தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தொல்லியல் அறிஞர் வேதாட்சலம் உரை (தொகுப்பு - கவிஞர் இரா. இரவி)
2 posters
Page 1 of 1
தொல்லியல் அறிஞர் வேதாட்சலம் உரை (தொகுப்பு - கவிஞர் இரா. இரவி)
தொல்லியல் அறிஞர் வேதாட்சலம் உரை (தொகுப்பு - கவிஞர் இரா. இரவி)
கற்காலத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பழைய கற்காலம், புதிய கற்காலம், பழைய கற்காலக் கருவிகள் மதுரை பகுதியில் கிடைக்கவில்லை.இடை கற்காலக் கருவிக் மதுரையி;ல் கிடைத்துள்ளது. மதுரை என்றால், மதுரையின் மையப்பகுதி இதுவரை அகழவாராய்ச்சி செய்யப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. மதுரையைச் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று உள்ளது. மதுரையின் மையப்பகுதியில் எதிர்க்காலத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றதால் இன்னும் பல வரலாற்று சான்றுகளைப் பெற முடியும் என்பது உண்மை.
உலகின் மூத்த குடி தமிழ்க்குடி மதுரையில் வாழந்துள்ளான். மதுரை மனிதன் ப+மியில் புதைந்து கிடந்துள்ள கற்களை சிறுசிறு கருவியாகப் பயன்படுத்தி இருக்கின்றான். கி.மு 4000 ஆண்டில் பயன்படுத்தப்பட்ட கற்காலக் கருவி துவரிமான், அரிட்டாபட்டி, மாங்குளம் போன்ற பகுதிகளில் கிடைத்தது. நாடோடி வாழ்க்கையில் இருந்து மாறி, ஓரிடத்தில் தங்கி வாழும் வாழ்க்கைக்கு மாறுகிறான். கற்காலத்திற்குப் பின் இரும்பு காலம் வருகின்றது. கி.மு. 1000 இரும்பு உருவாகின்றது. இரும்பு கண்டுபிடிப்பிற்கு பின் மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றது. மதுரையின் புறப்பகுதியில் இரும்புக்கால மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன. ஆரம்பத்தில் மனிதன் இறந்ததும் எரிக்கும் பழக்கம் இல்லை. சுமாதிகள் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. சமாதியைச் சுற்றி கல்வட்டம் அமைத்தல், ப+மிக்கு மேல் கல்லறை கல்திட்டு அமைத்துள்ளனர். இடு துளை வழியாக படையல் பொருட்கள் ஆண்டுதோறும் போடும் பழக்கம் இருந்துள்ளது. பின் குத்துக்கல் வைத்து நடும் முறை, பின் எழுதி வைக்கும் கல்வெட்டு முறை, முதுமக்கள் தாழிகள் இட்டு புதைக்கும் முறை வந்தது. மேலூர் அருகே வெள்ளரிப்பட்டி பெருமாள் மலை அருகே ஆயிரக்கணக்கான கல்லறைகள் இன்றும் உள்ளது. சில அழிந்து விட்டது.
மதுரையில் � கோவலன் பொட்டல்� என்ற பகுதியில் கல்லறைக்ள உள்ளது. இறந்தவர்களை புதைத்தல் பின்னர் அவர்களது எலும்புகளை எடுத்து கலயத்தில் வைத்துள்ளனர். மண்ணோடு புதைக்கப்பட்ட எலும்புகள் 200 வருடத்திற்குள் அழிந்து விடும். தூழிகளில் வைக்கப்பட்ட எலும்புகள் ஆயிரம் வருடங்களானாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அந்த ஆற்றல் உள்ள கலயத்தை அன்றே கண்டுபிடித்து உள்ளான். இன்றைக்கு மதுரையில் ஆவின் பால் நிறுவனம் உள்ள சாத்தமங்கலம் பகுதியில் கல்லறைகள் நிறைய இருந்தன. கி.மு 400 ஆண்டில் மதுரையின் நாகரிக வளர்ச்சிக்கு பத்துப்பாட்டு எட்டுத் தொகையில் இலக்கியச் சான்றுகள் உள்ளது. கி.மு நூற்றாண்டிலேயே மதுரை என்ற பெயர் இருந்துள்ளது. அழகர் மலையில் கி.மு.2ஆம் நூற்றாண்டில் மதிரை என்ற சொல் வருகின்றது. மதிரை என்பது ஒரு பெண் தெய்வத்தின் பெயராக இருந்திருக்கலாம். ஆதிரை என்பது போல மதிரை என்பது மதுரையாக பிறகுதான் மாறுகின்றது. கி.மு 3ஆம் நூற்றாண்டில் பாண்டி நெடுஞ்செழியன் முனிவர்களுக்கு கல் படுகை அமைத்துக் கொடுத்ததற்கான சான்று உள்ளது. மதுரையில் பௌத்தம், சமணம் என பல்வேறு சமயங்களும் இருந்துள்ளது. மதுரையைச் சுற்றி 13 இடங்களில் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
புலிமான் கொம்பு என்ற இடத்தில் நடுகற்கள் கிடைத்தது.இந்தியாவிலேயே தொன்மையான சான்றாக அசோகர் காலச் சான்று சொல்லப்படுகின்றது. அதற்கும் முந்திய சான்றுகள் மதுரையில் உள்ளது. ப+லாங்குறி என்ற ஊரில் மதுரையைப் பற்றிய சாசனம் கிடைத்தது. சேந்தன், சேந்தன்குட்டன் என்ற மன்னர்கள் வரலாற்றில் மதுரையைப் பற்றி வருகின்றது. சங்க காலத்திற்கு பிறகான கல்வெட்டு நிறைய கிடைத்துள்ளது. சமண மதத்தில் வாசுதேவன் என்ற கடவுள் இருந்தது. குளக்கரையில் முனிவர்கள் வசித்த இடம். இப்படி பல்வேறு சான்றுகள் பல்வேறு சமணர்களின் கல் படுக்கைகள் உள்ளது.
மதுரை மீண்டும் பாண்டியர்கள் வசம் வருகின்றது. கடுங்கோன் என்ற மன்னன் கைப்பற்றுகின்றான். இதற்கான செப்பேடு உள்ளது. குருவிக்காரன்சாலை பகுதியில் வைகை ஆற்றில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு கல்லை எடுத்துப் பார்த்த போது வட்டெழுத்து கல்வெட்டாக இருந்தது. கிபி.7ம் நூற்றாண்டு கல்வெட்டு தடுப்பணை, மதகு அமைத்து வாய்க்கால் வெட்டி நீர் பாசனம் நடந்ததை தெரிவிக்கின்றது.அடுத்தவர்களை பாதிக்கும் வண்ணம் பெரிய அணைகள் அன்று கட்டப்படவில்லை. இந்த கல்வெட்டு மீனாட்சி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் இன்றும் உள்ளது. மதனகோபால் சாமி கோவிலில் கிடைத்த வட்டெழுத்து கல்வெட்டு மதுரை வரலாற்றை பதிவு செய்துள்ளது. நெடுமாறன் காலத்து செப்பேடு கிடைத்தது. சோழர்கள் வருகிறார்கள். யானைமலை கல்வெட்டு கிடைத்தது.ராஜராஜன் ஆட்சி பற்றியும் உள்ளது. இஸ்லாமியர் வருகை அவர்களது ஆட்சியும் மதுரையில் நடைபெற்றுள்ளது. விஜயநகர ஆட்சி நாயக்கர்கள் ஆட்சி இப்படி பல ஆட்சி மாற்றங்களை மதுரை சந்தித்து உள்ளது. நாயக்கர்கள் ஆட்சியின் போது கிராம ஆட்சி ஒழிக்கப்பட்டு பாளையக்காரர்கள் ஆட்சி வருகின்றது. சமுதாய மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளது.
மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தொல்லியல் ஆய்வின் போது மதுரை வரலாற்றை அறிவியல் ரீதியாக அறியக்கூடிய பல சான்றுகள் கிடைத்துள்ளன. பாண்டிய மன்னர்களின் சதுர வடிவ நாணயங்கள் 2ம் நூற்றாண்டு நாணயங்கள், யானை,மீன் சின்னம் இருக்கும். ரோமானியர்கள் வெளியிட்ட செப்புக் காசுகள் சோழர் நாணயம், பிற்காலப் பாண்டியர்கள் நாணயம், பானை ஓடுகள் உள்ளது. ரோமானியர்கள் உறவை உறுதிப்படுத்தும் மது ஜாடிகள் கிடைத்து உள்ளது. சுட்ட மண்ணால் ஆன ஆபரணங்கள் இப்படி பல சான்றுகள் கிடைத்தது. �மாடக்குளம்� என்ற குளத்திலிருந்து வந்த நீரின் மூலம் மதுரையில் பெருமளவில் விவசாயம் அன்றே நடந்துள்ளது. மாடக்குளம் கீழ்மதுரை என்று வருகின்றது.
தொல்லியல் அறிஞர் திரு.வேதாட்சலம் அவர்கள் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் என்னுடன் பணிபுரிந்தவர். அவரது தொல்லியல் தொடர்பான கடின உழைப்பை ஈடுபாட்டை நான் நன்கு அறிவேன். அவரது உரையை கேட்டு முடித்த பின், மதுரையில் பிறந்ததற்காக பெருமை கொண்டேன். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி என்பது வரலாற்று உண்மை. இந்தியாவில் மிக தொன்மையான நகரம் மதுரை. உலகின் முன்மொழி தமிழ்மொழி என அறிஞர்கள் மெய்ப்பித்து விட்டார்கள். உலகின் முதல் மனிதன் மதுரையில் வாழ்ந்தான் என்ற சான்றும் விரைவில் கிடைக்கும். நகைச்சுவையாக ஒரு பழமொழி உண்டு. �மதுரையைச் சுற்றிய கழுதை கூட மதுரையை விட்டு போகாது� என்று கழுதையே அப்படி என்றால், மனிதனைச் சொல்லவும் வேண்டுமோ? நான் பல நட்சத்திர விடுதிகளில் பல ஊர்கள் பல்வேறு வசதிகளுடன் தங்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறேன். ஆனால் உலகின் எந்த மூலையில் எத்தனை வசதிகளுடன் தங்கினாலும் மதுரைக்கு ஈடான ஊரை நான் எங்கும் கண்டதில்லை. பிறந்த மண் பாசமாகக் கூட இருக்கலாம். எனக்கு மட்டுமல்ல, உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்த மண் பாசம் அவசியம் இருக்க வேண்டும். நான் பிறந்த மண் மதுரை வரலாறு கேட்டு அதனை பதிவு செய்ததை பெருமையாகக் கருதுகின்றேன். உலகம் உள்ளவரை மதுரையின் புகழ் நிலைக்கும்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: தொல்லியல் அறிஞர் வேதாட்சலம் உரை (தொகுப்பு - கவிஞர் இரா. இரவி)
தொன்மை மிகு தமிழின் சான்றுகள் இந்த மண்ணில் நிறையவே மறைந்துள்ளன முறயாக தேடினால் நிறையவே கிட்டும் தமிழ் மற்றும் தமிழனின் வரலாறு.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
NANDRI
வணக்கம். கட்டுரையைப்
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி தலைப்பு நாமும் நம் மொழியும்
» முத்தமிழ் அறிஞர் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
» அறிஞர் அண்ணா , நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி தலைப்பு நாமும் நம் மொழியும்
» முத்தமிழ் அறிஞர் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
» அறிஞர் அண்ணா , நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum