் முழுமையான சிறந்த படைப்பாகவும், தேவதைகளின் பெருமையாகவும், உலகின் அதிஅற்புதமான தனித்த அதிசயமாகவும் விளங்குகின்றாள்.” என்று ஹெர்மிஸ் என்னும் அறிஞர் கூறுகின்றார்.
“நாம்பெற்றிருக்கின்ற வாழ்விற்கும், அந்த வாழ்வைத் தகுதியுள்ளதாக அமைத்துத் தந்ததற்கும், நாம் கடவுளுக்கு அடுத்தபடியாகப் பெண்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம்” என்று பொவீ என்னும் அறிஞர் மொழிந்துள்ளார்.
இதனையேதான் நமது மகாகவி பாரதியாரும்
“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்.”
என்று முழுமையாகப் பாடிச் சென்றார். எனவே பெண்ணின் பெருமையை உணர்வோம். புவி பேணி வளர்த்திட அவள் புகழ் பாடுவோம்.

கணபதி- இளைய நிலா
- Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெண்ணின் பெருமை உணர்வோம்!
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா..
-
இதெல்லாம் ஆண்கள் கூற்று...
மங்கையராக பிறந்த பெண்கள் என்ன சொல்கிறார்கள்..?
-
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா..
-
இதெல்லாம் ஆண்கள் கூற்று...
மங்கையராக பிறந்த பெண்கள் என்ன சொல்கிறார்கள்..?
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பெண்ணின் பெருமை
» பெண்ணின் பெருமை....
» புரிவோம் உணர்வோம் அறிவோம் படிப்போம்
» ஓர் பெண்ணின் கதை....
» ஓர் பெண்ணின் கதை.
» பெண்ணின் பெருமை....
» புரிவோம் உணர்வோம் அறிவோம் படிப்போம்
» ஓர் பெண்ணின் கதை....
» ஓர் பெண்ணின் கதை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum