தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை

4 posters

Go down

கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை  Empty கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை

Post by கணபதி Thu Mar 14, 2013 4:34 pm

கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!



சின்னக் கொசுதான்... ஆனால், வலி, வியாதி, தூக்கமின்மை என எப்படி எல்லாம் இம்சிக்க முடியுமோ அத்தனையையும் செய்துவிடுகிறது. டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா (’சிக்கன்’குனியா அல்ல), யானைக்கால் நோய் போன்றவற்றைப் பரப்பி உலகம் முழுக்கத் தன் ஆளுமையைக் கடைவிரிக்கும் சக்தியாகவே கொசுக்கள் மாறிவிட்டன. மொத்தமாக 2,700 வகைக் கொசுக்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், கொசுக்களிடம் இருந்து நம்மைக் காப்பாற்ற சுருள், லிக்விட், மேட் போன்ற சில விஷயங்கள்தான் இருக்கின்றன. ஆனால், அவையும் நம்மை ஆபத்தை நோக்கியே தள்ளும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

''கொசுக்களை விரட்டக் கடைகளில் விற்கப்படும் கொசுவத்தி, மேட், லிக்விட் போன்றவை நம் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கொசுவத்திச் சுருள், லிக்விட் என எல்லாக் கொசு விரட்டிகளிலும் பைரேத்ரின்(pyrethrin) எனும் வேதிப்பொருள் கலந்து இருக்கும். கொசுவத்திச் சுருளில் இருந்து வரும் புகையையோ அல்லது லிக்விட் வாசனையையோ சுவாசிப்பவர்களுக்கு சைனஸ் அலர்ஜி ஏற்படலாம். இதனால் ஆஸ்துமா நோய் உண்டாகும் வாய்ப்பும் இருக்கிறது. ஏற்கெனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் வீரியம் இன்னும் அதிகமாகி, வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாகிவிடும். சின்னக் கொசுக்கடிக்குப் பயந்து கொசு விரட்டிகளைப் பயன்படுத்தினால், அது பெரிய நோய்க்கு வழிவகுத்துவிடும். கொசுவைக் கட்டுப்படுத்தக் கொசுவலைதான் சிறந்தது. கொசு பேட் பயன்படுத்தியும் கொசுக்களை அழிக்கலாம்' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.


''கொசுவத்திகளைப் பயன்படுத்தினால்தான் பாதிப்பு, கிரீம் பயன்படுத்தினால் பாதிப்பு இருக்காது என்கிறார்களே?'' என்ற கேள்வியுடன் தோல் சிகிச்சை மருத்துவர் பிரியாவை சந்தித்தோம். ''கொசு மேட்டில் இருந்து வெளிப்படும் ரசாயனம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். கொசுவத்திச் சுருள், லிக்விட் என எல்லாவற்றிலும் பாதிப்புகள் இருக்கின்றன. கொசு விரட்டிக்கான கிரீம்களைப் பயன்படுத்தினால் எந்தப் பாதிப்பும் இருக்காது. மிகச் சிலருக்கு மட்டும் அது தோல் அலர்ஜியை ஏற்படுத்தலாம். நமக்கு அலர்ஜி இருக்குமோ என்று சந்தேகப்படுபவர்கள் அலர்ஜிக்கான சின்ன பேட்ச் டெஸ்ட் எடுத்துவிட்டு, கிரீம்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. காடு, மலை, நீர்நிலைகள் இருக்கும் இடங்களுக்குச் சுற்றுலா அல்லது ட்ரெக்கிங் அனுபவத்துக்காகச் செல்லும்போது, கொசு விரட்டிக்கான கிரீம்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் தோலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது'' என்றார் விளக்கமாக.

**கொசுவைக் கட்டுப்படுத்தச் சில இயற்கை வழிகள்**

>>தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டும். மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையைக் காண்பித்தால், ஒரு கொசுகூட இருக்காது. இயற்கை நார்களின் புகையால், உடலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

>>வீட்டின் ஒரு பக்கத்தில் நெருப்பு வைத்து அதில் மாம்பூக்களைப் போட்டால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டிவிடும்.

>> வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றை உலர்த்தி, நெருப்பில் போட்டுப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை இருக்காது.

>> நாய்த்துளசிப் பூவை உலர்த்தித் தூள் செய்து சாம்பிராணியுடன் சேர்த்துப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை தீரும்.

>> நம்மை இருட்டிலும் அடையாளம் பார்த்துக் கடிக்கும் திறன் கொசுக்களுக்கு உண்டு. எனவே, வேறு வாசனை வரும் திரவியங்களை நம் உடலில் பூசிக்கொண்டாலும் கொசுக்கடியில் இருந்து தப்பலாம்.

>> பூண்டு வாசனை கொசுவுக்கு ஆகாது. நிறையப் பூண்டு சாப்பிட்டால், அதன் மணத்திலேயே கொசு ஓடிவிடும்.

>> விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதை நாமும் பயன்படுத்தினால் கொசு பக்கத்தில் வரவே பயப்படும்.

>> கொசுவை ஒழிக்க ஜன்னல்களில் கொசுவலையை மாட்டிவிடலாம். கொசுவலையில் சிறிய துளைகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை உடனே அடைத்துவிடுவது நல்லது.

பிறந்த குழந்தைகள் மேட் புகையைச் சுவாசிக்கும் சூழலுக்கு ஆளானால், வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். நுரையீரல் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புகள்கூட இருக்கின்றன என்று லக்னோ மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

ஒரு கொசுவத்தி எரியும்போது, அது வெளியிடும் சாம்பலின் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்குச் சமம்.

தகவல் - க.நாகப்பன், விகடன்
கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை  481886_499717613419160_775751281_n
கணபதி
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை  Empty Re: கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 8:35 am

தகவலுக்கு நன்றி...
நான் ஒரு ஹைபுன் கவிதை எழுதி இருக்கிறேன்... மாலையில் பதிகிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை  Empty Re: கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை

Post by கலைநிலா Fri Mar 15, 2013 10:35 am

மிக்க மகிழ்ச்சி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை  Empty Re: கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை

Post by அ.இராமநாதன் Fri Mar 15, 2013 11:55 am

நிறையப் பூண்டு சாப்பிட்டால், அதன் மணத்திலேயே
நண்பர்களும் ஓடி விட வாய்ப்புள்ளது..!!

-
சிலருக்கு பூண்டு வாசனை பிடிக்காது..!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை  Empty Re: கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 5:29 pm

ம. ரமேஷ் ஹைபுன் கவிதை

மேற்கத்திய கலாச்சார சீரழிவு இந்தியாவுக்குள் நுழைந்ததுபோல நகரத்து கொசுக்கள் கிராமத்துக்குள் புகுந்துகொண்டது. பேன் போட்டால் காணாமல் போகும் கொசுக்கள், கரண்ட் கட்டானதும் படையெடுக்கத் துவங்கி ரத்தம் உறிஞ்சி விடுகிறது. ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை என முறையின்றி கட்டாகும் கரண்டால், குழந்தைகளைக் கொசு கடித்துவிடக்கூடாது என்பதால் மின்சாரம் துண்டிக்கும் போதெல்லாம் கண் விழித்துக்கொள்கிறது. அப்பாடா… எல்லா கொசுக்களையும் கொன்னு போட்டாச்சின்னு நிம்மதி பெருமூச்சி விடும்போது கோழி கூவுகிறது.

கொல்லப்பட்ட கொசுக்காக
மாரடித்து அழுகிறது
அதிகாலையில் கூவும் கோழி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை  Empty Re: கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum